"அது எப்படி குடுக்க முடியாதுன்னு சொல்லலாம்?முன்னாடியே காசு குடுத்து கார்டு வாங்கி வச்சுருக்கோம்.ஆவினுக்கு நாம் அடிமையா என்ன?" என்ற சத்தமான குரல் கேட்டு வெளியே வந்தேன்.புஷ்பா மாமி யாரிடமோ கத்திப் பேசிக் கொண்டிருந்தார்.
வெளியே வந்து "என்ன மாமி? என்ன ஆச்சு" என்றேன்.
"உன்ன மாதிரி எதையும் கண்டுக்காம நிறையப் பேர் இருக்கறதாலதான் ஆவின்காரன் நம்மை ஏமாத்தறான்"
"விஷயத்தை சொல்லுங்க மாமி"
"எங்காத்து மாமா ஆவின் பூத்துக்கு பால் வாங்கப் போனா கார்டுக்கு பால் குடுக்க மாட்டேன்னு சொல்லிட்டான். 6.45மணிக்கு க்கு மேல கார்டுக்கு பால் கிடையாதாம்ஆனால் காசுக்கு குடுப்பானாம்.ஏற்கனவே பால் விலை எக்கச்சக்கமா ஏறிப் போய் இருக்கு. பாலோட விலை கார்டு விலைய விட 1.50 அதிகமா வச்சு விக்கிறான். அதையும் வாங்கிட்டு வந்து நிக்கறார் இந்த மனுஷன். வாங்காத பாலுக்கு காசு அப்புறமா குடுப்பனாம்.அதுவும் மூணு நாளைக்குள்ள வாங்கனும்னு கண்டிஷன் போடறான். அவன் சொன்ன டைமுக்குள்ள வரலங்கறதுக்காக நம்ம பாலை நம்மகிட்டயே விலை அதிகமா வச்சு விக்கிறான். ஆனா வாங்காத பாலுக்கான காசை திருப்பி கொடுக்கும்போது கார்டுல என்ன வெல போட்டிருக்கோ அதைத்தான் குடுப்பானாம்.?"
மாமியின் கோபம் நியாயமாகத் தான் இருந்தது.மாமி தொடர்ந்தார்
"நாம ரொம்ப லேட்டாப் போயிருந்து, வரமாட்டோம்னு நினச்சு பாலெல்லாம் வித்து காலியாகி இல்லேன்னு சொன்னாப் பரவாயில்ல. பால் இருக்கறப்பவே குடுக்கமாட்டேனு சொல்லி பப்ளிக்க ஏமாத்தறது தப்பில்லையா? இதை சோதனை பண்ண எவனும் வரமாட்டான் போல இருக்கு."
"வெளியில கடையில வாங்கினா அதுல போட்டிருக்கிற விலைய விட அதிகமா விக்கறான்னுதான் ஆவின் பூத்தில வாங்கினா.., அவனும் அதிகமா வச்சுத்தான் விக்கறான். கார்டு வச்சுருக்கவாளுக்கு ஏதோ கடனுக்கு குடுக்ககற மாதிரி நினைச்சுக்கறான்.இதை யாரும் கண்டுக்கறதே இல்லே."
"முதன் முதல்ல பால் கார்டு வாங்கறப்பவே படாத பாடு படுத்தினான்.எங்கயோ ரீஜனல் ஆஃபீஸ்ல போய் அப்ளை பண்ணணுமாம்.
அட்ரஸ் ப்ரூப் கேட்டான்.ரெண்டு பால் பாக்கெட் வாங்கறதுக்கு அட்ரஸ் ப்ரூப் எதுக்கு? அதுவும் முதல் கார்டு நாலு மாதம் கழிச்சுத்தான் குடுத்தான்.சரி அதோட தொல்லை விட்டுடுச்சின்னு பாத்தா இப்படி படுத்தறான்."
நான் வழக்கம் போல் அமைதியாய் இருக்க,மாமி,"இப்ப நான் அவன் கிட்ட போய் இதக் கேக்கப் போறேன்.எக்ஸ்ட்ராவா வாங்கின காசை திருப்பிக் கொடுக்கலன்னா கம்ப்ளைன்ட் பண்ணப்போறேன். கார்டு பின்னாடி ஈமெயில் அட்ரெஸ் குடுத்திருக்கான், நீதான் எனக்கு கம்ப்ளைன்ட் அனுப்பனும் சரியா?"
கார்டின் பின்புறம் புகார் செய்வதற்காக aavincomplaints@gmail.com என்ற ஈமெயில் முகவரி குறிப்பிடப் பட்டிருந்தது.
மாமி ஆவின் பூத்துக்கு ஆவேசமாகக் புறப்பட்டார்.அதற்கப்புறம் மாமி வரவில்லை.பணம் திரும்பி வாங்கி விட்டார் என்று நினைக்கிறேன்.
