என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

புதன், 15 ஜூலை, 2015

பாபநாசம் வெற்றி ஏன்?-யோசிக்கப்பட்டு சேர்க்கப் படாத காட்சி

  கடந்த ஞாயிறு அன்று தியேட்டருக்கு சென்று ஏதேனும் படம் பார்க்கலாம் என்று விரும்பினோம். பாகுபலி,பாபநாசம் இரண்டும் பரவலாக விமர்சகளின் பாராட்டைப் பெற்றிருந்தால் இரண்டில் ஒன்று முடிவானது. வீட்டுக்கு அருகில்  பாகுபலி ஓடாததால் பாபாநாசம் படம் பார்க்க அருகிலுள்ள குமரன் தியேட்டரை அடைந்தோம்.  ஆச்சர்யம்! நல்ல கூட்டம். சமீபத்தில் இவ்வளவு கூட்டத்தை நான் படத்திற்கு சென்றபோது  பார்த்ததில்லை. ஆனால் ரசிகர் மன்ற பேனர்கள் ஒன்று கூட இல்லாதது ஆச்சர்யமாகத்தான் இருந்தது. திரையில் கமல் பெயர் காட்டப் பட்டபோதுகூட எந்த கைதட்டலும் இல்லை. தாத்தாக்கள் பாட்டிகள், நடுத்தர ,இளைய அம்மா அப்பாக்கள் கூட்டம் கூட்டமாக பிள்ளைகளுடன் பார்க்க முடிந்தது. என்னதான் நல்ல படம் என்று பாராட்டப் பட்டாலும் இவ்வளவு கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை அதுவும் இரண்டாவது வாரம்.நல்ல வேளையாக முந்தைய தினமே முன்பதிவு செய்திருந்ததால் சிரமம் ஏதுமில்லை . 
     குடும்பமாக கூட்டத்திற்கு வரவழைத்த பெருமை கமலுக்கா, கதைக்கா என்றால் கதையே முன்னிலை வகிக்கிறது. நடிப்பு வரக் கூடிய நல்ல நடிகர்கள் யார் நடித்திருந்தாலும் படம் வெற்றிபெற்றிருக்கும் என்றுதான் நினைக்கிறேன்.என்றாலும் கமல் நடித்திருப்பது கூடுதல் பலம்.கதையின் மையம் கமலின் மகளை செல்போனில் அவளறியாமல் படம்  எடுத்து மிரட்டிய  ஐ.ஜி.யின் மகனை , கமலின்  மகள்  கொன்றுவிட  அந்த கொலையை மறைக்க நடக்கும் போராட்டமே கதை. 
      செல்போன் தொழில் நுட்பம் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு பெற்றுள்ள வளர்ச்சி பெண்களுக்கு எதிராக தவறாகப் பயன்படுத்தப் பட்டதால் நிகழும் நிகழ்வையும் அதன் விளைவுகளையும் சொன்னது ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம். குடும்பத்துடன் வந்தவர்களைப் பார்த்தபோது இப்படத்தை ஏதோ ஒரு படமாக அல்ல  பாடமாகவே பார்க்க வந்தது போல்தான் தோன்றியது. 
இதற்கு முன் வழக்கு எண் 18 போன்ற படங்களும் இது போன்ற படம் தான் என்றாலும் கமல் நடித்திருப்பதால் கூடுதல் கவன ஈர்ப்பு பெற்றிருக்கிறது 
  செய்தித்தாளில் பத்திரிகைகளில் இது போன்ற செய்திகள் ஏற்படுத்தாத  லேசான திகிலை பெற்றோருக்கு - குறிப்பாக பெண்பிள்ளை பெற்றோருக்கு தங்களையும் அறியாமல்  ஏற்படுத்தி இருக்கிறது என்றே நினைக்கறேன். இதுவே குடும்பங்களை தியேட்டருக்கு அழைத்து வந்திருக்கிறது 
   ஏற்கனவே பலரும் இதன் கதையை அக்கு வேறு ஆணி வேறாக அலசி விட்டதால் நான் அதிகமாக  சொல்லப் போவதில்லை.திரிஷ்யம் படம் பார்க்காததால் ஒப்பீட்டிற்கும் அவசியமில்லாமல் போய்விட்டது.
  ஆரம்பத்தில் மிகவும் மெதுவாக நகர்ந்த கதை ஐ.ஜி.யின் மகனின் கொலைக்குப் பிறகு விறுவிறுப்படைந்து விட்டது . இதில் பின்னால் நடக்கப் போகிற ஒவ்வொரு நிகழ்வையும்  எதிர் நோக்குவது போலே தொடக்கக் காட்சிகள் அமைத்திருப்பதில் இயக்குனரின் திறமை தெரிகிறது . ஆனால் கமல் பேசும் வட்டார மொழி சட்டென்று  புரியவில்லை . கமல் உருவாக்கும் அலிபை(alibi) க்கள்

