என்னை கவனிப்பவர்கள்

வியாழன், 25 ஏப்ரல், 2013

இந்த போஸ்டரை பாருங்க! பாவம் தமிழ்! காப்பாத்துங்க!

   வித்தியாசமான வார்த்தைகளை போட்டு போஸ்டர்கள் ஒட்டி எப்படியாவது தலைமையை கவரவேண்டும்  என்று கட்சிக்காரர்கள் அதீத ஆர்வத்தில் அதில் உள்ள வார்த்தைகளில் பிழைகள் இருக்கிறதா என்று கூட பார்க்காமல் பிரம்மாண்டமான அளவுகளில் ஒட்டிவிடுகிறார்கள். சில நேரங்களில் ஒற்றுப் பிழைகள்,எளிதில் கண்டுபிடிக்க முடியாத எழுத்துப் பிழைகள் வருவதுண்டு. ஆனால் பொருளை சரியாகப் புரிந்து கொள்ளாமல் போடுவதும்  வாசகங்களையே தவறாகப் போடுவதையும் சகஜமாக காண முடிகிறது. . இவர்களிடம் தமிழ் படாத பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.

  மேலுள்ள சுவரொட்டி சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே நெடு நாட்கள் கண்ணில் பட்டுக் கொண்டிருந்தது. அட்சயப் பாத்திரமே என்பது அர்ச்சயப் பாத்திரமாக மாறி விட்டது. அம்மா கண்ணில் பட்டால் இந்தப் போஸ்டரை அடித்தவருக்கு அர்ச்சனை கிடைக்குமா கட்சிப் பதவி கிடைக்குமா என்று தெரியவில்லை.  

   சில பள்ளிகளில் சில  மாணவர்கள் குடியரசு தினத்தை கொடியரசு தினம் என்று சொல்வார்கள். அன்று பள்ளிகளில் ஊர்த்தலைவர் கொடி ஏற்றுவதால் அன்றைய தினம் கொடியரசு தினம். உண்மையான பொருளைப் புரிந்துகொள்ளாமல்  அவர்களே ஒன்றை இதுதான் சரி என்று நினைத்துக் கொள்வார்கள்.  அது போல குடியரசு தினம் எதற்காகக் கொண்டாடுகிறார்கள் என்று தெரியாத ஊராட்சித் தலைவர்களும் உண்டு. இவர்கள் அனைவரும் தலைமையை பாராட்டி தங்கள் விசுவாசத்தை காட்டவேண்டி இருப்பதால் புதிது புதிதாக சுவரொட்டி வாசகங்களை தேடுகிறார்கள். அதன் விளைவுதான் இது போன்ற சுவரொட்டிகள் .
  இப்படி அர்த்தம் தெரியாமல் சுவரொட்டிகள் ஒட்டி தமிழை கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதே போல் கலைஞர், ஸ்டாலின் அழகிரி ,கனிமொழி பற்றி  அபத்தமாக புகழப்பட்ட சுவரொட்டிகளை காணமுடியும்.எந்த கட்சிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.

        அது போல முத்தமிழோடு நான்காவது தமிழாக புகழ்ச்சித் தமிழ் இடம் பெற்றுவிட்டது என்று சொல்லலாம் .இந்தப் புகழ்ச்சி அரசியல் வாதிகளைத் தாண்டி அதிகாரிகளுக்கும் பரவி விட்டது.தங்களுக்குக் கீழ் பணிபுரியும் பணியாளர்களும் அலுவலர்களும் தங்களை புகழ்ந்து பேச வேண்டும் என்று எதிர் பார்க்கத் தொடங்கி விட்டார்கள். சிலர் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு புகழ்ந்து தள்ளுகிறார்கள்   என்ன போஸ்டர் மட்டும் ஒட்டுவதில்லை. அவ்வளவுதான்.

      ஆயிரக்கணக்கானோர் படிக்கின்ற சுவரொட்டிகளை தவறில்லாமல் இருக்க  வேண்டும் இல்லையெனில் எப்படிப் பட்டவர்கள் தொண்டர்களாக இருக்கிறார்கள் என்பதை அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டிவிடும் என்பதை 'தலைமை'கள் உணருமா?

******************************************************************************************************************

63 கருத்துகள்:


  1. ஒன்றல்ல முரளி! இதுபோல பல! வால்க டமில்!

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் சொல்வது சரியே. அவசரத்திலும், ஆர்வக்கோளாறினாலும் அடிக்கடி இம்மாதிரி பிறழ்வுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஒருவேளை அடுத்த பதிப்பில் பிழை திருத்தம் வருமோ?

