என்னை கவனிப்பவர்கள்

சனி, 8 டிசம்பர், 2012

நீயா நானா?கல்லூரிப் பெண் கேட்ட பாக்கெட் மணி-அம்மாடி!

(50000 பாக்கெட் மணி கேட்ட அம்மணி)
    கடந்த  இரண்டு வார  நீயா நானா நிகழ்ச்சியில் மனதை பாதித்த இரு விஷயங்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

   இரண்டு வாரங்களுக்கு முன்பு பாக்கெட் மணி பற்றிய நீயா நானா பார்த்திருப்பீர்கள். அப்பொழுது இனைய இணைப்பின்மை காரணமாக இந்தப் பதிவை வெளியிட முடியவில்லை. காலம் கடந்த பதிவானதால் சுருக்கம் மட்டும்.

  இந்த நிகழ்ச்சியில் கோபி நாத் கேட்ட கேள்விக்கு ஒரு கல்லூரி மாணவி சொன்ன பதில் பார்த்த அனைவரையும் நிச்சயம் அதிர்ச்சி அடைய வைத்திருக்கும். அந்த கேள்வி "உனக்கு அதிக பட்சம் எவ்வாவு பாக்கெட் மணி தேவைப்படும்? அதற்கு அந்த மாணவி தயக்கம் சிறிதும் இன்றி சொன்ன பதில் 'மாதம் 50000 இருந்தால் போதும். குறைந்த பட்சம் 15000 மாவது  தேவை'.
   ஏழை விவசாயிகளைப் பற்றியோ அரை வயிறு கால் வயிற்றுக் கஞ்சிக்கு அல்லாடும் ஏழைகளைப் பற்றியோ ஏன்? அரசாங்கத்தில கூட மாதம்  5000 ரூபாய் தொகுப்பூதியத்தில வேல செய்பவர்களைப் பற்றியோ கேள்வியாவது பட்டிருக்குமா அந்தப் பெண்?
    கையில் அதிகமாகப் பணம் புழங்குவது ஒரு வித அசட்டு தைரியத்தைக் கொடுக்கிறது என்பதற்கு இந்தப் பெண் ஒரு  உதாரணம். நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு    தன்னைத் தன் தோழிகள் கண்ணைக் கட்டி காரில் அழைத்துச் சென்று பிறந்த நாள் கொண்டாடியதை  பெருமையாகச் சொன்னார். பெற்றோர்கள் எப்படி அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை. பல அசம்பாவிதங்கள் நடப்பதற்கு  நாமே வாய்ப்பளிப்பது  போல் உள்ளது இந்த நிகழ்வு.

         அந்த மாணவியைப் பார்த்து பரிதாபப் படத்தான்முடிந்தது. இந்த பெண்ணின் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற பயமும் ஏற்பட்டது. அவசர அவசியத் தேவைகளுக்கு அவர்களாக சம்பாதிக்கும் வரை பாக்கெட் மணி தேவைதான்.ஒரு வரை முறை இல்லாமல் பெற்றோர்களிடம் பாக்கெட் மணி எதிர்பார்க்கும் பிள்ளைகளைக் கண்டு கவலைப் படுவது நியாயமானதே. உண்மையாகவே இவ்வளவு பாக்கெட் மணி பெற்றோர்கள் கொடுக்கிறார்களா என்பது நம்ப முடியாததாகத்தான் இருக்கிறது. நீயா நானா மிகைப் படுத்துகிறதோ?

  அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழைக் குழந்தைகள் கூட தினந்தோறும் 5 ரூபாய் பத்து ரூபாய் பாக்கெட் மணி கொண்டுவருவது உண்டு. பெற்றோரின் கவனிப்பு இல்லாத அந்தக் குழந்தைகள் எதையாவது வாங்கி சாப்பிடுவதற்கு அதை பயன் படுத்திக் கொள்வார்கள்.

  ஆனால் பணக்கார பெற்றோர்கள் தங்கள்  பிள்ளைகளுக்கு தேவைக்கு அதிகமான பணம் கொடுத்து அனுப்புகிறார்கள். அதை கட்டுப்பாடின்றி தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து செலவு செய்கிறார்கள்.அதைப் பார்த்து நடுத்தர வர்க்கத்தினரும் அதேபோல் இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். முந்தைய தலை முறையினரைவிட இந்தத் தலை முறை நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் பிள்ளைகளுக்கு பாக்கெட் மணி கொடுப்பதை பெருமையாகக் கூட கருதுகின்றனர் என்று சிறப்பு விருந்தினர் சொன்னது குறிப்பிடத் தக்கது.

   எச்சரிக்கை: இந்த நிகழ்ச்சியைப் பார்த்த கல்லூரி மாணவ மாணவியர்  இன்னும் அதிகமான பாக்கெட் மணி கேட்கக் கூடும் 

**************************************************************************************************************
   கடந்த  வார நீயா நானாவில் மன உளைச்சல் பற்றிப் பேசியதில் கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களின் மகன் சொன்ன விஷயங்கள் நெஞ்சை உறுத்தியது.

