என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Wednesday, August 22, 2012

சுஜாதா சொன்ன பச்சைப் பொய்கள்


தமிழின் மிகச் சிறந்த, இன்றும் இளைஞர்களின் மனம் கவர்ந்த விஞ்ஞான எழுத்தாளர் சுஜாதா சொல்கிறார்
      "முன்னேற்ற நாடுகளில் இப்போது சுற்றுச் சூழல் பற்றி கவனம் அதிகமாயிருக்கிறது. ஓசோன் ஓட்டை அதிகமாகி விட்டது; அடுத்த நூற்றாண்டில் மூச்சுத் திணறி  சாகப் போகிறோம்; கழிவுப்பொருட்களை நதியில் கலக்கக் கூடாது;பிளாஸ்டிக் அலுமினிய விரயங்கள் செய்யக் கூடாது;ஆஸ்பத்திரிக் குப்பைகளை எரிக்க வேண்டும் என்றெல்லாம் கூறப்படுகின்றன. இவை எல்லாம் பச்சைப் பொய்கள்.இவற்றைப் புரிந்து கொள்வோம்.

பொய் 1. பழைய பேப்பர் அலுமினியக் குப்பைகளை திரும்பப் பயன்படுத்துவதே சிறந்தது.

விளக்கம்: உண்மைதான். ஆனால் அது அலுமினியத்துக்குத்தான் முற்றும் பொருந்தும். பழைய பேப்பரை நியூஸ் ப்ரிண்டாக அல்லது அட்டைப் பெட்டியாக மாற்றலாம்  ஆனால் அவற்றை வெளுக்கப் பயன்படுத்தும் தண்ணீரில் உள்ள கழிவுப் பொருட்கள் மூலக் காகித உற்பத்தியில் உள்ள கழிவுப்பொருட்களைவிட அதிகம்.காகிதத்தை திரும்பப் பெறுவதால் மரங்களை வெட்டுவதை நிறுத்துகிறோம் என்பதும் தவறு. காகித உற்பத்திக்காக மரங்கள் நட்டு வெட்டப் படுகிறது .தேவை குறைந்து விட்டால் மரம நடுவதும் குறைந்து விடும்.

பொய் 2: பிளாஸ்டிக் எப்போதுமே கெடுதல் தருவன. அது சுற்று சூழலுக்கு எதிரி அது லேசில் மக்காது.அதில் உள்ள விஷப் பொருட்கள் நிலத்தடி நீரில் கலந்துவிடும்.பிளாஸ்டிக் நூற்றாண்டுகளாக அப்படியே இருக்கும் மண்ணோடு மண்ணாக மாறாது

விளக்கம்: பிளாஸ்டிக் மண்ணுடன் கரையாமல் மாறாமல் இருப்பதே பத்திரம். .அதே போல பேப்பரும் ஆண்டுக் கணக்கில் அழிவதில்லை.
ஒரு பேப்பர் குப்பையும் பாலிஸ்டைரின் குப்பையும் ஒப்பிடும்போது பின்னதை உற்பத்தி செய்ய ஆறில் ஒரு பாகம் மூலப் பொருட்களும் 12 இல் ஒரு பாகம் நீராவியும் மின்சாரமும்தான் தேவைப் படுகிறது. விலையும் பாதிதான்.அதில் ஓசோன் ஓட்டையை  உண்டாக்கக் கூடிய சி.எஃப்.சி யும் (  CFC ன்னா குளோரோ புளோரோ கார்பன்தானே?)   பயன் படுத்தப் படுவதில்லை.

  எல்லா பிளாஸ்டிக்குகளுமே கெட்டதல்ல உதாரணமாக பால் பாக்கெட்டுக் பிளாஸ்டிக் உறைகள் செய்ய கண்ணாடி குப்பிகளுக்கு ஆகும் மின் செலவை விட பாதியளவே தேவைப் படுகிறது.மறைமுகமாக பிளாஸ்டிக்கினால்  சுற்று சூழல் பாதிப்பு குறைவு.

பொய் 3. நாம் அதிகமாக குப்பை போடுகிறோம் குப்பையை பள்ளங்களில் நிரப்பக் கூடாது..

விளக்கம்: குப்பை அதிகம் என்பது சரிதான் ஆனால் Land Fills. என்ற குப்பையை சேகரித்து  ஊருக்கு வெளியே தாழ்வுப் பகுதிகளை நிரப்பும் முறையை சரியாகப் பிரயோகித்தால் ஆயிரம் வருஷங்களுக்கு உண்டான குப்பையை ஒரு சில நிரப்பலில் போடலாம் என்கிறார்கள் இதில்  எரிப்பதிலோ மாற்றுவதிலோ உள்ள செலவை விட குறைந்த செலவே ஆகும். எனவே குப்பை அதிகமில்லை .அதைக் கொட்டும் முறைதான் சரி இல்லை

பொய் 4 . பூச்சிக் கொல்லி மருந்துகள் அபாயமானவை.அவை ஆரோக்கியத்தை பாதிக்கிறது .

விளக்கம்: கலிபோர்னியாவில் உள்ள ஆராய்ச்சி சாலையில் பரிசோதித்துப் பார்த்தபோது சில முடிவுகள் வேடிக்கையாக இருந்தன .தாவரங்கள் இயற்கையாகவே உற்பத்தி செய்து கொள்ளும்  ரசாயனங்களின் அளவு செயற்கை பூச்சிக் கொல்லிகள் படிந்த அளவை விட அதிகம். டையாக்சின் போன்ற வேதிப் பொருள்களை தாவரங்களே  உற்பத்தி செய்து கொள்கின்றன. செயற்கை பூச்சி கொல்லி அபாயத்தை பற்றி தவறான தகவல்கள் பரவுவதால் மக்கள் பயந்து போய் பழங்கள் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அதனால் கேன்சர் வரக கூடிய அபாயம்தான் அதிகரித்திருக்கிறது .இது போல் ஜனத்தொகை அதிகம் என்பதும் அமிலமழை நம் காடுகளை அழிக்கின்றன என்பதும் பச்சைப் பச்சைப் பொய்களே!"

