நடுத்தர மட்டும் மேல்தட்டு வர்க்கத்தினர், பணப் புழக்கம் காரணமாகவும் மீடியா விளம்பரங்களின் தாக்கம் காரணமாகவும் நுகர்வு நோய்க்கு ஆட்பட்டு விடுகிறார்கள். இதை நுகர்வு வெறி என்று கூட கூறலாம். தேவைக்கு அதிகமான நுகர்ச்சி,பொறுப்பற்ற நுகர்ச்சி,தொடர்ந்து கடை பிடிக்க முடியாத நுகர்ச்சி இவை நுகர்வு வெறியின் அம்சங்களாகும். இவை வாங்கும் வசதி குறைந்தவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது
பல்வேறு மாயாஜாலம் காட்டும் விளம்பரங்கள் நுகர்வோரை கவர்ந்திழுப்பதால் தேவையை கணக்கில் கொள்ளாமல் பொருட்கள் வாங்கிக் குவிக்கப் படுகின்றன. நுகர்வோரின் உரிமைகள் பேணப்படவேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனாலும் நுகர்வோருக்கென்று பொறுப்புகள் உண்டு. அவை என்னவென்று சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது.
நாம் வாங்கும் பொருள்களை பயன்படுத்தப் போவது நாம்தான் என்றாலும் அதன் பயன் பயன்பாடு மற்றவர்களையும் பாதிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது.நமது நுகர்வில் எப்போதும் ஒரு சமூக அக்கறை இருப்பது நல்லது. நீங்கள் சமூத்தின்மீதும் நாட்டின்மீதும் அக்கறை கொண்டவரா என்பதை கீழே கொடுக்கப் பட்டவற்றோடு ஒப்பிட்டுப் பார்த்து மதிப்பீடு செய்து கொள்ளுங்கள்
நீங்கள் கடைக்கு சென்று பொருள் வாங்கும்போது இவற்றை எல்லாம் செய்கிறீர்களா?
- பணத்திற்கேற்ற மதிப்புள்ள பொருளைப் பெறுவதற்காக பல கடைகளுக்கு சென்று விசாரித்து வாங்குவேன்.
- கெட்டுப் போகக் கூடிய பொருள்களை வாங்கும் முன்பு அவை காலாவதியாகும் நாள் கழிந்து போகாமல் இருக்கிறதா என்று பார்த்து வாங்குவேன்.
- பொருளை வாங்குவதற்கு முன்பே அதற்கு இடப்பட்டுள்ள உறையை பின்னர் அப்புறப்படுத்த ஏற்ற முறையை சிந்திப்பேன்.
- வாங்கிய பொருளில் ஏதாவது குறை இருந்தால் திரும்பவும் கடைக்கு சென்று பதிலுக்கு வேறு பொருளை அல்லது அதற்கு கொடுத்த விலையை திருப்பித் தருமாறு கேட்டு வாங்குவேன்.
- பொருளின் பெயர் சீட்டில் அல்லது உறையின் மீது எழுதப் பட்டுள்ள பாதுகாப்புக் குறிப்புகளை வாங்குவதற்கு முன்பே படித்து தெரிந்து கொள்வேன்.
- இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களை வாங்குவதற்கு முன்பு அவற்றுக்கு மாற்றாக உள்ளூரில் தயாரிக்கப் பட்டவை இருக்கின்றனவா என்று பார்ப்பேன்.
- சந்தையில் பார்த்த குறையுள்ள பொருள் அல்லது சேவை பற்றி மற்றவர்களுக்கு தெரிவிப்பேன்.
- எதையும் வாங்குவதற்கு முன்பாக பொருள்கள் அல்லது சேவையைப் பற்றி கேள்விகள் கேட்பேன்.
- சந்தையில் பாதுகாப்பு வெளிப்படைத் தன்மை நேர்மை ஆகியவற்றை மேம்படுத்தும் செயல்களில் நானும் சேர்ந்து செயல்படுவேன்,
- நான் என்னை ஒரு கற்றறிந்த உணர்வுள்ள நுகர்வோராக கருதி செயல் படுவேன்.
- நுகர்வோர் உரிமை பற்றி அறியாதவர்களுக்கும், படிப்பறிவில்லா தவர்களுக்கும், ஏழை மக்களுக்கும் உதவுவேன்.
- எல்லாவற்றிற்கும் மேலாக பொருள் வாங்குவதற்கு முன் அப்பொருள் அவசியம் வாங்கத்தான் வேண்டுமா என்பதை நன்கு ஆலோசித்த பின்பே வாங்கவேண்டும். தேவையற்ற பொருள்களை வாங்கிக் குவிப்பது குப்பைகளை சேர்ப்பதற்கு ஒப்பாகும்.
