என்னை கவனிப்பவர்கள்

சனி, 18 மே, 2013

இந்த ரகசியம் தெரியுமா?

 

இரகசியம் 

அது எப்படி?
உன் முகம் மட்டும் 
நிலவு போல்!

நீ 
மஞ்சளுக்கு பதிலாக 
நிலவைப் 
பயன் படுத்துகிறாயோ!

ஒ!
இப்போதல்லவா தெரிகிறது 
நிலவு தேய்வதன் 
ரகசியம்!

******************************************************
*******************************

கொசுறு: அப்ப நிலவு எதுக்கு வளரதுன்னு கேக்கறீங்களா? இப்படியெல்லாம் கேட்டா  அந்த ரகசியத்தையும் சொல்லிடுவேன். ஹிஹி 

29 கருத்துகள்:

  1. வித்தியாசமான சிந்தனை இருக்கிறது
    சொல்லிச் சென்றவிதம்
    அழகாக அருமையாக ரசித்து
    மகிழும்படியாக இருக்கிறது
    இது இல்லாவிட்டால் வேறு எதுதான் கவிதை ?
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. நீங்களும் இப்படி சிந்திக்க ஆரம்பிச்சாச்சா?

    பதிலளிநீக்கு
  3. // இதெல்லாம் ஒரு கவிதையான்னு கேக்கப் படாது. பதிவு எழுதி ஒருவாரம் ஆயிடுச்சா. எப்பவோ எழுதினத அவசரத்துக்கு போட்டுட்டேன் //

    கவிதை அரங்கேறும் நேரம்! அவசரக் கவிதையின் அவசரம் புரிகின்றது! தமிழ் மணத்தில் முதலிடம் பெற வாழ்த்துக்கள்!


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தமிழ் இளங்கோ சார். அடிக்கடி நம்ம பக்கத்தை கவனிக்கறீங்கன்னு தெரியுது. எச்சரிக்கையாத்தான் இருக்கணும். முதலிடம் பெற வாய்ப்பில்லை. ஜாம்பவான்கள் இருக்கிறார்கள்.

      நீக்கு
  4. என்ன முரளி ரகசியத்தை இப்படி போட்டு ஒடச்சிட்டிங்க....இப்ப பாருங்க இருக்கிற ஒரு நிலவுக்கும் பலமான போட்டி ஆரம்பிடுச்சு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செவ்வாய்க்கு ரெண்டு நிலவாம். அங்கே போனா போட்டி பாதியா குறைஞ்சிடும்

      நீக்கு
  5. ஆஹா.... என்ன ஒரு கற்பனை!

    //அப்ப நிலவு எதுக்கு வளரதுன்னு கேக்கறீங்களா? இப்படியெல்லாம் கேட்டா அந்த ரகசியத்தையும் சொல்லிடுவேன். ஹிஹி //

    உன் முகத்தில் உரச வேண்டும் என்ற ஆவலில்தான் நிலவு மீண்டும் மீண்டும் வளர்கிறதோ... :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட! அப்படியே போட்டுடலாம் போல இருக்கே. நான் எழுத நினச்சத விட நல்லா இருக்கு.

      நீக்கு
  6. அருமை...

    இது போல் மேலும் தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  7. அவசரமா எழுதினாலும்
    அற்புதமா எழுதியிருகீங்க நண்பரே...
    தேய்த்துக் குளிக்க
    பூசு மஞ்சளென எனை
    உரசிக் கொண்டதால் நான்
    தோய்ந்து போனேனே..

    பதிலளிநீக்கு
  8. என்ன முரளி? இதுதான் புது(மாதிரியான)க்கவிதையா?! :-)))

    பதிலளிநீக்கு
  9. ***அப்ப நிலவு எதுக்கு வளரதுன்னு கேக்கறீங்களா? இப்படியெல்லாம் கேட்டா அந்த ரகசியத்தையும் சொல்லிடுவேன். ஹிஹி***

    அட நீங்க என்ன கவிதை எழுதியவரை (உங்களை நீங்களேதான்) எல்லாம் கேள்விமேலே கேள்வி கேட்டு, பகுத்தறியிறீங்க? கற்பனை வளமும் பகுத்தறிதலும் என்றுமே சேர்ந்துபோகாது என்பது என் வியாக்யாணம். அதான் என்னால எல்லாம் கவிதை எழுத முடிவதில்லை!:))) நிலவை எல்லாம் ஒரு துணைக்கோளாகத்தான் பார்க்க முடியுற மரமண்டைகள் நாங்க! :)))

