என்னை கவனிப்பவர்கள்

திங்கள், 17 நவம்பர், 2014

நான் மம்மி பீசு!


என்ன இப்படி பண்ணிட்டீங்க கில்லர்ஜி! கேள்வி கேட்டாலே எனக்கு அலர்ஜி . 

நீங்க பத்த வச்ச சர வெடி கரந்தையில வெடிக்க  அவர் புதுக்கோட்டை பக்கம் தூக்கிப் போட முத்துநிலவன் அதை மூங்கில் காத்தோட அதிரடியா அனுப்பி வைக்க அது இங்க புஸ்வாணமா மாறிப் போச்சே ஐயா! நான் என்ன செய்ய?  
இந்தப் பச்ச புள்ள கிட்ட கேள்வி மேல கேள்வி கேட்டா எப்படி பதில் சொல்லும்?  முத்து நிலவன் ஐயா! எனக்கு பாஸ் மார்க் போடணும் சொல்லிட்டேன்.

1.நீ மறுபிறவியில் எங்கு பிறக்கவேண்டும் என்று நினைக்கிறாய்?

      இந்தப் பிறவியில எங்கே பிறந்து எங்கெல்லாம் வளர்ந்தேனோ அந்த இடங்களைத் தவிர வேறு எங்காவது ஓரிடத்தில் பிறக்கணும், அடுத்த பிறவியிலாவது புது இடங்களைப் பார்க்க வேண்டாமா? (முற்பிறவியில எங்க பொறந்தேன்னு உனக்கு தெரியவா போவுதுன்னு புத்திசாலித்தனமா யாராவது கேட்டா எனக்கு கெட்ட கோவம் வரும் ஜாக்கிரதை! 

2.ஒருவேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்துவிட்டால்?

    அடடா! இந்தியாவோட நிலைமை அவ்வளவு மோசமாவா போச்சு?. 
அப்படி இருந்தா அது இந்தியாவோட  தலை எழுத்து. 

3.ஒருவேளை வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்புத் 

தெரிவித்தால்?
எனக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தால்அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்  நான் டம்மி பீசு.
எதிர்ப்பு தெரிவித்தால்....கால்ல உழுந்து காரியம் முடிச்சுடுவேன். ஹிஹி நான் மம்மி பீசு 

4.முதியோர்களுக்கு என்று ஏதும் திட்டம் வைத்திருக்கிறாயா?


 முதியவர்களுக்கு மட்டுமில்ல இளைஞர்களுக்கும் சேர்ந்து ஒரு திட்டம். ஆளுக்கொரு வலைப்பூ ஆரம்பிச்சு 2015 நான்காவது வலைப் பதிவர் சந்திப்புக்கு புதுக்கோட்டைக்கு வந்துடணும். ஆமா!

5.அரசியல்வாதிகளுக்கென்று திட்டம் ஏதாவது?

 தேர்தலில் ஜெயித்ததும்  ஆறு மாதம் ராணுவத்தில  கடுமையான பயிற்சி கொடுக்கப் படும். பின்னர் தேர்வும் வைக்கப் படும் பாசானால் மட்டுமே பதவியில் தொடர முடியும்.

6.மதிப்பெண் தவறென்று மேல்நீதிமன்றங்களுக்குப் போனால்..?

  செல்லாது செல்லாது. மதியுடைய பெண்ணை எப்படி தவறுன்னு சொல்ல முடியும் .

7.விஞ்ஞானிகளுக்கென்று ஏதாவது திட்டம்?

விஞ்ஞானிகளுக்கு எதுக்கு திட்டம். அஞ்ஞானிகளுக்குத்தானே  திட்டம் வேணும்.?

8.இதை உங்களுக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்கள் தொடர்வார்களா?
கட்டாயம் தொடர்வார்கள்.அது எப்படி உறுதியா சொல்றீங்கன்னுதானே கேக்கறீங்க. நான்தான் ஒண்ணும் செய்யலையே. அதையே அவங்க செய்யறதில என்ன  கஷ்டம் இருக்கப் போகுது? ஹிஹிஹிஹி 

9.மற்ற நாடுகளில் இல்லாத புதுமையாக ஏதாவது திட்டம்?


 நான் ஆட்சிக்கு வந்ததும் (என்)மக்கள் ஆசையை நிறைவேத்த அரசாங்க செலவில  மேப் ல இடம் பெறாத ஊர்களுக்கெல்லாம் கூட போய்ப் பாத்து அங்க என்ன என்ன திட்டம் எல்லாம் இருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டு அதுக்கப்புறம் அங்க இல்லாத திட்டத்தை உருவாக்கப்படும்னு தெரிவிச்சிக்கிறேன். ஒரு வேளை அதுக்குள்ள அஞ்சு வருசம் ஆயிட்டா புதுமையான திட்டத்தை உருவாக்க மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கணும்னு கேட்டுக்கறேன்.