இவற்றில் எட்டுகேள்விகளுக்காவது உங்களுடைய நேர்மையான பதில் ஆம் என்றால் நீங்கள் சமூக ஆர்வலர் என்றும் விழிப்புணர்வு மிக்கவர் பெருமை கொள்ளலாம்.
எட்டுக்கும் குறைவாகத்தான் இருக்கிறது
பதிலளிநீக்குசரி செய்ய வேண்டும்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
"எட்ட'வே இல்லை...
பதிலளிநீக்குஅப்போ நான் social activist இல்லையா?!
எட்டிப் பார்க்கலாம் இனி!
பதிலளிநீக்குநன்றி முரளி
நான் பாஸாகவில்லை!
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குமுரளி அண்ணா.
யாவரும் கடைப்பிடிக்க நல்ல கருத்தை சொல்லியுள்ளீர்கள்..வாழ்த்துகள் த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
12 ரொம்ப கஷ்டம்!
பதிலளிநீக்குநுகர்வு நோய் - சொல்லாக்கம் அருமை.
இன்னும் திருந்த இடமுண்டு அருமையான விழிப்புணர்வுப்பகிர்வு அண்ணாச்சி.
பதிலளிநீக்கு6 மற்றும் 9 ஆம் விசயங்களைச் செய்ததில்லை. ஆத்தா நான் பாசாயிட்டேன் :-)
பதிலளிநீக்குஅருமையான பதிவு சகோ, நன்றி.
நீக்குநான் செய்யும் இன்னொன்று: முன்பு நிறையக் காய்கறிகளை வாங்கி, சிலவற்றை வீணாக்கியிருக்கிறேன். அதை சரியாக்கச் சமையலைத் திட்டமிட்டு வாங்க ஆரம்பித்தேன். உடல்நிலை காரணமாகவோ விருந்தினர் காரணமாகவோ மாறுதல் ஏற்பட்டால், மீதமிருக்கும் காய்களைக் கொண்டு சமைத்த பின்பே அடுத்ததாக வாங்குவேன். பணமும் பொருளும் வீணாகாமல் இருக்கிறது.
அருமை
பதிலளிநீக்குஅனைத்தையும் உள்வாங்கிக் கொண்டது 12...!
பதிலளிநீக்குதாங்கள் சொன்னது பல என்னிடம் இல்லை. இனி, இவற்றை மனதில் இருத்திக்கொள்வேன். நறி.
பதிலளிநீக்கு///எல்லாவற்றிற்கும் மேலாக பொருள் வாங்குவதற்கு முன் அப்பொருள் அவசியம் வாங்கத்தான் வேண்டுமா என்பதை நன்கு ஆலோசித்த பின்பே வாங்கவேண்டும்///
பதிலளிநீக்குவிளம்பரங்கள்தான் மக்களை யோசிக்கவே விடுவதில்லையே
அருமையான விழிப்புணர்வுப் பதிவு ஐயா
நன்றி
தம +1.
சென்ற வாரம் கூட பெட்ரோல் பங்கில் நான் சண்டைப் போட்டேன் ,உடனே ஒரு லிட்டர் பெட்ரோலை போட்டார்கள் ,கொஞ்சல் அசந்தால் ஏமாறும் இடங்களில் நம்பர் ஒன் பங்குகள்தான் !
பதிலளிநீக்குஇந்தப் பதிவு சமூக அக்கறையைப் பிரதிபலிக்க மட்டுமல்ல தரம் பற்றிய புரிதலுக்கும் உதவும் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநுகர்வோர் அக்கறையைப் பிரதி பலிக்கிறேனா . இல்லையா தெரியவில்லையே
பதிலளிநீக்குஅட! இவ்வளவு விஷயம் இருக்கா! இனியாவது பின்பற்றி பார்க்கிறேன்!
பதிலளிநீக்குரொம்ப கஷ்டம், ஆனால் பகிர்வு,,,,, வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநன்றி.
6 வது மட்டும் இல்லை....பாசாயிட்டோம்...! மற்றவை எல்லாமே பல வருடங்களாகச் செய்து வருகின்றோம்...