அலிபை என்பது உண்மையில் ஒருவர் இருந்தது ஓரிடம் . ஏதோ ஒரு காரணத்திற்காக இன்னோர் இடத்தில் இருப்பதாக ஆதாரங்களைக் காட்டுவதே. மனைவிக்குத் தெரியாமல் தண்ணி அடிப்பவர்கள் ஏதோ ஒரு கல்யாணப் பத்திரிகையை ஆதாரமாக வைத்துக் கொண்டு அன்றைய தினம் தண்ணி அடித்து விட்டு கையில் தாம்பூலப் பையுடன் வீடு திரும்பவதும் ஒரு வித அலிபைதான் என்கிறார் நண்பர் ஒருவர் ஹிஹி

 புத்திசாலித்தனமானது என்றாலும் பொய் என்று நிருபிக்க முடியாதது அல்ல. ஆனால் கொலையை மறைக்க கமல் தவிக்கும் தவிப்பு நமக்கும் தொற்றிக்கொள்வதால் இந்தக் காட்சிகள் நம்மை கை தட்ட வைத்து விடுகிறது. (கமல் சினிமாக்களைப் பார்த்த ஞானத்தை வைத்தே பல விஷயங்களை கற்றுக் கொள்வது போல போல Alibi  என்ற வார்த்தையை கற்றுத் தந்த பெருமை. சுஜாதா ராஜேஷ்குமார் போன்ற க்ரைம் கதை எழுத்தாளர்களைச் சாரும். ஹிஹி
பதிவின் தலைப்புக்கு வருகிறேன்.
யோசிக்கப்பட்டு சேர்க்கப் படாத காட்சி 
படத்தில் கமலின் மனைவியும் மகளும் கமலை கார் வாங்கவேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். மாருதி கார் என்று சொன்னதாக நினைவு.
தற்செயலாக அவர்கள் வாங்க நினைத்த அதே மாடல் காரைத்தான் தவறான நோக்கத்துடன் வரும் ஐ.ஜி.யின் மகன் கொண்டு வருகிறான். கொலையுண்ட  பின் அந்தக் காரை எடுத்துக் கொண்டு போய் யாரும் அறியாமல் குவாரிக் குளத்தில் தள்ளி விடுகிறான் . கமல் காரை ஒட்டி செல்வதைப் பார்த்த போலீஸ் சாட்சி  சொன்னாலும் தன்னுடைய காரில்தான் சென்றார் என்று நிருப்பிக்க அதேமாடல் காரை முந்தைய தினமே தான் வாங்கி வைத்திருப்பது போல்  ஆதாரம் உருவாக்குவது போல் கதை அமைத்திருப்பார்கள் என்று நினைத்தேன்.  ஆனால் அது போன்ற காட்சி இல்லை . ஒரு வேளை லாஜிக் மீறல்கள் அதிகம் இருப்பதால் அதைத் தவிர்த்திருக்கலாம். அல்லது எனது மட்டமான கற்பனையா? அப்படி அமைத்திருந்தாலும் மக்கள் ஏற்றுக் கொண்டுதான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

