என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Saturday, September 14, 2013

இப்படியும் உதவ முடியும்-ஒரு எழுத்தாளரின் அனுபவம்


   புதிய தலைமுறை வார இதழில் எழுத்தாளர் ஆத்மார்த்தி  மனக் குகை சித்திரங்கள் என்ற தலைப்பில் வாரந்தோறும் எழுதி வந்தார். சமீபத்தில் அத் தொடர் நிறைவைடைந்தது.இந்தத் தொடருக்கு முன்னர் அவரது வேறு எந்தப் படைப்பையும் நான் படித்ததில்லை. ஆனால் இந்தக் கட்டுரை என் மனதைக் கவர்ந்தது.

   தான் சந்தித்த மனிதர்கள்,சமுதாய நிகழ்வுகள்,அனுபவங்கள், மென்மையான மனித உணர்வுகள் பற்றி சுவாரசியமாகவும் உருக்கமாகவும் எழுதி வந்தார். சமீப காலங்களில் இது போன்ற  பல்வேறு தரப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டங்களைப் பற்றி எழுதும் தொடர்கள் வெற்றி பெறுகின்றன. அந்த வகையில் இந்த தொடரும் சிறப்பான தொடராக அமைந்திருந்தது.

    நிறைவுப் பகுதியில்  நெகிழ்ச்சியான நிகழ்வை நினைவு கூர்ந்து தொடரை முடித்திருந்தார். ஆத்மார்த்தி கைபேசிக் கடை நடத்தி வந்தாகவும்,செல்போன் விற்பதோடு ரீசார்ஜ், டாப் அப் செய்துவந்ததாகவும்  தெரிவிக்கும் இவர் கடைக்கு வரும் மனிதர்களுடன் தினமும் உறவாடக் கூடிய வாய்ப்ப்பு கிடைத்ததால் ஒவ்வொரு மனங்களையும் வெகு அருகில் இருந்து உணர முடிந்தது என்று கூறுகிறார். அவர்களில் சிலர் ஏற்படுத்திய தாக்கம் தனித்துவமானது என்று சொல்லி  ஒரு நிகழ்வை விவரிக்கிறார்,

அவரது கடைக்கு ஒரு நாள் முப்பத்தைந்து வயது மதிக்கத் தகுந்த நபர் ஒருவர் தன மனைவி குழந்தையுடன் வந்திருக்கிறார், அவர் பதட்டத்துடன் காணப்பட்டார் . தன் பெயர் பாஸ்கர் என்று தன்னை  அறிமுகப்படுத்திக் கொண்டு. தனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம் .

   விவரத்தை சொல்லுங்கள் முடிந்தால் செய்கிறேன் என்று கூறிய ஆத்மார்த்தியிடம்  அவர் சொன்னார் என் தந்தைக்கு அறுபத்தைந்து வயதிருக்கும் என்றும் அவர் கொஞ்சம் முடியாதவர் என்பதோடு ஞாபக மறதி அதிகம் உடையவர். என்றும் திருப்பதிக்கு போகிறேன் என்று சொல்லி விட்டு கிளம்பினவர் ரயிலில் செல்லும்போது ஒரு ஸ்டேஷனில் இரவில் இறங்கியவர் ஏதோ வாங்கிவிட்டு மீண்டும் அதே ரயிலில் ஏறாமல் இடவல குழப்பம் காரணமாக வேறு ரயிலில் ஏறி அமர்ந்து உறங்கியும் விட்டாராம். காலையில் எழுந்து பார்க்கும்போதுதான் தெரிந்ததாம் தன் வழி தவறியது .   மகாராஷ்டிரா கர்நாடகா எல்லையில் ரயில் நிற்க அங்கே இறங்கி விட்டாராம். அவர் கொண்டு வந்த பையும் திருடு போய்விட்டது. அவரது சட்டைப் பையில் சொற்பத் தொகையே இருந்ததாம். எப்படியோ மகனிடம் தொடர்பு கொண்டு அவர் தன் நிலையை சொல்லி இருக்கிறார். அவரை எப்படியாவது எப்படி மீட்டுக் கொண்டு வருவது என்று தெரியாமல்தான் ஆத்மார்த்தியின் உதவியை நாடியதாகவும் சொன்னார். அவர் ஒரு டெலிபோன் பூத்தில் அமர்ந்து அந்த பூத்தின் எண்ணைக் மகனிடம் கொடுத்து ஊர் திரும்புவதற்கு வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.