பதிலளிநீக்குகீதா: அதிலும் ஏதேனும் ஒரு பொருள் சரியில்லை என்றால்..உதாரணமாக நான் சமீபத்தில் கொத்தமல்லி விரை வாங்கிய போது, அது பச்சை தனியா என்று நினைத்து வாங்கி வந்துவிட்டேன். பச்சை தனியா என்பது பாம்பே தனியா என்றும் சொல்லுவது உண்டு...கொஞ்சம் பச்சைகலரில் இருக்கும் நல்ல மணம் இருக்கும். வீட்டிற்கு வந்தவுடன் சாம்பார் பொடிக்காக அதைக் காய வைக்க எடுத்த போதுதான் தெரிந்தது அது சாயம் கலக்கப்பட்ட ஒன்று என்று. உடனே அதை கொஞ்சம் தனியாவை எடுத்து ஒரு பாட்டிலில் இட்டு தண்ணீர் விட்டு வைத்தேன். சிறிது நேரத்தில் தண்ணீர் பச்சைக் கலராகியது. உடனே அதை எடுத்துக் கொண்டு அந்த "தரமான கடை" என்று அடையாரில் இருக்கும் அந்தக் கடைக்கு எடுத்துச் சென்று கொடுத்துவிட்டு அந்தப் பொருள் வேண்டாம் என்றும் மாற்றுப் பொருள் எனக்கு எதுவும் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் தெரிவித்து அதற்கான பணத்தைப் பெற்றுக் கொண்டு வந்துவிட்டேன். அதைப் புகைப்படம் எடுத்து வைத்துள்ளேன். ஒரு பதிவாக எழுதுவதற்கு. அந்தக் க்டைக்காரரிடம் சொல்லிவிட்டும் வந்தேன். அவர் முதலில் ஒத்துக் கொள்ளவில்லை. நான் சொன்னேன், நீங்கள் பொருள் வாங்கும் போது த்ரம் பார்த்து வாங்குவதில்லையா? இரண்டாவது உங்கள் கடையில் தானே பாஅக்கெட் போடுகின்றீர்கள் அப்போதும் கூட நீங்கள் பார்க்க வில்லையா? சரி தரம் பார்து வாங்கீனீர்ங்கள் என்றால், நீங்கள் பாக்கெட் போடும் போது கலர் சேத்து காயவைத்து பாக்கெட் போடுகின்றீர்களா? எதை நாங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். நாங்கள் கன்சுயூமர் கோட்டிற்குச் செல்ல நேர்டும் என்றும் சொல்லிவிட்டு வந்தேன். போயிருக்க வேண்டியது. ஆனால் கணவர் கடையை மாற்று என்று சொல்லிவிட்டதால் போக வில்லை...
நான் இதைப் பற்றி இங்கு அங்கு வாங்குவோரிடமும், எந்தக் கடையிலும் தனியா வாங்கும் போது, துவரம் பருப்பு வாங்கும் போதும் கலர் கலப்ப்தைப் பாருத்து வாங்குங்கள் என்று சொல்லி வருகின்றேன். மட்ட்டும்மல்ல ஒரு குறிப்பிட்ட ப்ராண்ட் மிளகாய் பொடி, மஞ்சள் பொடியில் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்சி மாணவிகள் ப்ராஜெக்டிற்காகச் சோதனை செய்த போது கலப்படம் இருப்பதாகச் சொன்னார்கள். என் மகன் கால்நடை மருத்துவம் படிக்கும் போது பால் சோதனை செய்த போது மாட்டிற்குக் கொடுக்கப்படும் மருந்துகள் ஓரளவிற்கு மேல் அதிகம் கலந்திருப்பாகவும், வேறு கலப்படம் இருப்பதாகவும் சொன்னான். கறந்து வரும் பால்களில். தெரிந்தவர்களிடம் இதைப் பற்றிச் சொல்லுவதுண்டு. பதிவும் விரவில் வெளி வர இருக்கிறது.
நல்லதோர் பதிவு நண்பரெ!
விரிவானகருத்திற்கு நன்றி கீதா மேடம். தயக்கம் காரணமாகவும் கௌரவம் என்று நினைப்பதன் காரணமாவும் கடைக்காரர்களிடம் நாம் கேள்வி கேட்பதில்லை. அது அவர்களுக்கு சாதகமாகப் போய் விடுகிறது.