  "எங்க அப்பா மாதிரி நான் ஆகிடக் கூடாது. அதனாலதான் இலக்கியத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு சராசரி மனிதனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். காரணம் எங்கப்பா வாழ்க்கையில ஜெயிக்கல. உங்கப்பா மாதிரி நீ வந்துடக் கூடாதுன்னு எங்கம்மா சொல்லி சொல்லி என்னை வளர்த்தாங்க" என்று சொன்னபோது அளவிடமுடியாத அளவுக்கு வருத்தம் ஏற்பட்டது.இதை அந்தக் கவிஞன் கேட்க நேர்ந்திருந்தால் அவரது  மன நிலை என்னவாக இருக்கும்?

     ஒருவர் எவ்வளவு புகழ் பெற்றிருந்தாலும் அதனை பொருளாக மாற்றத் தெரியா விட்டால் குடும்பத்தில் ஏற்படும் மன உளைச்சலை தவிர்க்க இயலாது  என்பதற்கு கவிஞர் விக்ரமாதித்யன் உதாரணம். இப்படி இன்னும் எத்தனை இலக்கிய வாதிகள் இருக்கிறார்களோ.

இதோ விக்ரமாதித்யனின் ஒரு கவிதை 

                        கூண்டுப் புலிகள்

                     நன்றாகவே பழகிவிட்டன
                     நாற்றக் கூண்டு வாசத்துக்கு;
                     பெரிதாக ஒன்றும் புகார் இல்லை;
                     நேரத்துக்கு இரை;
                     காலமறிந்து சேர்த்து விடப்படும் ஜோடி;
                     குட்டி போட சுதந்திரம் உண்டு;
                     தூக்க சுகத்துக்கு தடையில்லை;
                     கோபம் வந்தால்
                     கூண்டுக் கம்பிகளில் அறைந்து கொள்ளலாம்;
                     சுற்றிச் சுற்றி வருவதும்
                     குற்றமே இல்லை;
                     உறுமுவதற்கு உரிமையிருக்கிறது;
                     முகம் சுழிக்காமல்
                     வித்தை காண்பித்தால் போதும்;
                     சவுக்குச் சொடுக்குக்குப் பயந்து
                     நடந்து கொண்டால் சமர்த்து;
                     ஆதியில் ஒரு நாள்,
                     அடர்ந்த பசியக்காட்டில்
                     திரிந்து கொண்டிருந்தனவாம்;
                     இந்தக் கூண்டுப் புலிகள்!

************************************************************************************************

63 கருத்துகள்:

  1. கல்லூரி மாணவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு இது... நன்றி...

    பதிலளிநீக்கு
  2. !!!!! பாவம் அந்த பெண். இன்னைக்கெல்லாம் செலவு பண்றது அவ்வளவு பெருமையா இருக்கு:))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெத்தவங்களே பெருமையா சொல்லறாங்களே! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுடர்விழி

      நீக்கு
  3. பாக்கெட் மணி விஷயம்
    மிகைப்படுத்தப்பட்டிருந்தால் பரவாயில்லை
    நிஜமென்றால் பயமாகத் தான் இருக்கிறது

    கூண்டுப்புலியின் கவிதை மிக மிக அருமை
    பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. இந்தியாவில் ஏழைகள் மேலும் ஏழைகளாக
    பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக ஆகிறார்கள் என்பது
    உண்மைதான் என்று புரியவைக்கிறது உங்களின் பதிவு .
    நல்ல பகிர்வு முரளிதரன் ஐயா.

    பதிலளிநீக்கு
  5. She will spend the money in eating and entertainments. Thus, she spends it on society. Money is spread. She helps in the spread. If she s not given, her money will b retained with her parents, which they may hoard, or invest, or spend in much worse ways, like giving bribes.

    Those who have, shd give. Those who receive, shd spend. Money is in circulation, helping all of us.

    Good.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Well well well...

      என்னாச்சு உங்களுக்கு? போற போக்கப் பார்த்தால் அந்த பொண்ணுடைய காசு செலவழிக்கும் "தியாக மனப்பாண்மை"க்கு ஒரு சிலை வைக்கணும்னு சொல்லுவீங்க போல!

      உங்களுக்கும் பக்கத்துல ஒரு பெரிய சிலையா வைக்க வேண்டியதுதான்..

      நீக்கு
    2. What I wrote is economics: MONEY ECONOMICS.

      The rich shd spend and the diversification of their money will help society in that many ordinary ppl will earn their bread. For e.g. lavish and ostentatious marriages. Mega pandal, mega decorations, the pipers, the percussionists, the flutists, and other sundry musicians, mega dinner more than once involving cooks and cleaners, and a lot of misc expenditure like the garish invitation cards. The money s splurged on all these by the two rich families.