    தந்தைக்கு அவர் இருக்கும் இடத்திற்கு எப்படியாவது பணம் அனுப்ப முடியுமா என்று கேட்க , அவர் மனைவியோ இவர் என்ன செய்ய முடியும் என்று அலட்சியத்துடன் பார்க்க ஆத்தாமர்த்தி சிந்தனையில் ஆழ்ந்தார். இன்டர்நெட் பரிமாற்றம் போன்ற நவீன வசதிகள் இல்லாத காலமாம் அது . ஆத்மார்த்தி பாஸ்கர் கொடுத்த என்னை வைத்து தந்தை தொலைபேசிய கடைக்கு தொடர்பு கொண்டு  அந்தப் பெரியவருக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்ள , "நான் என்ன செய்ய முடியும் ? அவரை ஊருக்கு அனுப்பும் அளவுக்கு தொகையை தன்னால் தர இயலாது " என்றும் தெரிவித்திருக்கிறார்..

   பெரியவர்  போன் செய்த கடையும் ஒரு சிறிய செல்போன்  கடைதான் என்பதை அறிந்த ஆத்மார்த்தி,மீண்டும் தொடர்பு கொண்டு ,ஒரு ஆலோசனை ஒன்றை சொல்லி இப்படி செய்தால் அவருக்கு உதவ முடியும் என்றார். அந்தக் கடைக்காரரும் சம்மதிக்க,"இந்த நிமிடத்திலிருந்து  உங்கள் கடையில் ரீசார்ஜ் செய்ய வருபவர்களின் எண்களை எனக்கு சொல்லுங்கள் நான் இங்கிருந்து ரீசார்ஜ் செய்கிறேன். நீங்கள் கமிஷன் போக மீதம் உள்ள தொகையை அந்த பெரியவரிடம் கொடுத்துவிடுங்கள் என்று கூற  அவரும் அப்படியே செய்ய ஒரு மணிநேரத்தில்  கமிஷன் போக கணிசமான தொகை பெரியாரிடம் சேர்ந்தது. பின்னர் அவர் இரவுக்குள் பெங்களூர் வந்து சேர்ந்து அங்கிருந்து பத்திரமாக  ஊர் வந்து  சேர்ந்தாராம். 

  கண் முன் நடந்த இந்த நிகழ்வை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்த.அந்தத் தம்பதியினர்  கண்களில் நன்றிக் கண்ணீருடன் .. ரீசார்ஜ் தொகையை ஆத்மார்த்தியிடம் வழங்கினர்  

   ஏதோ ஒரு மாநிலத்தில் ஒரு ஊரில் முன்பின் தெரியாத ஒரு கடைக்காரர் ஒருவர் தனது  பரீட்சார்த்த   ஒரு முயற்சியை ஏற்று  மற்றவருக்கு உதவியது ஒரு நெகிழ்வான அனுபவம் என்று உணர்வு பூர்வமாக கூறி கட்டுரையை நிறைவு செய்கிறார் ஆத்மார்த்தி .

இதில்  ஒருவேளை கற்பனையும் கலந்திருக்கலாம்.ஆனால் ஆத்மார்த்தியின் சமயோசித புத்தியை  பாராட்டாமல் இருக்க முடியவில்லை. 
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


கொசுறு: இவருக்கென்று வலைப் பக்கமும் உண்டு. குறைவான பதிவுகளே காணப்படுகின்றன. 2011க்குப் பிறகு பதிவுகள இல்லை.
முகவரி: http://aathmaarthi.blogspot.in/
46 comments:

 1. முரளி,

  என்னாத்த சொல்ல? ஒரு பிச்சைக்காரனுக்கு 5 ரூபாய் பிச்சை போடும் முன்னர் கூட அவனுக்கு கைகால் நல்லாத்தானே இருக்கு ஏன் உழைக்க கூடாதுனு நாம தர்க்க ரீதியா யோசிக்கிறோம், ஆனால் காசு கொடுத்து புதிய தலைமுறை போன்ற பத்திரிக்கைகளை வாசிக்கிறோம்,கொஞ்சம் கூட யோசிப்பதில்லை :-))