    அப்புறம் எங்க கமல் மட்டும் எப்படி கற்பனைவளத்துடன் கவிதை எல்லாம் எழுதிக்கிட்டு பகுத்தறிகிறார்ணு கேக்காதீங்க! கமல் தொழில் நடிப்பு! ஆராய்ச்சி அல்ல! அதனாலயா இருக்கலாம். இதெல்லாம் "தொழில் ரகசியம்" நானும் சொல்லிட்டு ஓடிப்போயிடுறேன். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாமே அறிவு பூர்வமா யோசிச்சா சந்தோஷமா இருக்க முடியாது.வாழ்க்கையில கொஞ்சம் முட்டாள் தனமும் வேணும்னு நெனைக்கிறேன் மிகைக் கற்பனை பல சமயங்களில் மகிழ்ச்சியைக் கொடுக்கும். பகுத்தறிவுக்கும் கற்பனை வளத்திற்கும் சம்பந்தம் இல்ல..பகுத்தறிவு வாதிகள் எல்லாம் கற்பனை வளம் இல்லாதவர்கள்னு சொல்ல முடியாது.கற்பனையை ரசிக்க பகுத்தறிவு வாதிகளாலும் முடியும். இசை வடிவங்கள் எல்லாம் கற்பனையில் உருவானதுதானே! பகுத்தறிவாளர்கள் இசையை ரசிக்க மாட்டார்களா என்ன?
      அதே போல காதலிச்சாத்தான் காதல் கவிதை எழுத முடியுங்கறதும் உண்மையில்ல .தபு சங்கரோட காதல் கவிதைகள் பிரபலமானவை. ஆனா அவரோட திருமணம் காதல் திருமணம் இல்லன்னும் கேள்வி பட்டிருக்கேன்.
      **********************
      என்னோட அறிவியல் அறிவு கொஞ்சம்தான் என்றாலும் அறிவியல் ஆர்வமும் உண்டு. ஒண்ணு ரெண்டு அறிவியல் பதிவுகளும் எழுதி இருக்கேன்.

      நீக்கு
  10. நீங்க பொறுப்பா, பொறுமையா பதில் சொன்னதாலே, கொஞ்சம் கூகில் பண்ணிப் பார்த்தேன்.

    ஆச்சர்யம் என்னனா கவிஞர்கள்தான் அறிவாளிகள்னு சொல்றாப்பிலே ஒரு கதை மாட்டுச்சு. நல்லாயிருக்கனாலே வெட்டி ஒட்டியிருக்கேன். படிச்சுப் பாருங்க! :)

    ///There were once two people traveling on a train, a scientist and a poet, who were riding in the same compartment. They had never met before, so naturally, there wasn't much conversation between the two.

    The poet was minding his own business, looking out the window at the beauty of the passing terrain.

    The scientist was very uptight, trying to think of things he didn't know so he could try to figure them out. Finally, the scientist was so bored, that he said to the poet, "Hey, do you want to play a game?"

    The poet, being content with what he was doing, ignored him and continued looking out the window, humming quietly to himself. This infuriated the scientist, who irritably asked again, "Hey, you, do you want to play a game? I'll ask you a question, and if you get it wrong, you give me $5. Then, YOU ask ME a question, and if I can't answer it, I'll give YOU $5."

    The poet thought about this for a moment, but he decided against it, seeing that the scientist was obviously a very bright man. He politely turned down the scientist's offer.

    The scientist, who, by this time was going mad, tried a final time. "Look, I'll ask you a question, and if you can't answer it, you give me $5. Then you ask ME a question, and if I can't answer it, I'll give you $50!"

    Now, the poet was not that smart academically, but he wasn't totally stupid. He readily accepted the offer. "Okay," the scientist said, "what is the EXACT distance between the Earth and the Moon?"

    The poet, obviously not knowing the answer, didn't stop to think about the scientist's question. He took a $5 bill out of his pocket and handed it to the scientist. The scientist happily accepted the bill and promptly said, "Okay, now it's your turn."

    The poet thought about this for a few minutes, then asked, "Alright, what goes up a mountain on three legs, but comes down on four?"

    The bright glow quickly vanished from the scientist's face. He thought about this for a long time, taking out his notepad and making numerous calculations. He finally gave up on his notepad and took out his laptop, using his Multimedia Encyclopedia.

    After about an hour of this, the poet quietly watching the mountains of Colorado go by the whole time, the scientist FINALLY gave up. He reluctantly handed the poet a $50 bill. The poet accepted it graciously, turning back to the window.

    "Wait!" the scientist shouted. "You can't do this to me! What's the answer??"

    The poet looked at the scientist and calmly put a $5 bill into his hand. ///

    எந்த மஹராஜன்/ராணி எழுதினாளோ தெரியலை.. :) http://www.verifine.org/Humor/scientist.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறிது நேரத்திற்குள் ஒரு நல்ல கதையை தேடி அளித்து விட்டீர்கள். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் எங்காவது சொல்வதற்கு பயன்படும்.. சுட்டியுடன் பகிர்ந்தமைக்கு நன்றி. வருண்

      நீக்கு
  11. குறுங்கவிதைகள் அருமை! தொடருங்கள்! கேள்வியெல்லாம் கேட்க மாட்டோம்! நன்றி!

    பதிலளிநீக்கு
  12. பெயரில்லா19 மே, 2013 அன்று PM 6:13

    கற்பனைதானே கவிதைக்கு அழகு..நல்ல கற்பனை..

    பதிலளிநீக்கு
  13. நல்லாத்தான் இருக்கு.. வளரும் ரகசியத்தையும் சொல்லிடுங்க.

    பதிலளிநீக்கு
  14. பெயரில்லா23 மே, 2013 அன்று PM 5:30

    உங்க கவிதை ரசிக்கும்படியாக இருந்தது நண்பரே.

    இருந்தாலும் அந்த இரகசியத்தைதான் கொஞ்சம் சொல்லுங்களேன். பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895