என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 23 அக்டோபர், 2011

வெற்றிக்கு வழி

முன்னேறியவர்கள்
சொன்னதை
முன் மாதிரியாகக் கொள்


நம்பிக்கைச் செடியை
நட்டு வை


உழைப்பு என்ற
நீரை ஊற்று


நாணயம் என்ற
நல்லுரம் இடு


உறுதி என்ற
வேலி போடு


எதிர்ப்பு என்ற
களைகளை
 எச்சரிக்கையுடன்
அகற்று


பொறுமையாய்
காவல் இரு


பின்னர்
வெற்றி
பூவாய்,
காயாய்,
கனியாய்
உன் கையில்!


ஆம்
எல்லாம் உன்
தன்னம்பிக்கையில்

1 கருத்து:

  1. தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள்.
    குழந்தைப் பருவத்திலேயே இதை நம் பிள்ளைகளின் மனதில் பதிக்க வேண்டும்

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895