10.மானிடப் பிறவி தவிர வேறென்ன பிறவி எடுக்க விரும்புகிறாய்?

   இந்தக் கேள்விக்கான பதில் தெரியாததால எங்க வீட்டம்மா கிட்ட கேட்டேன். "நான் அடுத்த பிறவியில என்ன பிறவி எடுக்கணும்னு நினைக்கிற?" 
  "என்னத்தை எடுக்கிறது. இந்தப் பிறவியில உசுரை எடுத்தது போதாதா? மாடாப் பொறந்தா உழைக்கணும் , கழுதையைப் பிறந்தா பொதி சுமக்கனும், நாயாப் பொறந்தா வாலாட்டணும் பேயா பொறந்தா புளிய மரம் தேடனும். அட! திரும்பி பொறக்கும் போதாவது (நல்ல) மனுசனா பொறந்து தொலைங்க" ன்னு சொன்னாங்க பாருங்க....... 

இப்படி என்ன மாட்டிவிட்ட கவிஞர் முத்து நிலவன் ஐயாவை எப்படி பழி வாங்கறதுன்னு யோசிச்சிகிட்டு இருக்கேன்.

பொறுப்பு துறப்பு(Disclaimer); இதைப் படிச்சிட்டு உங்க நிலைமையும் இப்படி ஆயிட்டா நான் பொறுப்பு இல்ல 
*******************************************************************************
முந்தைய பதிவுகள் 28 கருத்துகள்:

 1. பத்தாவது பதிலை அதிகம் ரசித்தேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 2. #கால்ல உழுந்து காரியம் முடிச்சுடுவேன். ஹிஹி நான் மம்மி பீசு #
  நீங்க பொளச்சுக்குவீங்க :)
  த ம 2

  பதிலளிநீக்கு
 3. பாஸ் போடுறதாவது...? ம்கூம் அதெல்லாம் நடக்காது.

  வழக்கம்போல அருமைனு சொன்னா அதுவும் வழக்கம்போல என்பதால் சொல்கிறேன்.இந்தமாதிரி தொடர்பதிவுகளில் வாகைசூடுவதை வழக்கமாகக் கொண்ட முரளி இம்முறையும் வாகைசூடி மற்றவர்களின வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டார் என்று அறிவிக்கப்படுகிறதுங்கோ... (ஏ....ங்க? இப்படி?)
  அப்புறம் முரளி அய்யா, 5மட்டுமில்ல.. 2, 4கூட நம் சிந்தனைகள் ஒரே மாதிரித்தான் இருந்திருக்கின்றன (சத்தியமா காப்பினு சொலலலீங்க) அப்புறம் 6,7 பதில் ரசனையாக இருந்தன. 3,10தான் வழக்கம்போல சிரிப்பு. தலைப்பு அருமைங்கோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தயவு செய்து ஐயா என்று அழைப்பதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

   நீக்கு
 4. வணக்கம்
  அண்ணா.

  பதில்கள் ஒவ்வொன்றும் மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி த.ம 3
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 5. அய்யா சில சந்தேகம்
  விளக்கினால் வெளிச்சம் பெறுவேன்...!
  1. கெட்ட கோவம்.. கெட்ட கோவம்.. என்று கதைக்கிறியளே கெட்ட கோவம் என்றால் என்ன? அதேபோல் நல்ல கோவம் என்றால் என்ன?... கொஞ்சம் வெளக்குங்களேன்.
  2. பேச மறந்தவர்களையும், சிரிக்க மறந்தவர்களையும், சிந்திக்க மறந்தவர்களையும் ஏற்கனவே தலைவராய் ஏற்ற ஏற்றமிகு என் நாடு (குறிப்பாக என் தமிழினத்தை உள்ளடக்கிய) உங்களை தலைவராய் ஏற்பதில் புதிதாய் எந்த இழப்பும் வந்துவிடாது..
  3. இது டாப்ஸா இல்லை ஏன்னா இத்து டப்ஸா
  4. முதியவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆளுக்கொரு வலைப்பூ ஆரம்பிச்சு 2015 நான்காவது வலைப் பதிவர் சந்திப்புக்கு புதுக்கோட்டைக்கு வந்துடணும். ஆமா!ஆச ஆச இல்லையில்லை இது பேராசை 2015 பேர எப்டி தாங்குவாங்க..
  (மை மைண்ட் வாய்ஸ்) ஒரு வேளை இதுதான் அய்யாவை பழிவாங்கற திட்டமோ?
  5. இப்ப கரண்டில் இருக்கிறவங்கள மட்டும்தான் அரசியல்வாதிகளாக கருத வேண்டும். (நீங்கள் மற்றும் என்னையும்) உள்ளிட்டோரை அப்ரசைட்டுகளாக மட்டுமே கருத வேண்டும்.
  6.ஓகே.ஓகே.
  7. விஞ்சானத்தோட வீம்பா விளையாட நாமென்ன நாய் சேகரா?.
  8.அரசியலில் நீங்க ஒரு தீர்கதரிசி பாஸ்.
  9. நல்ல வருவீங்க? இல்லயில்ல வரனும்.. ஆமா.. மீண்டும் மீன்டும் வரனும். எங்க ஜனங்களுக்கு சோதனையை தரனும்..
  10. மக்களின் பிரத.ராக பிரமாதமாக வர வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 6. பதிலில் இழையோடிய நகைச்சுவை
  மனம் கவர்ந்தது
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. ஆட்சியானராக வந்த பின்பும் காலில் விழுவேன் என்று சொன்னது......

