இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது.தீபாவளித் திருவிழா கண்ட மதுரை . உடனேயே இன்னொரு திருவிழாவைக் காண இருக்கிறது. ஆம்!மூன்றாம் ஆண்டு தமிழ் வலைப்பதிவர் திருவிழாவைத்தான் குறிப்பிடுகிறேன். அந்நாளில் (26.10.2014) தமிழ் வலைப் பதிவுகள் எழுதுபவர் மதுரை கீதா நடன கோபால் நாயக் மண்டபத்தில் கூடி மகிழ்ந்து அளவளாவ இருக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக வலைப்பதிவர் சந்திப்பு ஒரு திருவிழாவாக சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இம்முறை கூடல் மாநகர் மதுரையில் நாம் ஒன்றிணைய சிறப்பான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பதிவுலகில் நாம் விரும்பிப் படிக்கும் எழுத்துக்கு சொந்தக்காரர்களையும், நமது படைப்புகளை விரும்பிப் படிப்பவர்களையும் சந்திக்க ஒரு அருமையான வாய்ப்பு.. இதுவரை வருகையை உறுதி செய்யாதாவர்கள் உடனடியாக உறுதி செய்து கொள்ளவும். ஏற்கனவே நூற்றுக்கும் மேற்ப்பட்ட பதிவர்கள் மதுரைக்கு புறப்படத் தயாராக இருக்கிறார்கள்.
வலைச்சரம் சீனா ஐயா, தீதும் நன்றும் பிறர் தர வாரா ரமணி சார் , திண்டுக்கல் தனபாலன், தமிழ்வாசி பிரகாஷ் உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை சிரமேற்கொண்டு செய்து வருகின்றனர். தாமதமாக சென்றதால் கடந்த பதிவர் சந்திப்பின்போது பலபதிவர்களை சந்தித்து உரையாட முடியவில்லை. இம்முறை அனைவருடனும் பேசி கருத்துக்களை பரிமாறிக் கொள்ள ஆவலுடன் உள்ளேன்.
இது போன்ற சந்திப்புகளை நடத்துவது எளிதான செயலல்ல. ஏராளமான உழைப்பும் செலவும் பிடிக்கக் கூடியது. தங்கள் சொந்த வேலைகளை தள்ளி வைத்து விட்டு இதற்காக உழைக்கவேண்டும். ஒரு நல்ல இடத்தில் வசதிகளுடன் அரங்கம் அமைவது மிகக் கடினம். மதுரை வலைப்பதிவர் திருவிழா நடக்கும் அரங்கம் பார்ப்பதற்கு அருமையாக இருக்கிறது. அதுவும் நகரின் முக்கியப் பகுதியில் அமைந்துள்ளது சிறப்பு. இதைமுன்னின்று நடத்துபவர்களுக்கு எந்தவிதமான லாபமும் கிடைக்கப் போவதில்லை. ஆனாலும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். முக்கிய நோக்கம் அனைத்துப் பதிவர்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதே. ஒவ்வொரு பதிவருடைய கருத்துக்களும் கொள்கைகளும் மாறுபடலாம். பதிவுலகம் தங்கள் கருத்தை சுதந்திரமாகப் பதிவு செய்ய வாய்ப்பளிக்கிறது.விவாதங்களும் கருத்து மோதல்களும் நாள் தோறும் உண்டு. ஆனால் அனைவரும் ஒன்று கூடி மகிழ்வதற்கு அவை தடையாக இருக்கப் போவதில்லை என்பதை உணர்த்தும் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் ஐயமில்லை .
தற்போது பதிவுலகம் சற்று டல்லடித்தது வருவதாக கருத்து நிலவுகிறது. பதிவு எழுத வந்த பலர் முகநூல் , ட்விட்டர் என்று சென்று விட்டார்கள் என்று கூறப்ப் படுகிறது. ஆனால் அது உண்மையல்ல எனபதே என் கருத்து.
