என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 28 ஜூலை, 2015

அப்துல் கலாம் மறைவு! ஊடகங்களின் தவறான விடுமுறை அறிவிப்புகள்

      குடியரசுத் தலைவர் என்றாலே டாக்டர் ராதாகிருஷ்ணனும் அப்துல் கலாம் மட்டுமே உடனே நம் நினைவுக்கு வருவார்கள். அந்த அளவுக்கு அந்தப் பதவிக்கு  பெருமை சேர்த்தவர்கள் இவர்கள் . இருவருமே தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதில் நாம் பெருமைப் பட்டுக் கொள்ள வேண்டிய ஒன்றல்லவா? 
     குழந்தைகள்,இளைஞர்கள் மீது அன்பும் நம்பிக்கையும் கொண்ட உலகம் போற்றிய உன்னத மனிதராகத் திகழ்ந்த  கலாம்  காலமானார்.  சின்னத் திரை, பத்திரிகைகள் முகநூல் டுவிட்டர் என இணையம் முழுவதும் அஞ்சலிகளால் நிறைந்துள்ளது. சாலை ஓரங்களிலும் பொது இடங்கள் அலுவலகங்களில் கூட அவரது உருவப் படம் வைக்கப் பட்டு அஞ்சலி செய்யப்படுவதைப் பார்க்கும்போது  எந்த அளவுக்கு மக்கள் மனதை வென்றிருக்கிறார் என தெரிகிறது. அவரது மறைவு இந்தியாவையே குறிப்பாக தமிழகத்தை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.  

       நேற்று இரவு அப்துல் கலாம் மறைந்தார் என்ற உறுதிப் படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன என்ற தொலைகாட்சி செய்தி கூறியது. சிறிது நேரத்தில் செய்தி உறுதிப் படுத்தப் பட்டுவிட்டது. இதனைத் தொடர்ந்து ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப் படும் என அறிவிக்கப் பட்டது. 

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்ற செய்தியும் வெளியானது. இணையத்திலும் நாளை (28.02.2015) விடுமுறை என்ற செய்தியை காண முடிந்தது.சில பள்ளிகளில்  இருந்தும் கல்லூரிகளில் இருந்தும் குறுஞ்செய்தியும் மின்னஞ்சலும் விடுமுறை தகவலை மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் அனுப்பின. கட்டாயம் விடுமுறைதான் என்று பெற்றோரும் மாணவர்களும் நம்பினர். ஆனால் தமிழக அரசு விடுமுறை அறிவிக்கவில்லை.  காலையில் அறிவிக்கப் படக் கூடும் என்றுசிலர் எதிர்பார்த்தனர். ஆனால் அறிவிக்கப் படவில்லை.


. காலையில்  தொலைக் காட்சியிலும் பத்திரிகையிலும் விடுமுறை அறிவிப்பு  இல்லை. விடுமுறை என்ற உறுதிபடுத்தப் படாத செய்தியின் காரணமாக ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் குழப்பம் ஏற்பட்டது. 

குறிப்பாக அரசு பள்ளிகளே அதிக அளவில் பாதிக்கப் பட்டன.சில தனியார் பள்ளிகள் கல்லூரிகள் அறிவித்த விடுமுறையை ரத்து செய்யவில்லை

   தினமலரின் இணையப் பக்கத்தில்  அறிவிக்கப் பட்ட விடுமுறை செய்தி திடீரென்று காணாமல் போனது .  ஆனால் விடுமுறை என்பதை வெளியிட்ட ஊடகங்கள் தமிழக அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்ற செய்தியை வெளியிடவில்லை

பத்திரிகைகளில் வெளியாகும்  செய்திகளை  நம் உண்மையென்று நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் பத்திரிகைகளோ பரபரப்புக்காக செய்திகளை  சரிபார்த்து உறுதிபடுத்தாமல் வெளியிட்டு விடுகின்றன. தமிழக அரசு அறிவித்தால் மட்டுமே விடுமுறை விடப்படவேண்டும். இது போன்ற விடுமுறை செய்திகளை முறையான அரசு அறிவிப்பு கிடைக்கப் பெற்ற பின்னரே வெளியிட வேண்டும்.

