![]() |
டிவியில் சாராயக் கடைகளை எதிர்த்து நடத்தப்படும் போராட்டங்கள் பற்றிய செய்திகள் ஒளி பரப்பாகிக் கொண்டிருந்தது. பரபரப்பான பேட்டிகளும் விவாதங்களும் நடைபெற்றுக் கொண்டிருந்ததை பார்த்துக் கொண்டிருந்த போது ரமேஷிடம் இருந்து போன் வந்தது.
"டேய் உனக்குத் தெரியுமா? கார்த்திக் மதுவுக்கு எதிராக போராடப் போறானாம்.பந்தல் போட்டு சாகும் வரை உண்ணா விரதம் இருக்கப் போகிறானாம். அவன் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடமாட்டானாம் " அவன் குரலில் ஒரு பதட்டம் தெரிந்தது
நானும் அதிர்ச்சியுடன் "உண்மைதானா! அவனால் எப்படி மதுவுக்கு எதிராகப் போராட முடியும் இவனுக்கு எதுக்கு இந்த வீண் வேலை" என்றேன்.
"சொன்னால் கேட்க மாட்டேங்கிறான். நீ வேண்டுமானால் சொல்லிப் பாரேன் " என்றான்
"நான் சொன்னா மட்டும் கேப்பானா?. உனக்கு ஞாபகம் இருக்கா ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் ஒரு பார்ட்டியில் மதுவை அவனுக்கு நாம தானே அறிமுகப் படுத்தினோம். அப்போது ஓடி ஒளிஞ்சான். ஆனால் எப்படியோ கொஞ்சம் ஓவராவே மதுவோடு ஐக்கியமாட்டான்றது நமக்கு லேட்டாத் தானே தெரியும்!. மதுவுக்கு முழுசா அடிமையா இல்ல இருந்தான். நம்மை சட்டைகூட செய்யலையே. மதுவை அவனால் மறக்க முடியாதே!. அவன் சும்மா சொல்வான் விட்டுடு " என்று சொல்லி விட்டு போனை வைத்தேன்.
ஆனால் அவன் சீரியசாகத் தான் சொல்கிறானாம் . மதுவினால்தான் அவன் அம்மா முதியோர் இல்லத்திற்கு செல்ல நேர்ந்ததாம். உறவினர்களும் அவனை வெறுத்தது மதுவினால்தானாம். அவன் இன்று தனி மரமாய் இருப்பது மதுவினால்தான் என்று உறுதியாக சொன்னானாம்
இவனுக்கென்ன பைத்தியமா? போலீஸ்காரர்கள் சும்மா விடுவார்களா?
கார்த்திக்கை பற்றி உங்களிடம் சொல்லியாக வேண்டும். பணக்காரப் பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டவன். ஒரு ஆண்டுக்குள் வாழ்க்கை கசந்துபோனது கார்த்திக்கின் மனைவிக்கு. சொல்லாமல் கொள்ளாமல் சென்று விட்டாள் பிறந்த வீட்டுக்கு. ஆனால் கார்த்திக்கால் அவளை மறக்க முடியவில்லை. அவனுடைய மனைவியும் செல்வாக்கு மிகுந்த பிரபல தொழிலதிபரின் மகளுமான மது என்கிற மதுமிதாவை தன்னோடு சேர்ந்து வாழ வலியுறுத்தி அவர்கள் வீட்டுக்கெதிரே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போகிறானாம் என் நண்பன் கார்த்திக்.
நீங்களே சொல்லுங்கள்!
மதுவுக்கு எதிரான இந்தப் போராட்டம் தேவைதானா?
****************************************************************
படிச்சிட்டீங்களா?
ஆகா
பதிலளிநீக்குஅருமை ஐயா
தம1
பதிலளிநீக்குஇந்த போராட்டம் தேவையில்லைதான். இந்த மது இல்லாவிட்டால் என்ன நாட்டில் வேறு மது(பெண்கள்) இல்லையா என்ன?
பதிலளிநீக்குஹா... ஹா... நல்லாவே இருக்கு சேஞ்சு...!
பதிலளிநீக்குமது போதை தெளியலை போல!
பதிலளிநீக்குஹிஹிஹிஹி....
பதிலளிநீக்குகடைசியில் வைத்தீர்களே ஒரு ட்விஸ்ட்டு....!
பதிலளிநீக்குஇந்தப் போராட்டம் அவசியம் தேவை.
பதிலளிநீக்குஇந்த மதுவை விட்டால் அந்த மதுமிதா வந்து விடப் போகிறாள் ,திருந்துவானா குடிகாரன் :)
பதிலளிநீக்குஹாஹாஹா ஸூப்பர் டர்னிங் பாஸூ எப்படி ? இப்படியெல்லாம் ?
பதிலளிநீக்குவழக்கமான, அருமையான குசும்பு. ரசித்தோம்.
பதிலளிநீக்குஹா..ஹா...
