என்னை கவனிப்பவர்கள்

புதன், 1 ஜூலை, 2015

புஷ்பா மாமியின் புலம்பல்கள்-கட்டாய ஹெல்மெட் சரிதானா?


புஷ்பா மாமியின் புலம்பல்களைக் கேட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டதல்லவா?
நான் கேட்ட புலம்பல்களை நீங்களும் கேட்டு புலம்புவீர்.

      நேற்று  புஷ்பாமாமியின்  கையில் ஹெல்மெட்டுடன் ( இன்னும் தலையில் போடவில்லை)  பார்த்தபின்தான் நாளை முதல் ஹெல்மெட் கட்டாயம் என்பது நினைவுக்கு வந்தது  மாமாவுடன் ஸ்கூட்டரில் வந்து  இறங்கினார். "வெத்தலை பாக்கு வாங்க மறந்துட்டேன். நீக போய்கொஞ்சம் வாங்கிண்டு வாங்கோ" என்று அனுப்பி விட்டு என் பக்கம் திரும்பினார்.
"முரளி!  நினைச்சா ஒரு சட்டம் போடறா உங்க கவர்ன் மென்ட்ல "
30 இந்தேதிக்குள்ள 2005 வருஷத்துக்குள்ள அச்சடிச்ச ரூபா நோட்டு எல்லாம்  ஜூலை ஒண்ணாந்தேதிக்குப் பிறகு  செல்லாதுன்னு பேப்பர்ல போட்டிருந்தான். ஜுன் 30க் குள்ள அதை பேங்குல மாத்திக்கனுமேன்னு என்கிட்ட் இருந்த பழைய ரூபா நோட்டை எல்லாம் சேர்த்து எடுத்துட்டு போனேன் . அங்கே போன டிசம்பர் வரை   டைம் எக்ஸ்டன்ட்  பண்ணி இருக்கானாம்  இது தெரிஞ்சா மெதுவா போயிருப்பேன் . ஒரு மாசம் முன்னாடியே சொல்லக் கூடாதா. கடைசி நேரம் வரை காத்திருக்கணுமாம். சரி போனதுதான் போனோம் ஒண்ணாந்தேதியில் இருந்து ஹெல்மட் கட்டாயமாச்சேன்னு  ஹெல்மட் வாங்கி வந்தேன்.
 ஏதோ நான்தான் கவர்மென்ட் என்பது போல தொடங்கினார் புஷ்பா மாமி
"உத்தரவு போட்டாலும் போட்டீங்க . ஹெல்மெட் கடையில ஒரே கூட்டமா இருக்கு. இதான் சாக்குன்னு பழைய ஹெல்மெட்டை எல்லாம் தூசு தட்டி நம்ம தலயில கட்டிடறான்.
"ஹெல்மட்டே தலையில கட்டறதுதானே மாமி!?
"ஹய்யோ ஜோக்காமுரளி! நோக்கு ஜோக்கடிக்கக் கூட தெரியுமா?"

மாமி தொடர்ந்தார் 
"ஒரு சட்டமோ விதியோ என்னத்துக்கு?  நாம் செய்யற செயலாலே மத்தவாளுக்கு ஆபத்தோ சங்கடமோ, கஷ்டமோ இருந்தா அதுக்காக ஆர்டர் போடலாம். நாம
ஹைவேஸ்ல போகும்போது ஹெல்மெட் போட்டுட்டுதான் போகணும்னு சொன்னா அதுல நியாயம் இருக்கு. ஏன்னா! கண்ணு மண்ணு தெரியாம வேகமாப் போறா! லோக்கல் ரோடுதான் குண்டும் குழியுமா இருக்கே

