என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Sunday, August 19, 2012

அதிர்ச்சி செய்தி!


   ஒரு சில தினங்களுக்கு முன்பு தமிழ்மண நட்சத்திரப் பதிவர் ஆக விருப்பம் கேட்டு ஓர் மின்னஞ்சல் கிடைக்க  பெற்றேன். கரும்பு தின்னக் கூலியா? சம்மதம்  தெரிவித்து பதில் அனுப்பினேன்.

   நாளை முதல் 20.08.2012 முதல் 26.08.2012 வரை ஒரு வாரம் தமிழ்மணம்
நட்சத்திரப் பதிவராக பதிவுகள் இட இருக்கிறேன்.(இப்ப தெரியுதா என்ன அதிர்ச்சின்னு ஹிஹிஹி )
   திரட்டிகளில் தமிழ்மணத்திற்கே முதலிடம் என்பது பதிவுலகம் அறிந்த உண்மை.தமிழ் மணத்தின் மூலம் கிடைத்த  அங்கீகாரம்  உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.எனது பதிவுகள் இன்னும் அதிக பேரைச் சென்றடையும் என்று நம்புகிறேன்.

  முன்னதாக திரு கோவி கண்ணன் அவர்கள் என்னை நட்சத்திரப் பதிவராக பரிந்துரைக்க சம்மதம் கேட்டிருதார். அவர் சொன்ன  தேதியில் நட்சத்திரப் பதிவராக இருக்க இயலாத சூழ்நிலை இருந்தது. எனது சூழலை தெரிவித்தேன்.அதை மனமுவந்து ஏற்றுக்கொண்டு 20.08.2012 முதல் ஒரு வாரம்  நடச்சத்திரப் பதிவராக இருக்க வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்தார்.
அவருக்கு  என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

   23.10.2011 அன்றுதான் தமிழ்மணத்தில் இணைந்தேன். ஓராண்டிற்குள் கிடைத்துள்ள இந்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக்  கருதுகிறேன்.பரிந்துரைக்குத் தகுதியானவனாக என்னை மேம்படுத்திக் கொள்வேன்.

  தமிழ் மணத்தின்  தரவரிசையில் 2000 த்திற்கும் மேல் இருந்து மெதுவாக முன்னேறி இன்று 48 இல்  உள்ளேன். அலெக்சா தர வரிசை முன்னேற்றத்திற்கும் தமிழ்மணமே காரணம்.பலருடைய நல்ல பதிவுகளை நமக்கு அறிமுகப்படுத்தியும் நமது பதிவுகளை பிறருக்கும் அறிமுகப்படுத்தும்  அரிய  செயலை தமிழ்மணம் செய்து வருகிறது.

    இந்த வாய்ப்பை நல்லமுறையில் பயன்படுத்தி.தினமும் ஒரு பதிவை கவிதை நகைச்சுவை இலக்கியம் என்று பல்சுவையும் கலந்து கொடுக்க விரும்புகிறேன். இவற்றைப் படித்து தங்கள் மேலான கருத்துக்களை  தெரிவித்து என்னை மேம்படுத்திக்கொள்ள உதவும்படி கேட்டுக் கொள்கிறேன்.

   தொடர்ந்து தமிழ் மணத்தின் முகப்பு பக்கத்தில் நட்சத்திரப் பதிவாக பதிவுகள் தெரியச் செய்வதற்கான  வாய்ப்பமைத்துக் கொடுத்த தமிழ்மணத்திற்கு  என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த வாரங்களில் ஜொலித்த 10 நட்சத்திரப் பதிவர்கள் 

 1. .அறிவன்#11802717200764379909
 2.  Prabu Krishna
 3.  பக்றுளி ஆறு
 4. DrPKandaswamyPhD 
 5. Ramani 
 6. பழமைபேசி 
 7. தேனம்மை லெக்ஷ்மணன் 
 8. சசிகுமார் 
 9. Federation of Tamil Sangams of North America (FeTNA)
 10. BHARATHIRAJA

 இன்னும் அனைத்து  நட்சத்திரப் பதிவர்களை அறிந்துகொள்ள கீழே க்ளிக் செய்யவும் 

நாளை சந்திப்போம்!

