என்னை கவனிப்பவர்கள்

வெள்ளி, 30 ஜனவரி, 2015

கோட்சேயின் இறுதி நாட்கள்.


இந்தப் பதிவை எழுத தொடங்கும்போது நேரம் மாலை 5.30  மணி  67 ஆண்டுகளுக்கு முன் இதே நேரத்தில் டில்லி பிர்லா மாளிகையில் கோட்சே என்ற மத வெறியனின் துப்பாக்கி  குண்டுகள் மகாத்மாவின் மார்பை துளைத்தன. அகிம்சையின் மனித உருவம் சரிந்தது. உலகத்துக்கு அமைதி வழியை கற்றுத் தந்த அண்ணலின் சகாப்தம் நிறைவுற்றது. குலுங்கியது இந்தியா. கலங்கிக் கண்ணீர் விட்டது உலகம்.

   ஆனால் கலங்காமல் நின்றான் கோட்சே. காந்தியை சுட்டுமுடித்ததும் தப்பிக்க முயலவில்லை. காந்தியைக் கொன்றதில் எனக்கு கொஞ்சமும் குற்ற உணர்வில்லை என்று கூசாமல் நீதி மன்றத்தில் கூறினான். மேலும் இந்து முஸ்லீம் ஒற்றுமையைக் காரணம் காட்டி இந்துக்களுக்கு துரோகம் செய்தவர் காந்தி. பிரிவினையின் போது இந்துக்களுக்கு ஏற்பட்ட துன்பங்களை தீர்க்க சிறிதும் முயலவில்லை மாறாக முஸ்லீம்களுக்கு எந்த துன்பமும் நேரக் கூடாது என்று பிரச்சாரம் செய்தார் காந்தி ...  என்றல்லாம் காந்தியின் மீது குற்றசாட்டுகளை சுமத்தி தன் கொடுஞ் செய்கையை நியாயப் படுத்தினான்.
    தீவிர இந்துக்கள் காந்தியின் கொள்கைகளை வெறுத்தனர். என்னதான் முஸ்லீம்களை ஆதரித்தாலும் அவர்களின் முழுமையான ஆதரவும் காந்திக்கு இருந்ததாகத் தெரியவில்லை 
   சிறப்பு நீதி மன்றம் கோட்சேவுக்கும் நாராயண் ஆப்தேவுக்கும் தூக்கு தண்டனை விதித்தது.மேல் முறையீட்டிலும் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது .
சிறையில்  இருந்த கோட்சேவுக்கும் காந்தியின் மகனான ராம்தாஸ் காந்திக்கும் கடித போக்குவரத்து இருந்ததாக கூறப்படுகிறது. மகாத்மாவின் கொள்கைகளை வலியுறுத்தி  ராமதாஸ் கோட்சேவுக்கு கடிதங்கள் எழுதியுள்ளார். கோட்சேவும் தன தன வாதங்கள்  மூலம் காந்தியின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தார்.
எப்படி இருப்பினும் கோட்சே மற்றும் ஆப்தேயின் தண்டனையை குறைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டதாக தெரிகிறது. அவர் தனது கோரிக்கையில் காந்தியடிகள் ஒரு போதும் மரண தண்டனையை விரும்பியதில்லை.இருவரையும் தூக்கிலிடுவது அவரது கொள்களைகளுக்கு எதிரானது அவரது கொள்கையை இழிவு படுத்தக் கூடியது. மரண தண்டணையில் இருந்து இவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்  என்று வாதாடினார்.
அவர் படேலுக்கு எழுதிய கடித்ததில் "கோட்சேவையும் அவனது கூட்டாளிகளையும் சீர்திருத்த சிறையில் வைத்து திருத்த வேண்டும். தாங்கள் செய்தது மிகத் தவறு என்று உணர செய்ய வேண்டும் ஆர்.எஸ்.எஸ். முறையை பின்பற்றுவதன் மூலம் இந்தியாவையும் இந்து மதத்தையும் காப்பாற்றிவிட முடியாது  என்பதை அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் . கோட்சேவையும் விநோபாபாவேயும் சந்திக்க செய்து மனமாற்றம் ஏற்படுமாறு செய்யவேண்டும். இதனை ஏற்க இயலாவிடில் கோட்சேயை சிறையில் சென்று பார்க்க அனுமதி தரவேண்டும் அவனது செயல் எவ்வளவு கொடுமையானது என்பதை அவனுக்கு எடுத்துக் கூறி அவரை நல்லவராக மாற்ற எனக்கு ஒரு சந்தர்ப்பம் தரவேண்டும் " என்று குறிப்பிட்டிருந்தார்  கோட்சேவுக்கும் இதன் நகலை அனுப்பி இருந்தார். கோட்சே இது குறித்து 03.6.1949 அன்று ராமதாசுக்கு பதில் எழுதி இருந்தான் அதில்
"என்னால் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கு எவ்வளவு மனத் துன்பம் ஏற்பட்டு இருக்கும் என்பதை என்னால் உணரமுடிகிறது. உங்களுக்கு ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை.எங்களுக்கு ஏற்பட்ட துன்பத்திற்காக வருந்துகிறேன். ஆனால் மாகாத்மா காந்தியை சுட்டதற்காக நான் எள்ளளவும் வருத்தப் படவில்லை.நாட்டின்  நலனுக்காக நான் செய்தது சரியானது. தூக்கு தண்டனையை மாற்றி குறைந்த தண்டனை விதிப்பதன் மூலம் என் மனதை மாற்றிவிட முடியாது" என்று எழுதி இருந்தான்.
கோட்சேவை சந்திக்க ராமதாஸ் காந்தி அனுமதிக்கப் படவில்லை.அவரது கோரிக்கையும் பரிசீலிக்கப் படவில்லை 
கோட்சேவும் ஆப்தேவும் அமைதியான முறையில் சிறை வாழ்க்கையை கழித்தனர். கோட்சே புத்தகங்கள் படித்தான்.கடைசி நாட்களில் சிறைசகாக்களிடம் தன் செயலுக்கு வருந்துவதாகக் கூறினான் என்று சில கைதிகள் தெரிவித்தனராம்.ஆனால் கோட்சேயின் மன உறுதியை அறிந்தவர்களால் இதனை நம்ப முடியவில்லையாம் .ஆப்தே சிறையில் இந்திய தத்துவம் குறித்த  பத்தகம் ஒன்றை எழுதிக் கொண்டிருந்தான். அதற்கு பகவத் கீதை உட்பட பல்வேறு  நூல்களை படித்து கொண்டிருந்தான் .
   தூக்கு தண்டனை நாளும் நெருங்கியது. மரணம்  குறித்து அச்சமோ கவலையோ கிடையாது என்று கூறி வந்த கோட்சேவுக்கு தூக்கிலிடப்போகின்ற நாளன்று (15.11.1949) முகத்தில் பயம் அப்பட்டமாகத் தெரிந்தது. ஆனால் குடும்பம் குழந்தைகள் என்று எந்த வழியிலாவது வாழ்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்காதா என்று முன்பு ஏங்கிய ஆப்தே இப்போது முகத்தில் எந்தவித அச்சமும் இல்லாதவனாக காணப்பட்டான். 