      எங்காத்துல இருக்கிற   ஸ்கூட்டருக்கு ஹெல்மட் தேவையா? அது போற வேகத்துக்கு.  அதுவும் எங்காத்து மாமாவண்டி ஓட்டும்போது  பின்னாடி ஒக்காந்து போனா போறும். நடந்து போறவா எல்லாம் ஓவர் டேக் பண்ணி  டாட்டா காட்டிட்டு  போயிண்டே இருப்பா? அவ்வளோ வேகம் .நானே ஓட்டறேன்னாலும் கேக்க மாட்டார்"
   "குடிக்காதன்னு ரூல்ஸ் கொண்டு வரலாம். குடிச்சா மத்தவங்களுக்கும் பாதிப்பு, இத்தனை கி.மீ வேகத்துக்கு மேல போகக் கூடாதுன்னு சட்டம் கொண்டு வரலாம்.ஆக்சிடன்ட் நடக்க வாய்ப்பு இருக்கு.பொது இடத்தில சிகரட் புடிக்கக் கூடாதுங்கறது  ஓ.கே  ஏன்னா புகை மத்தவங்களுக்கும் பகையா  போகுது, கண்ட இடத்தில எச்சில துப்பக் கூடாதுன்னு கட்டாயப் படுத்தலாம். ஏன்னா  சுகாதாராம் பாதிக்க வாய்ப்பு இருக்கு. ஹெல்மெட் போடலன்னா அவங்களுக்கு மட்டும்தான் பாதிப்பு.: இல்லையா? இதுல பின்னாடி ஒக்காந்திருக்கறவா வேற ஹெல்மெட் போட்டுண்டு போகணுங்கறது கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு.
"மாமி! எனக்கு தெரிஞ்சி வண்டி ஒட்றவங்களை விட பின்னாடி ஒக்காந்து வரவங்களுக்குத்தான் ஹெல்மெட்  அவசியம் தேவை . ஏன்னா விபத்து நடக்கும்போது விழறதை தவிர்க்க முடியாட்டாலும் வண்டி ஓட்டறவருக்கு fracton of Seconds முன்னாடி தெரிஞ்சுரும் . அதனால தலயில முடிஞ்சவரை அடிபடாம பாத்துக்க தன்னையும் அறியாம முயறசி பண்ணுவாங்க. ஆனால் பின்னாடி இருக்கவங்களுக்கு விபத்தை உணர்வதற்குள்ள விழுந்து சில நேரங்களல்ல தலையில் அடிபட்டு உயிரிழக்க வாய்ப்புஇருக்கு. டூ வீலர் விபத்துகளை கவனிச்சு பாருங்க. பின்னாடி இருக்கவங்களுக்குத்தான் அதிக அளவில காயமோ உயி ரிழப்போ ஏற்படுது"
"போடா! நீயும் உன் புள்ளி விவரமும்.
    ஒவ்வொரு வீட்டிலையும் குறஞ்ச பட்சம் ரெண்டு ஹெல்மெட்டாவது வாங்கி வைக்கணும் போல இருக்கே. உன் கிட்ட டூ வீலரே இல்லன்னாகூட ஹெல்மட் வாங்கணும் . இல்லன்னா அவசரத்துக்கு ஹாஸ்பிடலுக்கு கடைக்குக்  கூட யாரோடையும் டபுள்ஸ் போக முடியாது. முன்னெல்லாம் மெயின் ரோட்லதான் ட்ராபிக் போலிஸ்காரன் இருப்பான். இப்பல்லாம்  நாலு சந்துகள்லையும் நின்னுக்கிட்டு வண்டியை மடக்கறாளே! இனி அவாளுக்கு கொண்டாட்டம்தான்"
தர்மம் தலை காக்குங்கறது இதுதானோ!
ஹெல்மட்டோட பேரைப் பாருங்க
"இன்னும் என்னென்ன ரூல் போடப் போறாளோ தெரியல 
மவுலிவாக்கம் அடுக்கு மாடிக் கட்டம் இடிச்சி விழுந்துதோ இல்லையோ. அதனால அடுக்குமாடி குடி இருப்பவங்க எல்லாம் வீட்டுக்குள்ள இருந்தாலும் ஹெல்மெட் போட்டுக்கணும்னு ஒரு சட்டம் கொண்டுவந்தாலும் ஆச்சர்யம் இல்ல.
 "ஜென்ட்ஸ் ஓகே லேடீசுக்கு எப்படிடா செட் ஆகும் .ஏற்கனவே அரை அடி தலைமுடிதான் இருக்கு . கொட்டிப் போயிடாதோ. அதுவும் நம்ம ஊரு வெயிலுக்கு வேர்த்து வேர்த்து முடி பிசுபிசுன்னு ஆகிடுமே ஆபீஸ் போற லேடீஸ் எல்லாருக்கும் கஷ்டம்தானே.தலைவலியோட சேத்து கழுத்துவலியும் வரும்னு சொல்றாளே!
" சும்மா மாமி , நல்ல குவாலிட்டி ஹெல்மெட் வாங்கினா அதெல்லாம் வராது "