பின்னர் இதைப் பற்றி ஆவின் பூத் ஏஜென்டிடம் பேசியபோது இவை ஆவின் அதிகாரிகளுக்கு தெரிந்தேதான் நடக்கிறது என்றார்.மேலும் இவர்களுக்கு வழங்கப்படும் கமிஷன் தொகை ஒரு பாக்கெட்டுக்கு மிகவும் குறைவு என்றும்,ஒரு பூத்துக்கு சப்ளைசெய்யப்படும்போது எண்ணிக்கையில் பல பாக்கெட்டுகள் குறைந்துவிடும் என்றும் சொன்னார் . அது மட்டுமல்லாது டேமேஜ் ஆனா பால் பாக்கெட்டுகள் வேறு இருக்கும். அதையும் கஸ்டமருக்கு வழங்க முடியாது. அனால் ஆவினோ அதற்குரிய பணத்தை ஏஜெண்டிடமிருந்து வசூலித்து விடுகிறது. இதைத் தவிர ஆவினின் மற்ற ப்ராடக்டுகளையும் விற்கச் சொல்லி தலையில் கட்டிவிடுகிறார்களாம்.
இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.
இதை சரிக் கட்டவே அதிக விலைக்கு விற்க வேண்டி இருக்கிறது என்கிறார்கள். தனியார் பால் நிறுவனங்களோ அதிக கமிஷனை தருகின்றன.சலுகைகளும் தருகின்றன. ஆவின் நிர்வாகம் முயற்சி செய்தால் இவற்றை சரி செய்ய முடியும்.
இது தவிர ஆவினுக்கு பால் சப்ளை செய்யும் விவசாயிகளுக்கு என்னென்ன சிக்கல்கள் இருக்கிறதோ தெரியவில்லை.
பொது மக்களிடையே ஆவின் பாலுக்கு நல்ல டிமாண்ட் இருக்கிறது. அதை தக்கவைத்துக் கொள்ள ஆவின் முயற்சி செய்ய வேண்டும்.
**************************************************************************************************************
இதைப் படித்துவிட்டீர்களா?
மிக அருமையான விஷயத்தை சொல்ல வேண்டிய விதத்தில் சொல்லி இருக்கிறீர்கள் சார்
பதிலளிநீக்குநன்றி சீனு
நீக்குமுதலில் ஆவின் பால்தான் வாங்கி கொண்டிருந்தோம், அது சுத்திகரிக்கப்படும் இடத்தை பார்த்து விட்டு எனக்கு பிடிக்காமல் மாடு வைத்திருப்பவர்களிடம் ப்ரெஷ் பாலை வாங்கி கொள்கிறோம். பாக்கெட் பாலை விட இந்த ப்ரெஷ் பாலில்தான் காபி, டீ டேஸ்ட் நன்றாக இருக்கும்.
பதிலளிநீக்குஅது என்னமோ உண்மைதான். பெருநகரங்களில் அது சாத்தியம் இல்லை.
நீக்குஉங்கள் பதிவுக்கு மிக்க நன்றி....
பதிலளிநீக்குநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
நன்றி மலர்.தங்கள் வருகைக்கு
நீக்குசெமையா சுவாரஷ்யமாக சொல்லியிருக்கிறீங்க
பதிலளிநீக்குஅவசியமான பதிவு ஐயா
நன்றி ஆத்மா
நீக்குதினமும் வாங்கும் ஆவினின் பின் இவ்வளவு விஷயங்களா? நாங்க தனியார் கடையில் வாங்குவதால் இது குறித்து தெரியவில்லை. வேறு பாக்கெட் பாலில் கிழங்கு மாவு சேர்த்துகிறார்கள் எனும் போது ஆவினைத்தான் நம்புகிறோம். உஷா சுத்திகரிக்கப்படும் இடத்தைப் பார்த்து என்கிறீர்களே அங்கே பாலை நம் வீட்டில் காய்ச்சுவதைவிட அதிக வெப்பமூட்டுவதால் கிருமிகள் இருக்க வாய்ப்பில்லை..
பதிலளிநீக்குஆவினில் பால் பதப் படுத்தும் முறையில் பலமுறை வெப்பப்படுத்தப்பட்டு குளிர்விக்கப் படுகிறது.இயந்திரங்கள்தான் செய்கின்றன
நீக்குஉண்மைதான் முரளி! பல பூத்துகளில் இப்படித்தான் நடக்கிறது!
பதிலளிநீக்குஆம் ஐயா!பல நாட்களாக நடந்து வருகிறது.
நீக்குசங்கை சரியாக ஊதி இருக்கிறீர்கள்
பதிலளிநீக்குசெவிடர்களுக்கு கேட்கவா போகிறது ?
பயனுள்ள பதிவு
வாழ்த்துக்கள்
நன்றி ரமணி சார்.