  //இதில் ஒருவேளை கற்பனையும் கலந்திருக்கலாம்.ஆனால் ஆத்மார்த்தியின் சமயோசித புத்தியை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
  //

  கற்பனை அல்லது , உதவிக்கேட்டு வந்த "பாஸ்கர்" கடை நடத்திய ஆத்மார்த்திக்கு ரொம்ப வேண்டியவராக இருக்கனும்,சும்மா அன்னிக்கு தான் பார்க்க வந்தவருக்கு இந்த வேலையை செய்ய மாட்டார்,அதை விட இப்படியான ஒரு சூழல் ஒருவருக்கு வந்தால் முன்ன பின்ன தெரியாத செல் போன் ரீசார்ஜ் கடைக்காரரிடம் தான் எல்லாம் உதவிக்கேட்டுப்போவாங்களா என்ன?

  அப்புறம் இப்படி ஒவ்வொரு ரீசார்ஜ் ஆக பணம் அனுப்ப தேவையே இல்லை, ஒரு குறிப்பிட்ட தொகைக்கு , ரீசார்ஜ் செய்து அனுப்பினால்,அதை பலருக்கு ரீசார்ஜ் செய்யும் வகையில் அனுப்ப முடியும், வழக்கமாக ஈ சார்ஜில் அப்படித்தான் ஒரு எண்ணுக்கு தொகை கட்டப்படும், அந்த தொகையில் இருந்து சிறிய தொகைகளாக நமக்கு ரீசார்ஜ் செய்வார்கள்.

  உண்மையில் இப்படியான நிலை ஏற்பட்டால், அருகில் உள்ள ரெயில்வே பொலிசார் ,அல்லது காவல் நிலையத்தினை அணுகி நிலையை சொல்லி உதவ கேட்பதே சரியானது. மேலும் அங்கிருந்து நமக்கு தொலைப்பேசியில் பேசி , செலவீனங்களை ஏற்றுக்கொள்வதாகவும் சொல்லி விட்டால் எளிதாக நம்ம ஊருக்கு வந்து விடலாம்.

  நாம் எந்த ஒரு தவறான செயல்களிலும் ஈடுபடாத வரையில் காவல் துறையினரை அணுகலாம்.

  இது போல காவல்துறையினர் மூலம் வீடு திரும்பியோர் ஏராளம்,ஆனால் அதெல்லாம் எழுத ஆட்கள் இல்லை,காவல் துறையினர் பாலியல்பலாத்காரம் என்று மட்டுமே செய்தியாக்குவார்கள்(அதுவும் நடக்குது தான், ஆனால் ஆண்கள் அணுக என்ன தடை?) :-))

  ReplyDelete
  Replies
  1. விரிவான கருத்துக்கு நன்றி

   Delete
 2. Dear All,
  A similar incident happened in our family last weekend.
  An elderly relative, about 80 years old was traveling with his wife to their son's place at Pune. Just before reaching, the wife asked the person to change into fresh clothes as the next halt would be at Pune. Due to some confusion the person when he emrged from the toilet saw the train had already halted and alighted. This was ot Pune . but a small station called Dhund. The wife, equally old, after not seeing the husband panicked and checked each and every toilet. In the meantime, she called the son and informed them too.

  Finally, after a great joint effort, the old man was was traced after 36 hours.
  The police did not help. The son's friend and relatives printed posters and pasted them all over between Pune and Dhund. One Auto driver, recognised this man at the station and alerted them.
  The story is do not ever send elderly persons alone, There is no safety , nor any network if they are lost in between. Only, good souls can save them

  ReplyDelete
  Replies
  1. உறவினரின் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி. வயதானார்க்க பிரயாணம் செய்யும்போது கவனம் தேவை. முடிந்தவரை தனியாக செல்வதை தவிர்க்கவேண்டும்

