உண்மையான பல்சுவைப் பதிவு
பல்மொழிகள் பத்து
1. பிறக்கும்போதும் இருப்பதில்லை இறக்கும்போதும் இருப்பதில்லை
பல்
2. பல் வலிமையானது; நாக்கு மென்மையானது. ஆனால் பயம் வந்தால்
முதலில் நடுங்குவது பல்
3. பகைவன் வந்தால் பயப்படாதவனும் பல்வலி வந்தால் பயப்படுவான்
4. எத்தனை முயன்றாலும் வெளுப்படையாது பாழான மனதும்
பழுப்பேறிய பல்லும்
5 .நாக்கு உதிர்த்த சொல்லும் வாய் உதிர்த்த பல்லும் மீண்டும் இடம்
சேராது.
6. நாக்குக்கு பல்லே அணை
7. நீ என்ன பிடுங்கினாய் என்று கேட்க முடியாது பல் டாக்டரை
8. சூடோ, குளிர்ச்சியோ நாக்கு தாங்கும் அளவுக்கு பல் தாங்காது
9. பல்
கொஞ்சம் காட்டினால் புன்னகை
இன்னும் கொஞ்சம் நீட்டினால் இளிப்பு
முழுவதும் காட்டினால்தான் சிரிப்பு
10. பல் இருந்தும் சிரிக்கத் தெரியாதவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள்
கொசுறு: பல் ஆண்டு வாழ்க என்றால் உறுதியான பற்களுடன் நீண்ட நாட்கள் வாழ்க என்றும்பொருள் கொள்ளலாம்.
பல்(வலி) கவிதை 1
பல்லை எதிரத்து
ஈறு செய்தது சுதந்திரப் போராட்டம்
வெள்ளையனே வெளியேறு என்றது
பல்லைப் பார்த்து
பல், பல்வழியிலும்
ஈறை சேதப்படுத்திப் பார்த்தது
ஆனாலும் வெற்றி ஈறுக்கே!
கடைசியில்
வெளியேறியது பல்!
பல்(வலி) கவிதை 2
ஈறு போதல் இடை யுகரம் இய்யாதல்
ஆதி நீடல் அடியகரம் ஐயாதல்
தன்னொற்றி ரட்டல் முன்னின்ற மெய் திரிதல்
இனமிகல் இனையவும் பல்வலியினார்க் கியல்பே
இந்தக் கவிதை புரிகிறதா?
அட வேற ஒண்ணும் இல்லீங்க பல்வலி வந்தால் பேசற வார்த்தைய சரியாய் உச்சரிக்க முடியறதில்லை அப்படீங்கறதை தான் நன்னூல் செய்யுள்ள ஒரு சின்ன மாற்றம் செஞ்சி சொல்லி இருக்கேன். ஹிஹி
இலக்கண, இலக்கியப் புயல் ஜோசப் விஜு மன்னிப்பாராக
********************************************
குமுதத்தில் என் கதை 24.08.2015 நாளிட்ட குமுதம் இதழில் மதுவுக்கு எதிராக போராடாதே என்ற ஒருபக்கக் கதை வெளியாகி உள்ளது. முடிந்தால் படித்துவிட்டு உங்கள் கருத்துகளைக் கூறவும் . கதையை வெளியிட்ட குமுதம் இதழுக்கும் ஆசிரியருக்கும் நன்றி
படிக்க க்ளிக் செய்யவும்
மதுவுக்கு எதிராக போராடாதே!
படித்து விட்டீர்களா?
- மதுமொழிகள் 10
ஆஹா பல்வலிக்கவிதைகள் அருமை
பதிலளிநீக்குமது விலக்குக் கதையில் வச்சீங்க பாருங்க திருப்பம் :-)
வாழ்த்துகள் சகோ
பல்வலி மொழிகள் அருமை. ரசித்தேன்.
பதிலளிநீக்கு"இருக்கும்போதே சிரித்துவிடு" என்பார்கள் பற்களை!
குமுதத்தில் கதை! அட! பாராட்டுகள் + வாழ்த்துகள்.
10 பல்மொழிகள் சூப்பர்...!
பதிலளிநீக்குகவிதைகள் அருமை.. கதை குமுதத்தில் வெளியானதுக்கு வாழ்த்துக்கள்....
