என்னை கவனிப்பவர்கள்

வியாழன், 30 ஜனவரி, 2014

அகிம்சை அண்ணல் சுடப்பட்டபோது

  காந்தியின்மீது தீவிர பற்றுக் கொண்டவர் வெங்கடாசலபதி.மதுரை டி.கல்லுப் பட்டியில் காந்திநிகேதன் என்ற ஆசிரமத்தை நிறுவி சேவை செய்து வந்தார் .இன்றும் காந்தியின் அறிவுரைப் படி கிராம வளர்ச்சிக்காக பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் பயிற்சி அளித்து வந்தது காந்தி நிகேதன்.

   இந்த ஊருக்கு காந்தி ஒருமுறை வந்திருந்தார். அவரை காந்தி நிகேதனுக்கு அழைத்து சென்றனர். ஆசிரமத்தில் அனைத்து இனத்தை சேர்ந்த சிறுவர்களும் ஒன்றாக தங்கி இருந்ததைக் கண்ட காந்தி பெரிதும் மகிழ்ந்தார் . அப்போது ஆசிரம நிர்வாகிகள் காந்திஜிக்கு ஒரு கிண்ணத்தில்  கொஞ்சம் தேன் கொடுத்தனர். அது மாணவர்களால் தயாரிக்கப்பட்ட தேன் என்றும் கூறினர். மகிழ்ச்சியுடன் அதைப் பெற்றுக் கொண்ட அண்ணல் அதை  கொஞ்சம் ஸ்பூனில் எடுத்து அருந்துவதற்காக வாய்க்கருகே கொண்டு சென்றார். ஏதோ நினைவு வந்தவராக நிர்வாகிகளிடம் ,"இந்த தேனை எப்போதாவது இந்த சிறுவர்கள் சுவைத்திருக்கிறார்களா" என்று கேட்டார் நிர்வாகிகள் ஒருவரை பார்த்துக்கொண்டு மௌனம் சாதித்தனர். அந்த சிறுவர்கள்  தேனை பருகியதே இல்லை என்பதை புரிந்து கொண்டார். உடனே தேன்கிண்ணத்தையும் ஸ்பூனை யும் கீழே வைத்துவிட்டு எழுந்தார்.
நிர்வாகிகளிடம்" ஒரு பொருளை உற்பத்தி செய்தவனுக்கு அப்பொருளின் மீது இல்லாத உரிமை அடுத்தவனுக்கு கிடையாது " என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றார் அண்ணல். காந்தியின் நினைவு நாளான இன்று  எங்கோ படித்த இந்த நிகழ்வு நினைவுக்கு வந்தது.
    இந்த  நாளில்தானே அகிம்சை அண்ணல் மதவெறிக்கு பலியானார்.  30.01.1948 மாலை ஐந்து மணி கடந்துவிட்டது பிரார்த்தனை செய்ய இந்துக்கள் முஸ்லீம்கள்,சீக்கியர்கள் என்று சர்வ மதத்தினரும் காத்திருந்தனர். பாபுஜி இன்னும் வரவில்லை. ஏன் இன்னும் காந்தி வரவில்லை. அண்ணல் நேரந் தவறாமையை கடைபிடிப்பவர் ஆயிற்றே. உள்ளே ஏதேனும் முக்கிய பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கிறதோ என்று மக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். படேலுடன் பேசிக் கொண்டிருந்த காந்தி நேரமாகி விட்டதை உணர்ந்து அவசரமாக பிரார்த்தனைக்காக எழுந்தார்.
   காலந்தவறாமையை கடைபிடிக்காதவர்களுக்கு கடுந்தண்டனை உண்டு என்று சிரித்துக்கொண்டே காந்தி சொன்னதைக் கேட்ட அருகில்  இருந்தவர்கள் ஒரு கணம் திகைத்தனர். மகாத்மா பிரார்த்தனை மேடை நோக்கி நடந்தார். அவரை தாங்கிப் பிடித்துக்கொண்டு ஆபா, மனு இருவரும் உடன் வந்தனர்.
     பிரார்த்தனைக்  கூடத்துக்கு முன்பாக காந்தி மக்களை கரம் கூப்பி வணங்க மக்களும் அமைதியாக அண்ணலை வணங்கினர். அப்போது அனைவரையும் விலக்கிக் கொண்டு அண்ணலின் எதிரே வந்தான் கொடுமனம் கொண்ட  கோட்சே. காந்தியை  நோக்கி கைகூப்பி வணங்கினான். மகாத்மாவும் நிகழப்  போகும் ஆபத்தை அறியாமல் அவருக்கே உரிய புன்னகையுடன் பதிலுக்கு வணங்க, காலில்விழுவது போல விழுந்து எழுந்த கோட்சே மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அவர் முன் நீட்டி அந்த அநியாயத்தை செய்தான்.
   ஹே! ராம்! என்று சொல்லிக் கொண்டே சுருண்டு விழுந்தார் மகாத்மா. கூடவே விழுந்த அகிம்சை இன்று வரை எழுந்திருக்க வில்லை. ஒரு சில வினாடிகளுக்குள் நடந்த முடிந்த துயரத்தை தடுக்க முடியவில்லையே புலம்பித் திகைத்தனர் அருகில் இருந்தவர்கள்.
    காந்தியடிகள் கொலை நிகழ்வை படிக்கும்போதும் கேட்கும்போதும் சினிமா தொலைக்காட்சிகளில் பார்க்கும்போதும் தமிழாசிரியர் கற்பித்த மெய்ப்பொருள் நாயனார் புராணத்தின் இந்த பாடல்கள் என் நினைவுக்கு வரும்.ஆயுதத்தை ஓலை சுவடிக்குள் மறைத்துவைத்துக் கொண்டு மெய்பொருள் நாயனாரை வணங்குவது போல் நடித்துக் கொன்ற முத்தநாதனின் கதை என்கண்முன் விரியும்