 "ஆமாம்! ஐ.எஸ்.ஐ முத்திரை வாங்கினதா இருக்கணும் .தலைக்கு பொருத்தமானதா வாங்கனும்னு அடவைஸ் பண்றா .எப்படி தலைக்கு பொறுத்தமாயிருக்கும் ஒவ்வொருத்தர் மண்டையும்  ஒவ்வொரு விதமான்னா இருக்கு, 
 ஹெல்மெட் இல்லாம போனா லைசன்ஸ் ,ஆர்.சி புக் ன்னு எல்லா டாக்குமன்ட்சையும் பறிமுதல் செய்யணுமாம். நல்ல காலம்! ஜட்ஜுக்கு நல்ல மனசு வண்டியையே பறிமுதல் பண்ணனும்னு சொல்லாம விட்டாரே.

"மாமி!எதுவும் முதல்ல சொல்லும்போது  கஷ்டமாத்தான் இருக்கும்  கொஞ்சம் குறைகள் இருக்கத்தான் செய்யும் . உயிர் முக்கியம் இல்லையா
நிறைய விப்த்துகள்ள ஹெல்மெட் போட்டிருந்தா உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இருக்குன்னுதானே டாக்டர்ஸ் எல்லாம் சொல்றாங்க  .." என்று நான் சொல்லிக்கொண்டிருக்க வழக்கம்போல் தான் சொல்வதை  மட்டும் சொல்லி விட்டு வேல இருக்கு நான் கிளம்பறேன்' என்று புறப்பட்டார் புஷ்பா மாமி 

***************************************************************************

கொசுறு
 ஹெல்மட் பற்றி இவங்கல்லாம் என்ன சொல்றாங்க?

      1. கண்டாக்டர் 
         கண்ணுல தூசி விழாம பாத்துக்கலாம் .


     2. காதலர்கள் கருத்து
        யார் கண்ணுலயாவது பட்டுடுவோமோன்னு  பயம் இல்லமா சுத்தலாம்

     3.குடும்பத் தலைவரின் குரல் : 
        ஹெல்மட் வாங்கறது பெரிசு இல்லை அதை  பத்திரமா பாதுகாக்கறதுதான்          பெரிய விஷயம்.

    4.ஒரு பெரியவரின் கருத்து:
       தமிழ்நாட்டில் உள்ளவர்கள் எல்லாம் தலைக் கன த்தோடு அலையப்      போகிறார்கள்

    5. ஒரு அம்மாவின் கவலை
        பையனை 2. கி.மீ தூரத்தில் இருக்க ஸ்கூல்ல கொண்டுபோய் விடனும் அவன் சைசுக்கு ஹெல்மெட் கிடைக்குமா. விட்டுட்டு  வரும்போது  ஹெல்மெட்டை திரும்பி கொண்டுவரணும். ஈவினிங்   கூட்டீடு வர   போகும்போது ஞாபகமா எடுத்துட்டு போகனும்  

