என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Thursday, September 19, 2013

திசைக் குழப்பம் வந்ததுண்டா?திசை அறிய மொபைல் மென்பொருள்

உங்களுக்கு எப்போதாவது எதாவது ஒரு இடத்தில்  கிழக்கு எது மேற்கு எது வடக்கு எது? தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா?. புதிய இடங்களுக்கு செல்லும்போது இந்தக் குழப்பம் எனக்கு அடிக்கடி ஏற்படுவதுண்டு. அந்த இடத்தில் வசிப்பவர்களை கேட்டுத்தான் திசை அறிய வேண்டி இருக்கிறது.  பகலில் சூரியனை வைத்து திசையை அடையாளம் கண்டு கொள்ள, முடியும் என்றாலும் சில நேரங்களில் சூரியன் சற்று மேலே இருந்தால்  திசைகளை சரியாக அறிந்து கொள்ள முடியவில்லை.  சாலைகளை வைத்தே திசைகளை அறிய முற்படுவதால் சரியான திசை தெரிவதில்லை.
    புதிய ஊர் மட்டுமல்ல பழகிய சென்னையிலும்  திசை இன்னமும் குழப்பத்தான் செய்கிறது. குறிப்பாக வட சென்னையில் கிழக்கு திசையை வடக்கு என்றே நினைத்துக் கொள்வேன்.
உதாரணத்திற்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் என் கண்களுக்கு வடக்கு தெற்காக அமைந்திருப்பதாகத் தோன்றும் ஆனால் உண்மையில் அது கிழக்கு  மேற்காக அமைந்திருக்கிறது.
தாம்பரத்தில் இருந்து தெற்கு வடக்காக செல்லும் ரயில் பாதை(சற்றே வடகிழக்கு திசையில் செல்லும்) நுங்கம்பாக்கம் வரை  ரயில் நிலையங்கள் ஓரளவிற்கு வடக்கு தெற்காகவே அமைந்திருக்கும். நுங்கம்பாக்கத்திலிருந்து கிட்டத்தட்ட அரை வட்ட வடிவில் இருப்புப் பாதை திரும்பி கிழக்கு நோக்கி செல்கிறது. சாலைகள் போல உடனே திருப்பம் இல்லாததால் ஒரே திசையில் செல்வது போல் தோன்றி கண்களை ஏமாற்றுகிறது. 
   அதுபோல் சிறு வயதில் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம்  முகப்பு கிழக்கு நோக்கி அமைந்திருப்பதாக நினைத்துக் கொள்வேன். உண்மையில் தெற்கு நோக்கியே இருக்கிறது. இது தோற்றப் பிழை என்பதை அறிந்ததால் சரியான திசையை அறிவு சொல்லி விடுகிறது. 

  நமது மொபைலில் ஜி.பி.எஸ்  இருந்தால் அதைப் பயன்படுத்தி திசையையும் வழியையும் அறிந்து  கொள்ள முடியும். GPS வசதி இல்லாத மொபைல்களில் திசை அறிய  மென்பொருள் உண்டா தேடினேன்.
    ஜாவா எனேபில்டு கைபேசியாக இருந்தால் பயன்படுத்தக் கூடிய இலவச காம்பஸ் ஒன்று கிடைத்தது. இப்போது பெரும்பாலான கைபேசிகளில் Java இருப்பதால் இதை எளிதில் நிறுவ முடியும்.
இந்த அப்ளிகேஷன் மூலம் நமது கைபேசியையே திசைகாட்டும் கருவி போல் பயன்படுத்தி திசையை அறிந்து கொள்ள முடிகிறது. இதை
http://www.qcontinuum.org/compass/index.htm  என்ற முகவரியில் இருந்து
 • compass.jar (91K) என்ற பைல்களை டவுன்லோட் செய்து  செல்போனில் நிறுவிக் கொள்ளலாம். Games and Application Folder இல் காப்பி செய்தால் போதுமானது. இணைய இணைப்பு வசதி செல்லில் செயல்படுத்தி இருந்தால்  அதில் இருந்தே தரவிறக்கம் செய்து கொள்ளமுடியும்.  நிறுவிய பின்னர் பயன் படுத்த இணைப்பு தேவை இல்லை.
   இதை இயக்கும்போது படத்தில் உள்ளவாறு காட்சி அளிக்கும்.
 கீழ்ப் பகுதியில் உள்ள Options வழியாக நேரமண்டலம்,வசிக்கும் இருப்பிடம் தேர்ந்தெடுக்கலாம். சென்னையாக இருந்தால் 15டிகிரி வட  அட்சத்திலும் 80.15 டிகிரி தீர்க்க ரேகையிலும் அமைந்திருப்பதை காண முடியும். கீழே என்  LG மொபைலில் காட்சி தரும் காம்பசைத் தான் பார்க்கிறீர்கள் .இந்த மொபைலில் கேம்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் சென்று( ஒவ்வொரு செல்லிலும் இது வேறுபடும்) compass இயக்கினால் இது போல தோற்றமளிக்கும். 
இன்று (19.09.2013)  காலை 5.54 க்கு சூரியன் மற்றும் சந்திரனின் நிலை வானத்தில் இவ்வாறு அமைந்திருக்கிறது. ( படத்தில் சூரியன் மஞ்சள் நிறத்திலும் சந்திரன் வெள்ளை நிறத்திலும் உள்ளது. நிறத்தையும் மாற்றிக் கொள்ள முடியும் ) இதை வைத்துக் கொண்டு திசை எப்படி அறிவது என்கிறீர்களா? இதன் மூலம் திசை அறிய வானில் சூரியன் இருக்க வேண்டும். மொபைலில் காம்பசை  இயக்கி விட்டு வானில் சூரியன் இருக்கும் நிலைக்கு, மொபைலில் சூரியன் படம் பொருந்துமாறு மொபைலை திருப்பிக் கொள்ளவேண்டும். அல்லது நமது நிழலின் திசையில் நிழலோடு பொருந்தும்படி மொபைலைப் பிடித்துக் கொண்டால் மொபைலின் மேற்புறம் வடக்கு திசையைக் குறிக்கும். வானில் சூரியன் இருந்தால் நாங்கள் திசையை எளிதில் கண்டுபிடித்து விடுவோம் என்கிறீர்களா? காலையில் கிட்டத்தட்ட 11 மணிக்கு மேல் ஏறக்குறைய 3 மணி வரை சூரியன் இருந்தாலும் திசையை துல்லியமாக அறிவது புதியவர்களுக்கு கடினமாகவே இருக்கும். 

