என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Sunday, June 1, 2014

ஐ.பி.எல் பார்ப்பவரா நீங்கள்?


    கிரிக்கெட்டில் ஆர்வம் உடையவன் நான். ஓரளவுக்கு நன்றாக விளையாடவும் செய்வேன். அக்னிபுத்ரா கிரிக்கெட் க்ளப்.  இதுதான் எங்கள் கிரிக்கெட் டீமின் பெயர்.சென்னை 28 திரைப்படம் போல  சுவாரசியங்கள் எங்கள் டீமில் உண்டு.அவற்றை வைத்து தொடராக எழுதி உங்களைப் படுத்தவும் எதிர்கால திட்டம் உண்டு(இப்போதைக்கு இல்லை )  பள்ளி விட்டு வந்ததும் எங்கள் பகுதியில் உள்ள குளத்திற்கு வந்து விடுவோம். அதுதான் எங்கள் கிரிக்கெட் மைதானம் . காலைக் கடன் மாலைக் கடன் கழிப்பவர்கள்தான்  எங்கள் ரசிகர்கள்(?). ஹோம் பிச்சான அந்த மைதானத்தில் செஞ்சுரி அடித்த அனுபவமும் உண்டு. 

    நாங்கள் விளையாடும்போது விக்கெட் கீப்பருக்குப் பின்னால் பந்து சென்றால் அதைஎடுத்துப் போட்டுக் கொண்டிருப்பான்   ஒரு சிறுவன். விளையாட்டில் இல்லாத அந்த சிறுவன்  வேறு யாருமல்ல பிரபல பதிவரும், புதிய தலைமுறை பத்திரிகை துணை எடிட்டருமான யுவ கிருஷ்ணாதான் அவர். எனது வலைப்பூவில் அவர்  இட்ட  பின்னூட்டத்தின் மூலம்அவர் சொல்லித்தான் இந்த விஷயம் எனக்கே தெரிந்தது. பின்னர் இருவரும் நண்பர் வீடு திரும்பல் மோகன்குமாரோடு ஒரு பள்ளி விழாவில் சந்தித்தோம்,அவரது சகோதரர் பாலாஜி என் நெருகிய நண்பர் மற்றும் உடன் படித்தவர் 

    அருகருகே வசிப்பவர்கள்- நண்பர்களைக்கூட வலைப்பூ/முகநூல்  மூலமே சந்தித்துக் கொள்வது காலத்தின் கோலம் .

       நான் சொல்ல வந்த விஷயம் இது அல்ல. டெஸ்ட் மேட்ச்,ஒன்டே மேட்ச் எதுவாயினும் புள்ளி  விவரங்களை வைத்துக்கொண்டு விவாதித்துக் கொண்டு சண்டை போட்டுக்கொண்டு  கண்கொட்டாமல் பார்த்ததுண்டு. ஆனால் இப்போதெல்லாம்  ஐ.பி.எல் மேட்சுகளைக் கூட முழுமையாகப் பார்ப்பதில்லை.முதல் ஐ.பி.எல் இல் இருந்த ஆர்வம் இப்போது இல்லை. கிரிக்கெட் சூதாட்டமாகவும் வியாபாரமாகவும் மாறிப் போனதும் ஒருகாரணமாக இருக்கலாம். இப்போதெல்லாம் ஸ்கோர் தெரிந்து கொள்வதோடு சரி. அதுவும் இந்த முறை பல்வேறு சூழ்நிலை காரணமாக ஒரு ஐ.பி.எல் கூட முழுமையாக பார்க்கவில்லை. முதல் ஐபிஎல்லில் இருந்த ஆறாம் இன்று படிப்படியாக குறைந்து விட்டது என்று பலரும் கூறுகின்றனர்.

   எவ்வளவுதான் கிரிக்கெட்  விளையாட்டு சர்ச்சைக்குரியதாக இருந்தாலும் விளையாட்டை ரசிப்பவர்கள் குறையவில்லை. மற்ற விளையாட்டுகளை விட கிரிக்கெட்டுக்கு மட்டும் எப்படி  மவுசு ஏற்பட்டது?.
(அதனை விவரிக்க ஒரு தனி பதிவு பின்னர் எழுதப்படும்.)