முகநூல் டுவிட்டர் எல்லாம் பாஸ்ட் புட் வகையை சார்ந்தது. பதிவுலகம் ஆற அமர் சாப்பிடும் புல் மீல்ஸ் வகையை சேர்ந்தது. ஒரு நாளைக்கு ஒருமுறையாவது முழு சாப்பாடு தேவை அல்லவா ? ப்ளாக் எழுதுபவர்கள் பலர் முகநூலையும் திறம்படப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் முகநூல் பயன்படுத்துபவர்களில் பலர் ப்ளாக் பற்றி அறிந்திருக்காத நிலையும் இருக்கிறது. வலைப்பூ என்று ஒன்று இருப்பதையே அறியாமல் முகநூலில் படைப்புகளை வெளியிடுகிறார்கள். அது அவர்களது சொந்தப் படைப்பா பகிர்வு செய்யப்பட்டதா என்பதை அறிய முடிவதில்லை. வலப்பூவின் சிறப்பு அம்சங்களை உணர வைக்கவும் முக நூல் பதிவர்களை வலைப்பக்கம் திருப்பவும் இந்த திருவிழா உதவக் கூடும்.
வலைப்பூ தொடங்குபவர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.கடந்த மூன்று மாதங்களில் 100 க்கும் மேற்பட்டபுதிய வலைப்பூக்கள் தமிழ் மண இணைப்புக்காகக் காத்துக் கிடக்கின்றன. பொதுவாக சினிமா பற்றி எழுதப்படும் பதிவுகளுக்கு வரவேற்பு அதிகம் இருந்தாலும் சமூகப் பிரச்சனைகள், இலக்கியப் பதிவுகள்,நகைச்சுவைப் பதிவுகள்,அரசியல் பதிவுகள்,சமையல் குறிப்புகள், பயணப் பதிவுகள் தொழில்நுட்பப் பதிவுகள் போன்றவற்றிற்கு வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.இப்படி பலகைப் பட்ட பதிவுகளைப் படைக்கும் பதிவர்களை சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது இவ்விழா
பலர் அற்புதமான பதிவுகள் படைக்கிறார்கள் ஆனால் அவை பலரின் கண்களில் படுவதில்லை. படைப்புகளின் நோக்கம் பிறரை சென்றடைய வேண்டும் என்பதே. ஆத்ம திருப்திக்காக எழுதுகிறேன் என்று சொல்லிக்கொண்டாலும் பெரும்பாலோரின் உண்மையான விருப்பம் நிறையப் பேர் தங்கள் படைப்புகளைப் படிக்க வேண்டும் என்பதே. அதற்கு அடிப்படை வலை நுட்ப அறிவை வளர்த்துக் கொள்ளுதல் அவசியம் அவற்றிற்கு இது போன்ற பதிவர் திருவிழாக்கள் நிச்சயம் உதவும்.
புதியவர்களை வலைப் பதிவு எழுத ஊக்குவிக்கவும் நல்ல படைப்பாளிகளை அடையாளம் கண்டு அறிமுகப் படுத்திக் கொள்ளவும் இந்த மாபெரும் வலைபதிவர் திருவிழாவை பயன்படுத்திக் கொள்ளலாம்.
தமிழ் வலைப் பதிவர்கள் ஒரு பதிவு செய்யப் பட்ட அமைப்பாக செயல் படவேண்டும் என்று மூத்த பதிவர் புலவர் இராமனுஜம் ஐயா அவர்கள் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தி வருகிறார்கள். அதற்கான முயற்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பின்னாளில் இவ்வமைப்பு பதிவர்களுக்கு உதவியாக அமைய வாய்ப்பு உண்டு.
தமிழ்ப் பதிவுலகிற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் இச் சந்திப்பு அமையும் என்பதில் ஐயமில்லை.
மதுர! சும்மா அதிரப் போகுதில்ல!