   நாம் பார்க்கின்ற நேரத்தில் வானத்தில் சூரியன் மற்றும் சந்திரன் எந்த இடத்தில்   இருக்குமோ அது போலவே மொபைல் காம்பசிலும் சூரியன் சந்திரனும் அதே நிலையில் அமைந்திருக்கும்.

உதாரணமாக இன்று காலை 5.50 மணி அளவில் சூரியனும் சந்திரனும் காம்பசில் இப்படித்தான் இருந்தது.  மாலையில் சுமார் 6 மணி அளவில் வானில் உள்ளது போலவே சூரியன் சந்திரன் இடம் மாறி இருக்கும். இந்தக் காம்பஸ் நாம் பார்க்கின்ற நேரத்தில் சூரிய சந்திர நிலையை அப்படியே காட்டும்.மேலுள்ள படத்தில் சந்திரன் இல்லை. அப்படி என்றால் நம் பார்வைப் பரப்பில் சந்திரன் இல்லை என்று அர்த்தம். ஒவ்வொரு நிலையிலும் சூரியன் சந்திரனின் azimuth, altitude கோணங்கள் மற்றும் பல தகவல்களை இதன்மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. 
இலவச ஜாவா அப்ளிகேஷனான இதன் சோர்ஸ் கோடையும் டவுன் லோட் செய்து கொள்ளலாம்.( ஜாவா நிரல் பத்தி எல்லாம் எனக்கு தெரியாது.)

இதை  மூன்று ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறேன். எனக்கு உபயோகமாய்த்தான் இருக்கிறது. 

 *********************************************************************************

இந்த நாளில் என்ன சிறப்பு ? அறிந்து கொள்ள கிளிக்குங்கள் 
  செப்டம்பர் 22 ஒரு அதிசய நாள்

41 comments:

 1. பயனுள்ள மென்பொருள் அறிமுகம்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி குணசீலன் சார்

   Delete
 2. உபயோகமான தகவல்கள். பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 3. எல்லாருக்கும் தேவையான மென்பொருளை அறிமுகம் செய்து வைத்திருக்கிறீர்கள் ஐயா..

  ReplyDelete
 4. வணக்கம்
  முரளி(அண்ணா)

  மென்பொருளின் பயன் பற்றி விளக்கமும் அருமை எல்லோருக்கும் பயன் உள்ள மென்பொருள். பதிவு நன்று வாழ்த்துக்கள் அண்ணா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 5. எனக்கும் இந்த்க் குழப்பம் அடிக்கடி ஏற்படுவதுண்டு. தஞ்சையிலேயே ஓரிடத்தில் இருந்து வேரொரு இடத்திற்குச் செல்லும் பொழுது திசையினை அறிதல் குழப்பம்தான். மிகவும் பயனுள்ள பதிவு ஐயா நன்றி

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஜெயகுமார் சார்

   Delete
 6. மிகவும் தேவையான மென்பொருள்... நன்றி...

  ReplyDelete
 7. Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நட்ன்ரி கருண்

   Delete
 8. எனக்கு நல்ல திசை காட்டியவர்களில் நீங்களும் ஒருவராகி விட்டீர்கள் !