                       மெய்யெலாம் நீறு பூசி
                             வேணிகள் முடித்துக் கட்டிக்
                       கையினில் படைக ரந்த
                            புத்தகக் கவளி ஏந்தி
                       மைபொதி விளக்கே என்ன
                            மனத்தின்உள் கறுப்பு வைத்துப்
                        பொய்த்தவ வேடம் கொண்டு
                             புகுந்தனன் முத்த நாதன்
 
                        கைத்தலத்து இருந்த வஞ்சக்
                              கவளிகை மடிமேல் வைத்துப்
                        புத்தகம் அவிழ்ப்பான் போன்று     
                            புரிந்துஅவர் வணங்கும் போதில்
                         பத்திரம் வாங்கித் தான்முன்
                               நினைந்தஅப் பரிசே செய்ய
                          மெய்த்தவ வேட மேமெய்ப்
                                பொருள்எனத் தொழுது வென்றார் 

  நினைத்ததை  முடித்த கோட்சே பிடிபட்டான். இந்நிகழ்வுக்கு சில நாட்களுக்கு முன்பாக நடந்த கொலை முயற்சியில் ஈடுப்பட்டு மாட்டிக் கொண்ட மதன்லால் என்பவனையும் அண்ணல் மன்னிக்கவே விரும்பினார். ஒருவருடன் கருத்து வேறுபாடு கொள்பவர்கள் குற்றவாளிகள் அல்ல என்பதை அவன் உணர்ந்து கொள்வான் என்று உரைத்த அண்ணலின் மனதை என்னென்பது?
  நேருவும் , படேலும் கதறி அழுதனர். அன்று வானொலியில் தழுதழுத்த குரலோடு உருக்கமான ஒரு உரை ஆற்றினார் நேரு. உலகையே கலங்க வைத்து விட்டது அந்த உத்தமரின் மரணம் .

