என்னை கவனிப்பவர்கள்

வெள்ளி, 3 ஜூலை, 2015

வாங்கிய கடனை அடைக்காத வஞ்சகர்கள்


     தலைப்பை வேறுமாதிரியாக நினைத்து வந்தவர்கள் மன்னிக்கவும். தலைப்பு கவிதையில் இடம்பெறும் ஒரு வரியாகும் 

    ரூபன் மற்றும் யாழ்ப் பாவாணன் இணைந்து நடத்திய கவிதைப்போட்டியில் முதல் மூன்று பரிசு பெற்றவர் விவரம்  மேலே படத்தில் உள்ளது . அவர்களுக்கு வாழ்த்துகள். என்னுடைய கவிதை ஆறுதல் பரிசு பெற்றது.. என்னுடன் இணைந்து ஆறுதல் பரிசு பெற்ற பதிவர்கள் இனியா, மணவை ஜேம்ஸ் , ராஜா, ரவி ஆகியோருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் .     போட்டியை  நடத்திய ரூபன்&யாழ்பாவாணன் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள். ரூபன் யாழ்பாவாணன் இருவரும் பல்வேறு வலைதளங்களுக்கு சென்று கருத்திட்டு பதிவர்களை ஊக்குவித்து வருவது நாம் அறிந்ததே . அதுமட்டுமல்லாமல் அவ்வப்போது போட்டிகளை அறிவித்து பரிசுகள் வழங்கியும் பதிவர்களின் திறமைகளை பாராட்டி மகிழ்கிறார்கள் சிறப்பாக செயல்பட்ட நடுவர்களுக்கும் உளமார்ந்த நன்றி
                                       இணையத் தமிழ் இனி 

                            ஆங்கில மோகம் கொண்டேதான்
                                   அழகுத்  தமிழை அவமதித்தோம்
                            பாங்குடன் திகழ்ந்த நம் மொழியை
                                   'பண்ணி' மொழியாய் ஆக்கிவிட்டோம்
                            தாங்கிய தாயின் மொழியினையே
                                    தூங்கிக் கிடந்து  நாம்மறந்தால்
                            வாங்கிய கடனை அடைக்காத
                                    வஞ்சக ராவோம் அறிவீரா?

                             பள்ளிகள் துறந்தன நம்தமிழை
                                   பார்த்துக் கிடந்தோம் பாவியென
                             பிள்ளைகள் தமிழை அறியாமல்
                                    வளர்வதை நினைத்தோம் பெருமையென
                             கொள்ளை இன்பம் தமிழினிலே
                                    கொட்டிக் கிடப்பது தெரியாமல்
                             வெள்ளைக் காரன் மொழியினையே
                                     வேண்டி விரும்பிக் கற்கின்றோம்

                             அணையப் போகும் விளக்காக
                                      அருந்தமிழ் நிலையும் ஆகிடுமோ?
                             கணையை செலுத்தா  வில்லாக
                                       கன்னித் தமிழும் இருப்பதுவோ?
                            அணையைத் தாண்டா வெள்ளமென
                                       அடியில் கிடந்து பயன் என்ன?
                             இணையத் தமிழால் இனிமேலே
                                         இக்குறை போக்க இணைந்திடுவோம்

                             மென்பொருள் வன்பொருள் யாவிலுமே
                                        தமிழின் கால்கள் பதியட்டும்
                             நன்பொருள் இலக்கியம் கட்டுரைகள்
                                       இணையம் முழுதும் பரவட்டும்
                             கண்பொருள் பார்த்துக் கற்றவையும்
                                      கணினித் தமிழால் வளரட்டும்
                             இன்பொருள் என்று தமிழ்மொழியை
                                        இவ்வுலகம் அறிந்து கொள்ளட்டும்
******


* பண்ணிமொழி - tri பண்ணி, test பண்ணி , Read பண்ணி -prepare பண்ணி இப்படி நிறைய ஆங்கில வினைச்சொல் கூட பண்ணி சேர்த்து பேசும் வழக்கம் இருந்து வருகிறது. அதைத்தான் குறிப்பிட்டேன்

Read more: http://www.tnmurali.com/2015/07/tami-in-tamilnadu-our-duties.html#ixzz3g8Qt8GrA

***********************************************************************

படித்துவிட்டீர்களா?

திரி'க்குறள்,'சிரி'க்குறள்

குலுங்கி அழுது கேட்கிறேன்-"என்னை ஏன் கைவிட்டீர்?"..
16 கருத்துகள்:

 1. உங்கள் இணையத் தமிழ் இனிமைதான் :)

  பதிலளிநீக்கு
 2. உங்கள் இணையத் தமிழ் இனிமைதான் :)

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்
  முரளி அண்ணா.

  வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள் .... மேலும் பல வெற்றிகள் வந்து சேரட்டும் த.ம 3

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. ஹா...ஹா...ஹா... தலைப்பைப் பார்த்து ஏமாந்துதான் போனேன்.

  ஆறுதல் பரிசுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 5. அருமை... வாழ்த்துக்கள். 'பண்ணி ' எந்த அர்த்தத்தில் வருகிறது..? funny என்பதன் தமிழாக்கமா..?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. போட்டிக்கு அனுப்பும்போது இதற்கான விளக்கத்தையும் அனுப்பி இருந்தேன்.,
   tri பண்ணி, test பண்ணி , Read பண்ணி -prepare பண்ணி இப்படி நிறைய ஆங்கில வினைச்சொல் கூட பண்ணி சேர்த்து பேசும் வழக்கம் இருந்து வருகிறது. அதைத்தான் குறிப்பிட்டேன்

   நீக்கு
 6. யார் அந்த வஞ்சகர் என்று குமுறிக் கொண்டு வந்தால். இந்தக் கவிதை அப்படியே குளிர வைத்து விட்டதே . உண்மை யை அழகாக வரிசைப்படுத்தி தந்த விருத்தம் அருமை! சொல்லாடல் wow தொடர வாழ்த்துக்கள் ....!

  பதிலளிநீக்கு
 7. எத்தனையாம் பரிசு
  எப்படிப்பட்ட பரிசு
  என்றெல்லாம் பார்ப்பதை விடை
  எத்தனையோ ஆள்களை விலத்திக்கொண்டு
  நமது கவிதை
  போட்டியில் தெரிவாகியிருப்பதே பெருமை!

  தங்களுக்கான சான்றிதழ் விரைவில் அனுப்பி வைக்கப்படும்.

  பதிலளிநீக்கு
 8. அருமையான படைப்பு! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 9. இணையத் தமிழ் இனிமை.

  பதிலளிநீக்கு
 10. கவிதை நன்று.

  போட்டியில் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895