என்னை கவனிப்பவர்கள்

வெள்ளி, 1 மார்ச், 2013

தேர்வு வந்துடிச்சி! டென்ஷன் ஏறிடிச்சி!


.
    "ஏம்மா! அறிவிருக்கா உனக்கு?.பால் வாங்க என்ன போகச்சொல்றயே? எக்ஸாம் இன்னைக்கு தொடங்குதுன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். அப்பா சும்மாதானே இருக்கார். அவரை அனுப்ப வேண்டியதுதானே. ஃபிசிக்ஸ் ல ரெண்டு சாப்டர் ரிவைஸ் பண்ணைனும். MATHS ல PROBABALITY யில் ஏகப்பட்ட சந்தேகம் இருக்கு.CHEMISTRY ஒரு பாடம் சுத்தமா புரியல. இந்த சமயத்தில நீ வேற வெறுப்பேத்துற.........
     
   "ஹல்லோ, ப்ரியாவா! எக்சாமுக்கு நல்ல PREPARE  பண்ணியிருக்கயா? ஸ்கூல் ல பிரக்டிகல்சுக்கு ஃபுல்  மார்க் போட்டுடுவாங்க இல்ல. நீ ரெண்டு சென்டம் வாங்கிடிவேன்னு நினைக்கிறேன். எங்க வீட்டுக்கு வாயேன் குரூப் ஸ்டடி பண்ணா யூஸ்ஃபுல்லா இருக்கும் இல்ல. ஒண் வோர்ட் எல்லாம் உனக்கு ஈசிதானே..... சரி நான் அப்புறமா பேசறேன்.
      
  "ஏம்மா லதா என்ன கட் ஆஃப் வாங்கினா ன்னு உனக்கு தெரியுமா?உனக்கு எங்க தெரிய போகுது?  ரெண்டு சென்டமாவது வாங்கலைன்னா அண்ணா யுனிவெர்சிட்டி வாசல் பக்கம் கூட எட்டிப் பாக்க முடியாது. ஜனனி,விஜி,ரகு. இவங்களெல்லாம் விட அதிகமா வாங்கலைன்னா கூட பரவாயில்லை. குறைவா வாங்கிடக் கூடாது. 
      "சரி சரி, டிஃபன்  ரெடி ஆயிடிச்சா? சீக்கிரம் குடு. காலங்காத்தால மூணு மணிக்கு எழுந்தாச்சு. பசி நேரம்.
      "அனு! அனு! கதவை மூடிக்கிட்டு என்ன பண்ற! கதவை திற!...............
   "அடிப்பாவி மூணு மணிக்கு உன்ன எழுப்பி விட்டா இப்படி தூங்கிக்கிட்டிருக்கயே இது நியாயமா? காலைல  இருந்து அம்மா  நான் பாட்டுக்கு புலம்பிக்கிட்டுருக்கேன்.  +2 பப்ளிக் எக்ஸாம்னு கொஞ்சமாவது  பயம்  இருக்கா உனக்கு. நான் சமையல்  செஞ்சா நீ படிக்கறதுக்கு ஹெல்ப் பண்ண முடியாதுங்கிறதுக்காக உனக்காக தாத்தா பாட்டிய வீட்டு வேலை எல்லாம் செய்யறதுக்காக  எக்ஸாம் முடியற வரைக்கும் இங்க இருக்க சொல்லியிருக்கேன். நீ என்னடான்னா கொஞ்சம்கூட டென்ஷன் இல்லாம ஜாலியா  இருக்க. 
   "எழுந்திருடி. டிபன் சாப்பிட்டுக்கிட்டே படி. அப்புறம் குளிக்க போலாம். நீ கைல புக் வச்சிக்கிட்டு படிச்சிகிட்டே இரு. நான் குளிப்பாட்டி விடறேன்.
    "அப்புறம் பாத்ரூம் கதவில ஃபிசிக்ஸ்  ஃ பார்முலா எழுதி ஒட்டி வச்சிருக்கேன். TOILET கதவுல CHEMISTRY  equations  ஒட்டியிருக்கேன். டிரெஸ்ஸிங் டேபிள் ல முக்கியமான மாத்ஸ் FORMULA இருக்கு எல்லாம் பாத்துக்கோ.............. ஒரே டென்ஷனா இருக்கு எக்ஸாம் எப்பதான் முடியுமோ?

