நீ!
பட்டி தொட்டிகளும்
அறிந்த பாமரக் கவிஞன்
திரைப் படத்திற்காக
அழகிய வார்த்தைகளை
கோர்த்து பாடலாக்கியவன்
அதில் வாழ்க்கையும்
இணைத்துப் பாடமாக்கியவன்
நாத்திக நதியில்
நீந்தத் தொடங்கிய
நீ
ஆத்திகக் கடலுக்குள்
மூழ்கி முத்துக்கள் எடுத்து
ஆரமாக்கி அழகு பார்த்தது
அதியசம்தான்!
நிலையாமையை தத்துவங்களை
நிலைக்கும் வண்ணம்-
இன்றும் நினைக்கும் வண்ணம்
சொன்னவன் நீ?
காதல் ரசம் சொட்டும்
பாடல்களையும் படைப்பாய்!
பக்தி மணம் கமழும்
பாடல்களையும் சமைப்பாய்!
ஒரு கோப்பையில்
குடியிருந்தபோதும்
உன் கவிதைகள்
ஒருபோதும்
தள்ளாடியதில்லை
கலைத் துறையில்
பல அவதாரங்கள்
எடுத்தவன் நீ?
அரசியல் உன்னை
அரவணைக்கவில்லை?
ஆனாலும்
எந்த அரசியல் தலைவரும்
உன்னை வெறுத்ததில்லை
காவியத் தாயின் தலைமகனே!
உன் நினைவு நாளில்
உன் வரிகளையே
உனக்கு காணிக்கை ஆக்குகிறோம்
நீ நிரந்தரமானவன் அழிவதில்லை!
எந்த நிலையிலும்
உனக்கு மரணம் இல்லை!

''...நிலையாமையை தத்துவங்களை
பதிலளிநீக்குநிலைக்கும் வண்ணம்-
இன்றும் நினைக்கும் வண்ணம்
சொன்னவன் நீ?...''
யாராலும் மறக்க முடியாதவன். அதனால் நழனைவில் நீந்துபவன். பாராட்டுகள்...
வேதா. இலங்காதிலகம்.
நாவுள தமிழைக் காட்டி
பதிலளிநீக்குநாற்காலி தேடிக் கொண்ட
பாவல ரிடையே, தங்க
நாற்காலி தமிழுக் கீந்து
காவலாய் நின்ற சிங்கக்
கவிஞனே உன்னைப் பாட
நாவுகள் இல்லை என்றால்
நற்றமிழ் சாகு மன்றோ?
---------ROUTHIRAN
அவர் என்றும் நிரந்தரமானவர்தான்.
பதிலளிநீக்குF76DD579
பதிலளிநீக்குFındıklı
Muratpaşa
İlkadım
Adalar
Osmangazi
Çayyolu
Hopa
Canik
Karamürsel
EF57F2D0
பதிலளிநீக்குSerik
Araban
Mudanya
Gölhisar
Kuşadası
Cizre
Karşıyaka
Ölüdeniz
Salihli
F7BBCBA3
பதிலளிநீக்குDilovası
Erdek
Konyaaltı
Dikili
Konak
Döşemealtı
Ölüdeniz
Gelibolu
Tavşanlı