    ஐ.பி. எல் இறுதிப் போட்டி  இன்று நடைபெறுகிறது. தெருக்களில் மாணவர்கள் இளைஞர்கள் பைனல் பற்றியும் நேற்று சேவக்கின் சதம் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்கள் . இறுதிப் போட்டியை முழுவதுமாக பார்க்க முடிகிறதா என்று சோதனை செய்ய வேண்டும்.

   போகட்டும். ஒரு ஐ.பி.எல் ரசிகர் குறள் எழுதினால் எப்படி இருக்கும் என்று ஒரு சின்ன கற்பனை. சும்மா ஜாலிக்காக ......  படித்ததும் மறந்து விடவும்.


1.          தேவையா  ஐ.பி.எல் என்பார் சிலபேர்கள் 
             சொல்வதை  தள்ளி  விடு.

2.          இளமைக்கே ஐ.பி.எல் என்றிருக்க வேண்டாம்
             தலை'மை' அடித்தாவது செல் 

3.          ஆண்டியும்  வந்திடுவார்  காண்பதற்கு ஐ.பி.எல்
             தூண்டும் கிரிக்கெட் வெறி

4.          ஒன்றும் இரண்டும் ஓடாதே  எப்போதும் 
             நான்கும் ஆறும்  அடி.

5.           தடுப்பாட்டம் வேண்டாம் தம்பிகளே-அப்போது 
             கடுப்பாகி வீசுவார் கல்

6.           கேட்ச்கள் விடுதல் அழகல்ல அதனாலே
              மேட்ச்வெற்றி கைவிட்டுப் போம்.

7.           ஒருரன் ஒரு பந்து விக்கெட்டால் ஆட்டம்
              விறுவிறுப்பு கூடுமே பார்.

8.           ஏளனமாய் நினைக்காதே எதிரணியை அவ்வணியின்
              ஏப்பையும் எட்டுவார் இலக்கு.

9.           ஆட்டம் போரடிக்கும் நேரமுண்டு தப்பாது 
              அழகியர்  ஆட்டம் ரசி.

10.          சூதாடும் புக்கியிடம் சிக்காதே உன்வாழ்வு 
               சூனியமாய் ஆகிவிடும் சிந்தி.

**************************************************************************

பழைய கிரிக்கெட் பதிவுகள்   சச்சின் பிரிவுபசாரமும் பாரத ரத்னாவும் 

  20 comments:

  1. ஐ பி எல் மேட்ச்கள் பார்ப்பதில்லை. கெயில் ஆட்டம் ரசிப்பதுண்டு. இந்தமுறை அவர் சரியாக ஆடவேயில்லை. மேக்ஸ்வெல், மில்லர், சாஹா, சேவாக் நன்றாக ஆடிய ஆட்டங்கள் பார்த்தேன். குறள்கள் ரசித்தேன்.

   ReplyDelete
  2. வணக்கம் ஐயா
   ஐ.பி.எல் திருக்குறள் அசத்தி விட்டீர்கள். வித்தியாசமான சிந்தனை. அனைவரையும் சிரிக்க வைப்பதற்கான முயற்சி தானே இவை எல்லாம். படித்ததும் மறந்து விடுங்கள் வேண்டுகோள் புதிது. கிரிக்கெட் விளையாட்டு பற்றிய எவ்வளவோ எதிர்மறை செய்திகள் வந்தாலும் பார்க்க வேண்டுமெனும் ஆவல் குறையவில்லை. ஆனால் முழுவதும் பார்ப்பதற்கான நேரம்/ஆர்வம் இல்லை என்பதும் உண்மை தான். பகிர்வுக்கு நன்றிகள்.