  ReplyDelete
 9. மென்பொருள் விளக்கம் அற்புதம்.. அதைவிட அந்த மென்பொருளை உபயோகித்த அனுபவம் அசத்தல்.. நுங்கம்பாக்கம் ரயில்பாதை திசை மொதற்கொண்டு பார்த்துள்ளீர்கள் :-)

  ReplyDelete
  Replies
  1. சில நேரங்களில் இப்படி பைத்தியக் காரத் தனங்கள் செய்வது உண்டு.

   Delete
 10. பயனுள்ள தகவல்..

  ReplyDelete
 11. அருமையான விடயத்தைப் பதிவிட்டுப் பகிர்ந்துள்ளீர்கள்!

  நன்றியும் வாழ்த்துக்களும் சகோ!

  ReplyDelete
 12. தேவையான விஷயம்தான். திசை தெரியாத பலரும் சென்னையில் லெஃப்ட்ல போயி ரைட்டுல திரும்பு என்பார்கள். தென் தமிழ்நாட்டில் அழகா திசையைச் சொல்லி வழி சொல்வதை கண்டிருக்கிறேன்.

  ReplyDelete
 13. திசை குழம்பாம இருக்க நல்ல தகவல்... அப்புறம் எனக்கொரு கொழப்பம்... மதியம் லஞ்ச் முடிஞ்சி ஆபிஸ் டேபிள்ல ஒரு குட்டிதூக்கம் கலைஞ்சதும்.. எங்க இருக்கோம் வீடா.. ஆபிஸான்னு அஞ்சு நிமிஷம் ஒரே குழப்பமா இருக்கும்.. இதற்கும் எதாவது கண்டுபிடிச்சா நல்லாருக்குமுங்க... ha..ha..!

  ReplyDelete
  Replies
  1. ஒ! ஆபீஸ்ல இதெல்லாம் கூட நடக்குதா? கூடிய சீக்கிரம் அந்த மென்பொருளை தேடி அறிமுகப் படுத்துகிறேன்.

   Delete
 14. பயனுள்ளதகவலுக்குநன்னறி

  ReplyDelete
  Replies
  1. நன்றி கண்ணதாசன்

   Delete
 15. திசைத் தெரியாமல் தடுமாறிப் போனது நிறைய உண்டு. ”தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமே” என்பதற்கேற்ப பயனுள்ளச் செய்தியைப் பகிர்ந்த அன்புள்ளத்திற்கு நன்றிகள் கோடி.

  ReplyDelete
  Replies
  1. நன்றி பாண்டியன்

   Delete
 16. நான் இருப்பது இலங்கை இந்த திசை காட்டி மூலம் திசை அறிய முடியுமா விளக்கம் தேவை

  ReplyDelete
 17. இலங்கை மட்டுமல்ல உலகின் எந்த மூலையில் இருந்தாலும் திசை அறிய முடியும்.
  options இல Location இல நீங்கள் வசிக்கும் இடத்தை தேர்ந்டுத்துக்கொள்ளலாம். உலக மேப்பை வரைபடம் காட்டும். அதில் இலங்கையை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அல்லது உங்கள் இருப்பிடத்தின் அட்ச தீர்க்க ரேகை அளவுகளை உள்ளீடு செய்தாலும் பரவாயில்லை

  ReplyDelete
 18. அருமை! ஆய்வு நன்று!பயன் தரும் ஒன்று!

  ReplyDelete
 19. திரவத்தில் மிதக்கும் காம்பஸ் கொண்ட சாவிக் கொத்துக்கள் சல்லிசு விலைக்கு கிடைக்கிறது. இப்போ அதை மொபைலில் போட்டு பெரிய தொழில் நுட்பம் மாதிரி காமிச்சு காசு பண்றாங்க. நிஜமான நாய் ஊர் பூராவும் குரைச்சாலும் நாய் மாதிரி ஒருத்தன் குறைக்கிறேன் என்றால் நம்மாளு காசு குடுத்து போய் பார்ப்பான்............. ஹா...........ஹா...........ஹா........... [Please don't take it personally!!]

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஜெயதேவ்.
   இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமே! இதை தனி நபரே உருவாக்கி இருக்கிறார். வெறும் திசை மட்டுமல் சூரிய சந்திரன் பற்றிய பல தகவல்களையும் அளிக்கிறது.

   Delete
 20. பயனுள்ள தொழில்நுட்பத் தகவல் பகிர்வை வரவேற்கிறேன்.

  ReplyDelete
 21. நல்ல தொழில் நுட்பம்..ஆனா நாம ஆண்ட்ராய்டு

  ReplyDelete
 22. நானும் கூட பெங்களூரு செல்லும்போது இதுபோல் குழம்பியதுண்டு...தகவலுக்கு நன்றி..

  ReplyDelete
 23. ஒரு பொருளின் பருமனைப்பொறுத்தே அதன் நிழல் கீழே விழுவதும்,பொருளின் மேலேயே படர்வதும் நடைபெருகிறது என்பதாய் நினைவு/

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895