     இது போன்ற  அதிக செலவில்லாத  சுவாரசியமான கதைகளை படமாக எடுக்காமல் பிரமாண்டம் தத்ரூபம்  வித்தியாசம் என்ற பெயரில் படம் எடுத்து சர்ச்சைகளில்  ஏன் சிக்கிக் கொள்கிறார் என்பது பலரின் கேள்வி. ஆனால் இந்தப் படத்திலும் ஒரிஜினல் படத்தில் கிறித்துவக்  குடும்பத்தை மையமாக வைத்து எடுக்கப் பட்ட படத்தை வேண்டுமென்றே இந்துக் குடும்பத்தில் நடப்பதாகக் காட்டி விட்டார் என்று ஒரு சாரார் குற்றம் சாட்ட பிரிக்க முடியாதது "கமலும் சர்ச்சையும்" என்று மீண்டும் நிருபித்திருக்கிறார்  கமல் 


******************************************************************


ஐந்து லட்சம் பக்கப் பார்வைகளை எட்டிப் பிடிக்க உதவிய அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் திரட்டிகளுக்கும் நன்றி 


32 கருத்துகள்:

Ramani S சொன்னது…

அருமையான வித்தியாசமான அலசல்
நாளை பார்க்க இருக்கிறேன்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

Ramani S சொன்னது…

tha.ma 1

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அதானே...? ஜீப் அல்லவா வாங்கி விட்டார்...!?

ஐம்பது லட்சம் ஆக வாழ்த்துகள்...

சசிகலா சொன்னது…

நானும் படம் பார்த்தேன் முதலில் குடும்பத்தோடு அழைத்து சென்று விசாரிக்கும் போதே அரஸ்ட் வாரன்ட் இல்லாமல் எப்படி ஒரு குடும்பத்தை விசாரிக்கலாம் என சர்ச்சையை படத்தில் எதிர்பார்த்தேன் காணவில்லை..
ஆனாலும் படம் பார்க்கும் ஆவலை குறையாமல் கொண்டு சென்ற விதம் சிறப்பு.
5லட்சம் பார்வையாளர்கள் பாராட்டுகள்.

Bagawanjee KA சொன்னது…

#ஒரிஜினல் படத்தில் கிறித்துவக் குடும்பத்தை மையமாக வைத்து எடுக்கப் பட்ட படத்தை

#ஒரிஜினல் படத்தில் கிறித்துவக் குடும்பத்தை மையமாக வைத்து #
வசூல்தான் முக்கியம் ,இப்படித்தான் ...போதிதர்மர் 'ஏழாம் அறிவில் 'தமிழன் ,தெலுங்கு டப்பிங்கில் தெலுங்கர் ஆக்கப் பட்டு இருந்தார் :)

mageswari balachandran சொன்னது…

வணக்கம்,
நானும் படம் பார்த்தேன்,
தங்கள் நினைவே என்னுடையதும், அவர் கார் வாங்கி, அததைத் தான் நான் ஓட்டிச்சென்றேன் என்பார் என,
ம்ம்,,,,,,,
இன்னும் பல பார்வையாளர்கள் பார்க்க வாழ்த்துக்கள்
நன்றி காற்றே,,,,,

புலவர் இராமாநுசம் சொன்னது…

நானும் பார்த்தேன்! இயல்பான நடிப்பு! நன்று!

Kavitha Rj சொன்னது…

Too many Network Marketers join their company based on hype and not enough investigation. One of the most commonly overlooked aspect is the compensation plan most likely because the average person doesn't know how to evaluate the plan they're looking at. So, how can you make an educated decision if you don't know how to evaluate these plans?

https://www.linkedin.com/pulse/20140923103324-146919720-bitcoin-wealth-alliance-review-by-anthony-trister-does-it-works

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அருமையான படம். த்ரிஷ்யத்தின் நேட்டிவிட்டி கெடுக்காமல் தமிழில் எடுத்திருக்கின்றார்கள். கமலின் நடிப்பும் அருமை...நல்ல படம் ...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

லட்சங்கள் கோடிகளாக தங்கள் பதிவுகள் மேலும் மேலும் பலரையும் அடைய வாழ்த்துகள்!

விசுAWESOME சொன்னது…

என்ன ? ஐந்து லட்சமா ?வாழ்த்துக்கள் ஐயா.. இது ஓர் நல்ல பதிவு. பல வருடங்கள் கழித்து ஒரு புதிய தமிழ் படம் பார்க்கும் எண்ணம் வந்துள்ளது.