      Who s the ultimate beneficiaries? The workers and their families: the workers of the pandal and decorations, the cooks and the hundreds of the assistants, the printing press workers, the vegetable vendors who supply the provisions, the head-load workers who carry all, the drives, the jewelers and their artisans, the sellers of dresses and their weavers or the mill workers. (It takes 5 months to weave a silk saree of 20 k worth and the whole family of weavers is engaged. The rich go for more than 20 k silk sarees, many sarees, which mean more than one family). In addition, the gifts which r given, that entail a further chain of unknown beneficiaries. The ordinary folk shd be engaged in employment steadily and the rich help that. Unemployed poor will turn the society upside down and morals go haywire. Prostitutions, thievery, murder and rapes ! The rich, for e.g., the girl like here helps the machinery of society oiled.

      On the other hand, if the rich don't splurge, and go for a Spartan marriages for fear they will increase your wrath for spending, what will happen. The last line of the previous para is relevant.

      The rich will hoard their wealth or divert to other channels perhaps to strangers, not to the ppl they live with. Like stashing away in Swiss accounts.

      In the present episode, the girl will spend a lot. I assume she is mature and emotionally strong enough not to dissipate her life with the money; instead, she will enjoy spending it, along with her friends. She will b happy; her parents will b happy; her friends will b happy, the society will b happy; and therefore, I shd b happy.

      Good economics make all of us happy. Good economics is all that I have talked abt. Money is like muck if not spread - Adam Smith

      (The general view on this episode is as the blogger wrote and the commenters like u endorsed. My take is just to see the same issue in a pure unemotional and economical level with larger public interest in mind. Both can be correct views. Please remember: Morals, too, become valid and are welcome only if they help serve the society in general. Otherwise, we can safely conclude, they are IMMORALS in the disguise of MORALS)

      நீக்கு
    3. காவ்யா: நீங்க என்ன சொல்ல வர்ரீங்கனு புரியுது. திடீர்னு பொருளாதாரம் பேசுறீங்க்..

      அதாவது..திடீர்னு ஒரு 2,கோடிப்பேரு ஒரு வைரஸ் அட்டாக்ல தமிழ்நாட்டில் செத்துப்போயிடுறாங்க.

      அந்த சூழலில் காவ்யா என்ன சொல்வார்னா..

      அம்மாடி ஒரு வழியா நம்ம மக்கள்த்தொகை கொறைன்சிருச்சு. நமக்கு பொற்காலம் ஆரம்பிச்சுருச்சுனு :))))

      எந்த நேரத்தில் எதைப் பேசுறதுனு இருக்கு!

      நீக்கு
    4. குலசேகரன்! உங்கள் பார்வை வேறு.இருப்பவர்கள் செலவு செய்வதால் தவறு இல்லை.ஆனால் இல்லாதவர்களும் செலவு செய்யவேண்டிய சூழ்நிலை எழுவதுதான் இங்கே பிரச்சனை.

      நீக்கு
    5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
  6. ***உங்கப்பா மாதிரி நீ வந்துடக் கூடாதுன்னு எங்கம்மா சொல்லி சொல்லி என்னை வளர்த்தாங்க***


    கோடி கோடியாக சம்பாரிச்சு கொட்டிய அப்பாக்கள் எல்லாம் அட்ரெஸ் தெரியாமல் மண்ணோட மண்ணாயிட்டாங்க. அவர்களை உலகுக்குத் தெரியாது. அட் லீஸ்ட், கவிஞர் விக்ரமாதித்யன் மகன் னு சொல்ற அளவுக்கு வாழ்ந்து (கொண்டு) இருக்கிறார் இவருடைய அப்பா. அவரை இப்படி ஒரு நிகழ்ச்சியில் அநியாயமாக இறக்கனுமா?

    இதுதான் மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி போலும்!

    நல்ல அம்மா! நல்ல மகன்! :(

    பாரதியும் வாழத்தெரியாமல்தான் வாழ்ந்து மறைந்தார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடே இதுதான். இன்றைக்கு வீட்டில் சமைக்கப்புளி இருக்கிறதா என்று பார்க்கும் தாய்; இன்றைக்கு இரவல் கொடுத்த ஜெயகாந்தனின் நாவல் நண்பன் திரும்பித்தரவில்லையே என்று பார்க்கும் தகப்பன்.

      இவன் இலக்கியம் படிக்க அல்லது படைக்க அவள் சமைத்துப்போட்டால்தான் முடியும். செல்லம்மாள் சமைத்துப்போட்டதனாலேதான் பாரதியாரால் அடுத்தவேளைச்சாப்பாட்டுக்குக் கவலையில்லாமல் குயில்பாட்டு எழுத முடிந்தது. எனவே வருண் அவரை மஹா கவியென்றும் குயில் பாட்டை ஒரு சிறந்த மஹா இலக்கியமென்றும் பேசி இன்பம் காண்கிறார்.