   Delete
 3. Replies
  1. வருகைக்கு நன்றி

   Delete
 4. உதவி சிறியதோ பெரியதோ என்பது அல்ல பிரச்சனை
  தக்க சமயத்தில் சமயோஜிதமாக எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி
  செய்யப்படுவதே சிறந்த உதவி என்பது என் கருத்து
  அந்த வகையில் ஆத்மார்த்தியின் உதவியும்
  பாராட்டத்தக்கதே
  பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் சார். நன்றி

   Delete
 5. வணக்கம்
  முரளி(அண்ணா)

  பதிவு அருமையாக உள்ளது கட்டுரையின் நிறைவுப்பகுதி நன்றாக உள்ளது.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 6. உதவி என்பது சரியான அந்த நேரத்தில் செய்யப்படுவதுதான் உண்மையான உதவி இல்லையா ? அருமை....!

  ReplyDelete

 7. இது ஓன்று உண்மையாக இவர் செய்திருக்கலாம்... அப்படி செய்திருந்தால் என் சிரம் தாழ்த்தி நன்றியை தெரிவிக்கிறேன். அல்லது பிறர் செய்து இவருக்கு தகவல் கிடைத்திருக்கலாம்.. அப்படியிருந்தால் அவருக்கும் என் பணிவான வாழ்த்துக்கள். அல்லது கற்பனையாக இருக்கலாம்.. அப்படி இருந்தாலும் இதுபோன்ற சம்பவம் எதிர்காலத்தில் யாருக்கேனும் ஏற்பட்டால் நாம் எப்படி செயல்படவேண்டும் என்பதற்கு பாடமாகவும் எடுத்துக்கொள்ளலாம். எப்படிப்பார்த்தாலும் அது சிறந்த பதிவுதான்.

  ReplyDelete
  Replies
  1. சற்று மிகைப் படுத்தப் பட்டிருக்கலாமே தவிர உண்மையாகவே நடந்திருக்கும் என்றுதான் நினைக்கிறேன்

   Delete
 8. Replies
  1. நன்றி தனபாலன் சார்

   Delete
 9. அய்யாவிற்கு வணக்கம், சிறப்பான சமயோசிதப் புத்தி ஆத்மார்த்தி (இயற்பெயராக இருக்க வாய்ப்பில்லை)அவர்களுக்கு. தாங்கள் கூறியது போல் கற்பனைக் கலந்து இருக்கலாம். ஆனாலும் சரியான நேரத்தில் செய்யப்பட்ட உத்வியைப் பாராட்டித் தான் ஆக வேண்டும். வவ்வால் அய்யா அவர்களின் கருத்தூட்டமும் கவனிக்கத்தக்கது. ஆனால் உதவியை யாரிடம் வேண்டுமானாலும் கேட்கலாம். மனிதநேயம் நிறைந்த பதிவு, நாமும் பின்பற்றுவோம். பகிர்வுக்கு நன்றி அய்யா.

  ReplyDelete
  Replies
  1. அவரது இயற் பெயர் ரவி சங்கர். வருகைக்கு நன்றி பாண்டியன்

   Delete
 10. சமயோசித சிந்தனை பாராட்டுக்குரியது..!

  ReplyDelete
  Replies
  1. நன்றி ராஜேஸ்வரி

   Delete
 11. இதில் ஒருவேளை கற்பனையும் கலந்திருக்கலாம்.//

  நிஜத்தோடு கற்பனையும் சேர்ந்தால்தான் படிப்பவர்களுடைய கவனைத்தை ஈர்க்க முடியும். தங்கத்துடன் பித்தளையை சேர்த்து ஆபரணங்கள் செய்வதில்லையா, அதுபோல.

  ReplyDelete
  Replies
  1. உண்மையும் கற்பனையும் கலந்தே இருக்கிறது என்று நினைக்கிறேன்.

   Delete
 12. உதவி செய்ய மனம் இருந்தால் போதும். ஒரு வயதானவர் உதவி கேட்டு எங்கோ தவித்துக் கொண்டு இருக்கிறார் என்ற செய்தி வரும் போது சட்டென்று நம்மால் என்ன உதவி செய்யக்கூடும் என்றுதான் ஒவ்வொருவரும் யோசிப்பார்கள். அதைத்தான் திரு ஆத்மார்த்தி செய்திருக்கிறார்.
  இப்படியும் உதவி செய்யலாம் என்பதும் நமக்கு இவர் மூலம் கிடைக்கும் பாடம் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
  போலீசுக்குப் போனால் நம்மீதே சந்தேகப்படுவார்கள்!