பழனி. கந்தசாமி சொன்னது…

என்னால் ஓரிடத்தில் இரண்டு மணி நேரம் உட்கார முடிவதில்லை. ஆகவே................?

Muthu Nilavan சொன்னது…

கதைதான் முக்கியம் என்று நம்பி நடித்த கமலுக்கு முதல் பாராட்டு. தினமணி விமர்சனக் கடைசி வரி பார்த்தீர்களா? “இந்தப் படத்தில் ரஜினி நடித்திருக்க முடியாது!” அந்த வகையில் கதைக்குத் தந்த முக்கியத்துவத்தைக் குலைக்காமல் எடுத்த கமலுக்கு முதல் பாராட்டு. அதேமாதிரி நான் திரிஷ்யம் பாக்கல, வித்தியாசம் சொல்லவரல..., கதையும் தெரிஞ்சதுதான என்று எதார்த்தமாகவே படத்தை அறிமுகம் செய்த உங்களுக்கும் என் பாராட்டுகள்... ஆனா நீங்க சொன்ன அந்த -எடுக்கப்படாத காட்சி- கொஞ்சமில்ல, ரொம்பவே ஓவரா எனக்குத் தெரியுது மற்றபடி எதார்த்தப் படம் பற்றிய உங்கள் எதார்த்த விமர்சனத்திற்கு ஒரு “ஓ!”
அப்புறம் ஐந்துலட்சம் பக்கப்பார்வை பெற்ற நம்ம முரளிக்கு ஒரு ஓகோ! வாழ்த்துகள் (உண்மையச் சொன்னா காதுல புகைதான்..ஊம்?) வாழ்த்துகள் முரளி. உங்கள் எதார்த்தப் பதிவுகள் பாபநாசம் போலவே வெற்றிபெறுவதில் என்ன வியப்பு!

Muthu Nilavan சொன்னது…

ஆகா...மறந்துட்டேன்.. உண்மையான பாராட்டுன்னா ஓட்டுப் போடனும்ல? போட்டுட்டேன்.. வாழ்க வளர்க (முடிந்தால் நாளை -16-07-2015- சென்னையில் சந்திப்போம்)

காரிகன் சொன்னது…

திர்ஷ்யம் பார்த்திருக்கிறேன். பாபநாசம் இன்னும் இல்லை. கமல் மீது இன்னும் நம்பிக்கை வரவில்லை.

இன்னொன்று அலிபி என்று சொல்வது தவறான உச்சரிப்பு. அலபை அல்லது அலிபை என்று உச்சரிப்பதே சரி. இதே சுஜாதா, ராஜேஷ் குமார் வகையறாக்களைப் படித்து கல்லூரியில் அலிபி என்று சொல்லி நக்கலடிக்கப்பட்டவன்தான்.

‘தளிர்’ சுரேஷ் சொன்னது…

வாழ்த்துக்கள் ஐயா! சிறப்பான விமர்சனம்! நன்றி!

Jayadev Das சொன்னது…

\\நடிப்பு வரக் கூடிய நல்ல நடிகர்கள் யார் நடித்திருந்தாலும் படம் வெற்றிபெற்றிருக்கும் என்றுதான் நினைக்கிறேன்.\\ 100% correct.

\\கமல் பேசும் வட்டார மொழி சட்டென்று புரியவில்லை . \\ I too felt the same.

Jayadev Das சொன்னது…

எத்தனையோ நல்ல நடிகைகள் இருக்கும்போது கௌதமியை போட்டு கவுத்துட்டான்யா.......... :(

வருண் சொன்னது…

நல்லவேளை சரி செஞ்சீங்க.. இது ஆங்கிலச் சொல் என்பதால் சரி செய்ய முடிந்தது.

http://dictionary.reference.com/browse/alibi

இங்க போயிப் பார்த்தால் அர்த்தம் மற்றும் உச்சரிப்பு என்னனு தெரிஞ்சுக்கலாம்.