 காந்திக்கு  நான்கு மகன்கள் உண்டு. காந்தியின் மீது கசப்புணர்வும் கடும் கருத்துவேறுபாடும் கொண்ட மூத்த மகன் ஹரிலால் காந்தி, காந்தியை விட்டு பிரிந்தே வாழ்ந்தார்.குடிப்பழக்கம் உட்பட பல்வேறு தீய பழக்கங்களுக்கு அடிமையான இவரை அண்ணலின் இறுதி சடங்கின் போதும் சுய நினைவின்றியே கிடந்தாராம்.  இன்னொரு மகனான ராமதாஸ் காந்தி, காந்தியின் சிதைக்கு தீ மூட்டினார். பின்னாளில் கோட்சேவுக்கு மன்னிப்பு வழங்கவேண்டும் என்று கோரிய பெருமணம் படைத்தவராக இருந்தார் ராமதாஸ் காந்தி.
 
   அகிம்சை  போராட்டத்தின்மூலம் ஆங்கிலேயர்க்கு பெரும் தலைவலியாக இருந்த காந்தியை அவர்கள் கூட கொல்ல முயலவில்லை . ஆனால் விடுதலை பெற்று ஆறுமாதங்கள் கூட அவரை காப்பாற்ற முடியவில்லையே என்று உலகமே எள்ளி நகையாடியது போல் இருந்தது.
    காந்தியின்  கொள்கைகளுடன் ஒத்துப் போகாதவர்கள் இருக்கலாம். ஆனால் அவர் இந்தியாவின் அடையாளங்களில் ஒன்று என்பதை  யாரால் மறுக்க முடியும்?

******************************************************************************************** 
(படித்தது,கேட்டதன் அடிப்படையில் எழுதப்பட்டது இந்தப் பதிவு  )

தொடர்புடைய பதிவு  
காந்தி தேசத் தந்தை இல்லையா?

40 கருத்துகள்:

  1. வணக்கம்
    முரளி(அண்ணா)

    பாரத தேசத்தின் எழுச்சி நாயகன் புன்னகை தேசத்தின் உறைவிடம் என்றும் உலகம் போற்றும் மாமனிதன் பற்றிய நினைவு கூர்ந்து எழுதிய பதிவு... மிக சிறப்பாக உள்ளது. காந்தி மறைந்தாலும் அவர் விட்டுச்சென்ற தடயங்கள் என்னும் நினைவு கொண்டுதான் இருக்கு...
    வாழ்த்துக்கள் அண்ணா........

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. காந்தி சுடப்பட்ட பொழுது விழுந்த அஹிம்சை இன்னும் எழுந்திரிக்கவில்லைதான்.
    காந்தி மகானைப் போற்றுவோம்

    பதிலளிநீக்கு
  3. //கூடவே விழுந்த அகிம்சை இன்று வரை எழுந்திருக்க வில்லை.//

    அருமை.

    பதிலளிநீக்கு
  4. // ஒருவருடன் கருத்து வேறுபாடு கொள்பவர்கள் குற்றவாளிகள் அல்ல... // இந்த மனம் யாருக்குத் தான் வரும்...? அதனால் தான் அவர் மகாத்மா...

    பதிலளிநீக்கு
  5. அந்த நாளில் நேரில் கண்டது போன்ற உணர்வு....

    பதிலளிநீக்கு
  6. ஹே! ராம்! என்று சொல்லிக் கொண்டே சுருண்டு விழுந்தார் மகாத்மா. கூடவே விழுந்த அகிம்சை இன்று வரை எழுந்திருக்க வில்லை//

    சத்தியமான வார்த்தையை சொன்னீர்கள், உண்மையில் அகிம்சையும் அவர் கூடவே செத்து விட்டது...!

    பதிலளிநீக்கு
  7. தான் நினைத்ததை சாதிக்க துடிக்கும் வைராக்கியம் காந்தியின் பலம்.. அதுவே அவரது பலவீனமும் ஆகிப் போனது நிதர்சனம்...

    அருமையான பதிவு சார்..