(+2  படிக்கிற ஒரு பொண்ணோட அம்மாவின் டென்ஷன்தான் இது. நீங்க இத படிச்சி டென்ஷன் ஆயிட்டீங்களா? நான் எஸ்கேப்
அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம். கீழே ழே +2 எக்சாம் டைம் டேபிள் லிங்க் கொடுத்திருக்கேன். அட! எங்களுக்கு எதுக்குன்னு கேக்கறீங்களா. வேற ஒண்ணும் இல்லீங்க உங்க சொந்தக்காரங்க நண்பர்கள் பசங்க யாராது +2 படிச்சிகிட்டு இருக்கலாம். டைம் டேபிள நல்லா பத்து வச்சுக்கோங்க எக்ஸாம் நடக்கிற நாட்கள்ல அவங்க வீட்டுக்கெல்லாம் போயிடாதீங்க. அப்புறம் உங்களை யாரும் கண்டுக்கலன்னு வருத்தப்பட வேண்டி இருக்காது பாருங்க. ஹிஹி 


***********************************************************

41 கருத்துகள்:

  1. எக்ஸாம் டென்ஷன் எங்களுக்கும் தந்தாச்சு! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாசங்களைவிட அவங்க பெற்றோர்கள்தான் டென்ஷன் ஆறாங்க
      நன்றி நாகராஜ் சார்

      நீக்கு
  2. குழந்தைகளைவிட பெற்றோர் தான் மிகவும் டென்ஷனாக இருக்கிறார்கள். அவர்கள் அமைதியாக இருந்து குழந்தைகளை அமைதியான மனநிலையில் பரீட்சை எழுத வைத்தால் நல்லது. எங்கள் மனறத்தில் + 2 மாணவ, மாணவியர் நல்ல முறையில் தேர்வு எழுத வாழ்த்தினோம், இங்கும் வாழ்த்திக் கொள்கிறேன்.
    நல்ல முறையில் தேர்வு எழுத வாழ்த்துக்கள். உடல் நலத்துடன், மனநலத்துடன் தேர்வு எழுத வாழ்த்துக்கள்.
    நல்ல முறையில் தேர்வு எழுதி அவர்கள் விருப்பட்ட துறையில் சேர்ந்து மேலும் படிக்க வாழ்த்துக்கள்.
    தேர்வு அட்டவணைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. வியாபாரம் என்றால் பொருட்கள்
    ஆரவாரமா விற்பது இயல்புதானே
    தோரனமா விளம்பரங்கள் செய்வதன்
    காரணமா தரத்தில் குறை வருவதும்
    பலகாலாமா இருப்பது தானே-இங்கே
    கல்வி வியாபார்ம் ஆச்சுதுங்க
    கேள்வி கேட்கமுடி யாதுபோச்சுதுங்க
    பிள்ளைகள் விலையும் கொடுத்து
    விற்பனையும் ஆகிற பொருட்களாச்சு
    கற்பனைத் திறன் வளர்க்காது
    முள்செடியாய் கல்வி கவ்வியதுபாரீர்
    கணக்கை விறுவிறுப்பா போட்டிட
    வாய்பாட்டை மனப்பாடம் செய்திடலாம்
    வாழ்க்கையை மன்ப்பாடம் ஆக்கிடலாமோ
    காந்தி சொன்ன கல்வி எங்கே
    பாடத்திட்டத்தில் நாப்பது சதம்
    மதிப்பென் எடுத்தால் பாஸாம்-நல்ல
    வேலை உடன் காசாம்
    வேண்டும் நமக்கு தொழில் கல்வி
    வேண்டாம் தொழிலாய் கல்வி

    கவிஞர்.அழகர்சாமி



    பதிலளிநீக்கு
  4. ஏங்க இப்படி..?