36 comments:

 1. வலைப்பதிவர்கள் சங்கமம் சென்னையில் நடைபெறும்
  சமயத்தில் தாங்க்கள் தமிழ்மண நட்சத்திரப் பதிவராகி
  இருப்பது கூட கூடுதல் சிறப்புத்தான்.
  ஒருவாரம் ஜமாயுங்கள்.

  ReplyDelete
 2. நவீன இலக்கியங்களாகட்டும், இணையமாகட்டும் நகைச்சுவயாக எழுத ஆட்களே இல்லை என்று சொல்லலாம்.

  பலதரப்பட்ட விசயங்களையும் நகைச் சுவை ததும்பச் சொல்லும் திறமை உங்களுக்கு இருக்கிறது.உங்களுடைய பதிவுகளில் பலவற்றைப் படித்துவிட்டுத்தான் சொல்கிறேன்.

  உங்கள் தகுதி உணர்ந்து வாய்ப்பளித்த தமிழ் மணமும், வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த கோவி.கண்ணனும் பாராட்டுக்குரியவர்கள்.
  ‘நட்சத்திரப் பதிவர்’ வாய்ப்பைப் பயன்படுத்தித் தகுதையை வளர்த்துக் கொள்ளவும் பாராட்டுகள் பெறவும் என்னுடைய வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. //தகுதையை//

  ‘தகுதியை’என, திருத்திக் கொள்ள வேண்டுகிறேன்.

  ReplyDelete
 4. முற்கூட்டிய வாழ்த்துக்கள் சார் மேலும் பல பயனுள்ள பதிவுகளை பகிர்வீர்கள் என நம்பிக்கை கொள்கிறோம்

  ReplyDelete
 5. தமிழ்மண நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. *****************நட்சத்திரப் பதிவர் ( STAR BLOGGER )**************
  தமிழ் மணத்தில் நட்சத்திரப் பதிவராக மின்னப் போகும் டி.என்.முரளிதரன்
  அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் சார்! சிறப்பான பதிவுகளை அள்ளித்தரும் நீங்கள் இதிலும் அசத்த வாழ்த்துக்கள்!

  இன்று என் தளத்தில்
  திருஷ்டிகளும் பரிகாரங்களும் 1
  http://thalirssb.blogspot.in/2012/08/1.html

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள் அசத்துங்க. இது அதிர்ச்சி செய்தியில்லை மகிழ்ச்சி செய்தி (ஆனால் தலைப்பால் பதிவு ஹிட் ஆகிடுச்சு )

  ReplyDelete
 11. Ramani said...
  வலைப்பதிவர்கள் சங்கமம் சென்னையில் நடைபெறும்
  சமயத்தில் தாங்க்கள் தமிழ்மண நட்சத்திரப் பதிவராகி
  இருப்பது கூட கூடுதல் சிறப்புத்தான்.
  ஒருவாரம் ஜமாயுங்கள்.
  தங்களின் அன்புக்கும் ஆசிகளுக்கும் மிக்க நன்றி
  நன்றி சார்!

  ReplyDelete
 12. //கோகுல் said...
  வாழ்த்துகள்.//
  நன்றி கோகுல்!

  ReplyDelete
 13. //முனைவர் பரமசிவம் said...
  நவீன இலக்கியங்களாகட்டும், இணையமாகட்டும் நகைச்சுவயாக எழுத ஆட்களே இல்லை என்று சொல்லலாம்.
  பலதரப்பட்ட விசயங்களையும் நகைச் சுவை ததும்பச் சொல்லும் திறமை உங்களுக்கு இருக்கிறது.உங்களுடைய பதிவுகளில் பலவற்றைப் படித்துவிட்டுத்தான் சொல்கிறேன்.//
  தங்களுடைய வார்த்தைகள் உற்சாகமூட்டுகின்றன.மிக்க நன்றி அய்யா!