    பதிலளிநீக்கு
  8. காந்திஜி சுடப்பட்ட நாள் இன்னும் என் மனதில் அழியாநினைவாய் இருக்கிறது. நாங்கள் அப்போது அரக்கோணத்தில் இருந்தோம் எனக்கு ஒன்பது வயது முடிந்திருந்தது. பிள்ளைகள் நாங்கள் தெருவில் ஆடிக் கொண்டிருந்தபோது ரேடியோ செய்திகேட்டுத் திகைத்து பின் உர்ர் முழுக்க அந்த செய்தியைத் தெரிவித்தோம். எங்கள் வீட்டிலேயே ஒரு இழவு விழுந்த மாதிரி உணர்ந்தோம். நான் இதை ஏற்கனவே என் பதிவு “ அரக்கோண நாட்கள்’-ல் பகிர்ந்திருக்கிறேன். என்றும் மறக்க முடியாத நிகழ்வும் அனுபவமும். gmbat1649.blogspot.in/ 2011/05/blog-post_11.html

    பதிலளிநீக்கு
  9. அருமை. வாழ்த்துக்கள். ஆனால் காந்தி ஒன்றை செய்ய தவறிவிட்டார். நேருவையும் தன்னுடைய மற்ற சீடர்களையும் நிர்பந்தித்து காங்கிரசை கலைத்திருக்க வேண்டும். அன்று துவங்கிய நேரு குடும்பத்தாரின் ஆதிக்கம் இன்றும் தொடர்கிறது. காங்கிரஸ் கட்சியின் பல நல்ல திட்டங்கள் வெற்றியடைந்திருந்தும் மக்களிடம் அதற்கு நேரு குடும்பத்தாரின் ஊழல்களே காரணம்.

    பதிலளிநீக்கு
  10. விழுந்தார் மகாத்மா. கூடவே விழுந்த அகிம்சை இன்று வரை எழுந்திருக்க வில்லை.
    Vetha.Elangathilakam.

    பதிலளிநீக்கு
  11. விடுதலை பெற்ற பின் பலிகொடுத்துதான் வேதனையான விஷயம்....
    சிறப்பான பதிவு!

    பதிலளிநீக்கு
  12. ஒருவருடன் கருத்து வேறுபாடு கொள்பவர்கள் குற்றவாளிகள் அல்ல என்பதை அவன் உணர்ந்து கொள்வான் // இது எல்லா காலத்திற்கும் பொருந்தும்

    பதிலளிநீக்கு
  13. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் ஐயா
    தங்களின் இந்த பதிவு காந்தியடிகள் மீதும் தங்களின் மீதும் இருந்த மரியாதையை மிகுவித்திருக்கிறது என்றே நான் கூறுவேன். காந்தியடிகள் சுட்டுக்கொல்லப் பட்ட நிகழ்வுக்கு மெய்ப்பொருள் நாயனார் புராணத்தின் பாடலை ஒப்பிட்டது தங்களின் புத்திக்கூர்மையைப் பறைசாற்றுகிறது. மகன்கள் பற்றிய தகவல்களும் அருமை. பகிர்வுக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  15. காந்தியால் தான் இந்தியா சுதந்திரமடைந்தது என்பதில் எனக்கு உடன்பாடில்லை என்றாலும் ஒரு அகிம்சாவாதியாக தனது கொள்கையில் உறுதியுடன் விளங்கியவர் காந்தி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனி ஒருவரால் மட்டும் சுதந்திரம் கிடைக்கவில்லை. பல்வேறு முகம் தெரியாத தியாகிகளின் தியாகத்தால் விளைந்ததே சுதந்திரம். ஆனால் அவர்களின் முக வடிவாக காந்தி கருதப் படுகிறார்.

