தமிழ்மண தரவரிசைப் பட்டியலில் முன்னிலைப் பதிவர்களில் ஒருவரான வெங்கட் நாகராஜ் 'கவிதை எழுதுங்க' என்று சொல்லி ஒரு அழகான ஓவியத்தை வெளியிட்டார். அந்த ஓவியத்திற்கு பொருத்தமான கவிதை எழுதும்படி கூறி இருந்தார். சும்மா எழுதிப் பார்க்கலாமே என்று நானும் முயற்சி செய்தேன். படம் ஒவியம் சரித்திரப் பின்னணியில் இருப்பதால் வெண்பா வடிவத்தை முயன்றிருக்கிறேன்.
(புலவர் இராமானுசம் ஐயா!,, கவிஞர் கி.பாரதிதாசன் ஐயா,கவியாழி கண்ணதாசன் ஐயா!,அருணா செல்வம், உள்ளிட்ட மரபுக் கவிஞர்கள் பலரும் மன்னிப்பார்களாக!)
சேற்றில் முளைத்திட்ட செந்நிறத் தாமரை
ஆற்றில் முளைத்ததே ஆச்சர்யம்! - ஆங்கிருந்த
மீனிரண்டை காணவில்லை தேடினேன் -உன்முகத்தில்
நானிரண்டை கண்டேனே பார்!
தூரெடுத்த கேணியிலே ஊறுநீர்போல் செந்தமிழ்
சாறூறும் என்நெஞ்சில்; சந்தக் கவிசொல்வேன்
நீர்வீசி தூய்மைதான் செய்வாயா? ஆமென்றால்
சேறுபூசிக் கொள்வேன் இனி
ஆடும் மயிலழகு அற்பம்தான் உன்முன்னே
பாடும் கவிஞன்நான் பகர்கின்றேன்-தீண்டாதே
ஓடும் நீருறைந்து போகும்; அதனாலே
வாடும் பயிர்கள் அறி.
**************************************************************************************
கவிதை அருமை......... தமிழ் ரசம் சொட்டுகிறது..........!!
பதிலளிநீக்குவெளியிட்ட மறு கணமே வருகை தந்ததோடு கருத்தளித்து தமிழ்மணத்தில் இணைத்து வாக்கும் அளித்துவிட்டீர்கள் ஜெயதேவ்! மிக்க நன்றி!.
நீக்குஆடும் மயிலழகு அற்பம்தான் உன்முன்னே
பதிலளிநீக்குஅழகான கவிதை ..!
நன்றி ராஜேஸ்வரி
நீக்குமுயற்சிக்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றி கண்ணதாசன் சார்!
நீக்குகவிதை நல்லா இருக்கு.
பதிலளிநீக்குநன்றி சார்!
நீக்குஇன்னமும் நிறைய வரிகள் மறைந்திருப்பதை உணர்கின்றேன்...இதுவரை நன்றாகவே இருக்கின்றது...
பதிலளிநீக்குஉண்மைதான்.இன்னும் எழுத முடியும் வெண்பா வடிவம் தேர்ந்தெடுத்ததால் சிறிது கடினமாக இருந்ததால் அத்துடன் நிறுத்திவிட்டேன்.
நீக்குஅட! சொல்கிற அளவுக்கு நன்றாகவே வெண்பாவை எழுதியிருக்கிறீர்கள் முரளி! படமும் அழகுசொட்ட கண்ணைப் பறிக்கிறது.
பதிலளிநீக்குநன்றி கணேஷ் சார்! நம்ம பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு.
நீக்குதீண்டாதே
பதிலளிநீக்குஓடும் நீருறைந்து போகும்; அதனாலே
வாடும் பயிர்கள் அறி.
சீரிய கற்பனை அய்யா. கவிதை வரிகளும் அருமை.
கவலை வேண்டாம். நிச்சயமாக புலவர் இராமானுசம் ஐயா!,, கவிஞர் கி.பாரதிதாசன் ஐயா,கவியாழி கண்ணதாசன் ஐயா!,அருணா செல்வம், உள்ளிட்ட மரபுக் கவிஞர்கள் பலரும் தங்களை மன்னிப்பார்கள். வாழ்த்துவார்கள்
நன்றி சார்!
நீக்குயாருமே உங்களை மன்னிக்கத் தேவையில்லை ஐயா...
பதிலளிநீக்குமிக அருமை
நன்றி ஆத்மா
நீக்குநீரோடும் ஆற்றில் நீராடும் பெண்கள்.நல்ல படம்,நல்ல கற்பனை.வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநன்றி விமலன் சார்
நீக்குஅருமையாக அமைந்துள்ளன, வெண்பாக்கள்! வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி முனைவர் வாசுதேவன் அவர்களுக்கு.
நீக்குமிகவும் அருமை.. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபிடித்த வரிகள் :
//ஆங்கிருந்த
மீனிரண்டை காணவில்லை தேடினேன் -உன்முகத்தில்
நானிரண்டை கண்டேனே பார்!//
நன்றி ஆர்.வி. ராஜி மேடம்
நீக்குவெண்பாவின் வடிவதனில் விளம்பியதோர் நற்கவிதை
ஒண்பாவும் கண்டேன் உவப்புமிக கொண்டேன்
நண்பா!
தளைதட்டிப் போனாலும் தவறில்லை உன்வரையில்
களைகட்டும் மேன்மேலும் கன்னித்தமிழ் வளர்க்கும்
அன்பா !
நன்றி ஐயா!கண்டறிந்து சரி செய்ய முயற்சிக்கிறேன்.
நீக்குநல்ல முயற்சி.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்
நீக்குபொருத்தமான கவிதைதான் சகோ
பதிலளிநீக்குநன்றி ராஜி
நீக்குபார்த்தேன்! படித்தேன்! படித்ததும் பைந்தமிழைக்
பதிலளிநீக்குகோர்த்தேன்! மனம்கொண்ட இன்பம் பெருகிட
வெண்பா படைத்தேன்! வியன்தமிழ் பாடுகின்ற
பண்பால் தொழுதேன் பணிந்து.
அழகு வெண்பாவில் கருத்திட்டமைக்கு நன்றி அருணா.
நீக்கு
பதிலளிநீக்குவணக்கம்!
வெண்பா விளைத்து வியப்பிலெனை ஆழ்த்திய
நண்பா! வணக்கம் நவில்கின்றேன்! - தண்டமிழில்
பொன்பா புனையும் புலவன்என் வாழ்த்துக்கள்!
உன்பா தொடா்க உயா்ந்து!
தொடா்ந்து எழுதுங்கள்!
ஐயம் வரும் இடங்களில் என்னிடம் கேளுங்கள்
நான் அறிந்ததைச் சொல்லித் தருகிறேன்
உங்கள் மின்அஞ்சல் முகவரியை என் மின்அஞ்சலுக்கு அனுப்பவும்
நன்றி அய்யா! மின்னஞ்சல் அனுப்புகிறேன்.
நீக்குஓவியத்துக்கேற்ற அழகுத் தமிழ்க்கவி.வாழ்த்துகள் முரளி !
பதிலளிநீக்குநன்றி ஹேமா!
நீக்குஅருமை...
பதிலளிநீக்குநன்றி மணிமாறன்
நீக்குநன்றி
பதிலளிநீக்குசிறப்பான கவிதை முரளிதரன். பாராட்டுகள்.
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குடி,என் ,முரளிதரன்(அண்ணா)
இன்று உங்களின் அழகான படைப்பு வலைச்சரத்தில் அறிமுகம் ஆனது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது அண்ணா வாழ்த்துக்கள் அருமையான படைப்பு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-