    அனைத்து மாணவ மாணவியர்களும் சிறப்பாக எழுத வாழ்த்துவோம்...

    பதிலளிநீக்கு
  5. அம்மாவோட டென்ஷனை அழகா நகைச்சுவையா சொல்லிட்டு எக்ஸாமுக்கு படிக்கிற பசங்க இருக்கற வீட்டுக்கு போய் தொல்லை பண்ண கூடாதுன்னு நல்ல அறிவுரையும் கொடுத்திட்டிங்க. அதென்னவோ கரெக்ட்தான் உள்ள பசங்க டென்ஷனா படிச்சிட்டிருக்கும்.. இவங்க ஹால்ல மாநாடு போட்டா பசங்களுக்கு கவனமெல்லாம் இவங்க பேச்சு பக்கம் போயிரும். எக்ஸாம் எழுதற பசங்க வீட்டிலிருக்கவங்க எல்லாம் எதாவது ஒரு சாமிக்கு மௌன விரதம் இருக்க வேண்டியதுதான்.அதென்னமோ தெரியலை நான் எக்ஸாமுக்கெல்லாம் பயந்ததே இல்ல..! இப்ப நாமதான் பயமுறுத்திட்டே இருக்கோம். நீ இவ்வளவு வாங்கல.. அவ்வளவு வாங்கல உன் எதிர்காலமே அவ்வளவுதான்னு..! இங்க நிறைய பெற்றோர்கள் சாய்ஸே கொடுப்பதில்லை. கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். எத்தனை வழி இருக்குன்னு நாம கருத்தை சொல்லனும்.. option தரனும். பிள்ளைங்களுக்கு எதில் ஆர்வம் இருக்குன்னுன்றது எல்லாம் அவசியமே இல்ல..நீ ஆயிரத்துக்கும் மேல எடுக்கனும்.. டாக்டராகனும் இல்ல இஞ்சினியராகனும் இதான் கண்டிஷன் . இதனால் இப்ப பிள்ளைங்க எல்லாம் படிக்கிறதுல மெமரிகார்டா மட்டும்தான் இருக்காங்க. ஒரு விஷயம் தெரிஞ்சிக்கிடறதோடு சரி.. அதாவது knowledge லேயே நின்னுடுது. அடுத்த கட்டமா அதன் விளக்கம், பயன்பாடு.. மேம்படுத்துதல்னு நிறைய விஷயம் தெரியாமயே போயிடுது.இப்படித்தான் நிறைய பேர் வழிகாட்டி கொண்டிருக்கிறோம் பெற்றோர்களுக்கு பிள்ளைகளுக்கு புரியவைக்க நேரமும் இருப்பதில்லை.. மனமும் இருப்பதில்லை. இன்னிக்கு எல்லா விஷயமும் வளர்ந்திருக்குங்க.. நம்ம தாத்தா காலத்துல சலூன்னு எட்டணாவுக்கு முடி வெட்டின கடை எல்லாம் இன்னிக்கு ப்யூட்டி பார்லர், ஸ்பா, ஹேர் டிசைனஸர் என்று டெக்னாலஜியா வளர்ந்திருக்கு. எட்டனா சம்பாதிச்ச தொழில்தான்.. இன்னிக்கு கம்ப்யூட்டர்ல உங்க முகத்தை போட்டு எந்த ஸ்டைல் நல்லாருக்குன்னு செலக்ட பண்ண எட்டாயிரம் சம்பாதிக்கிற அளவு வளர்ந்திருக்கு..! ஸோ பிள்ளைங்களுக்கு வழிகாட்டுங்க.. அவங்களுக்கு எதெல்லாம் இண்ட்ரஸ்ட்டா இருக்குன்னு பார்த்து carrier chart option கொடுங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெற்றோர்களுக்கு பேசப்பட வேண்டிய விஷயம் இதை ஒரு தனிப்பதிவா போட்டுடறேன்...!