      தூக்கு மேடை இருந்த இடம் நோக்கி கோட்சே முதலில் நடந்து சென்றான் அவனது நடையில் தடுமாற்றம் இருந்தது. தன் தடுமாற்றத்தை மறைக்க கோஷம் எழுப்பினான் அவனது குரலில் கம்பீரம் இல்லை பின்னால் தொடர்ந்த நாராயண் ஆப்தேவுக்கோ எந்தவித தடுமாற்றமோ பயமோ கடைசி வரை இல்லை. ஒரே மேடையில் இருவரையும் தூக்கிலிட ஏற்பாடு செய்யப்படிருந்தது . இருவரும் காபி அருந்தினர். முகத்தில் துணி மூடப்பட்டு  கைகள் கட்டப்பட்ட நிலையில் தூக்கு மேடை முன் இருவரையும் நிறுத்தினர்.குறிப்பிட்ட நேரம் வந்ததும் மேடை சட்டென்று  இழுக்கப்பட்டது . கயிற்றில் தொங்கினர் இருவரும்.ஒரே துடிப்பில் ஆப்தேயின் உயிர் பிரிந்ததாகத் தோன்றியதாம் ஆனால் கோட்சேவின்  உடலோ 15 நிமிடங்களுக்கு துடித்து பின்பு அடங்கியது .இருவரின் உயிர் பிரிந்தது உறுதி செய்யப்பட்டது. காந்தியின் மரணம் உலகை உலுக்கியது 