   ReplyDelete
  3. ஹன்சிகுரேனியே, அசாருதீனுக்கு பிறகு வெறிகொண்டு விடிய விடிய மேட்ச் பார்க்கும் ஆர்வம் குறைந்து விட்டது என்ற போதும் உலகக்கோப்பை மட்டும் பார்ப்பதுண்டு. ஆனால் என் தம்பிக்கும் தாத்தாவிற்கும் இப்போவரை டி.வி சண்டை வராமல் இருப்பது இந்த கிரிக்கெட் சீசன்களில் தான். ஐ.பி.எல் போலவே குறளிலும் அடிச்சு ஆடிருகீங்க சார். சிக்ஸர்:)

   ReplyDelete
  4. கிரிக்செட்டிற்கும் நமக்கும் உள்ள தூரம் அதிகம் ஐயா
   நன்றி

   ReplyDelete
  5. பைனல் பார்த்தேன்... நேற்று சாஹா ஆஹா...

   ReplyDelete
  6. நம்ம வீரர்களே பிரிந்து விளையாடும் விளையாட்டில் என்ன சுவாரசியம் இருக்கப் போகிறது என்று முதலில் நினைத்ததுண்டு ,அனால் அது தவறென்று இப்போது நினைக்கத் தோன்றுகிறது !
   த ம +4

   ReplyDelete
   Replies
   1. நானும் அப்படித்தான் நினைத்தேன்

    Delete
  7. ரசிக்கும்படியான புதுக்குறள்கள். கூட இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள் -
   "சிக்ஸரடித்து ஆடுவரே வாழ்வார் மற்றெல்லாம்
   சிங்கிள் எடுத்தே சாவார்"

   ReplyDelete
  8. ஐ.பி.எல். என்றால் எங்க வீட்டில தொலைக்காட்சிப் பெட்டிக்குப் பக்கத்தில குந்திவிடுவாங்கள்.
   சுவையாகத் தங்கள் பதிவை நகர்த்தியமைக்குப் பாராட்டுகள்.

   ReplyDelete
  9. I too stopped watching cricket altogether. Somehow the countries subjugated by English have the madness of Cricket and Speaking in English, I still don't understand why!! Real lovers of cricket moved away from the game because it lost its spirit long ago. Yet cricket has gathered new fans the type who like WWF!!

   ReplyDelete
  10. இந்த ஃபைனலில் உள்ளூர் ஆட்டக்காரர்கள் தங்களை நிரூபித்துக்கொண்டது இதம்

   ReplyDelete
  11. ஐ.பி. எல் குறள்கள் அருமை! நானும் மேட்ச் பார்ப்பதை குறைத்து விட்டேன்! ஐபிஎல் பஞ்சாப்- சென்னை முழுவதும் பார்த்து நொந்து போனேன்! இறுதிப்போட்டியில் சஹாவின் ஆட்டம் ஆஹாவென்று இருந்தது!

   ReplyDelete
  12. ஐ.பி.எல் குறள்கள் அருமையாக உள்ளன! நம்ம குறளோன் DD என்ன சொல்கின்றார்?!!!

   கிரிக்கெட்டில்முன்பு மிகுந்த ஆர்வம் இருந்தது எங்களுக்கு! ஆனால் தற்போது அதன் ஊழல்கள் அதன் மீது இருந்த ஆர்வத்தைக் குறைத்து, இல்லை என்ற நிலைமைக்குத் தள்ளிவிட்டது எனலாம். விளையாட்டின் நேர்மையும், ஸ்பிரிட்டும் குறைந்து பணம் விளையாடத் தொடங்கிவிட்டது!

   ReplyDelete
  13. ஐ.பி.எல். தொடக்கத்தில் இருந்த ஆர்வம் தப்போது இல்லை.... இந்த வருடமும் ஒரு சில போட்டிகளின் நேரடி ஒளிபரப்பில் ஒரு சில ஓவர்கள் மட்டுமே பார்த்தேன்.

   குறள் - அருமை.

   ReplyDelete

  நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
  கைபேசி எண் 9445114895