என் எதிரியே
எங்கே இருக்கிறாய்?
எதிரில் வா!
கண நேரத்தில்a
என்னை
களங்கப் படுத்துகிறாய்!
சமயம்
கிடைக்கும் போதெல்லாம்
சங்கடப் படுத்துகிறாய்!
காயப்படுத்துவதை
களிப்புடன் செய்கிறாய்
களிப்புடன் செய்கிறாய்
என்
மகிழ்ச்சியை
மட்டுப் படுத்துவதில்
மட்டிலா மகிழ்ச்சி கொள்கிறாய் .
மட்டிலா மகிழ்ச்சி கொள்கிறாய் .
நான்
புலம்பும்போதேல்லாம்
புன்னகைக்கிறாய்!
உதவி செய்ய
நினைக்கும்போதெல்லாம்
ஓடி வந்து
தடுக்கிறாய்!
என்னை கோபப்படவைத்து
கொண்டாட்டம் கொள்கிறாய்
என்னை கோபப்படவைத்து
கொண்டாட்டம் கொள்கிறாய்
வெற்றியை நெருங்கும்போதெல்லாம்
தட்டிப் பறிக்கிறாய்.
தோல்விகளில்
துவளும்போதும்
துன்புறுத்தவே
நினைக்கிறாய்!
உன்னை
ஒழித்துக்கட்டாமல்
நான்
ஓயப் போவதில்லைதுரத்தி அடிப்பேன்!
எங்கே இருக்கிறாய்?
அச்சம் இல்லையேல்
அருகில் வா!
அச்சம் இல்லையேல்
அருகில் வா!
எதிரில் இல்லாத எதிரி
ஏளனத்துடன்
சொன்னான்
"என்னை ஏன்
வெளியில்
தேடுகிறாய்
நான்
உன்னுள்
அல்லவா
உறைந்திருக்கிறேன்"
***********************************************************
வெளி எதிரியைவிட உள் எதிரியை அடித்து கொன்றுவிடலாம்..
பதிலளிநீக்குஅதானே... எதிரியும், நண்பனும் உள்ளேயேதான் இருக்கிறார்கள்! அது புரிந்து விட்டால் மாற்றம் தானே வந்து விடும்!
பதிலளிநீக்கு// நான்
பதிலளிநீக்குஉன்னுள்
அல்லவா
உறைந்திருக்கிறேன்" ///
அருமை ஐயா
இருக்குமிடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி அலைகின்றார்
ஞானத் தங்கமே என்னும் பாடல் வரிகள்
நினைவிற்கு வருகின்றன
நன்றி ஐயா
தம +1
Mudivu Super
பதிலளிநீக்குஅனைத்தும் நமக்குள்ளே...
பதிலளிநீக்குsemai
பதிலளிநீக்குthama +
சுப்பர் சகோ ..! வாழ்த்துக்கள் ...!
பதிலளிநீக்குஅருமை! எல்லாமே நம் மனதினுள் இருக்க நம் வாழ்விற்கும், வீழ்விற்கும் காரணங்கள் நம் மனதினுள் இருக்க நாம் அற்பமாய் உலகை நோக்கிக் கை சுட்டுகின்றோம்...
பதிலளிநீக்குசுட்டும் விரலால் எதிரியைக் காட்டி குற்றம் கூறுகையில் மற்றும் மூன்று விரல்கள் உன் நெஞ்சினை நோக்குதடா :)
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே!
பதிலளிநீக்குஉண்மை! எமக்குள்ளேயே இருந்து எம்மைக் குன்றச் செய்யும்
பெரிய விரோதி அவன்!
தக்கபடி அடக்கி ஒடுக்கி வைத்திட வேண்டும்!
நல்ல சித்தனை வார்ப்பு! வாழ்த்துக்கள்!
புரிந்து கொண்டால் சரி
பதிலளிநீக்கு"என்னை ஏன்
பதிலளிநீக்குவெளியில்
தேடுகிறாய்
நான்
உன்னுள்
அல்லவா
உறைந்திருக்கிறேன்"
நல்ல முடிவு தொடக்க முதல் முடிவு வரை சொல்லிப் போன விதம் நன்று
சிறப்பான கவிதை! நமக்கு எதிரி நமக்குள்ளே தான் இருக்கிறார்கள் என்பதை அழகாக விளக்கியது படைப்பு! நன்றி!
பதிலளிநீக்குஉள்ளே இருப்பதை வெளியில் தேடுகிறோம் என்பதை வார்த்தைகளில் அழகு படுத்தி இருக்கிறீர்கள் சார்
பதிலளிநீக்குஉண்மை தான்....உள்ளே இருக்கிறதை வெளியே தேடுகிறோம்....
பதிலளிநீக்குசிறந்த பாவரிகள்
பதிலளிநீக்குசிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘OOTRU’ சரியா?
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பதிலளிக்கலாம்.
https://ial2.wordpress.com/2015/07/25/70/
நல்ல வரிகள் உங்களின் சிந்தனை மிக அருமை பாராட்டுக்கள்
பதிலளிநீக்குஎதிரிகள் உங்களுக்குள் இருக்கிறானா அப்ப ரொம்ப ஈஸிங்க அவனை அடக்குவது . நீங்க் என்ன செய்யுங்க உங்க மனைவியிடம் சொல்லி பூரிக்கட்டையை எடுத்து உங்கள் மண்டையில் அடிக்க சொல்லுங்க அப்புறம் பாருங்களேன் எதிரி உங்களை விட்டு ஒடியேப் போய்விடுவான்
பதிலளிநீக்குஎதிரியும் நண்பனும் நமக்குள்ளே......
பதிலளிநீக்குநல்ல கவிதை முரளி.....
உட்பகை தீதென்பது உங்களின் பாணியில்...!
பதிலளிநீக்குவெகுவாய் ரசித்தேன்.
நன்றி.
வணக்கம்
பதிலளிநீக்குமுரளி..அண்ணா
அற்புதமான கவிதை படித்து மகிழ்ந்தேன் எதிரியும் நமக்குள்ளே இருக்கிறான்....
பகிர்வுக்கு நன்றி த.ம 14
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-