      அன்னமிட்ட கையைக் கடித்தாலும் அது அன்னமிடுகிறது. இதுவே அன்னையின் மஹாத்மியம்.

      நீக்கு
    2. வருண் சொல்வது போல விக்ரமாதித்யனின் மகன் எல்லோரும் பார்க்கக் கூடிய ஒரு நிகழ்ச்சியில் தந்தையின் இயலாமையை சுட்டிக் காட்டியது அவரை இழிவு படுத்துவதற்கு சமம் என்றுதான் நானும் கருதுகிறேன்.

      நீக்கு
  7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  8. ****அதற்கு அந்த மாணவி தயக்கம் சிறிதும் இன்றி சொன்ன பதில் 'மாதம் 50000 இருந்தால் போதும். குறைந்த பட்சம் 15000 மாவது தேவை. ****

    இதுதான் இன்றைய இந்தியா!

    இதுதான் உண்மையான பெண் சுதந்திரம்!

    இங்கே வாழத்தான் நம்ம "ஆதிமனிதன்" ஓடியே வந்து இருக்காரு!

    என்னவோ போங்க!

    நேத்து என் பி ஆர் ரேடியோல ல ஒரு நிகழ்ச்சி கேட்டேன். ஒரு செலிப்ரிட்டி கேன்சர் வந்து சாகப்போறார். அவர், ரேடியோல வந்து வரப்போகும் தன் சாவைப் பற்றி காமெடியாகப் பேசி எல்லாரையும் சிரிக்க வைத்தார்.

    She was going like..

    hi you know I am dying of cancer. I am going to miss you all and then she was joking about death and making everyone laugh!

    Such woman are making difference in others life even when they are dying. Not this worthless tamil-girl who wants 50000 as pocket money!

    _______________

    check out here!

    http://www.npr.org/2012/10/08/162514763/standup-comic-tig-notaro

    Tig Notaro On Going 'Live' About Her Life

    "Good evening, hello. I have cancer. How are you?"

    That's how comedian Tig Notaro began her set at Largo in Los Angeles the day she was diagnosed with Stage 2 breast cancer. As she uttered those words to the audience, there was nervous laughter, weeping and total silence in response.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //Such woman are making difference in others life even when they are dying. Not this worthless tamil-girl who wants 50000 as pocket money!//

      enna maathiru differance nu sollitingana nalla irukkum

      நீக்கு
  9. அடக்கொடுமையே! பாக்கெட் மணியே இவ்வளவா? கண்டிப்பாக கல்லூரி மாணவர்கள் பார்த்தால் இதற்குமேல் கேப்பார்கள், உங்களது பதிவு மூலம் பலரையும் இந்த பதிவு சென்றடையும்.

    பதிலளிநீக்கு
  10. பணக்காரர்களுக்கு பணத்தின் அவசியம் ஒரு பொழுதுபோக்காகிவிட்டது.

    பதிலளிநீக்கு
  11. இந்த நிகழ்ச்சியைப் பார்த்தேன். அப்பெண்ணையும், தாயையும் அவர்கள் எதிர்காலத்தையும் நினைக்கப் பரிதாபமாகத்தான் இருந்தது. கட்டாயம் மனநலமருத்துவ ஆலோசனை இப்பெண் பெறுவது நன்று.

    பதிலளிநீக்கு
  12. Her father is in RTO office.... he can afford that kind of pocket money, I guess!!

    One of my relatives (in USA) donated her hair for making a wig for cancer patients!!. see the difference.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்பற்றப் படவேண்டிய விஷயங்களை மேலை நாட்டவரிடம் நாம் கற்றுக் கொள்வதில்லை.அவர்களிடம் உள்ள தவறான பழக்கங்களையே எடுத்துக் கொள்கிறார்கள்.

      நீக்கு
  13. நாங்க படிக்கும் போது பெண்களுக்கு பாக்கெட் மணி கிடையாது; ஜாக்கெட் மணி தான்! ஜீன்ஸ் மற்றும் சட்டை போட்ட பெண்களை முப்பது முப்பதைந்து வருடத்திற்கு முன்பு சென்னையில் உள்ள எந்த ultra modern கல்லூரியிலும் பார்க்கமுடியாது! நான் பார்த்ததே இல்லை! அப்படிபட்ட உயர்ந்த தமிழ்நாட்டு கலாசாரம் அப்போ!

    இப்போ, பெற்றோர்களே பெண்களை கெடுக்கிறார்கள்.
    தமிழ்நாட்டு கலாசாரம் ரொம்பத்தான் கெட்டுப்போச்சு...!
    கொசுரா கலியும் முத்திப்போச்சு...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெற்றோர்கள்தான் பிள்ளைகள் செய்யும் பல தவறுகளுக்கு காரணம்.
      வரோயக்குக் கருத்துக்கும் நன்றி நம்பள்கி

      நீக்கு
  14. நம்பள்கி சொன்னதே என்துடைய கருத்து!