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் போலீசுக்கு போவதில் ரிஸ்க் இருக்கிறது
   நன்றி மேடம்

   Delete
 13. நல்ல மனம் அவருக்கு...

  தங்கள் பதிவும் அழகாக உள்ளது...

  ReplyDelete
  Replies
  1. நன்றி வெற்றி வேல்

   Delete
 14. சரியான நேரத்தில் செய்யப்பட்ட உதவி.

  ReplyDelete
  Replies
  1. நன்றி நாகராஜ் சார்

   Delete
 15. காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
  ஞாலத்தின் மானப் பெரிது

  என்பார் வள்ளுவர். இக்குறளுக்கு உரிய பொருள்தான்
  ஆத்மார்த்தியினை செய்கை. ஆத்மார்த்தியினை
  மனதாரப் பாராட்டுவோம். நன்றி

  ReplyDelete
 16. நல்ல தேடிபிடித்து தகவல் தரும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 17. vanakkam sir.

  first time unga pathivu padikkuren ninaikkuren. nalla svarasyama tan irukku.
  but sila logic ottikal irukku sir ithula..
  enga vur tirupati enpathal solkiren...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி மகேஷ். சில நேரங்களில் உண்மைகள் லாஜிக்கை மீறியதாகவே இருக்கிறது. அந்தப் பெரியவர் மதுரையிலிருந்து திருப்பதி போகிறார். வயதானவர்கள் சில நேரங்களில் குழப்பமான மனநிலையில் தன்னிலை அறியாமல் வழி மாறி விட வாய்ப்பு உண்டு..
   அவர் எப்படியோ உதவி இருக்கலாம் . சற்று மிகைப் படுத்தப் பட்டதாக இருக்கக் கூடும்.

   Delete
 18. நல்ல உதவி பகிர்வுக்கு நன்றி சார்!

  ReplyDelete
 19. சிறந்த உதவி...
  வாழ்த்துக்கள்...
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 20. இது நிச்சயமாக நடந்திருக்க வாய்ப்பு உண்டு. காலத்தால் செய்த நன்றி. எடுத்துச் சொன்ன தங்களுக்கு நன்றி.

  ReplyDelete
 21. மனிதம் பற்றிய பதிவு இது.. நாற்பதுக்கும் மேற்பட்ட பின்னூட்டங்கள் வந்ததில் இருந்தே தெரிகிறது- மனிதம் இன்னும் உயிருடன் உள்ளதென்று..

  ReplyDelete
 22. கற்பனையோ, நிஜமோ நல்ல பாடம் சொல்கிறது அனுபவம். உதவ நினைத்தால் ஆயிரம் வழிகள் இருக்கிறது உதவுவதற்கு என்று சொல்கிறது.

  ReplyDelete
 23. ஸ்ரீராம்- கற்பனையோ, நிஜமோ நல்ல பாடம் சொல்கிறது அனுபவம். உதவ நினைத்தால் ஆயிரம் வழிகள் இருக்கிறது உதவுவதற்கு என்று சொல்கிறது.
  இக்கருத்தை நான் அப்படியே வழிமொழிகிறேன்! முரளி! காலத்தில் செய்யப்பட்ட உதவி ஞாலத்தினும் பெரிதல்லவா!

  ReplyDelete
 24. உண்மையோ பொய்யோ? காலத்தினால் செய்த உதவி! பாராட்டுக்குரியது! பகிர்வுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 25. தேவையான தருணத்தில் செய்யப்பட்ட சிறந்த உதவி.

  ReplyDelete
 26. உதவி செய் பலனை எதிர்பார்க்காதே! அப்படியாயின் செய்த உதவிக்கு ஆண்டவர் உதவுவார்.
  தக்க தருணத்தில் உதவுதே உயர்ந்த உதவி!
  உதவி செய்தவருக்குப் பாராட்டுகள்!

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895