என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Saturday, August 1, 2015

புஷ்பா மாமியின் 'பெண்'மொழிகள்


புஷ்பா மாமி அவ்வப்போது சொன்ன  பொன்மொழிகள் பெண்மொழிகள் 


 • துவரம் பருப்புக்கும் கடலை பருப்புக்கும் வித்தியாசம் தெரிஞ்ச புருஷன்கிட்டே ஜாக்கிரதையா இருக்கணும் 

 • புடவைக் கடையில தன் பொண்டாட்டி எங்க இருக்கான்னு  கண்டு பிடிக்க தெரியாத தத்திங்கதான் இந்த ஆம்பளைங்க 

 •  புருஷன்  கொஞ்சி கொஞ்சி பேசினா, அவங்க அப்பா அம்மா ஊர்ல இருந்து வராங்கன்னு அர்த்தம் 

 •  இலட்சம் பேர் கூடி இருக்கிற இடத்தில் கூட  தன்கணவனை அடையாளம் காண இரண்டு நிமிடம் போதும் மனைவிக்கு 

 • ஆம்பளைங்க  ஒண்ணா கூடி உலக விஷயங்களை பேசினா நாட்டு நடப்பும்பாங்க. பொம்பளைங்க ஒண்ணு கூடி ஊர் விஷயத்தை பேசினா ஊர்வம்பும்பாங்க 

 • பொண்டாட்டியோட  ஃபோன் நம்பரைக் கூட காண்டேக்ட்ஸ் பாத்து கண்டுபிடிக்கிற  கணவனை திட்டாம எப்படி  இருக்கமுடியும் 

 • தன் பையன் எந்த கிளாஸ், எந்த செக்ஷன்னு கரெக்டா சொல்ற அப்பாவுக்கு கலைமாமணி பட்டம் கொடுக்கலாம்

 • 18 வயது பெண்ணோட அறிவு , 21 வயது  பையனோட அறிவுக்கு சமம். அதனாலதான் பெண்ணுக்கு திருமணவயது 18 ஆணுக்கு 21

 •  ஞாயிற்றுக் கிழமையும்  ஆடிட்டிங் இருக்குன்னு ஆபீஸ்  போறவனை நம்பக் கூடாது 

 • கல்யாணத்துல பந்தியில இடம் பிடிக்கத் தெரியாத வீட்டுக்காரரோட கல்யாணத்துக்கு  போறது வேஸ்ட் 


*************************************************

பின்குறிப்பு 
ஆண்கள் சண்டைக்கு வரவேண்டாம் ஆண்மொழிகள் விரைவில் 

32 comments:

 1. ஒரு பிளஸ்... ஒரு மைனஸ்... நல்லாத்தான் இருக்கு...!

  ReplyDelete
 2. வணக்கம்,
  இங்கே சமம் தான்,
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 3. ஜாலி பதிவு
  வாழ்த்துகள்
  தம +

  ReplyDelete
 4. ரசனை.

  நகையோட்டம்.

  த ம +

  நன்றி.

  ReplyDelete
 5. பெண் மொழிகள் ரசிக்க வைத்தது ஐயா...

  ReplyDelete
 6. //துவரம் பருப்புக்கும் கடலை பருப்புக்கும் வித்தியாசம் தெரிஞ்ச புருஷன்கிட்டே ஜாக்கிரதையா இருக்கணும் ///
  வித்தியாசம் தெரிஞ்ச புருஷனையே அப்படியே குழப்பிவிடும் பெண்களிடம் அதி ஜாக்கிரதையா இருக்கணும் /

  ReplyDelete
 7. //புடவைக் கடையில தன் பொண்டாட்டி எங்க இருக்கான்னு கண்டு பிடிக்க தெரியாத தத்திங்கதான் இந்த ஆம்பளைங்க //

  அது ரொம்ப ஈஸீங்க அழகான பெண்ணிடம் கொஞ்சம் பேசி சிரிச்சா காணாம போன மனைவி நம் கண்முன்னாலேயே வந்து நிற்பாங்க...

  ReplyDelete
 8. //புருஷன் கொஞ்சி கொஞ்சி பேசினா, அவங்க அப்பா அம்மா ஊர்ல இருந்து வராங்கன்னு அர்த்தம்//
  வேறு ஒரு அர்த்தமும் இருக்கு ஆனா அதை இங்க சொல்ல முடியாது நாலு பொண்ணுங்க வந்து போகிற தளம் உங்களது

  ReplyDelete
 9. /இலட்சம் பேர் கூடி இருக்கிற இடத்தில் கூட தன்கணவனை அடையாளம் காண இரண்டு நிமிடம் போதும் மனைவிக்கு //
  என்னங்க என்று மனைவி குரல் கொடுத்தாலே போது அந்த கூட்டத்தில் கணவன் எங்கிருந்தாலும் 2 நிமிஷத்தில் வந்துவிடுவார்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்,
   உங்களுக்கு பூரி கட்டை தப்பே இல்லை
   நன்றி.