    பதிலளிநீக்கு
  15. My son always remember this **********

    I think it was 1996 - He was in 8th STD and he want to see a Jackee Chan movie with his friends. The highest ticket fare in our town was Rs.7.00 (I am not sure abt it) at that time. So I gave him Rs.30.00 (ticket + snacks etc).

    After he came back I asked him to return the balance and he told me that he spent all the money. (He spent all the balance amount for Ice cream and other snacks for his friends)

    I got mad and I explained him why I gave him more money and teach him abt the value of money. (the whole day)

    We came to U.S in 1998. Now my daughter complained that he never pay for anything when they are going out side and she has to pay for him.

    பதிலளிநீக்கு
  16. நாங்கள் பள்ளிகளில் படிக்கும் காலங்களில் நைந்து போன எங்கள் பாக்கெட்டில் வெறும் மணிகள்(குண்டு) மட்டுமே இருக்கும். இவர்கள் சொல்லும் பாக்கெட் மணிகளைக் கேட்கும் போது மலைப்பாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  17. பெண்ணின் தந்தை இலஞ்சப்பணத்தில் பாக்கெட் மனி கொடுத்தாரென்றால் விவாதம் வேறுதிசையில் போகும். அப்பணம் அவரின் உழைப்பு என்றால், விவாதம் இன்னொரு திசையில் போகும்.

    பணம் என்பது ஒரு நெருப்பு போல. நல்ல துணைவன். கெட்ட எஜமானன்.

    அப்பெண்ணால் அதை நல்ல துணைவனாகப்பயன்படுத்த முடியுமென்றால் நான் எழுதிய அனைத்தும் சரி.

    உங்கள் குழந்தைகள் பணத்தை வைத்துத் தங்களைக் கெடுத்துக்கொள்வார்களென்று நீங்கள் நம்பினால், கொடுக்காதீர்கள். ஆனால், மற்ற குழந்தைகள் கொண்டுவரும்போது அவர்கள் பக்கத்தில் நின்று அவர்கள் நண்பனாக நடித்து அவர்களைச்சுரண்டி அவர்கள் போடும் பிச்சையில் தின்று மன மகிழ்வார்கள். இவ்வாறு சிறுவயதில் சுரண்டி ஏமாற்றுவது, அல்லது உழைக்காமல் பிடுங்குவதை அவர்கள் கற்றுக்கொள்வார்கள். இப்பாடம் பள்ளியில் சொல்லிக்கொடுக்கும் பாடங்களைவிட மிகவும் நன்று பிராக்டிக்கலாகப் பார்ப்பின். Wants prepares a cunning mind in some; ugly and indecent minds in many.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தப் பெண்ணைப் பார்த்தால் நல்ல துணைவனாக பணத்தை பயன்படுத்துவார் என்ற நம்பிக்கை ஏற்படவில்லை.
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குலசேகரன்.

      நீக்கு
  18. தில்லியில் ஏழாவது எட்டாவது படிக்கும் குழந்தைகளுக்குக் கூட தினம் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கும் சில பெற்றோர்கள் இருக்கிறார்கள்..... நேரடியாகப் பார்த்து அதிர்ந்து பேச முடியாது வந்திருக்கிறேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெற்றோர்களே பிள்ளகைளைக் கெடுக்கிறார்கள்.நிலைமை கை மீறிச் சென்றதும் கவலைப் படுகிறார்கள். நன்றி வெங்கட் சார்!

      நீக்கு
  19. நானும் இந்த நிகழ்ச்சி பார்த்தேன்.ரொம்ப ஓவரா இருந்திச்சு.நாங்களும் பணக்கார நாடுகளில் வாழ்கிறோ.18 வயதின்பின் தன்காலில் வாழக்கற்றுக்கொடுக்கிறார்கள்.வாழ்கிறார்கள் இளம்பிள்ளைகள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெளிநாட்டில் உள்ளவர்களிடம் உள்ள நல்லவற்றை தள்ளிவிட்டு தவறானவற்றையே எடுத்துக் கொள்கிறார்கள் நம்மவர்கள்.
      கருத்துக்கு நன்றி ஹேமா

      நீக்கு
  20. என் பாக்கெட்ல எப்ப தேவைப்படுமோ அப்பல்லாம் மணியே இருக்கறது இல்லை! குழந்தைகளுக்குப் பாக்கெட் மணியா.... அம்மாடி!

    கூண்டுப்புளிகள் கவிதை அருமை, இல்லை?

    பதிலளிநீக்கு

  21. வணக்கம்!

    கைப்பணம் அல்லது பைப்பணம் என்று
    பாக்கெட் மணியை மொழிபெயா்க்கலாம்!