        இது மட்டுமல்ல பல செய்திகளை சரிபார்க்காமலும் உறுதிப் படுத்தாமலும் வெளியிடப்படுகின்றன  பார்க்காமலேயே கூட யாரோ காழ்ப்புணர்ச்சி கொண்டு  ஒருவர் புகைப்படம் தந்து வெளியிட சொன்னாலும் வெளியிட்டு விடுவார்கள். நிருபர்கள் சென்று அவற்றின் உண்மைத் தன்மையை அறிவது இல்லை .அவர்களுக்கு தேவை பரபரப்பு. சமீபத்தில்கூட ஒரு பத்திரிக்கை   70 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளியை  1000 மாணவர்களுக்கு மேல் படிக்கும் பள்ளியில் பாதுகாப்பில்லை. என்று செய்தி வெளியிட்டு விட்டது. உண்மையில் அம்மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் அப்ப்ளியில் உள்ளன இதனால்  ஆசிரியர்களும் அலுவலர்களும்தான் பாதிக்கப் படுகிறார்கள். பெற்றோர்களோ குழப்பமடைகின்றனர்.
  முகநூல், வாட்ஸ்அப் போன்றவற்றில்தான் அதிகாரபூர்வமற்ற செய்திகள் , வதந்திகள்  பரவி வருகின்றன என்றால்  பத்திரிகைகளும் அவ்வாறே பொறுப்பற்ற முறையில்  செய்திகளை மிகைப் படுத்தியும் நம்பகத் தன்மை அற்ற வகையிலும் வெளியிடுவது அதிகரித்துள்ளது  இது தவிர்க்கப் படவேண்டும்.
   இப்போது தமிழக அரசு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் இறுதி சடங்குகள் நடை பெறும்  நாளான 30.07.2015 அன்று விடுமுறை அறிவித்துள்ளது
     
  இது போன்று  தலைவர்கள் அறிஞர்கள் இறப்பின்போது விடுமுறை விடப்படவேண்டுமா வேண்டாமா என்பது அரசின் விருப்பம் என்பதால் பத்திரிகைகள் அதை உணர்ந்து செய்திகளை வெளியிட வேண்டும்.
===================================================================

கொசுறு: பலரும் என்ன நினைக்கிறார்கள் என்றால் பள்ளிகளுக்கு இது போல் அடிக்கடி விடுமுறை விடப்படுகிறது.. வேலை நாட்கள் குறைந்துவிடும்..இது தேவையற்றது என்று. ஆனால் உண்மையில் இது போன்ற விடுமுறை விடப்பட்டால் அவை  ஈடு செய்யப் படவேண்டும். தொடக்க நடுநிலைப் பள்ளிகளாக இருந்தால் கட்டாயம் 220 நாட்கள் வேலை செய்யவேண்டும். எந்தக் காரணத்தைக்  கொண்டும் இந்த நாட்கள் குறையக் கூடாது.உள்ளூர் சிறப்பு நிகழ்வுகளுக்கு முன் அனுமதி பெற்று விடுமுறை விட அனுமதிக்கப் படும் என்றாலும்  மொத்த வேலை நாட்கள்குறைவுபடக் கூடாது.. குறைய நேருமாயின் சனிக்கிழமைகளில் வேலை செய்ய வேண்டும்.அதனால் இதுபோன்ற விடுமுறைகளை ஆசிரியர்கள்  விரும்புவதில்லை 


***************************************************************

20 கருத்துகள்:

  1. விடுமுறை குறித்த மிகவும் வேண்டிய தெளிவினை தந்தமைக்கு நன்றி நண்பரே!
    விடுமுறை விட வேண்டாம் என்று கலாம் சொன்னதாகவும் செய்தி வந்துள்ளதே?
    இது உறுதியான செய்திதானா?
    உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதை மதித்து நடப்பதுதானே நல்லியல்பு நண்பரே!
    த ம 1
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  2. விடுமுறை விட வேண்டியது பள்ளிகளுக்கு அல்ல பார்களுக்கு