     6.ஹெல்மட் கடைக்காரர்களின்  கவலை 
        நாட்டாமை! தீர்ப்பை மாத்தி சொல்லிடாதீங்க 

     7. மணப்பெண்ணின் அப்பா:
       கல்யாண சீர் வரிசையில ஹெல்மெட்டும் சேத்துக்கனும் 

     8. திருவாளர் பொது ஜனம் 
         இதெல்லாம் சும்மா கொஞ்ச நாளைக்குத்தான் அப்பறம் யாரும் இதை         கண்டுக்க மாட்டாங்க
     9. அரசியல் வாதி  
          அடுத்த இலவச  திட்டம் தயார்  அம்மா ஹெல்மெட் 
   10 .முகமூடிக் கொள்ளையர்கள் 
         ஹையா! எல்லோரும் எங்கள மாதிரியே இருந்தா எங்களுக்கு ரொம்ப வசதியாப் போச்சு  
         

கொசுறுக்கு கொசுறு  
பிரபல பதிவர் மதுரை தமிழன்  விசுவின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வேலூர் வந்தபோது   சொன்ன (ரகசிய) தகவல் .
நான் வீட்டுக்குள் இருக்கும்போது ஹெல்மட் போட்டுக்கொண்டுதான் இருப்பேன். பூரிக்கட்டை தாக்குதலில் இருந்து தப்பிக்க . 
  கணவன்மார்களின் நன்மை கருதி இந்தியாவில் வீட்டுக்குள்ளேயும் ஹெல்மெட் கட்டாயம் அணிய  சட்டம் போடவேண்டும் என மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதற்கு பல பதிவர்கள் ரகசிய ஆதரவு தெரிவித்துள்ளனராம்.

***********************************************************

    புஷ்பா  மாமியின் முந்தைய புலம்பல்களை கேட்க ஆவலா?
    புஷ்பா மாமியின் புலம்பல்கள்  
    புஷ்பா மாமியின் ஆவேசம்!
    புஷ்பா மாமியின் புலம்பல்கள்-டெபாசிட் கட்டணுமாம்-எதுக்கு? 
    அமில வீச்சு! சகஜமாச்சு!-புஷ்பா மாமியின் புலம்பல்  
    புஷ்பா மாமியின் புலம்பல்கள்-பயமுறுத்தும் பயணங்கள்  
    புஷ்பா மாமியின் எச்சரிக்கை 

32 கருத்துகள்:

  1. முன்னெல்லாம் மெயின் ரோட்லதான் ட்ராபிக் போலிஸ்காரன் இருப்பான். இப்பல்லாம் நாலு சந்துகள்லையும் நின்னுக்கிட்டு வண்டியை மடக்காறாளே! இனி அவாளுக்கு கொண்டாட்டம்தான்

    பதிலளிநீக்கு
  2. பரவாயில்லையே...புத்தக வெளியீடு நிகழ்ச்சியில் வாழ்வின் தரம் பற்றியும் மற்றும் எச்சரிக்கையாக வாழ்வது எப்படி என்றும் பேசி இருகின்றீர்களே..

    இந்த விஷயத்தில் பிரதமர் மோடி கண்டிப்பாக உதவ மாட்டார். அவர் தான் மனைவியிடம் இருந்து துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடி விட்டாரே.. அவருக்கு மதுரை தமிழனின் பூரிக்கட்டை விஷய புரியாது.

    ஹெல்மெட்டே தலையில் கட்டுவது தானே... அருமையானா நகைச்சுவை .

    பதிலளிநீக்கு
  3. மாமியின் உரையாடல் சிறப்பு.
    கொசுறும்...அதற்குக் கொசுறும் ரசிக்க வைத்தது.