பதிலளிநீக்குதேவையில்ல...
தமிழ்நாட்டில் நல்ல விஷயங்களுக்காகப் போராட்டங்கள் நடைபெறுவதே அபூர்வம். ஏதோ இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மக்கள் தாமாகவே ஒன்று திரண்டிருக்கிறார்கள். அதனை எதற்காக உங்களைப் போன்றவர்களும்கூட திசை திருப்பப் பார்க்கிறீர்கள்? இம்மாதிரியான 'காமெடிகளை'யெல்லாம் கொஞ்சம் ஒத்திவைக்கலாமே!
பதிலளிநீக்குமன்னிக்கவும். இதை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் வேண்டாம் நகைச்சுவைக்காக மட்டுமே.
நீக்குமது விலக்கு அமுல் படுத்தப் படவேண்டும் என்ற கோரிக்கைக்கே என் ஆதரவு
நான் சொல்லலாம்னு நெனச்சேன். அமுதவன் சார் சொல்லீட்டீங்க. எல்லாரும் குடிப்பதால் குடி சாதாரணமாயிடுச்சு. அதை தப்புனு சொல்லக்கூட தயங்கும் ஒரு மனநிலையில் இன்னைக்கு மக்கள் இருக்காங்க. இந்த ஒரு சூழலில் நீங்க இதை வச்சு காமெடி பண்னுறது ஒரு பக்கம். பதிவுலகில் உங்களைப் போல ஏகப்பட்ட ஆசிரியர்கள் இருக்காங்க, அவர்களில் ஒருவர்கூட உங்களை இப்பதிவுக்காக "அன்பாக" கடிந்துகொள்ள முன் வரவில்லை என்பதைப் பார்க்கும்போது கொஞ்சம் பயம்மாவே இருக்கு எனக்கு. நட்பு பாராட்ட வேண்டும் என்பத்ற்காக இப்படியெல்லாம் இருந்தால் நாம் நாசமாகப் போக வேண்டியதுதான்.
நீக்குI am seriously concerned because you are a teacher! :(
Sorry I have to give a negative mark for this post! Thank you for the understanding!
அடடா ! இந்த அளவுக்கு சீரியசா எடுத்துக் கொள்ளப் படும் என்று நான் நினைக்கவில்லை. இனி எச்சரிக்கையுடன் இருக்கிறேன்.. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி
நீக்குதேவையான போரட்டம்தான்...
பதிலளிநீக்குபடிக்கும் போதே மது மனைவி என்பதை அறிய முடிந்தது என்றாலும் செம....
" மதுவினால்தான் அவன் அம்மா முதியோர் இல்லத்திற்கு செல்ல நேர்ந்ததாம். உறவினர்களும் அவனை வெறுத்தது மதுவினால்தானாம். அவன் இன்று தனி மரமாய் இருப்பது மதுவினால்தான் என்று உறுதியாக சொன்னானாம் "
பதிலளிநீக்குஉங்கள் குடிகார நண்பரே தான் பதில் சொல்லி விட்டாரே அய்யா, வேறு என்ன வேண்டும். குடிக்கிறவன் உணரனும், அப்பத்தான் முடியும்.
போராட்டம் நடத்துவது எல்லாம், நாங்களும் " பிசினஸ் " லே இருக்கிறோம் என்று சொல்லிக்கொள்ள ஓட்டுபொறுக்கிகள் ஆடும் நாடகம் மதுவிலக்கு யாராலும் நடைமுறைக்கு கொண்டு வர முடியாது, எவனும் கொண்டுவர மாட்டான். அரசு இலவசத்தை நிறுத்தட்டும். விலையில்லா பொருள் குடுக்கிறதை நிறுத்தட்டும். குழந்தைகளுக்கு இலவச சோறு போட்டு, பிச்சை காரர்களை உருவாக்குவதை நிறுத்தட்டும், இலவச மின்சாரத்தை நிறுத்தட்டும்....... இன்னும் எத்தனையோ சொல்லி மாளாது
Read more: http://www.tnmurali.com/2015/08/protest-against-alcohol.html#ixzz3iSEiHYTq
மதுப்பழக்கம் வந்துவிட்டால் மனைவியும் மறந்துபோவாள்..... இப்படி இருந்திருக்கலாம்...
பதிலளிநீக்குமதுவிலக்கு பற்றிய பதிவோ என்று நினைக்கையில் இப்படி ஒரு டிவிஸ்ட்! நகைச்சுவையை ரசித்தேன்!
பதிலளிநீக்குட்விஸ்ட்!
பதிலளிநீக்குதலைப்பை மற்றும் மாற்றி விடுங்கள் தங்கள் எழுத்து நடையில் சூப்பர்.
பதிலளிநீக்கு7C67610318
பதிலளிநீக்குTakipçi Satın Al
Whiteout Survival Hediye Kodu
Google Konum Ekleme
Danone Sürpriz Kodları
101 Okey Vip Hediye Kodu