  பாவம் நம்மவர்கள் எப்படி நடுங்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை புரிய வைத்து இருக்கிறீர்கள் மூங்கில் காற்று.
  த.ம. 5

  பதிலளிநீக்கு
 8. அரசியல்வாதிகளுக்கான திட்டம் அதிரடி!

  மற்ற எல்லா பதில்களுமே ஹா...ஹா...ஹா...

  பதிலளிநீக்கு
 9. நான் கேட்கலாம்னு தான் நினைச்சேன், நீங்க கெட்டகோவம் வரும்னு சொல்லிபுட்டீங்களே:(( மம்மி பீஸ் - மக்களே நோட் பண்ணுங்க பிற்காலத்தில் பயன்படும் வரலாற்று சிறப்புமிக்க வார்தை(என்னது மொத்த பதிவும் நோட் பண்ணுற மாதிரிதான் இருக்கா! அதுவும் சரிதான்:)))

  பதிலளிநீக்கு
 10. நகைச்சுவையுடன் கூடிய பதில்கள் அருமை ஐயா

  பதிலளிநீக்கு
 11. வாத்தியாரே நீ பாஸ் அய்யா. நீ பாஸ் ஆகலைன்னா வேற யாரு பாஸ் பண்ணப் போறாங்க.. பதில்களை சிறப்பாக சொன்னதற்கு உங்களுக்கு "பதிவர் நல்லாசிரியர்' என்ற விருது புதுகோட்டை பதிவர் திருவிழாவில் தலைவர் முத்துநிலவன் கையால் வழங்கப்படும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பத்தாவது கேள்விக்கு பதில் உங்க ஸ்டைல்ல சொல்ல ட்ரை பண்ணி இருக்கேன்.கவனிச்சீங்களா?

   நீக்கு
 12. // மதியுடைய பெண்ணை எப்படி தவறுன்னு சொல்ல முடியும்.... //

  அதானே...! ஹா... ஹா...

  பதிலளிநீக்கு
 13. கேள்வி, அதற்கான பதில் நன்று!

  பதிலளிநீக்கு
 14. சிறப்பான பதில்கள்! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 15. எல்லோரும் விதம் விதமாக எழுதுகிறீர்கள்... எனக்கென்று பதிலே இருக்காதோ. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 16. அனைத்துமே நகைச்சுவையாக ஸூப்பராக இருந்தது நண்பரே தலைப்புதான் மாறிவிட்டது காரணம் இதில் பந்தப்படாத வேறு நகைச்சுவை பதிவுபோல் தங்களது நான் மம்மி பீசு ப்ராக்கெட்டிற்க்குள் போட்டிருக்கலாமே...

  கனவில் வந்த காந்தி (நான் மம்மி பீசு) இப்படி நன்றி.

  பதிலளிநீக்கு
 17. சீரியஸான பதில்களை எதிர்பார்த்து வந்த எனக்கு சிரியஸான பதில்களைப் படித்ததும் ரசித்து சிரித்தேன்...இருந்தாலும் அரசியல் வாதிகளை ராணுவத்தில் சேர்க்கும் திட்டம் பிடித்திருந்தது...

  பதிலளிநீக்கு
 18. டம்மி பீசு, மம்மி பீசு...
  ராணுவத்தில் பயிற்சி...
  மதியுடைய பெண்ணு...

  ஆஹா... கலக்கிட்டீங்க...

  பதிலளிநீக்கு
 19. சீரியசான கேள்விகளுக்கு உங்களது சிரிக்க வைக்கும் பதில்கள் அருமை

  பதிலளிநீக்கு
 20. ரொம்ப சிரித்து ரசித்தோம்! த்ங்கள் பதிலகளை படித்து! இந்த டம்மி பீசு மம்மி பீசு ஹஹாஹஹ்

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895