மூன்று வாரங்களுக்கு முன்பு கவிஞர் மு.பி பால சுப்ரமணியம் அவர்கள் எழுதிய பஞ்சம் என்ற தலைப்பிலான கவிதையின் பாதியை மட்டும் வெளியிட்டிருந்தேன். பஞ்சப்பாட்டு பாடலாமா என்ற தலைப்பில் வெளியான அந்தப் பதிவை படித்திருப்பீர்கள். படிக்காதவர்கள் இங்கே படித்து விட்டு மிச்சமுள்ள பஞ்சப் பாட்டை தொடருங்கள்
பஞ்சப்பாட்டு முதற் பகுதி
..................................
தொடர்ச்சி
வேருக்குப் பஞ்சமெனில் மரமே வீழும்
விளைச்சலுக்குப் பஞ்சமெனில் விலைகள் ஏறும்
நீருக்குப் பஞ்சமெனில் நிலம்வெ டிக்கும்
நேர்மைக்கு பஞ்சமெனில் உளம்து டிக்கும்
ஏருக்குப் பஞ்சமெனில் உழவே இல்லை
ஏணிக்குப் பஞ்சமெனில் ஏற்றம் எங்கே?
யாருக்கும் பஞ்சமெனில் அச்சம் தானே
இறைவனுக்கும் பஞ்சமெனில் பூசை ஏது?
பண்புக்குப் பஞ்சமெனில் வாழ்வே மோசம்
பாட்டுக்குப் பஞ்சமெனில் இசையே நாசம்
அன்புக்குப் பஞ்சமெனில் நட்பே இல்லை
அறிவுக்குப் பஞ்சமெனில் நாளும் தொல்லை
பண்புக்குப் பஞ்சமெனில் பகைமை மிஞ்சும்
நாட்டிற்குள் பஞ்சமெனில் வறுமை கொஞ்சும்
தென்புக்கு பஞ்சமெனில் சோர்வே மிஞ்சும்
தெளிவுக்குப் பஞ்சமெனில் குழப்பம் துஞ்சும்
தகுதிக்குப் பஞ்சமெனில் வேலை போகும்
தரத்திற்குப் பஞ்சமெனில் மானம் போகும்
பகுதிக்குப் பஞ்சமெனில் விகுதி இல்லை
பாலுக்குப் பஞ்சமெனில் தயிர்மோர் இல்லை
தொகுதிக்குப் பஞ்சம் எனில் வெற்றி இல்லை
மிகுதிக்குப் பஞ்சமெனில் குறைவே துள்ளும்
மேன்மைக்குப் பஞ்சமெனில் கீழ்மை வெல்லும்
பத்திரிகைத் துறைக்குந்தான் பஞ்சம் உண்டு
படத் துறையை அழிக்கும்பண் பாட்டுப் பஞ்சம்
சத்தியத்தின் நிழலில்தான் பொய்க்குப் பஞ்சம்
சந்து முனை அழைப்பினிலே கற்புப் பஞ்சம்
உத்தியோகத் துறைகளிலேநல் லெண்ணம் பஞ்சம்
உலகமுழு தும் இன்றோ எண்ணெய்ப்பஞ்சம்
எத்திக்கும் சூழுகின்ற உணவுப் பஞ்சம்
இந்தியத்தாய் பெற்றெடுத்த ஒருமைச் சின்னம்
****************
எச்சரிக்கை:
இந்தியா சந்தித்த உண்மையான பஞ்சம் பற்றிய பதற வைக்கும் பதிவு விரைவில்
வணக்கம்
பதிலளிநீக்குஇன்றைய வலைச்சரத்தில் என் நன்றியுரை...
http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post.html
உங்கள் வரவை ஆவலுடன் எதிர்நோக்கும் சாமானியன் !
நன்றி
கட்டாயம் வருகிறேன்
நீக்கு//பாட்டுக்குப் பஞ்சமெனில் இசையே நாசம் //
பதிலளிநீக்குஇசைக்குப் பஞ்சமெனில் பாட்டே நாசம் என்பது இன்னும் பொருத்தமாக இருக்குமோ!
//இந்தியா சந்தித்த உண்மையான பஞ்சம் பற்றிய பதற வைக்கும் பதிவு விரைவில்
தாது வருடப் பஞ்சம் பற்றியா? காத்திருக்கிறேன்.
கவிஞர் எழுதியதை நாம் மாற்ற முடியாது
நீக்குஏருக்குப் பஞ்சமெனில் எதுவுமே இல்லை...
பதிலளிநீக்குஉண்மை உண்மை
நீக்குபஞ்சத்திற்குப் பஞ்சமில்லை என்பதை தெளிவாகக் கூறிவிட்டீர்கள்.
பதிலளிநீக்குதங்கள் கருத்துக்கு நன்றி ஐயா
நீக்குவணக்கம்,
பதிலளிநீக்குஎத்துனைப் பஞ்சம்,,,,,,,,,
அருமை, வாழ்த்துக்கள், நன்றி.
வருகைக்கு நன்றி மகேஸ்வரி
பதிலளிநீக்குஅருமை அய்யா
பதிலளிநீக்குதம +
அனைத்தும் அருமை !
பதிலளிநீக்குமிக அருமை!
பதிலளிநீக்கு