    உலகம் எங்கே போகிறதோ?
    உற்று நோக்கி உளங்கொழிக்கும்!
    குலவும் வாழ்வை நெருப்பிட்டுக்
    கொளுத்தும் போக்கு! புதுமையென
    உலவும் நாற்றம்! எதிர்காலம்
    உறைந்தே போகும்! கொடுமையினை
    நிலவும் பார்த்து நெடுந்துாரம்
    நிலத்தை விட்டு அகன்றிடுமே!

    கவிஞா் கி. பாரதிதாசன் - பிரான்சு
    kambane2007@yahoo.fr

    பதிலளிநீக்கு

  22. மீண்டும் வணக்கம்

    வேண்டும் பொழுது கைபிடித்ததே
    விழுந்து விழுந்து கால்பிடித்ததே
    யாண்டும் பெற்ற பின்னாலே
    யாரோ யவரோ என்றிருப்பார்!
    நாண்டு சாவும் இழிவுகளை
    நாளும் நாடி உயிர்வளா்ப்பார்!
    கூண்டுப் புலிகள் கவியருமை!
    கொள்கைக் கவியை வணங்குகிறேன்!

    கவிஞா் கி. பாரதிதாசன் - பிரான்சு
    kambane2007@yahoo.fr

    பதிலளிநீக்கு

  23. வலையில் கிடைத்த கவித்தோழா்
    முரளிதரன் அவா்களுக்கு வணக்கமும் வாழ்த்தும்!

    முரளி தரனார் முயன்றளித்த பக்கம்
    இருளை அகற்றும் எரித்து!

    கவிஞா் கி. பாரதிதாசன் - பிரான்சு
    kambane2007@yahoo.fr

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கவிதையால் அசத்துகிறீர்கள்.
      குறள் வடிவில் வாழ்த்து அருமை. நன்றி

      நீக்கு
  24. சரியான பதிவு, நுகர்வு கலாச்சாரம், மேற்கத்திய வாழ்க்கைமுறை இளையோரை செலவளிக்க செய்கின்றது. பலர் அப் பெண் போல ஆயிரக் கணக்கில் பணத்தை செலவு செய்கின்றனர். முதலில் நிதி மேலாண்மையை பெற்றோர் பிள்ளைகளுக்கு பழக்க வேண்டும். இரண்டு பாக்கேட் மணி வேண்டுமானால் பகுதி நேர வேலைக்கு அனுப்பிவிட வேண்டும், வெளிநாட்டில் நானறிந்து பாக்கேட் மணி கேட்கும் பிள்ளைகள் அரிது. 16 வயதில் தாமே பகுதி நேர வேலைக்கு போய் தம் செலவையும், கல்விச் செலவையும் பார்த்துக் கொள்கின்றனர்.

    பதிலளிநீக்கு
  25. அந்த நிகழ்ச்சியை நானும் பார்த்தேன். பிள்ளைகள் தானகக் கெடுவதில்லை பெற்றோர்கள்தான் கெடுக்கின்றனர். தனக்கு கிடைக்காததை குழந்தைகள் அனுபவிக்கட்டும் என்னும் எண்ணம் கொண்டு சிறுவயதிலிருந்தே தேவையோ ,தேவையில்லையோ அனைத்தையும் வாங்கிக் கொடுத்து பின் வரும் காலங்களில் அப் பழக்கத்தை மாற்ற முடியாமல் , கண்டிக்கவும் முடியாமல் திண்டாடுகிறார்கள். மேல் நாட்டு வழக்கம் போல் செலவு செய்யப் பழக்கும் அவர்கள் ,ஏனோ தன் காலிலே நிற்கும் நல்ல பழக்கத்தை கற்றுத் தருவதில்லை. அதிலும் பெண் குழந்தைகளை இப்படி வளர்த்து விட்டு பின்னாளில் கணவன் இதுபோன்று செலவு செய்ய பணம் தராத போது தேவையில்லாத மனப்பிணக்குகள் தோன்றி என் அப்பா வீடே அருமை என்று பிரிதலுக்கும் காரணமாய் ... நான் பெண்ணியவாதிதான் ஆனால் இப்பொழுது கூறிய கருத்து பிற்போக்குத்தனமானது அல்ல. அந்த நிகழ்வில் மட்டுமல்ல என் வட்டத்திலும் வளரும் ஆண் குழந்தைகளை விட பெண்குழந்தைகளை இப்படி வளர்ப்பதாகப் படுகிறது. ஏனெனில் பெண் குழந்தைகள் பெரும்பாலும் அப்பா செல்லம். அம்மாக்கள் பண விஷயத்தில் கொஞ்சம் கட்டுப்பாடாகத்தான் இருப்பார்கள். இது போன்ற பிள்ளைகளுடன் பழகும் நடுத்தர வர்கத்து பிள்ளைகள் தானும் அப்படி வாழ ஆசைப்பட்டு ஒன்று தவறான வழிக்குச் செல்கின்றனர் அல்லது மன அழுத்தத்திற்கு ஆளாவர் . எவ்வளவு தவறிழைக்கின்றனர் இந்தப் பெற்றோர்கள்...