      நீக்கு
    2. விரிவான கருத்துக்கு நன்றி.
      உங்கள் அலசல்களை பதிவா போடுங்க.படிக்கக் காத்திருக்கிறோம்.

      நீக்கு
  6. கடை சியா சொன்னீங்க பாருங்க அந்த பரிட்சை சமயத்தில் அவங்க வீட்டுகெல்லாம் போகூடதுன்னு சூப்பர் உண்மையிலேயே தவிர்ப்பது எல்லோருக்குமே நல்லது
    அனுபவச்சிருக்கேன் மற்றவர்கள் பார்வைகளில் அந்தவீடு இன்னும் புலப்பும் கவலை மொழியும் இல்லை பயம் கொள்ளும் நவரசங்களும் வந்து அலைமோதி செல்லும் .

    அனனத்து பிள்ளைகளும் நன்றாக மன நிறைவுடன் பரீட்சை எழுத பிராத்தனை செய்வோம்

    பதிலளிநீக்கு
  7. இதில பசங்க படுற டெண்சனைவிட அம்மாக்கள் படும் கஷ்டங்கள் இருக்கே......... குறிப்பாக டிவி சீரியலை எல்லாம் தியாகம் செய்வாங்க.

    பதிலளிநீக்கு
  8. \\எக்ஸாம் நடக்கிற நாட்கள்ல அவங்க வீட்டுக்கெல்லாம் போயிடாதீங்க. அப்புறம் உங்களை யாரும் கண்டுக்கலன்னு வருத்தப்பட வேண்டி இருக்காது பாருங்க\\ நாட்களில் நம்ம வீட்டு ஒலி ஒளி பெட்டிகளின் சப்தத்தை கொஞ்சம் கம்மியா வச்சிக்கலாம், பக்கத்து வீட்டு பசங்களை தொந்தரவு செய்யாம இருக்க!!

    பதிலளிநீக்கு
  9. ஒரு நல்ல பள்ளியில் சேர்த்து விட்டு பெற்றோர்களும் உறவுகளும் டென்ஷனாக்காமல் இருந்தால் போதும்..பிள்ளைகள் தெளிவாக இருப்பார்கள்....நம் எண்ணத்தை குழந்தைகளுக்கு திணித்தால் வெறும் ஏட்டுச் சுரைக்காயாகத்தான் இருப்பார்கள்...கறிக்குதவாமல்... சென்ற வருடம் என் மகன் ப்ளஸ் டூ எழுதினான் அந்த அனுபவம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல பள்ளிகள் எல்லாம் நல்லா படிச்ச பேரன்ட்ஸ் சோட பிள்ளைகளைத் தான் சேத்துக்கறாங்க. மார்க் கொஞ்சம் குறைவா வாங்கினாலும் பேரன்ட்சை உண்டு இல்லன்னு பண்ணிடுவாங்க. வீட்ல கவனிக்கற தில்லன்னு குற்றம் சாட்டுவாங்க

      நீக்கு
    2. இதுல என்ன கொடுமைன்னா மார்க் ஏன் குறைஞ்சதுன்னு ரேங்க் கார்டு குடுக்கும்போது பேரன்ட்சை கூப்பிட்டு கேப்பாங்க
      பிள்ளைகளோட மார்க் ஏன் குறைஞ்சதுன்னு பெற்றோர்தானே கேக்கணும்?
      அந்த மாதிரி பள்ளிகளைத்தான் நல்ல ஸ்கூல் னு நினைக்கறாங்க.

      நீக்கு
  10. யப்பா அப்படியே ஒவ்வொரு காட்சியும் கண்ணில் நிக்கிறது, எனது பழைய நினைவுகளும் வந்து போனது அருமையான பதிவு, அதுவும் சரியான நேரத்தில் போட்டிருக்கிங்க. அருமை.