    மதுரைத்தமிழருக்கு இப்போது பூரிக்கட்டை தாக்குதல் இல்லை...
    வேறொன்று அவங்க இல்லத்தரசிக்கு அனுப்பிவைத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  4. தலைக்கு கவசம் (ஹெல்மேட்) போடவில்லையென்றால் திவசம் கொண்டாட வேண்டி இருக்கும் அதனால்தான் வீட்டில் இருக்கும் போது ஹெல்மேட் மாட்டுகிறேன்

    பதிலளிநீக்கு
  5. பதிவு அருமை
    கொசுறு அதைவிட அருமை
    மாமியை அடிக்கடி பாருங்கோ
    அவா மூலம் விஷயம் சொன்னா
    கொஞ்சம் சுவாரஸ்யமாகத்தான் இருக்கு
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. இந்த சட்டத்தின் மீது சிலர் ரொம்பவும் அக்கறை காட்டுவதைப் பார்க்கும் போது, ”ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம்” என்ற கதைதான் நினைவுக்கு வந்தது.

    சிறப்பான பதிவு. நன்றாகவே சொன்னீர்கள்.

    த.ம.5

    பதிலளிநீக்கு
  7. ஹா..ஹா... கொசுறு ரொம்பவே சிரிப்பா இருந்தது..


    //ஏன்னா விபத்து நடக்கும்போது விழறதை தவிர்க்க முடியாட்டாலும் வண்டி ஓட்டறவருக்கு fracton of Seconds முன்னாடி தெரிஞ்சுரும் . அதனால தலயில முடிஞ்சவரை அடிபடாம பாத்துக்க தன்னையும் அறியாம முயறசி பண்ணுவாங்க. ஆனால் பின்னாடி இருக்கவங்களுக்கு விபத்தை உணர்வதற்குள்ள விழுந்து சில நேரங்களல்ல தலையில் அடிபட்டு உயிரிழக்க வாய்ப்புஇருக்கு.// -

    நிஜமாத்தான்.. ஒரு முறை என் கணவர் வண்டியை ஓவர்டேக் பண்ணி திரும்பும் போது எனக்கு என்னன்னே தெரியலை ஒரு செகண்டுல ரோட்ல விழுந்திட்டேன்.. இவரு எப்படியோ பேலன்ஸ் பண்ணி வண்டியை தள்ளிட்டு சமாளிச்சிட்டு நிக்கறார்.. நாலு நாள் கை தூக்க முடியாம ஹாஸ்பிடல் போய் வீட்ல ரெஸ்ட் எடுத்தேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன உஷா மேடம் நீங்க கிழே விழுந்திட்டிங்களா..பாவம் ரோடுக்கு ரொம்ப அடிபட்டு இருக்குமே,,,

      நீக்கு
  8. ஹெல்மட்டே தலையில கட்டறதுதான, தலைக் கன த்தோடு, கொசுறு ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
  9. ஹெல்மெட்டின் அவசியத்தை அழகாக அலசிவிட்டீர்கள்! கொஞ்சம் கால அவகாசம் கொடுக்கலாம்! பின்னால் உட்கார்ந்து வருவோரை கட்டாயப்படுத்தவேண்டாம் என்பது என் கருத்து.

    பதிலளிநீக்கு
  10. கொசுறுவில் சேர்க்க செயின் அறுப்பவர்களின் அடையாளம் தெரியாது. அவர்கள் வாழ்த்துவார்கள்.

    பதிலளிநீக்கு
  11. .// கணவன்மார்களின் நன்மை கருதி இந்தியாவில் வீட்டுக்குள்ளேயும் ஹெல்மெட் கட்டாயம் அணிய சட்டம் போடவேண்டும்//
    charity begins at hpme! நடத்துங்க!

    பதிலளிநீக்கு
  12. பு. மாமியின் புலம்பல்களில் கொஞ்சம் நியாயம் இருக்கிறது. பில்லியன் ரைடர் பற்றி நீங்கள் சொல்லி இருப்பது உண்மை. அப்புறம் பதிவின் கடைசி டிட்பிட்ஸ் சூப்பர்!