   Delete
 10. ///ஆம்பளைங்க ஒண்ணா கூடி உலக விஷயங்களை பேசினா நாட்டு நடப்பும்பாங்க. பொம்பளைங்க ஒண்ணு கூடி ஊர் விஷயத்தை பேசினா ஊர்வம்பும்பாங்க ///

  ஆனா ஆணும் பெண்ணும் பேசினா காதலும்பாங்க

  ReplyDelete
 11. /பொண்டாட்டியோட ஃபோன் நம்பரைக் கூட காண்டேக்ட்ஸ் பாத்து கண்டுபிடிக்கிற கணவனை திட்டாம எப்படி இருக்கமுடியும் //

  முரளி என்னை வம்புல இழுத்துவிடப் பாக்கிறீங்களே... சத்தியாம என் மனைவி நம்பரை காண்டேக்ட்ஸ் பாத்து கண்டுபிடிக்கிற ஆள் நான் தானுங்க.. உங்க பதிவை என் மனைவி படிக்கிறதுக்கு முன்னாலே அவ நம்பரை நான் மனனம் செய்து கொள்ளனும்

  ReplyDelete
 12. //தன் பையன் எந்த கிளாஸ், எந்த செக்ஷன்னு கரெக்டா சொல்ற அப்பாவுக்கு கலைமாமணி பட்டம் கொடுக்கலாம்///

  அப்ப எனக்கு கொடுங்க நான் சரியா பையன் ஒயின் கிளாஸா பீர் கிளாஸா என்று கரெக்டா சொல்லிப்புடுவேனாக்கும்

  ReplyDelete
 13. //18 வயது பெண்ணோட அறிவு , 21 வயது பையனோட அறிவுக்கு சமம். அதனாலதான் பெண்ணுக்கு திருமணவயது 18 ஆணுக்கு 21///

  அரசாங்கம் சிக்கிரமே பெண்ணை கஷ்டப்பட வைக்கிறாங்க அது பெண்களுக்கு செய்யும் துரோகம்

  ReplyDelete
 14. /// ஞாயிற்றுக் கிழமையும் ஆடிட்டிங் இருக்குன்னு ஆபீஸ் போறவனை நம்பக் கூடாது ///
  இப்படி எல்லாம் ஆண்களின் ரகசியங்களை போட்டு உடைக்கும் முரளி ஒழிக

  ReplyDelete
 15. // கல்யாணத்துல பந்தியில இடம் பிடிக்கத் தெரியாத வீட்டுக்காரரோட கல்யாணத்துக்கு போறது வேஸ்ட்

  வேஸ்ட் ///

  பொண்டாடிக்கு மட்டும் இடம் பிடித்து கொடுத்துவிட்டு அவகூட சேர்ந்து சாப்பிடுகிறவன் சுத்த வேஸ்ட்

  ReplyDelete
  Replies
  1. மதுரைத் தமிழனின் கவுண்டர்கள் சூப்பர் அணைத்தும் ஆண்மொழிகள் தலைப்பில போட்டுடலாம்

   Delete
 16. //புடவைக் கடையில தன் பொண்டாட்டி எங்க இருக்கான்னு கண்டு பிடிக்க தெரியாத தத்திங்கதான் இந்த ஆம்பளைங்க //

  தெரிஞ்சதா காட்டிக்க மாட்டாய்ங்க இல்லே? அப்போதானே பெண்கள் கூட்டத்தை அலசி ஆராயலாம்!

  ReplyDelete
 17. "ஆம்பளைங்க ஒண்ணா கூடி உலக விஷயங்களை பேசினா நாட்டு நடப்பும்பாங்க.
  பொம்பளைங்க ஒண்ணு கூடி ஊர் விஷயத்தை பேசினா ஊர்வம்பும்பாங்க" என்பதில் ஐயமில்லையே!

  புதிய முகவரியில் மீண்டும் சந்திப்போம்!
  http://yppubs.blogspot.com/2015/08/blog-post.html

  ReplyDelete
 18. மாமியைப் பற்றி மாமாவுக்கு எப்படித்தெரியும் என கேட்கலாம் என நினைத்தேன்.
  ஆண்கள் சண்டைக்கு வரவேண்டாம் ஆண்மொழிகள் விரைவில் என்று பதிவிட்டு தப்பித்துக்கொண்டீர்கள். நன்றி.

  ReplyDelete
 19. ரசித்தேன் அருமை வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete
 20. புஷ்பா மாமியின் பெண்மொழிகள் அனைத்துமே கலக்கல்! ஆண்மொழிகளை ரசிக்க காத்திருக்கிறேன்! நன்றி!

  ReplyDelete

 21. //18 வயது பெண்ணோட அறிவு , 21 வயது பையனோட அறிவுக்கு சமம். அதனாலதான் பெண்ணுக்கு திருமணவயது 18 ஆணுக்கு 21/// haa..ha.. very interesting..

  ReplyDelete
 22. அண்ணா! உண்மைய சொல்லுங்க! இதெல்லாம் அண்ணியை காக்கா பிடித்து தேற்றிய பதிவு தானே!!!!

  ReplyDelete
  Replies
  1. அடடா! தெரிஞ்சி போச்சே!. எப்படியோ கண்டு பிடிச்சிட்டீங்களே ! ஹிஹிஹி

   Delete
 23. சிறப்பு..எப்படியிருக்கீங்க?

  ReplyDelete
  Replies
  1. நல்ல இருக்கேன். வலைப் பக்கம் அடிகடி வாங்க

   Delete
 24. பொன்னான வரிகளை புலம்பல்கள் என்று சொல்வதை ஆட்சேபிக்கிறேன் :)

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895