    பதிலளிநீக்கு
  3. நானும் பல தவறுகளைக் கண்டு தலையில் அடித்துக் கொண்டதுண்டு முரளி. அதிமுகவினர் தங்கள் போஸ்டர் ‘ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும்’ என்று ஒருமுறை அச்சிட்டிருந்தனர். ‘மாற்றுக் குறையாத மன்னவன்’ என்று தங்கள் தலைவன் சொன்னதையே சரியாகப் புரிந்து கொள்ளாத இவர்களெல்லாம்....? தி.மு.க.வினர் அதற்கு ஒருபடி மேலே! ‘60ம் மணிவிழா காணும் தளபதிக்கு’ என்று போஸ்டர் அடித்திருந்தார்கள். ஒன்று 60ம் பிறந்தநாள் என வேண்டும். அல்லது மணி விழா என வேண்டும். 60ம் மணி விழா என்றால் அவர்கள் தளபதிக்கு 360 வயதா? நினசசாலே சிப்புச் சிப்பா வருது முரளி! நல்ல டமாஸு போங்க! வால்க டுமீல்! ஸாரி, டமில்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சார்,நாம நம்ம தளபதி 3600 ஆண்டுகள் வாழ்ந்து டமிழுக்கும் தன் டமிழ் அடியார்களுக்கும் சேவை செய்யணும் என்று சொல்ல வர 3600 ஐ 360 ஆக்கிப்புட்டியே?? என்று டமிழ் அடியார்கள் உங்களுடன் சண்டைக்கு வரக்கூடும்.கவனம் சார்

      நீக்கு
    2. மாசு குறையாத மன்னவன் சூப்பர்
      தூசு மன்னவனோ

      நீக்கு
  4. இதற்கு நாம் கட்சிகாரர்களை குறை சொல்லக் கூடாது காரணம் இந்த மாதிரி போஸ்டர்களை அடிக்க சொல்லுபவர்கள் அதிகம் படிக்காதவர்களாகவே இருப்பார்கள். குறை சொல்லுவதென்றால் அதை அச்சிட்ட அச்சகங்களைதான் குறை சொல்ல வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அச்சகங்களில் நாம் என்ன கொடுக்கிறோமோ அதை அப்படியே அச்சடித்துக் கொடுப்பார்க்கள்.ப்ரூஃப் கொடுக்கும்பொது தவறை சரி செய்து விட வேண்டும். சில அச்சகங்களில் நாம் தவறாகக் கொடுத்தால் கூட சரி செய்து விடுவார்கள்.அப்படி எல்லா அச்சகங்களிலும் எதிர் பார்க்க முடியாது.
      நன்றி மதுரை தமிழன்

      நீக்கு
  5. நம்ம நாட்டில தான் அரைகுறைத் தமிழ் தெரிஞ்ச சிங்கள ஆபிசர்கள் பெயர்ப்பலகைகளில் தமிழைக் கொலை செய்கிறார்கள் என்றால் தமிழ் நாட்டிலும் இப்படியா???கொடுமை சார்

    பதிலளிநீக்கு
  6. இவர்கள் வாழ்வதற்காகத் தமிழைச் சாகடிக்கிறார்கள்.

    நாம் சொன்னால் திருந்த மாட்டர்கள்; திருத்தவும் மாட்டார்கள்.

    அவர்களின் தலைவியோ தலைவரோ சொன்னால் மட்டும் எதையும் செய்வார்கள்.

    பதிலளிநீக்கு
  7. ஒரு முறை பூந்தமல்லி சாலையில் ஸ்டாலினைப் புகழ்ந்து கழகப் புளியே வருக வருக என்ப்று எழுதி இருந்தனர்... தமிழ்நாட்டில் தமிழ் இது போல் தான் மெல்ல அழியப் போகிறது.. முதலில் எழுத்து வழக்கில் அப்புறம் பேச்சு வழக்கில்... கேட்டுப் பாருங்கள் இல்லவே இல்லை என்பார்கள்