    பதிலளிநீக்கு
  13. பின்னால் அமர்ந்து வருபவருக்கும் தலைக் கவசம் அவசியம் என்பதில் இருந்து விலக்க அளிக்கலாம் ஐயா
    நன்றி
    தம+1

    பதிலளிநீக்கு
  14. தெருவழியே
    விபத்தில் இருந்து தப்ப
    கட்டாய ஹெல்மெட் சரிதானே!

    பதிலளிநீக்கு
  15. வணக்கம்,
    இதெல்லாம் சும்மா கொஞ்ச நாளைக்குத்தான் அப்பறம் யாரும் இதை கண்டுக்க மாட்டாங்க,,,,,,,
    தாங்கள் சொன்ன இது தான் உண்மை,
    கொசுறு சூப்பர்,
    மதுரை தமிழர் தங்களிடம் ரகசியம் சொன்ன இப்படித்தான் போட்டு உடைப்பதா?
    அருமை,
    நன்றி

    பதிலளிநீக்கு
  16. வணக்கம்
    முரளி அண்ணா

    நல்ல கருத்தை சொல்லியுள்ளீர்கள்... சிந்திக்க வைத்தது... இனித்தான் முகமூடித்திருடர்கள் அதிகம் வரும்..... பகிர்வுக்கு நன்றி.j.ம 7
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  17. # 1. கண்டாக்டர்
    கண்ணுல தூசி விழாம பாத்துக்கலாம் #.
    இதனால் என் வருமானம் குறையும் ,எனவே ஹெல்மெட் தேவையில்லைன்னு சொல்லாமல் போனாரே :)

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் !

    மாமியின் சிபாரிசுகள் எல்லாம் நன்னாத்தானே இருக்குது இவாளுகளுக்கு புரியுதோ இல்லையே நேக்கு நன்னா புரியுது !

    கலக்கல் .கண்டிப்பு பதிவு அருமை தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  19. அன்புடையீர்! வணக்கம்!
    அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (02/07/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    இணைப்பு: http://gopu1949.blogspot.in/

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    பதிலளிநீக்கு
  20. புஷ்பா மாமியின் புலம்பல்னு தலைப்பைப் படிச்சுட்டு என்னாச்சோ ஏதாச்சோனு.... ஆசையா.... படிக்க வந்தா... இப்டிப் பண்லாமோ அம்பி?

    பதிலளிநீக்கு
  21. மாமியின் புலம்பல் நியாயமானதே. கொசுறு மனதில் அதிகம் பதிந்துவிட்டது. நன்றி.

    பதிலளிநீக்கு
  22. நானும் எழுதினேன்! ஒரு கவிதை!

    பதிலளிநீக்கு
  23. புஷ்பா மாமியின் புலம்பல் நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  24. \\ அரசியல் வாதி
    அடுத்த இலவச திட்டம் தயார் அம்மா ஹெல்மெட்

    Read more: http://www.tnmurali.com/2015/07/wearing-helmet-mandatory-opinions-of-public.html#ixzz3eqG98JOy
    \\ This will not happen, politicians will loose the commission.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. இலவச திட்டங்களிலா கமிஷன் கிடைக்காது.? நன்றாக கவனிக்கும் நிறுவனங்க்ளுக்குத்தான் ஆர்டர் கிடைக்கும்

      நீக்கு
  25. தமிழகத்தில் இருக்கும் பலரும் இப்படி புலம்பித் தீர்க்கிறார்களே! :)

    பதிலளிநீக்கு
  26. புஷ்பா மாமியின் புலம்பல் நியாயமே! அருமை!!!

    ஹஹஹஹ் கொசுறு ரொம்பவே அருமை! அட அன்னிக்கு இப்படி எல்லாம் கூட ரகசிய பரிமாற்றம் நடந்ததா.....சே தெரியாமப் போச்சே....அதான் மதுரைத் தமிழன் நிறைய ஹெல்மெட் வாங்கிட்டுப் போயிட்டாரு போல ...இங்க செம கிராக்கி அதான்...

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895