      நீக்கு
  16. அன்று நமக்கு தேவை தலைவர்(காந்திதான்) கோட்சே அல்ல ஆனால் இன்று நமக்கு நிறைய தேவை கோட்சேக்கள்தான் தலைவர்கள் அல்ல... மறைந்திருக்கும் கோட்சேக்களே வெளிவந்து இந்தியாவை இப்போது உள்ள தலைவர்களிடம் இருந்து காப்பாத்தேன்

    பதிலளிநீக்கு
  17. காந்திபற்றி மோடிவிட்ட டிவிட்டரில் நான் சொன்னதுஇதுதான். "மகாத்மா காந்தியின் கொள்கைகளை படிக்க எல்லோருக்கும் புடிக்கும் ஆனால் அதை பின்பற்றதான் யாருக்கும் பிடிக்காது"

    பதிலளிநீக்கு
  18. அகிம்சை காந்தியுடன் இறந்துவிடவில்லை.இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது.நம்பவில்லை என்றால் http://en.wikipedia.org/wiki/Irom_Chanu_Sharmila இந்தக் கட்டுரையை வாசியுங்கள்.ஊடகங்களின் செய்திகளில் இவ்வாறானவர்களைப் பற்றி பெரிதாகக் குறிப்பிட மாட்டார்கள்.இதெல்லாம் தெரியாமல் அகிம்சை செத்துவிட்டது என்றால் எப்படி ?

    பதிலளிநீக்கு
  19. காந்தி மஹான் எங்கள் காலை கதிரவன்
    அவர் உதித்ததும் எங்கள் காரிருள் மறைந்ததம்மா..... என்ற வானெலிப் பாட்டை சிறுவயதில் பல தடவை கேட்டிருக்கிறேன்.

    அவர் சுடப்பட்ட போது என்று தலைப்புக் கொடுத்துவிட்டு....... ஏமாற்றிவிட்டீர்கள். அதன் பின்புலத்தைப் பற்றி ஏதோ எழுதியிருப்பதைப் போல் நினைக்க வைத்து மோசம் செய்துவிட்டீர்கள் அண்ணா. நீங்கள் எழுதியிருப்பது ஜஸ்ட் செய்திக் குறிப்பே. மார்கெட்டிங்க் செய்யும் நிலையில் நீங்கள் இல்லை அண்ணாஅ, இதை உணருங்கள், தயவுசெய்து கெஜ்ரிவால் போல மாறிவிடாதீர்கள்.

    சன்முக ராமன்

    பதிலளிநீக்கு
  20. கூடவே விழுந்த அகிம்சை இன்று வரை எழுந்திருக்க வில்லை.
    >>
    நிஜம்தான்

    பதிலளிநீக்கு
  21. முரளி அண்ணா,

    காந்தி அண்ணலை பலர் மறந்தே விட்டார்கள் . உங்கள் பதிவு அருமை. செஞ்சிக் கோட்டை பற்றி நீங்கள் முன்பு இட்ட பதிவை மீள் பதிவு செய்ய இயலுமா ?

    நேசமணி

    பதிலளிநீக்கு
  22. காந்தி உயர்ந்தவர்தான். ஆனால், பகத்சிங்கை அவர் நினைத்தால் காப்பாற்றியிருக்கலாம் என்கிறார்கள் இதற்குப் பதில் இல்லையே!
    அம்பேத்கருடன் அவருக்குக் கருத்து வேறுபாடு இருந்ததையும் நம்மால் ஏற்கமுடியவில்லையே! இப்படிச் சில கேள்விகள் இருப்பதால்... சும்மா ப்ளளிப் பிள்ளைகள் போல் “காந்தி சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார்” என்னும் ஒற்றைவரி வரலாற்றையும் ஏற்கமுடியவிலலையே! கடைசிவரை அவர்தன்னை ஒரு “சனாதனஇந்து “ என்று கூறிக்கொண்டதன் பொருள் என்ன? சாதிகள் கூடாது, ஆனால் இந்த தீண்டாமை ஒழியவேண்டும் என்றால் எப்படி? சாராயம் குடிக்கலாம், போதை வரக்கூடாது என்பது சரியா அய்யா? காந்தியை விமர்சனம் செய்வதால், நாம் காந்தியைவிட உயர்ந்தவராகிவிடமுடியாது என்னும் புரிதலேர்டுதான் கேட்கிறேன். காந்தியின் தாய்மொழிவழிக்கல்விக் கருத்து எனக்கு முழு உடன்பாடு. ஆனாலும் அவரை முழுமையாக ஏற்க முடியவில்லையே அய்யா? என்ன செய்ய?