    பதிலளிநீக்கு
  8. ஆர‌ம்ப‌த்திலேயே த‌மிழ்நாட்டில் க‌ல்வி க‌ற்கும் எல்லா மாண‌வ‌ர்க‌ளுக்கும், அவ‌ர்க‌ளின் தாய்மொழி த‌மிழாக‌ இல்லாது விட்டாலும் கூட‌, த‌மிழைக் க‌ட்டாய‌ பாடமாக்கியிருந்தால் இந்த‌ நிலை வ‌ந்திருக்காது. த‌மிழ்நாட்டில் எத்த‌னையோ க‌ல்லூரிப்ப‌ட்ட‌தாரிக‌ளுக்கு த‌மிழ் எழுத‌, வாசிக்க‌த் தெரியாது, அதைச் சில‌ர் கெள‌ர‌வ‌மாக‌ நினைக்கிறார்க‌ள் என்ப‌து தான் வேடிக்கை. தொலைக்காட்சிக‌ளில் நிக‌ழ்ச்சிகளை ந‌ட‌த்துப‌வ‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌, அர‌சிய‌லில், பேச்சு வ‌ல்லமை மிக்க‌வ‌ர்க‌ள் கூட எழுத்துப்பிழை விடுவ‌தும், பிழையாக‌ ல‌, ள‌ வைப் பாவிப்ப‌தும், த‌மிழிலேயே இல்லாத‌ மெல்லின‌ ப‌, வி என்ப‌வ‌ற்றைப் பாவிப்ப‌தையும் நான் அவ‌தானித்திருக்கிறேன். எடுத்துக்காட்டாக‌ நாங்க‌ள் ப‌ய‌ம்(Payam) என்பதை தமிழ் நாட்டில் bayam என்பார்க‌ள்.

    பதிலளிநீக்கு
  9. அன்பு நண்பருக்கு!

    // பரணி என்பது அழிவைப் பற்றிப் பாடுவது .கலிங்கத்துப் பரணி நாம் அனைவரும் அறிந்த பரணி நூல். குலோத்துங்க சோழனின் வெற்றியையும் கலிங்கத்தின் அழிவையும் தோல்வியையும் விவரிக்கிறது. தமிழ்ப் பரணி என்றால் தமிழை அழிப்பது என்று பொருள் அல்லவா? //

    தாங்கள், பரணி என்பதற்கு அழிவு என்று தவறான பொருள் கொண்டு இருக்கிறீர்கள். பகைவனை வென்ற மன்னனின் வீரப்புகழ் பாடுவதே பரணி ஆகும். மேலும் போரிலே ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி பெற்ற வீரர்களைப் பற்றியும் அரசனைப் பற்றியும் புகழ்ந்து (பரணி) பாடும் பிரபந்த நூல் பரணிஇலக்கியம் ஆகும். எந்த நாட்டை வென்றார்களோ அந்த (தோல்வியடைந்த) நாட்டின் பெயரை அந்த இலக்கியத்திற்கு வைப்பது மரபு. உதாரணம்: கலிங்கத்துப் பரணி. இந்த நூலில் வரும் ” கடை திறப்பு “ பாடல்கள், இந்தக் கால காதல் கவிதைகளையெல்லாம் விஞ்சி விடுவன..


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது புரிந்து கொண்டேன் ஐயா.விளக்கத்திற்கு மிக்க நன்றி. ஐயா. தமிழ்ப் பரணி என்ற சொல் சரியா? என்பதை உடனே சொல்வீர்கள் ஆயின் அதனை உடனே திருத்தி விடுவேன்.

      நீக்கு
    2. மாற்றம் செய்திருக்கிறேன்.சரி இல்லையெனில் சுட்டிக்காட்டவும்

      நீக்கு
    3. முரளி,

      அரசியல்விளம்பரங்களில் பொருளற்ற,பிழையான சொற்கள் இடம்பெருவது வாடிக்கையாகிப்போய்விட்டது.

      ---------

      //தமிழ்ப் பரணி பாடிய தலைவா! என்று வைகோவைப் புகழ்ந்து போஸ்டர் ஒட்டி இருந்தார்கள் என்று படித்ததாக ஞாபகம். எந்த நாட்டை வென்றார்களோ அந்த (தோல்வியடைந்த) நாட்டின் பெயரை அந்த இலக்கியத்திற்கு வைப்பது மரபு. உதாரணம்: கலிங்கத்துப் பரணி. அப்படி எனில் தமிழ்ப் பரணி என்பது தமிழ் தோல்வி அடைந்ததை குறிப்பது போல் தோன்றுகிறது. இப்படி அர்த்தம் தெரியாமல் சுவரொட்டிகள் ஒட்டி தமிழை இழிவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்.//

      பரணி என்பது அழிவை குறிப்பது அல்ல என சிறு விளக்கம் கொடுக்கலாம் என பார்த்தேன், எனக்கு முன்னர் தி.தமிழிளங்கோ சார் நல்ல விளக்கம் கொடுத்திருக்கார், ஆனால் முழுமையாக இல்லை எனவே ந்ம்ம பங்கிற்கு கொஞ்சம் சொல்லி வைப்போம்.