    பதிலளிநீக்கு
  26. அடேங்கப்பா.. பாக்கெட் மணியே இவ்வளவா?அவங்க பெற்றோர்க்கு பணம் மிச்சமாயிருந்தா ஏழைகளுக்கு பயன் படற மாதிரி எதாவது நல்லது செய்யலாமில்ல.. அத விட்டுட்டு பெண்ணை இப்படியா கெடுப்பாங்க.. எதிர்காலத்துல திருமண வாழ்க்கையில் அந்த பெண் குடும்பத்துடன் கலந்து வாழுமா என்பதே சந்தேகம்தான்.

    விக்ரமாதித்யனின் மகன் எல்லோரும் பார்க்கக் கூடிய ஒரு நிகழ்ச்சியில் தந்தையின் இயலாமையை சுட்டிக் காட்டியது அவரை இழிவு படுத்துவதற்கு சமம் என்றுதான் நானும் கருதுகிறேன்- ஆமாம்.. என்னோட கருத்தும் அதுதான்.

    பதிலளிநீக்கு
  27. 50000 பாக்கெட் மணியா? அப்ப அவங்கப்பா மாசம் எவ்வளவு சம்பாதித்தால் இதை தர முடியும்? இன்றைய இளைஞ்சர்கள் ரொம்பவும் கெட்டுத்தான் போய் விட்டார்கள்! விக்கிரமாதித்யன் கவிதை அருமை!

    பதிலளிநீக்கு
  28. நானும் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தேன்; எனக்கும் தாங்க இயலாத கோபம் வந்தது.

    இந்தப் பெண்ணின் தாய் அந்தப் பெண்ணைக் குறை செய்துதான் பேசினார். அந்தப் பெண்ணின் தகப்பனைச் செருப்பால் அடிக்க வேண்டும் !

    நிச்சயம் அந்த ஆள் இந்திய அமைப்பின் லஞ்சலாவண்ய அரக்க இயந்திரத்தின் ஒரு அங்கமாயிருக்கக் கூடும்..வெளிநாட்டில் கண் நோக நிரல் எழுதிச் சம்பாதிப்பவர்கள் கூட மாதம் 50000 ரூபாய் பாக்கெட் மணியாகத் தன் குழந்தைக்கு வழக்கமாகக் கொடுக்க முடியாது..அந்தப் பெண் கேட்கிறாள் என்றால்,எப்படி?

    அந்தப் பெண்ணும் ஒரு கட்டத்தில், பணம் வருகிறது இல்லையா, கொடுக்கலாம்தான் என்னும் பொருளில்தான் பேசினார், எந்தக் குற்ற உணர்ச்சியுமின்றி !

    பதிலளிநீக்கு
  29. [[எங்க அப்பா மாதிரி நான் ஆகிடக் கூடாது. அதனாலதான் இலக்கியத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு சராசரி மனிதனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். காரணம் எங்கப்பா வாழ்க்கையில ஜெயிக்கல.]]

    இன்னொரு விதயம் சொல்ல ஆசைப்படுகிறேன்..இன்றைய தமிழ்ச் சூழலில் இலக்கியவாதி என்று சமுதாயத்தில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்பவர்(கவனிக்கவும் தமது முயற்சிகளால் அறியப்படுபவர்கள் இல்லை!) தவறாது மொடாக் குடியர்களாக இருக்கிறார்கள்..

    ஒரு மனிதன் என்னதான் சாதித்திருந்தாலும் ஒரு குடிகாரக் கணவனால் மனைவி சந்திப்பது குடும்பத்தின் சிதைவே..

    விக்ரமாதித்தனின் தாய் இந்த நோக்கிலும் சொல்லியிருக்கலாம்.

    (இந்தக் கருத்துக்கு என்னை நிந்திக்கக் காத்திருப்பவர்களுக்கு நா.முத்துக்குமார் முதல் பல எடுத்துக்காட்டுகளை என்னால் காட்ட முடியும்.தொலைக்காட்சியில் பரிசு பெற வந்து பேசும் பேச்சில் கூட அவருக்கு வாய் உளறுகிறது!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அறிவன்: அப்பாவுக்கு குடிப்பழக்கம் இருந்தது. அதனால நாங்க நாசமாப்போயிடோம்னு சொல்லி, அதனால அம்மா அவர் போல் (குடிகாரர்) ஆகிடாதே னு சொன்னால் எல்லாரும் புரிஞ்சுக்குவோம். அவர் அப்படி சொன்னதாக இங்கு சொல்லப்படவில்லை. அப்பா ஒரு வீணாப்போன இலக்கியவாதி! அவர் செய்ற தொழிலில் எந்த வருமானமும் இல்லை! இலக்கியத்தை கட்டி அழுதே வீணாப்போனவர் என்பதுபோல் சொல்வதாகத் தான் என் சிறு அறிவுக்குத் தெரிகிறது.