    காந்தியைக் கொன்றதில் அவர்களுக்கு கிடைத்து என்ன? அவர்களது நோக்கம் நிறைவேறி  விட்டது.  .ஆனால் காந்தியின் மீதான வன்மம் அவர் இறந்து பல ஆண்டுகளுக்குப் பின்னும் கோட்சே குடும்பத்தார்க்கு எள்ளளவும் குறையவில்லை என்று கோட்சேயின் சகோதரர் கோபால் கோட்சேவை சந்தித்த பின்  தெரிவித்திருக்கிறார் பத்திரிகையாளர் டொமினிக் என்பவர்.
     காந்தி நினைத்திருந்தால் அவரது மரணத்தை தவிர்த்திருக்க முடியும் என்றுதான் தோன்றுகிறது. காந்தி சுடப்பட சில நாட்களுக்கு முன்னதாக பிர்லா மாளிகைக்கருகில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.  அதற்குப் பின் பிர்லா மாளிகையில் உள்ளே நுழைபவர்களை சோதனை செய்தே அனுப்ப வேண்டும் என்று போலீசார் முடிவு செய்தனர். காந்தியோ பிரார்த்தனைக்காக வருபவர்களை சோதனை செய்ய அனுமதிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக மறுத்தார். அது கோட்சே உள்ளே துப்பாக்கியுடன் நுழைவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து விட்டது .

பெர்னாட்ஷா காந்தியின் இறப்பின்போது  விடுத்த இரங்கல் செய்தி  "நல்லவராக இருப்பது அபாயகரமானது  என்று காந்தியின் மரணம் நமக்கு கூறுகிறது.காந்தியைப் பற்றி நினைத்தால் இமயமலைதான்  நினைவுக்கு வருகிறது  என்றார் . உண்மைதான் போலும் 

கோட்சேவுக்கு கோவில் கட்டப் போகிறர்கள் என்ற செய்தியை பத்திரிகைகளில் பார்த்தேன். எல்லோரையும் போல நானும் அதிர்ந்துதான் போனேன். 
பக்தர்களே! குஷ்பூக்களுக்குக் கூட கோவில் கட்டிக் கொள்ளுங்கள் . பாதகமில்லை. தயவு செய்து கோட்சேக்களுக்கு வேண்டாம் 


*********************************************************************************

25 கருத்துகள்:

  1. தெரியாத சில விடயங்கள் அறியத்தந்தமைக்கு நன்றி நண்பரே...
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
  2. கதை போல விவரித்திருக்கிறீர்கள். நல்ல பகிர்வு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முழுக்க ஒத்துக் கொள்கிறேன், கதை போல் அருமையான விவரிப்பு....

      நீக்கு
  3. தெரியாத பல செய்திகளை இந்தப் பதிவு மூலமாக அறிந்துகொண்டேன். இக்காலத்திற்குத் தேவையான பதிவு.

    பதிலளிநீக்கு
  4. தேசபக்தியோடு எழுதப்பட்ட கட்டுரை. அதற்கு முதலில் நன்றி. அரசியல் எதிர்ப்பாளர்களின் கவனத்தை திசை திருப்பவே , கோட்சேவுக்கு சிலை என்ற கோஷம் என்று நினைக்கிறேன். சிலையை வைத்துவிட்டு, சிலைக்கு ஒரு காவல்காரரையும் 24 மணி நேரமும், நிறுத்திக் கொள்ள வேண்டியதுதான்.
    த.ம.4

    பதிலளிநீக்கு
  5. காந்தியை சுட்டு கொன்றது தப்பில்லை .. இன்னும் கொஞ்சம் நாள் உயிரோடு இருந்திருந்தால் இந்தியாவை பாகிஸ்தானுக்கு அடகு வைத்திருப்பார் .... இந்திய இன்னொமொரு ஐ ஸ் எ ஆகிருக்கும் ..