    பதிலளிநீக்கு
  23. காந்தியை பற்றிய இரு சம்பவங்கள் அருமையாக சொல்லி அழகாக பதிவிட்டீர்கள் உதாரணமாக கொடுத்த மெய்ப்பொருள் நாயனார் பற்றிய பெரிய புராண வரிகள் அருமை! நான் பத்தாம் வகுப்பில் படித்த வரிகள் மீண்டும் நினைவுக்கு வந்தன. எத்தனையோ வேறுபாடுகள் இருப்பினும் அவர் நம் தேசத்தந்தை! இதை யாரும் மறுக்கவோ மாற்றவோ முடியாது. சிறப்பான பகிர்வு. என் டேஷ் போர்டில் இந்தபதிவு வரவில்லை! இன்று முகநூல் மூலம் வந்தேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  24. தங்கள் கட்டுரை மிக உருக்கமாக இருக்கிறது என்றாலும்
    நிலவன் அண்ணா சொல்வதை போல எனக்கும் சில கேள்விகள் இருக்கின்றன ?
    சோஷலிச நாட்டிற்கு தந்தை தன்னை சனாதன இந்து என்பதை என்னாலும் ஏற்கமுடியவில்லை!அப்புறம் "அவர்கள் உண்மைகள்" சொல்வதைபோல் இப்போ தேவை கோட்சேகள்தானோ?

    பதிலளிநீக்கு
  25. M K Gandhi is a controversial historical figure. The more he is researched, the more he is becoming an icon to hate. So, lets just accept what was transferred to us when we were children. Ignorance is bliss.

    பதிலளிநீக்கு
  26. ஒரு தனிமனிதனாக நாட்டின் தலையெழுத்தை மாற்றக் களத்தில் இறங்கிய துணிச்சலுக்கும் முயற்சி தோற்காது என்ற நம்பிக்கையும் தன்னுடைய செயல் அடுத்த ஆயிரம் வருடங்களுக்கான முன்னோடியாக விளங்கும் தொலைநோக்கு.. இவை தான் காந்தியின் கொள்கைகள். சுதந்திர போராட்டத்தில் இறங்க வேண்டிய அவசியமே இல்லாத ஒருவர் இறங்கி தலைமை தாங்கி தொண்டனாகவும் இருந்து.. அண்ணலைப் போல் யார் வருவார்? வாய்ப்பே இல்லை.
    அரசியல் ஆதாயங்களுக்காக அவர் கொள்கைகளைத் திரித்தவர்கள் திரிப்பவர்கள் நிச்சயம் இருப்பார்கள். இருந்து விட்டுப் போகட்டும்.

    பதிலளிநீக்கு
  27. ஒரு தனிமனிதனாகப் பார்க்கையில் பாரதி மீதும் குற்றப் பார்வை விழுகிறது. அதற்காக அவருடைய தேசியக் கொள்கைகளையும் கவிதைத் திறனையும் ஒதுக்க முடியுமா? காந்தியை அடையாளம் காட்டுவது அவருடைய தனிப்பட்ட கொள்கைகள் அல்ல - நாட்டுக்காக தன்னையளிக்கத் துணிந்ததே அவரின் அடையாளம்.

    பதிலளிநீக்கு
  28. காந்தியின் காலத்தையொட்டிய நேருவை எடுத்துக் கொள்வோம்.. நேருவை இன்னும் நம்மால் எப்படிக் கொண்டாட முடிகிறது?

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895