    பதிலளிநீக்கு
  11. மாணவமணிகளுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. நல்ல வேள இந்த அளவுக்கு யாரும் என்ன படுத்தி எடுக்கல... காரணம் நம்ம படிப்பு அப்படி ... அவ்வ்வ்வ்வ்வ்வ்

    பதிலளிநீக்கு
  13. எங்க வீட்டுல இதெல்லாம் நடக்கவில்லை....
    ஏன் என்றால் நான் பரிட்சை வரப் போற தேதியை
    அம்மாவிடம் சொன்னதே இல்லை.

    டென்ஷன் இல்லாமல் எழுதி
    பாஸ் பண்ணிவிட்டு பாஸாயிட்டேன்
    என்று மட்டும் சொல்லுவேன்.


    பதிலளிநீக்கு
  14. தேர்வு எழுதச் செல்லும் அனைத்து மாணவ/மாணவியருக்கும்
    அன்பான வாழ்த்துக்கள்..
    வெல்க...

    பதிலளிநீக்கு
  15. தேர்வு டென்சன் கூடிக் கொண்டே செல்கின்றது அய்யா. அதிலும் குறிப்பாக ஆசிரியர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் டென்சன் குறையாது, அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. தேர்வுக்காக மாணவர்கள் எதிர்கொள்ளும் மன உலைச்சலைவிட, பெற்றோர்களும் ஆசிரியர்களும் எதிர்கொள்ளும் மன உளைச்சல் அதிகம். சில மாணவர்கள் தேர்வு பற்றிய கவலையே இல்லாமல் இருக்கும்போது வகுப்பாசிரியர்களுக்கு ஏற்படுகின்ற, மன உளைச்சலை, வார்த்தைகளில் விவரிக்க முடியாது அய்யா. தாங்களும் நன்கு அறிந்தது தான்.
    மாணவ மாணவியர் நன்முறையில் தேர்வு எழுதி, மிக உயர்ந்த மதிப்பெண்கள் பெற்று ,தேர்விலும் வாழ்விலும் வெற்றிபெற வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.அதிலும் அரசு பள்ளி ஆசிரியர்களின் நிலையை நானும் அறிவேன்.

      நீக்கு
  16. +2 படிக்கிற எல்லா மாணவர்களின் அம்மாவின் டென்ஷன் அதிகமாகத்தான் இருக்கும் ..

    இந்த +2 தேர்வு முடிவை எல்லாம் ஏன் பத்திகைகளில் வெளியிட வேண்டும் ??

    அவரவர் இல்ல முகரிக்கு அனுப்பிவிட்டால் என்ன ??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதெல்லாம் பத்திரிகைகளில் வெளிவருவதை யாரும் பார்ப்பதில்லை. இணையத்தில் வந்துவிடுவதால். பத்தரிக்கை வெளியாகும் வரை யாரும் காத்திருக்க விரும்புவதில்லை.

      நீக்கு
  17. பதினாறு வய்தினிலே! படத்தில் வரும் ” அம்மா! நான் பாஸாயிட்டேன் “ என்று சந்தோஷமாக ஸ்ரீதேவி ஓடிவரும் காட்சி ஞாபகம் வந்தது. இவ்வளவு டென்ஷனும் அந்த சந்தோஷத்தின் முன் காணாமல் போகும்.

    +2 தேர்வை முன்னிட்டு மின்வெட்டும் அவ்வளவாக இங்கு இல்லை.


    பதிலளிநீக்கு
  18. எண்ட தெய்வமே!!!!என்னக் கொடுமை இது..ஆமா ஆமா, எக்ஸாம் நேரத்துல போயிரவே கூடாதுப்பா இவங்க வீடுக்குலாம்.

    பதிலளிநீக்கு
  19. பத்தாவது பிளஸ் டூ படிக்கும் குழந்தைகள் இருக்கும் பலரது வீடுகளிலும் கேட்கும் வசனங்களை அப்படியே சொல்லிட்டிங்க...நகைச்சுவையாக தெரிந்தாலும் உண்மை உறைக்கிறது !!

    முக்கியமான அறிவுரை ஒன்றுடன் முடித்த விதம் அருமை. நன்றி.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895