    பதிலளிநீக்கு
  6. நீங்களும் முதல்வர் ஆகலாம் என்றொரு புத்தகம் நக்கீரன் பதிப்பகம் வெளியிட்டு உள்ளார்கள். ரா.கி. ரங்கராஜன் எழுதிய மொழி பெயர்ப்பு கட்டுரை வடிவம் அது. வாய்ப்பு கிடைத்தால் அவசியம் பொறுமையாக படித்துப் பாருங்க. காரணம் அரசியல் என்பது அவ்வப்போது ஏதோ ஒன்றை மக்களின் மனம் மாற்றத்திற்காக, குறிப்பிட்ட பிரச்சனைகளை திசை திருப்ப பயன்படுத்த ஒவ்வொரு தலைவர்களும் ஒவ்வொரு விதமான யுக்தியை கையாண்டு இருப்பதை அவர் தெளிவாக எழுதியிருப்பார். மோடி பிரதமராக வந்தது முதல் இன்று அவர் உடைகள் குறித்து வரும் செய்திகள் வரைக்கும்
    இது தான். இதுவே தான். அவர் உடைகள் குறித்து கவலைப்பட்ட ஊடகங்கள், வலைதளங்கள் எதுவும் அமெரிக்க இந்தியா அணு ஆயுத ஒப்பந்தங்கள் அதற்குப் பின்னால் உள்ள அவலங்களை மறந்து விட்டார்கள். அதைப் போலத்தான் இந்த கோட்சே விவகாரமும்.

    வேர்ட் ப்ரஸ் எழுதத் தொடங்கிய போது இந்தியா சுதந்திரம் பெற்று பாகிஸ்தான் பிரிந்த போது நிகழ்ந்த அவலங்கள், இறுதியாக கோட்சே எப்படிப்பட்ட சூழ்நிலையில் காந்தியைக் கொன்றார் போன்றவற்றை அதிகமாக படித்து ஒரு தொடர் போல எழுதினேன். கோட்சே காந்தியை கொன்றார் என்று ஒற்றை வார்த்தையில் எழுதி விடுகின்றோம். ஆனால் அன்றைய சூழ்நிலையில் காந்தியை அதிகாரவர்க்கத்தில் இருந்த அத்தனை பேர்களும் வெறுத்தார்கள் என்பது தான் உண்மை. பாதுகாப்பு கொடுக்க வந்த அந்த அத்தனை அதிகாரிகளையும் காந்தியே வேண்டாம் என்று அனுப்பி வைத்தார். இது போன்ற பல ஆச்சரியமான கவலைதரக்கூடிய செய்திகள். நான் வேர்ட்ப்ரஸ் ல் எழுதியவற்றை தொகுப்பாக மாற்ற முடியாத வருத்தம் இன்று வரைக்கும் எனக்கு உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம் படிக்கிறேன் .உங்களுடைய அந்த வோர்ட் பிரஸ் தளம் இப்போது செயல் படுகிறதா?

      நீக்கு
    2. ஜோதிஜி ஐயா அவர்களுக்கு,
      வேர்ட் ப்ரஸ்ல் உள்ளவற்றை எவரையேனும் பயன்படுத்தி மீண்டும் தட்டச்சு செய்து மீன் நூலாக வழங்க வேண்டுகின்றேன்

      நீக்கு
  7. http://deviyar-illam.blogspot.com/2009_09_01_archive.html


    https://texlords.wordpress.com/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜோதிஜி!அத்தனையும் இப்போது படித்தேன். அற்புதமாக பதிவு செய்திருக்கிறீர்கள்

      நீக்கு
  8. மதம் கடந்து பாடுபட்டவர் மேலானவரா ,மதத்திற்காக பாடு பட்டவர் மேலானவரா என்று கேட்டால் நானும் உங்கள் பக்கம்தான் ஜி !
    த ம 6

    பதிலளிநீக்கு
  9. அந்த 15 நிமிடங்களில் "செய்தது தவறு" என்று உணர்ந்திருப்பாரோ...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அதுதான் உண்மை. ஹேராம் படம் அந்த கருத்தின் அடிப்படையில் உருவானதுதான்.

      நீக்கு
  10. வணக்கம்
    அண்ணா.
    அரிய பொக்கிஷம் என்றுதான் சொல்ல வேண்டும் தகவல் திரட்டுக்கு எனது பாராட்டுக்கள் அண்ணா. பகிர்வுக்கு நன்றி த.ம9
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  11. கோட்சேவுக்கு கோவிலா?? பி.ஜே.பி.அரசு நம் விழுமியங்களை, சுதந்திரத்தை, தேச நலனை எவ்வளவு மதிக்கிறது என்பதற்கு இது ஒன்றேபோது. பி. ஜே.பி யை எந்த வலைப்பூவில் விமர்சித்தாலும் அங்கு வந்து வக்காலத்து வாங்கும் பேரான்மாக்கள் எங்கே சென்றனவோ!!!