      யுத்தப்பாடல்களை பாடுவது "பரணி இலக்கியம்" எனப்படும். தமிழ் சிற்றிலக்கிய வகையில் புறப்பொருளில் வருவது.

      பரணி என சொல்லக்காரணம், பாடல் பாடும் கவிஞர் போர்க்களத்தில் ஒரு பரண் அமைத்து அதன் மீது இருந்து யுத்தக்காட்சிகளை கண்டு நேரடியாக வர்ணித்து பாடுவதால் ஆகும்.

      கவிநயத்திற்காக மிகைப்படுத்துதல் இருந்தாலும் அவர்களே அக்கால போர் வரலாற்று ஆசிரியர்கள்.

      அப்போ தக்கயாகப்பரணிப்பாட எங்கே பரண் அமைத்திருப்பார்கள் என கேட்கப்படது :-))

      போர்க்கள பாடல் பாட இம்முறை ,அதே வீரம் ஆகிவற்ரையும் குறிக்க பயன்ப்படுத்தப்படும்,எனவே எல்லா இடத்திலும் பரண் அமைத்தார்களா என கேட்கப்படாது.

      போர்க்களத்தில் ஆயிரம் யானைகளை கொன்ற தலைவனின் வீரத்தினை புகழ்ந்து பாடுவது தான் பரணி வகைப்பாடல் என்றும் சொல்வார்கள்.

      ஓராயிரம் யானை கொன்றால் பரணி ஆதலால் யுத்தம் இருக்கு கவனி என நந்தா படத்தில் நா.முத்துக்குமார் ஒரு பாட்டு கூட எழுதி இருக்கார்.

      ஆனால் எல்லாப்போரிலும் ஆயிரம் யானைக்கொன்றால் தான் பரணி பாடுவார்கள் என இல்லை,வீரம், யுத்தம் குறித்து பாடுவது பரணி இலக்கியம்.

      தமிழ் பரணி பாடினார் என்றால் தமிழ் யுத்தப்பாடல் பாடினார் என்று தான் பொருள் கொள்ள வேன்டும்.

      நீக்கு
    4. தொடர்ச்சி...

      பரணி நட்சத்திரத்தில் பிறந்தவனே அப்படியான வீரனாக இருப்பான், போர் கூட பரணி நட்சத்திர நாளில் துவங்கும், காளிக்கு உரியது பரணிநட்சத்திரம், பரணி பாடல்களில் காளியை வாழ்த்தியும் பாடல்கள் வரும். இப்படி ஒரு விளக்கமும் இருக்கு.

      பொதுவாக போர்/வீரம் பற்றிய இலக்கியம், இரண்டு அடிகளில் "குறள் தாழிசை வெண்பாவில்" பாடப்படும் இலக்கியம் பரணி.

      நீக்கு
    5. அருமையான விளக்கத்திற்கு நன்றி.வவ்வால்..தெளிவாக புரிந்துகொண்டேன்.
      அந்த உதாரணத்தை நீக்கி விடுவதே சரி. மாற்றி அமைத்து விடுகிறேன்.

      நீக்கு
  10. இப்போது புரிந்து கொண்டேன் ஐயா.விளக்கத்திற்கு மிக்க நன்றி. ஐயா. தமிழ்ப் பரணி என்ற சொல் சரியா? என்பதை உடனே சொல்வீர்கள் ஆயின் அதனை உடனே திருத்தி விடுவேன்.

    பதிலளிநீக்கு
  11. தமிழ் வாழ்க...! தி.தமிழ் இளங்கோ ஐயாவிற்கும் நன்றி...

    பதிலளிநீக்கு
  12. வாழ்க தமிழ் "இந்த வருஷம் லீவு ஜாஸ்தி" இப்படிதான் தமிழ் வளருமோ

    பதிலளிநீக்கு
  13. அர்ச்சய பாத்திரம்...
    மாசு குறையாத மன்னன்...
    கழகப் புளியே வருக வருக...
    60ம் மணிவிழா....

    மூங்கில் காற்று.... சில நேரங்களில் தவறே என்றாலும்
    அறியாமை நம்மை சிரிக்க வைக்கிறது.

    வாழ்க தமிழ்!!

    பதிலளிநீக்கு
  14. அண்ணே!கோஸ்டம் போடுங்க!தமில் வால்க!

    பதிலளிநீக்கு
  15. ஐயோ! அவர்கள் எதையும் தவறாக எழுதவில்லை. நாம் தவறாகப் புரிகிறோம்.
    அம்மா, அப்பப்போ எதிர்கட்சி, ஆளும் கட்சி எனும் பேதமின்றி எல்லோரையுமே
    அர்ச்சிப்பதால், அந்த அடைமொழியை கொடுத்துள்ளார்கள்.
    நீங்கள் தான் "அமாவாசை கொளுத்திப்போட்டியே" என போட்டுக் கொடுக்குறீர்கள்.