  ReplyDelete
 14. //நண்டு @நொரண்டு -ஈரோடு said...
  வாழ்த்துக்கள் நண்பரே.//
  நன்றி! பதிவர் திருவிழாவில் சந்திப்போம்.

  ReplyDelete
 15. //s suresh said...
  வாழ்த்துக்கள் சார்! சிறப்பான பதிவுகளை அள்ளித்தரும் நீங்கள் இதிலும் அசத்த வாழ்த்துக்கள்!
  இன்று என் தளத்தில்
  திருஷ்டிகளும் பரிகாரங்களும் 1//
  நன்றி சுரேஷ் சார்!

  ReplyDelete
 16. //சிட்டுக்குருவி said...
  முற்கூட்டிய வாழ்த்துக்கள் சார் மேலும் பல பயனுள்ள பதிவுகளை பகிர்வீர்கள் என நம்பிக்கை கொள்கிறோம்//
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete
 17. //கோமதி அரசு said...
  தமிழ்மண நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்//.
  நன்றி மேடம்!

  ReplyDelete
 18. //தி.தமிழ் இளங்கோ said...
  *****************நட்சத்திரப் பதிவர் ( STAR BLOGGER )**************
  தமிழ் மணத்தில் நட்சத்திரப் பதிவராக மின்னப் போகும் டி.என்.முரளிதரன்
  அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!//
  வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா!

  ReplyDelete
 19. //வே.நடனசபாபதி said...
  வாழ்த்துக்கள்!//
  வாழ்த்துக்கு மிக்க நன்றி ஐயா!


  ReplyDelete
 20. //தங்கராசா ஜீவராஜ் said...
  வாழ்த்துக்கள் நண்பரே//
  தங்களை வரவேற்கிறேன்.வாழ்த்துக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 21. //தருமி said...
  வாழ்த்துக்கள்//
  வருகைக்கு வாழ்த்துக்கும் நன்றி பாஸ்!

  ReplyDelete
 22. //மோகன் குமார் said...
  வாழ்த்துக்கள் அசத்துங்க. இது அதிர்ச்சி செய்தியில்லை மகிழ்ச்சி செய்தி (ஆனால் தலைப்பால் பதிவு ஹிட் ஆகிடுச்சு )//
  நன்றி மோகன் குமார் சார்!

  ReplyDelete
 23. Nalvaalthu.
  Vetha.Elangathilakam.

  ReplyDelete
 24. வாழ்த்துக்கள் முரளிதரன் ஐயா.

  ReplyDelete
 25. மனம் நிறைந்த வாழ்த்துகள் முரளி !

  ReplyDelete
 26. எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சார்... (TM 9)

  ReplyDelete

 27. நிச்சயமாக வெகு சிலருக்கே கிடைக்கும் பொன்னான வாய்ப்பு. அரசியல், சினிமா,இல்லக்கியம் ,விளையாட்டு, சுற்றுலா என்று எதையும் விட்டுவிடாமல் எல்லாவற்றையும் பற்றி எழுதுங்கள்...வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 28. ஆஹா... அதிர்ச்சி என்று சொல்லி மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளீர்கள். வெகுகுறுகிய காலத்தில் தமிழ்மண நட்சத்திரமாய் ஜொலிக்கும முரளிக்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 29. நட்சத்திரம் சுடர் விட்டு ஜொலிக்க வாழ்த்துகள்!

  ReplyDelete
 30. எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் அய்யா!


  உண்மைவிரும்பி.
  மும்பை

  ReplyDelete
 31. வாழ்த்துகள்..வாழ்த்துகள்..வாழ்த்துகள்..

  ReplyDelete
 32. நட்சத்திர பதிவருக்கு வாழ்த்துகள்.... நான் நட்சத்திரமாக இருந்த நினைவுகள்.... :)

  ஜொலிக்க வாழ்த்துகள்.

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895