----------------

படம் நல்லாயிருக்குனு எல்லாரும் சொல்றாங்க. அதை நிச்சயம் ஏற்றுக்கலாம். ஆனால் படம் வெற்றி வெற்றினு கமல் விசிறிகள் எல்லாம் சேர்த்துக்கிறாங்க. அதான் எப்படினு எனக்குப் புரியலை.. சரி விடுங்க.


noun, plural alibis.
1.
Law. the defense by an accused person of having been elsewhere at the time an alleged offense was committed.
2.
an excuse, especially to avoid blame.
3.
a person used as one's excuse:
My sick grandmother was my alibi for missing school.

ஆங்கிலத்தை சரி பண்ணலாம்.. இந்த பாக்ஸ் ஆஃபிஸ் நம்பரை எல்லாம் சரி செய்றது கஷ்டம்..

வலிப்போக்கன் - சொன்னது…

விழாக்காலங்களில் தொலைக்காட்சிகளில் காட்டப்படும்போதுதான் பார்ப்பது...மற்றபடி புதுப் படம் பார்த்து வருடங்களாகிவிட்டன.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

தகவலுக்கு நன்றி காரிகன் .மற்றும் வருண்.
திருத்தம் செய்து விட்டேன்.

தனிமரம் சொன்னது…

இப்போது படம்கள் பார்ப்பது அருதாகிவிட்டது கமலின் படம் பார்க்க நேரச்சிக்கல்.

ஸ்ரீராம். சொன்னது…

படம் (இன்னும்) பார்க்கவில்லை.

Dr B Jambulingam சொன்னது…

நல்ல பகிர்வு. ஆழமாக அல்சியுள்ளீர்கள். நீங்கள் கூறுவதை சிந்திக்கவேண்டியுள்ளது.

arivuindia சொன்னது…

Thruzhyathil padam kathai keralavil nadappathupol kaattiyirupparkal :) athayum yen mathunanga!!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

நன்றி ரமணி சார்

கார்த்திக் சரவணன் சொன்னது…

பல முறை திரிஷ்யம் பார்த்திருந்ததால் அதிக ஈர்ப்பு வரவில்லை... நானும் இதே குமரன் தியேட்டரில் தான் பார்த்தேன். மூன்றாம் நாள்... அப்படி ஒரு கூட்டம்...

Mathu S சொன்னது…

பார்த்தாச்சா..
அடுத்தமுறை கமல் டீமில் உங்களுக்குத்தான் முதல் இடம்..
தம +

Ranjani Narayanan சொன்னது…

ஒரு கொலையை செய்துவிட்டு சாமர்த்தியமாக மறைக்கவும் செய்யலாம்; இதற்கு சினிமாக்கள் உதவும் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்கள். இதை யாரும் உணராதபடி மோகன்லால் தன் நடிப்பாலும், இயக்குனர் சிறந்த திரைக்கதை மூலமும் சாதித்துவிட்டார்கள். ஏற்கனவே சினிமாவால் சமூகம் கேட்டுப் போகிறது என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இனி? கதையில் வரும் இளம்பெண் போலீசில் மாட்டாமல் அப்பாவால் காக்கப்படுகிறாள் என்றாலும் மனம் உறுத்துகிறது. யாருமே இதைப் பற்றி எழுதாதது ஏன் என்று புரியவில்லை. கெட்டவன் தானே கொலை செய்யப்பட்டான் என்பதாலோ?

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

பதிவு எழுதுமுன் இதை யோசித்திருந்தேன் ஆனால் அதை குறிப்பிட மறந்து விட்டேன். நம்மையும் அறியாமல் நம் மனஹில் ஏற்பட்ட எதிர்நியாயம் காரணமாக இருக்கலாம் இரண்டு நாட்கள் ஆகி விட்டதால் அதனை சேர்க்க வில்லை.. சிலர் விமர்சனத்தில் இதனை எழுதி இருந்தனர்.
ஆனால் நடை முறையில் இப்படி முழுதாக மறைக்க சாத்தியமில்லை

பரிவை சே.குமார் சொன்னது…

நல்ல படம் குறித்து நல்லதொரு விமர்சனம்....

பெயரில்லா சொன்னது…

விஷயம் தெரியாமல் பேசக்கூடாது.. தெலுங்குலயும் தமிழர்னுதான் சொல்லியிருப்பாங்க.. நீங்க தெலுங்குல படம் பார்த்தீங்களா மிஸ்டர் பகவான்..?