பதிலளிநீக்குபல் குறித்த விவரிப்பு அருமை
பதிலளிநீக்குசிறுகதையும் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
பல்வலி உங்களையும் கவிதை எழுத வைத்திருக்கிறதா அண்ணா! நினைவிருக்கிறதா சென்ற ஆண்டின் தொடக்கத்தில் இதே போல நானும் கவிதை எழுதவேண்டி இருந்தது:))) குமுதம் கதைக்கு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குபல் மொழிகளும் கவிதையும் சிறப்பு! குமுதத்தில் சிறுகதை வெளியானமைக்கு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குகுமுதத்தில் வெளியான கதை முன்னர் தங்கள் தளத்தில் படித்ததுபோன்ற நினைவு. அதே கதையா அதே கருவில் வேறு கதையா? எனக்கு நினைவில்லை. பல் பற்றிய பல்வகைச் செய்திகளுக்குப் பல்லாற்றானும் நன்றி.
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஅண்ணா
பழமொழிகளும் கவிதையும் நன்று கதை குமுதத்தில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்.த.ம 5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பல்வலி பல்லவிகள் அருமை!!!! கதை அருமை......கதையில் மது என்பது கொஞ்சம் தெரிந்துவிட்டது மது என்பது பெண் என்று....குமுதம் இதழில் வெளிவந்ததற்கு வாழ்த்துக்ள் நண்பரே! தலைப்பு சூப்பர்...
பதிலளிநீக்குதிங்களன்று உங்களைக் கைபேசி வழி பாராட்ட எண்ணித் தொடர்பு கொண்டபோது நீங்கள் எடுக்கவே இல்லை!missed call பாருங்கள்!
பதிலளிநீக்குஐயா ,கடந்த முறை குமுதத்தில்எனது கதை வெளியானதை நீங்கள்தான் தெரிவித்தீர்கள். திங்கள் அன்று ஆசிரியர்கள் கலந்தாய்வு காரணமாக தலைமை அலுவலகத்தில் இரவு ஒன்பது மணிவரை மூச்சுவிட நேரமின்றி வேலை.உங்கள் அலைபேசி என்னிடம் உள்ளது. 7.45 க்கு லேந்து லேன்ட் லைன் இல் இருந்து பேசி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். கவனிக்கவில்லை,ஐயா மன்னிக்கவும்
நீக்குமறுநாள் பதிவர் முனைவர் பரமசிவம் அவர்கள் தனது பின்னூட்டத்தில் தெரிவித்தபோதுதான் அறிந்தேன்.
குமுதத்தில் எழுதும் அளவுக்கு உயர்ந்த உங்களை மனதார பாராட்டுகிறேன்..
பதிலளிநீக்குவாழ்த்துகள்!
பதிலளிநீக்குபல் பற்றிய அனைத்தும் அருமை!
பதிலளிநீக்குகுமுதத்தில் வந்த கதை முடிவு...
நகைக்கவைத்துவிட்டது.
அருமை ஐயா
பதிலளிநீக்குஅருமை
நன்றி
தம +1
இறக்கும் போது பல் இருப்பதில்லையா. ?வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநல்லவேளை சொன்னீர்கள் ,இல்லையென்றால் அதை நன்னூல் செய்யுள் என்றே நினைத்து இருப்பேன் :)
பதிலளிநீக்குஇன்றைய ட்ரெண்ட்டுக்கு தகுந்த மாதிரி கதையாக்கி விட்டீர்கள் ,இந்த கதைக்கு குமுதம்தான் லாயக்கு என்று அனுப்பியிருக்கீங்க பாருங்க ,அங்கே நிற்கிறீங்க :)
tnq for this usufull news kinindia
பதிலளிநீக்குஅப்புறம் முரளி?
பதிலளிநீக்குபல் மருத்துவர் என்னதான் சொன்னார்?
புடுங்கிட்டாரா உங்க சொத்தை(பல்லை?)
அதானே இந்தப்பதிவு? சூப்பர் பல்சுவைப்பதிவு!
பல் செய்திகள் பல சிரிக்க வைத்தன!
பதிலளிநீக்குகதை குமுதத்தில் வெளியானதற்கு பாராட்டுகள்.
சிறுகதை வெளியானதற்கு வாழ்த்துக்கள்....
பதிலளிநீக்குஇந்தக் கதையை இங்கு படித்த ஞாபகம்?
'பல்' சுவைப் பகிர்வு அருமை... வாழ்த்துக்கள்.
பல் பதிவுக்கு பலே! குமுதம் இதழில் வந்த உங்கள் கதைக்கு வாழ்த்துக்கள். அந்தக் கதையை இங்கும் பகிரலாம் அல்லவா?
பதிலளிநீக்குநன்றி . இணைப்பு கொடுத்திருக்கிறேனே மோகன்ஜி சார்.
நீக்குவணக்கம்! பல் பதிவு சூப்பர்!!
பதிலளிநீக்குஅன்புடன் கருர்பூபகீதன்!!
பதிவு அருமை. :)
பதிலளிநீக்கு