    தமிழக அரசு மாற்றி செய்கிறது. பள்ளிக்கு விடுமுறை அளிக்காமால் அந்த நாட்களில் அந்த மனிதரை பற்றிய செய்திகளை பகிர்ந்து அவர் செய்த நல்லது கெட்டதுகளை ஆராயுந்து அவர்களை கட்டுறை எழுத சொல்லாம். அதனாலாது சிறிதளவாவது பலன் இருக்கும் அதற்கு பதில் விடுமுறை விட்டால் வீட்டில் இருந்து டிவி பார்த்து கொண்டிருப்பார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் .
      இது போன்ற நிகழ்வுகளுக்கு விடுமுறை விடலாமா வேண்டாமா என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து உண்டு. எனினும் விடுமுறை விடுவது இது வரை வழக்கமாகி விட்டதால் தற்போது இல்லை என்ற சூழ்நிலையில் அதை உறுதியாக அறிவிக்கவேண்டும். என்பதே என் சொந்தக் கருத்து.
      உண்மையில் டிவியில் அப்துல் கலாம் பற்றி பல தகவல்கள் சொல்லப்பட்டன. பள்ளியில் ஆசிரியர்கள் சொல்வதை விட டிவியில் சொல்வது அழுத்தமாகப் பதியும் என்று நினைக்கிறேன். என்ன அந்த நிகழ்ச்சியை பெற்றோர்தான் குழந்தைகளை பார்க்க வைக்க வேண்டும்.ஆசிரியர்களும் அதனைப் பார்த்து பின்னர் வகுப்பறையில் சொல்லவேண்டும்

      நீக்கு
  3. வணக்கம்

    தங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்துகொள்கிறேன்.

    http://blogintamil.blogspot.fr/2015/07/blog-post_29.html

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
  4. சாதாரணமாக இந்த மாதிரி அறிவிக்கப்படும் விடுமுறை நாட்களுக்கு பதிலாக வேலை செய்ய வேண்டிய ஒரு நாள் - குறிப்பாக இரண்டாம் சனிக்கிழமை - வேலை நாளாக குறிப்பிட்டே அறிவிப்பு வரும். ஆனால் நீங்கள் குறிப்பிடுவது போல ஒரு சேனலில் செய்தி வந்து விட்டால் நம் செய்தி நிறுவனம் மட்டும் பின் தங்கி விடுமோ என்று எந்தச் செய்தியையும் ஆராயாமலே போட்டு விடுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  5. சிலரின் குழப்பங்களைத் தீர்க்கும் பதிவு
    குறிப்பாக பத்திரிக்கைக்காரர்களின் குழப்பத்தையும்..
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. உண்மையான நிலவரத்தைச் சொன்னீர்கள். இந்த ஊடகங்கள் – குறிப்பாக தனியார் டீவி சேனல்கள் – தங்கள வரம்பை மீறி அடிக்கடி இது போல் செய்கிறார்கள்.

    த.ம.4

    பதிலளிநீக்கு
  7. ஊடகங்கள் பல நேரங்களில் இவ்வாறாக அதிவேகமாக செயல்பட்டுவிடுகின்றன. விளைவுகள் வேறு விதமாக அமைந்துவிடுகின்றன. பொதுவாக இவை போன்ற நிகழ்வுகளுக்கு விடுமுறை விடுவதை விடுத்து மறைந்த மாமனிதருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பணியைத் தொடர்வதே நலம். அதுவே இவர்களைப் போன்றவர்களுக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலி. இப்பொழுதெல்லாம் முக்கிய பிரமுகர்கள் இறந்துவிட்டால் உடனே விடுமுறையைப் பற்றித் தான் பேசுகிறார்களே தவிர இறந்தவர்களை மறந்துவிடுகிறார்கள் என்பது வேதனைக்குரியதே. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விடுமுறை விடுவதில் எனக்கும் உடன்பாடில்லை . என்றாலும் இதற்கு முன்னர் இது போல் விடுமுறை விட்டதால் வந்த விளைவே இது . தெளிவான அறிவிப்பு மூலம் விடுமுறை இது போன்ற நிகழ்வுகளுக்கு இனி விடுமுறை இல்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்பதே என் கருத்து.
      இப்போதெல்லாம் சொந்த தாத்தா பாட்டி இறந்தாலும் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பத்தான் செய்கிறார்கள் பெற்றோர் . அதனால் தவறு அவர்கள் மீது இல்லை