    பதிலளிநீக்கு
  16. அரசியல் கட்சிகள் எப்படி எப்படி எல்லாம் தவறு இல்லாமல் அடை மொழி கொடுக்கலாம் என்று அவர்களது தொண்டர்களுக்கு பயிற்சி நடத்தலாம்!

    பதிலளிநீக்கு
  17. அம்மா பெயர் மட்டும் பெரிசா சரியா இருந்தா போதுங்க...

    மத்ததைப்பத்தி அவங்களுக்கு கவலைஎன்ன..?

    பதிலளிநீக்கு
  18. முரளி....அண்ணேன் ..நீங்களும் அரசியலுக்கு வந்திட்டீங்களா...வாங்க..வாங்க...நிறைய தீனி கிடைக்கும்...நிறைய பதிவு போடலாம் ...

    பதிலளிநீக்கு
  19. பாவம் அம்மா அதைவிட தமிழ்த்தாய் (அர்ச்சித்து கொண்டே இருப்பங்கனு சொல்லி இருப்பாங்களோ )

    பதிலளிநீக்கு
  20. எப்படிப் பட்டவர்கள் தொண்டர்களாக இருக்கிறார்கள்//அவலட்சணம்

    பதிலளிநீக்கு
  21. கொஞ்ச நாள் முன்பு பொறுப்பு என்பதற்கு பதில் பொறுப்பி என்று போட்டும் ஒரு போஸ்டர் படம் முகநூலில் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  22. ஒரு வார்த்தை தப்பா போனதுக்கே இப்படி புலம்பினா எப்படி?!!

    பதிலளிநீக்கு
  23. யாரும் இதை சுட்டிக்காட்டவில்லையா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவன் அவனுக்கு ஆயிரம் வேலை. நம்ம மாதிரி ஆளுங்க இத பாத்து பதிவு போட்டுக்கிட்டு இருக்கோம். அவ்வளவுதான்.

      நீக்கு
    2. AVARGALUKKU THERINTHA THAMIL AVVALAVUTHAN . NAMADHU VAZHI INEE VARANGKALA MAANAVARKALIDAMUM ILAIGARKALIDAMUM THAMILAI KONDU SELVADHUTHAN NAMADHU LATCHIYAM . ADHARKKU NAAM ANAIVARUM THAMILIL URAIYADA VENDUM.....KANDIPPAGAVUM..... URUDHIYAGAVUM

      நீக்கு
  24. கொடுமை. தமிழ் இவர்கள் கையில் இனி?

    பதிலளிநீக்கு
  25. காலக்கொடுமை தான் நண்பரே...
    இதெல்லாம் பார்க்கையில் " என்னடா இது பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனை ""\
    என்று சொல்லத் தோன்றுகிறது...
    ஒரு முறை தமிழ்க் கடவுளின் அறுபடை வீடு ஒன்றுக்கு சென்றேன்..
    அங்கே "தேங்காய் உடைக்குமிடம்" என்பதற்கு பதிலாக
    "தெங்காய் உடைக்குமிடம்" என்று எழுதி இருந்தது...

    தமிழை உயிர்மூச்சு என்று சொல்லிக்கொள்ளும் ஒரு தொலைகாட்சி...
    ஒரு போராட்டத்தை ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள்.
    அங்கே ஒருவர் சுமந்திருந்த கைகாட்டியில் " வேலை கொடு" என்பதற்கு பதிலாக
    "வேலைக் கொடு" என்று இருந்தது...

    என்ன சொல்ல ...

    பதிலளிநீக்கு
  26. தமிழ் எழுத்துக்களிலோ அல்லது வார்த்தைகளிலோ கூட தவறு வந்தால் அர்த்தமே மாறி விடுகிறது. நான் ஒரு வாகனத்தில் படித்தேன் : " பிறசவத்திற்கு இலவசம்" - என்று! பிரசவம்- பிற'சவம்'ஆகிவிட்டதை என்ன சொல்வது? என்ன பண்றது தமிழ் இப்ப பல வகையா ஆயிடுச்சு.. ' இப்ப நமீதா தமிழுக்கும் கோனார் உரை போட வேண்டியதா இல்ல இருக்கு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதான் தெரியுது தமிழ்க் கொலைகள் ஏராளம இருக்குன்னு. இதெல்லாம் செர்ஹ்த்ஹு வச்சு ஒரு புக்கே போடலாம் போல இருக்கு.

      நீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895