    பதிலளிநீக்கு
  12. நான் பகவத் கீதை பற்றி எழுத முற்படும்போது. என் நண்பன் ஒருவன் எது செய்தாலும் அதை கீதை மூலம் நியாயப் படுத்தி விடலாம் என்பான் என்று எழுதி இருந்தேன்.இப்போது ஆ எஸ்.எஸ் காரர்களும் அதையே செய்கின்றனர். சரி எது தவறு எது என்பது செய்கிறவர்களைப் பொறுத்தது. காந்திஜியும் மதத்தைப் பின்பற்றினார். கோட்சேக்களும் மதத்தைப்பின் பற்றுகின்றனர். மதம் மனிதனுக்கு மதம் பிடிக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  13. அய்யா வணக்கம்.
    கோட்ஸேயின் மரண வாக்குமூலம், வெளிடத் தடை விதிக்கப்பட்டிருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் ஆர் சுப்ராயலு மொழிபெயர்ப்பில் , மருதம் பதிப்பகத்தாரால் தமிழில் புத்தகமாக வெளிவந்து உள்ளது.
    எல்லா வன்முறைக்கும் தீவிர வாதத்திற்குமான நியாயங்களைக் கொண்டு கோட்ஸே யின் வாதத்திறமை நீதிமன்றத்தில் எவ்வாறு முன்வைக்கப்பட்டது என்பதை அறிய உதவும் இரசமான புத்தகம்.
    மெதுவாகக் கரைத்து நம்மை உள்ளிழுக்கும் அபாயம் உள்ள எழுத்துகளில், மொழிபெயர்ப்பில் வெளிவந்ததைப் படிக்கும் யாவர்க்கும் ஒருகணம் கோட்ஸே செய்தது சரிதானே என்று எண்ணத் தோன்றிவிடும்.
    தீவிர வாதச் சித்தாந்தங்களின் வித்துகள் இப்படித்தான் வேர்கொள்கின்றன என்பதற்கு அப்புத்தகம் நல்ல சான்று.
    உங்கள் பதிவும் வேண்டுகோளும், வாசிப்பில் நான் கண்ட இப்பதிவிற்கான முரணொன்றை நினைவுறுத்தி விட்டன.
    தங்களுக்கு நன்றி.
    த ம 11

    பதிலளிநீக்கு
  14. மகாத்மா காந்தியின் நினைவை
    மீட்டுப் பார்க்கையிலேயே
    கோட்சேயின் துரோகச் செயலை
    எண்ணிப்பார்க்க வேண்டி இருக்கிறதே!
    தொடருங்கள்

    மதுரையில் யாழ்பாவாணனைச் சந்திக்க விரும்புவோருக்காக
    http://eluththugal.blogspot.com/2015/01/blog-post_31.html

    பதிலளிநீக்கு
  15. நல்ல பகிர்வு. ஏன் எதற்கு என்ற கேள்விகளே இல்லை. யாரையும் மாய்க்க, யாருக்கும் உரிமை இல்லை!

    கோட்சே தனது பக்கத்தினைச் சொல்லும் ஒரு புத்தகம் உண்டு. ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் இந்தப் புத்தகம் வந்தது. பின்னர் அது தடை செய்யப்பட்டது. ஆனாலும் புத்தகம் கிடைக்கிறது! முடிந்தால் படித்துப் பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  16. அதிரத்தான் செய்கிறது இன்றளவும் இச்செய்திகேட்டு,,
    காலங்கள் மாறலாம் செய்யப்பட்ட கொடுங்கோல்கள்
    காலகல்வெட்டில் தடித்துகொண்டேயிருக்கிறது...துரோகத்தின் வெளிப்பாடாய்...

    பதிலளிநீக்கு
  17. காந்தி சுடப்பட்தில் கோட்சேவுக்கு என்ன லாபம் அப்படி ஒரு லாப நோக்கத்திற்காக சுடுவதாய் இருந்தால் மறைந்து நின்று சுட்டுவிட்டு தப்பிக்க முயல்வார்கள்.ஆனால் கோட்சே அப்படி செய்யவில்லையே
    தூக்கு மேடை ஏறும் வறை காந்தியை சுட்டதிற்கு எந்த வருத்தமும் தெறிவிக்கவில்லை சுட்டது நாட்டின் நன்மைக்கே என கூறிஉள்ளதை பார்க்கும்போது காந்தி எதோதவறு செய்து இறுக்கிறார் என தெரிய வருகிறது

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895