கவுன்ட் டவுன் கடிகாரம்
மேலதிக விவரங்களுக்கு தொடர்பு கொள்க
பதிவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள் (சனிக்கிழமை காலை முதல்):
பகவான்ஜி: 8903694875
மனசாலி: 9150023966
பெண் பதிவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள் (சனிக்கிழமை காலை முதல்):
திண்டுக்கல் தனபாலன்: 9043930051
பால கணேஷ்: 9003036166
நிகழ்வு
பதிலளிநீக்குஇனிதே
இடம்பெற
எனது
வாழ்த்துகள்!
வலைப் பூக்களைப் பற்றியும், வலைப் பதிவர்களின் இன்றைய போக்கு குறித்தும் தெளிவாகச் சொல்லி இருந்தீர்கள். FACE BOOK இல் ஒருவருடைய தனித்திறமையைக் காட்ட இயலாது என்பதை இளைஞர்கள் உணர வேண்டும்.
பதிலளிநீக்குமதுரையில் சந்திப்போம்! வாழ்த்துக்கள்!
த.ம.1
மதுரையில் சந்திப்போம் விழா வெற்றி பெற வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குமதுரை சந்திப்பு சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துகளும்.....
பதிலளிநீக்குசென்ற சந்திப்பில் கலந்து கொண்டது இன்னமும் நினைவில் பசுமையாக.....
.ம்ம்... அதிரட்டும் மதுரை...!
பதிலளிநீக்குகாத்திருக்கிறோம்...
பதிலளிநீக்குவிழாவின் பின்னாலிருக்கும் கண்ணுக்குத் தெரியாத அத்தனை உழைப்புக்கும் நன்றி சொல்லி விழா சிறக்க வாழ்த்துகிறேன்.
பதிலளிநீக்குபதிவுலகம் டல்லாகிப் போனது உண்மையென்றே நினைக்கிறேன். அதற்குக் காரணம் பதிவர்களே அன்றி முகப்புத்தகமோ ட்விட்டரோ (இதை ஏன் தமிழ்ப்படுத்தவில்லை?) காரணமில்லை என்று நினைக்கிறேன்.
விழா ஏற்பாடுகளை மிகவும் கவனத்துடனும், உழைப்பாலும் நேர்த்தியாக கவனிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் எங்கல் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்! கலந்து கொள்ள முடியாமல் போயிற்றே என்று மனம் மிகவும் வருத்தம்.
பதிலளிநீக்குதங்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்!
'தமிழ் வலைப் பதிவர்கள் ஒரு பதிவு செய்யப் பட்ட அமைப்பாக செயல் படவேண்டும் என்று மூத்த பதிவர் புலவர் இராமனுஜம் ஐயா அவர்கள் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்" ஆமாம் அய்யா நானும் இதை சென்னை விழாவிலிருந்து சொல்லி வருகிறேன். அதோடு, முகநூலில் வாட்ஸ்அப்பில் கிடக்கும் இளைஞர்களைக் குற்றம் சொல்லிக்கொண்டிராமல் அவர்களை வலைப்பக்கம் இழுக்க என்ன செய்யவேண்டும் என்று விவாதிக்க வேண்டும். மண்டல மாவட்ட அளவில் -இளைஞர், பெண்களை- வரவழைத்து பயிற்சிப் பட்டறை நடத்தத் திடடமிடவேண்டும். பேசுவோம். சந்திப்போம் அய்யா.
பதிலளிநீக்குமதுரை வலைப்பதிவர் விழாவில்
பதிலளிநீக்குதங்களையும் நண்பர்களையும் பார்த்ததில் மகிழ்ச்சி. வலையுலக நட்பைத் தொடர்வோம். வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சி.
பதிலளிநீக்குவாழ்த்துகள்.
459F31B120
பதிலளிநீக்குsms onay
Instagram Takipçi Kazan
Para ile Takipçi
Takipçi Fiyatları
Sahte Takipçi
4D1A3C030D
பதிலளிநீக்குTakipçi Satın Al
Footer Link Satın Al
Erasmus
Lords Mobile Promosyon Kodu
Avast Etkinleştirme Kodu
B87C8E3393
பதிலளிநீக்குgüvenilir takipçi
swivel accent chair set of 2 on sale