நீக்குtha.ma 2
பதிலளிநீக்குஆவினுக்கு பால் விற்கும் விவசாயிக்கு ஒரே ஒரு சிக்கல் மட்டும்தான். காசு ஒழுங்கா வர்ரதில்லை.
பதிலளிநீக்குஒ!இப்படியும் இருக்கோ?
நீக்குநடுநிலை பிறழாமல் பிரச்சினைகளைச் சொல்லியிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குபாராட்டுகள் முரளிதரன்.
நன்றி பரமசிவம்
நீக்குஎல்லா இடத்திலும் கொள்ளையடிக்கிறார்கள், என்ன செய்ய எல்லாமே தெரிந்தே நடைபெறுகிறது.
பதிலளிநீக்குஆம் நண்பரே! நன்றி.
நீக்குசிறப்பான பகிர்வு.....
பதிலளிநீக்குதேவையான விஷயம் தான். புரிய வேண்டும்!
இதைப் பற்றி எழுது முன் பல விஷயங்கள் தெரிந்துகொண்டேன்.
நீக்கு***உஷா அன்பரசுDecember 18, 2012 11:40 AM
பதிலளிநீக்குமுதலில் ஆவின் பால்தான் வாங்கி கொண்டிருந்தோம், அது சுத்திகரிக்கப்படும் இடத்தை பார்த்து விட்டு எனக்கு பிடிக்காமல் மாடு வைத்திருப்பவர்களிடம் ப்ரெஷ் பாலை வாங்கி கொள்கிறோம். பாக்கெட் பாலை விட இந்த ப்ரெஷ் பாலில்தான் காபி, டீ டேஸ்ட் நன்றாக இருக்கும். ***
இப்போலாம் ஏகப்பட்ட ஹார்மோன்ஸை கொடுத்து பால் உருவாக்குறாங்க. இதுபோல் வாங்குவது சுகாதாரத்துக்கு நல்லதுதான்!
ஆம் வருண். ஊசி போட்டு பால் கறப்பதை நானே பார்த்திருக்கிறேன்.
நீக்குமாடு வைத்தி ருக்கும் பெரும்பாலான பால் காரர்கள் நன்றாகத் தண்ணீர் கலந்துதான் தருகிறார்கள்.
மாடு நிறைய தண்ணி குடிச்சிடுச்சா என்று கிண்டலாகக் கேட்பது உண்டு.
பயனுள்ள பதிவு முரளிதரன் ஐயா.
பதிலளிநீக்குநன்றி அருணா
நீக்குஆவின் பால் பின்னாடி இத்தனை கதை இருக்கிறதா?எனக்கு fat free பால் வேண்டும் என்று கேட்டதற்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறினார்கள்.அதற்காக எங்கே அலைவது என்று தனியார் பால் வாங்கிக் கொண்டிருக்கிறேன். உங்கள் பதிவைப் படிக்கும் போது நான் செய்வது சரி என்றே தோன்றுகிறது.
பதிலளிநீக்குநல்ல உபயோகமான பகிர்வு.
ராஜி
புதுசாக இருக்கிறது! எங்கள் ஏரியாவில் இப்படி நடப்பதில்லை. கலிகாலம்! வேறென்ன சொல்ல!
பதிலளிநீக்குஎப்படி எல்லாம் மனிதர்கள் ஏயத்து பிழைக்கிறார்கள்!
பதிலளிநீக்கு.
அட்டைக்காரர்களுக்கு பால் கொடுக்காமல் கடைக்கு கொடுத்து விட்டு பூத்தை அடைத்து விட்டு போய் விடுவார் என கோவையில் என் அத்தை சொல்வார்கள். அதிகமாய் பால் வேண்டும் என்றால் சீக்கிரம் போக வேண்டும்.
இனி யாருக்கு பால் தரவில்லை என்றால் aavincomplaints@gmail.com க்கு புகார் செய்ய வேண்டியது தான்.
நல்ல விழிப்புணர்வு பதிவு.
ஆவின் நிர்வாகம் முயற்சி செய்தால் இவற்றை சரி செய்ய முடியும்.
பதிலளிநீக்குடோன்டு என்னும் சமாச்சாரமும் மக்களுக்கு விளங்காததே !
பதிலளிநீக்குதினமும் வாங்கும் ஆவினின் பின் இவ்வளவு விஷயங்களா?// என்ன கொடும சார்?
பதிலளிநீக்குஉங்க விடயங்கள் அறிந்து கொண்டேன் நன்றி...முரளி.
பதிலளிநீக்குஇனிய வாழ்த்துடன் தொடருங்கள்.
வேதா. இலங்காதிலகம்.
ஒரு பொதுப் பிரச்னையை கதைபோல் வடித்து அழகா எழுதியிருகீங்க பாஸ்...வெல்டன்
பதிலளிநீக்கு