நீக்குஎதிலும் அவசரம் அவசரம் என்றும் ஆமாம் நாம் ஒருவர் கேட்பதால் என்ன ஆகிவிடப்போகிறது என்பதாலும் இதுபோன்ற கலப்படங்கள் யாராலும் சரிவர கவனிக்கபடுவதில்லை. தோழி கீதா அவர்களைப்போல அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
நீக்கு3,9,10 முழு திருப்தியோடு ஆம் சொல்ல முடியவில்லை அண்ணா. ஆனால் பலரும் தவறவிட்டதாய் சொன்ன 6ரில் நானும், கஸ்தூரியும் ரொம்ப கவனமா இருக்கிறோம். காஸ்மெடிக்ஸ் னா ஹிமாலயா, கவின் கேர், பிஸ்கட்ல ட்ரூ, இப்படி பார்த்துபார்த்து வாங்குவோம். விலை அதிகம் உள்ள பொருள் மட்டுமே தரமாய் இருக்கும் என்ற மாயை மக்களை ஆட்டி வைக்கிறது. அதில் இருந்து மீண்டாலே போதும். அருமையான, பயனுள்ள பதிவு. g+ ல share பண்ணப்போறேன்:)
பதிலளிநீக்கு9 கேள்விகளுக்கு ஆம் என்று சொன்னதற்கு வாழ்த்துகள். 3,9,10 நிச்சயமாக பெரும்பாலோரின் உண்மையான பதில் இல்லை என்றுதானிருக்கும். நான் இன்னும் பல கேள்விகளுக்கு ஆமென்று சொல்வதற்குரிய தகுதிகளை வளர்த்துக் கொள்ள முயற்சிகளை மேற்கொள்ள் விருக்கிறேன். நுகர்வோர் சம்பந்தமாக இன்னும் எழுத வேண்டிஇருக்கிறது
நீக்குஅட ஆமாம் மைதிலி, காஸ்மெடிக்ஸ், டூத் பேஸ்ட், உணவு வகைகளில் இதைக் கடைப்பிடிக்கிறேனே .. ஆனால் பிள்ளைகளின் துணிகளுக்குச் செய்வதில்லை..அதில் சில காரணங்களுக்காக வெளிநாட்டுத் துணிகளையே விரும்புகிறேன் என்று ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்
நீக்குஅப்படியே கடைபிடிக்கின்றேன். அதனால் உருவாகும் பஞ்சாயத்துகளுக்கும் அளவே இல்லை.
பதிலளிநீக்குஎனக்கு சமூக அக்கறையெல்லாம் கெடையாதுங்க. என்ன எவன் திங்கிற சோத்துலயும் மனதறிய மண் அள்ளிப் போட்டதில்லை. எவன் எழுதின கதைக்கும் நான் க்ரிடிட் எடுத்துக்கொண்டதில்லை. இல்லாத கடவுளை சந்தோஷப்படுத்த முயன்றதில்லை.
பதிலளிநீக்குஊர் உலகம் ஆயிரம் சொல்லும். அதையெல்லாம் ஒரு போதும் சட்டை செய்ததில்லை. ஆமா, என்னைவிட என்னைப்பற்றி எவனுக்கு என்னை நல்லாதெரியும்? என்கிற உண்மையை உணர்ந்தவன் நான். ரொம்ப அகந்தையாப் பேசுற மாதிரி இருக்கும். Yes, I do sound like an egoist whenever I talk about myself. So I often avoid that as it is kind of boring to me. Now the reason I had to talk about myself is your post. So, I am going to blame it on you and your post for triggering my "ego"! :)
எட்டுக்கும் குறைவு தான் என்னிடத்திலும் இனி கவனமுடன் இருக்க வேண்டும். நல்ல பகிர்வுங்க.
பதிலளிநீக்குபலர் கவனம் ,சிக்கனம்,பொருளின் தன்மை,தேதி, இவற்றையெல்லாம் தெருவோரம் கடலை விற்கும்,கீரை விற்கும் முதியவர்களிடம் தான் பெரும்பாலும் காட்டுவார்கள்.அதே ஒரு ஷாப்பிங்க் மாலில் அவர்கள் அதற்கு இது இலவசம் இதற்கு அது இலவசம் ,இவ்வளவு தள்ளுபடி என விற்காத பொருள்களை வியாபரத் தந்திரத்தின் மூலம் விற்பவர்களை கவனிப்பதில்லை.பற்றாக்குறைக்கு இப்போது செருப்பு முதல் மாட்டுசாணம்(எருவாட்டி) வரை ஆன்லைன் வர்த்தகம் மூலம் விற்கப்படுகிறது.இதையெல்லாம் பார்க்கும் போது சதுரங்க வேட்டை பட வசனம் நியாபகம் வரும்."ஒருத்தன ஏமாத்தனும்னா அவன்ட இரக்கம் எதிர்பார்க்கக் கூடாது அவன் ஆசையத் தூண்டனும்".
பதிலளிநீக்கு9EFFF3EC08
பதிலளிநீக்குTakipçi Satın Al
M3u Listesi
Telegram Coin Botları
Tinder Promosyon Kodu
Roblox Şarkı Kodları
B853940FB4
பதிலளிநீக்குtwitter takipçi paketleri
velvet swivel accent chair