      இலக்கியவாதி எல்லாம் குடிகாரர் என்பது போல சொன்னீங்கன்னா ஜெயமோஹன், வைரமுத்து வெல்லாம் உங்களை உண்டு இல்லைனு பண்ணப்போறாங்க, கவனம். :-)

      மற்றபடி நீங்க என்ன சொல்ல வர்ரீங்கனு புரியுது. அப்பாவைப் பத்தி பெருமையாக சொல்லிக்க ஒண்னுமில்லையைனா இவர் தன்னை விக்ரமாதித்யன் மகன் என்று அறிமுகப்படுத்தாமல் இருந்து இருக்கலாம்..

      நா முத்துகுமார் பற்றி நீங்க சொல்லித்தான் அறிந்துகொண்டேன். கண்ணதாசன் பற்றித் தெரியும். It is not uncommon anywhere in the world. Most of the talented guys get into some sort of addiction. Please dont misunderstand me, I am not defending charu nivedita here! LOL

      நீக்கு
    2. [[எந்த வருமானமும் இல்லை! இலக்கியத்தை கட்டி அழுதே வீணாப்போனவர் என்பதுபோல் சொல்வதாகத் தான் என் சிறு அறிவுக்குத் தெரிகிறது.]]

      இல்லை. வி.மாதித்தனும் சிறுபத்திரிகைக் குழுமத்தில் இயங்கியவர்.நல்ல கவிதைகளை எழுதியிருக்கிறார்.

      கடந்த 25 வருடங்களில் சோல்னாப்பையுடன்,சில நல்ல கவிதைகள் எழுதத் தெரிந்தவர்கள் சிறு பத்திரிகை உலகிலும் இயங்கினால் தவறாமல் அவர்கள் இலக்கிய வாதிகளாக அறியப் படுவார்கள்.

      அவர்களில் பிரபலமடைய முயற்சி அடையும் போதே குடி'மைப் பண்புகளில் பெருந் தேர்ச்சியடைந்து விடுவார்கள்.சமீபத்தில் கூட ஃபுல்மப்பில் இந்த வித இலக்கியவாதிகளின் கூட்டத்தில் சண்டை வந்ததாகப் படித்த நினைவு இருக்கிறது.(விதிவிலக்குகள் எங்கும் இருக்கலாம்..நான் பொதுவாக அவதானிப்பதைச் சொல்லியிருக்கிறேன்)

      மொடாக் குடியர்களாக மாறியவர்கள் எவரும் குடும்பத்தை முன்னேற்றியதில்லை !!!

      வி.மாதித்தனும் அப்படி இருந்திருக்கலாம் என்பதால் அவர் தாய் அப்படி சொல்லியிருக்கலாம்.

      [[இலக்கியவாதி எல்லாம் குடிகாரர் என்பது போல சொன்னீங்கன்னா ஜெயமோஹன், வைரமுத்து வெல்லாம் உங்களை உண்டு இல்லைனு பண்ணப்போறாங்க, கவனம். :-)]]

      இவர்கள் மொடாக் குடியர்கள் என்று கருதுவதற்கில்லை.அவ்வப்போது காலை நனைக்கும் வாய்ப்பு இருக்கலாம்.மேலும் இவர்கள் எல்லாம் எழுத்து வியாபாரிகளாகத்தான் பெரிதும் அறியப்படுபவர்கள்.


      [[நா முத்துகுமார் பற்றி நீங்க சொல்லித்தான் அறிந்துகொண்டேன். கண்ணதாசன் பற்றித் தெரியும். It is not uncommon anywhere in the world. Most of the talented guys get into some sort of addiction. Please dont misunderstand me, I am not defending charu nivedita here! LOL]]

      சாநி யை இலக்கியவாதி என்று சொன்னால் நானே மறுவாசிப்பில் என்னை தண்டிக்க நேர்ந்து விடலாம்.அவ்வளவு பெரிய தவறை நான் செய்வதில்லை. :)

      என் அறிவுக்குப் பட்ட,சமீப காலங்களில் இயங்கிய இலக்கிய வாதி திரு.அ.ச.ஞா..

      நீக்கு
  30. ///ஆனால் பணக்கார பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தேவைக்கு அதிகமான பணம் கொடுத்து அனுப்புகிறார்கள். ///
    புள்ளைங்களை பெத்தவங்கதான் கெடுக்குறாங்க என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை...!

    பதிலளிநீக்கு
  31. அந்த மூஞ்சியைப் பார்த்தா 50,000 ரூபாய் செலவு செய்யுற மாதிரி தெரியலியே. இது மாதிரி அல்டாப்புங்க எக்கச்சக்கமா உலாத்துதுங்க பாஸ்!!

    பதிலளிநீக்கு
  32. நீங்கள் ஒரு விஷயம் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன். அந்த பெண்ணின் தந்தை RTO அலுவலகத்தில் பணிபுரிகிறார். சும்மா வந்த காசு, இப்படித்தான் போகும்.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895