      நீக்கு
  8. மாமனிதரின் மறைவைவிட
    பள்ளி உண்டா இல்லையே என்ற பட்டிமன்றமே
    முக்கியத்துவம் பெற்றுவிட்டது
    வேதனைதான் ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
  9. உள்ளூர் தொலைக்காட்சியிலும் சரியான தகவல் இல்லை... ஆக நேற்று குழப்பமும் அலைச்சலும்... இதில் தேர்வு வேறு... இன்று என்ன பாடத்தில் தேர்வு என்றும் குழப்பம்...!

    பதிலளிநீக்கு
  10. இப்போதெல்லாம் பத்திரிக்கைகளின் உண்மைத் தன்மையை நம்பவே பயமாய் இருக்கிறது..

    பதிலளிநீக்கு
  11. ஊடகங்களும் ,செய்தித் தாள்களும் அரசும் தெளிவற்ற நிலையில்தான் இயங்குகின்ற
    சில நேரங்களில் என்பதுதான் உண்மை நிலை!

    பதிலளிநீக்கு
  12. "பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டால்; அவை ஈடு செய்யப் படவேண்டும்." என்ற கருத்தை வரவேற்கிறேன். மாணவர் கல்வி பாதிக்காது துயர் பகிர்வோம்.

    அறிஞர் அப்துல்கலாமிற்கு; நாம் என்ன செய்யப் போகிறோம்?
    http://eluththugal.blogspot.com/2015/07/blog-post_28.html

    பதிலளிநீக்கு
  13. இந்த விடுமுறைக் குழப்பத்தில் என் மகள் நேற்று பள்ளி செல்லவில்லை! அப்புறம் பள்ளி இருக்கிறது என்று தெரிந்ததும் கிளம்ப சொன்னால் அவள் முகம் வாடியது. சின்னப் பெண் அல்லவா? ஊடகங்கள் இந்த மாதிரி விடுமுறை அறிவிப்புக்கள் மட்டுமல்ல எந்த செய்தியிலும் கொஞ்சம் அக்கறை செலுத்தி உறுதிபடுத்தப்பட்டபின் வெளியிட வேண்டும். நன்றி!

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் காற்றே,
    பள்ளியின் விடப்படும் விடுமுறைகளுக்கு மாற்று வேலைநாட்கள் உண்டு, தாங்கள் சொன்னது போல் சனிக்கிழமைகள்,,,,,,,,,,,,
    மேலும் 220 நாட்களுக்கு குறையாமல் என்பதும் சரியாக கணக்கில் காட்டப்படுவதாக நினைக்கிறேன்,
    தங்கள் பகிர்வு அருமை,
    நன்றி.

    பதிலளிநீக்கு
  15. இந்தக் குழப்பத்தால் கர்நாடகாவில் சொல்லப் படாமலேயே பள்ளிப் பிள்ளைகளுக்கு மதியௌணவு வழங்கப் படாமல் போயிற்று.

    பதிலளிநீக்கு
  16. அதிசயத்திலும் அதிசயமாக இந்த முறை என் தோழிகள், உடன் பணிபுரிவோர் என அனைவரும் வருந்தி, விடுமுறைக்கு சலித்துகொள்ளாமல் ஒருமித்த கருத்தோடு இருந்தது இந்த முறை தான் அண்ணா!

    பதிலளிநீக்கு
  17. பத்திரிக்கைகள் முந்திரிக்கொட்டை வேலையைப் பார்க்கின்றன

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895