   (சுஜாதா ரசிகர்கள் எல்லாம் கோவமா பாக்காதீங்க. இதெல்லாம் எப்ப சொன்னார்னு  கேக்கறீங்களா? இப்படில்லாம் மிரட்டினீங்கன்னா எனக்கு பதில் சொல்லத் தெரியாது. நான் அழுதுடுவேன். அது வந்து அமெரிக்க தூதரகத்தின் செய்தி நிறுவனம் SCIENCE UPDATES என்ற அறிவியல் இதழில் மேலே சொன்னததான்  "பச்சைப் பொய்கள்" என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் சொல்லி இருந்துதாம். அதைத்தான் நம் சுஜாதா சார்  "இந்த நூற்றாண்டின் இறுதியில் சில சிந்தனைகள்" (திருமகள் நிலையம் பதிப்பகம்) என்ற புத்தகத்தில் ஓசோன் ஓட்டை என்ற  தலைப்பில் சுட்டிக்காட்டி சொல்லி இருந்தாரு.   அதைத்தான் நானும் சொல்லி இருக்கிறேன். ஹிஹிஹிஹி . அநியாமா இந்த பச்ச புள்ள மேல கோவத்தை காட்டாதீங்க! )

உங்க குப்பைய எல்லாம், சாரி! கோவத்த எல்லாம் கம்மென்ட் பாக்ஸ்ல கொட்டுங்க
******************************************************************

நாளை: ஆவலுடன் அந்தரங்கம்
*******
இதைப்  படித்து விட்டீர்களா?
நான் கழுதை! 
 

42 comments:

 1. ரெம்பப் புத்திசாலியாகவும்,(அறிவாளி) நகைச்சுவையாளனாகவும் பதிவிடப் பட்டுள்ளது.
  ரசித்தேன். நன்றி. தொடருங்கள். வருவேன்.
  நல்வாழ்த்து முரளி.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 2. அருமை...

  பல தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது...

  வாழ்த்துக்கள்... நன்றி...

  ReplyDelete
 3. இது போல சுற்று சூழல் விவகாரத்தில் பல பொய்கள் தெரிந்தே பரப்பப்படுகின்றன. காரணம், இதன் பின்னிலையில் நீண்ட (சர்வதேச) அரசியல் இருப்பதும் காரணம்.

  ReplyDelete
 4. அருமையான பதிவு.

  இது போல சுற்று சூழல் விவகாரத்தில் பல பொய்கள் தெரிந்தே பரப்பப்படுகின்றன. காரணம், இதன் பின்னிலையில் நீண்ட (சர்வதேச) அரசியல் இருப்பதும் காரணம்.//

  திரு. வெங்கட ஸ்ரீநிவாசன் சொல்வதை ஆமோதிக்கிறேன்.
  இப்படிதான் பரப்பபடுகிறது. உதாரணம் - புவி வெப்பம் அடைதல்.

  ReplyDelete
 5. நீயெல்லாம் நல்லா வருவாய்.........

  நல்ல தகவல்கள் தலைப்புதான் ஏமாற்றிவிட்டது...

  ReplyDelete
 6. கடுப்பை ஏத்தி தணிச்சு விட்டுட்டிங்க பாஸ்

  ReplyDelete
 7. ஒரு பதிவைப் படிக்கவைக்க எப்படியெல்லாம்? குத்துக்கரணம் போடவேண்டியுள்ளது. நான் தலைப்பு பற்றி சொன்னேன்.
  நல்ல தகவல்கள்

  ReplyDelete
 8. அருமையான பதிவு. இதை படித்தவுடன் எனக்கு ஜார்ஜ் கார்லின் இந்த வீடியோதான் நினைவுக்கு வந்தது...
  http://www.youtube.com/watch?v=eScDfYzMEEw

  ReplyDelete
 9. இன்றுமுதல் நீங்கல் சூழல் திலகம் என அன்போடு அழைக்கப்படுவீர்கள்!

  ReplyDelete
 10. நல்ல நல்ல தகவல்கள்! நன்றி!

  இன்று என் தளத்தில்
  கோயில்களில் கொள்ளையும் பக்தர்கள் வேதனையும்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_22.html
  ஒரு வில்லன்! ஒரு ஹீரோயின்! ரெண்டு ஹீரோக்கள்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4096.html

  ReplyDelete
 11. அருமையான உண்மையான பதிவுங்க முரளிதரன் ஐயா.

  (இப்படி ஏமாத்திட்டீங்களே... அவ்வ்வ்வ்வ்...)

  ReplyDelete
 12. அருமையான பகிர்வு. அறிந்து கொண்டேன். பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள்.

  ReplyDelete
 13. தலைப்பும் பதிவும் முடிவும் படு சுவரஸ்யம்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. நல்ல பதிவு. சுவாரசியம் கருதி இட்ட தலைப்பு... :)

  ReplyDelete
 15. தலைப்பு எப்படி வைக்க வேண்டுமென்பதை உங்களிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும் :)
  நல்ல தகவல்கள்தான், ஆனால் இப்படி பூச்சிக்கொல்லிகளை போட்டு நாம் விவசாய நிலங்களை மலடாக்கி விடுகின்றோம் என்பது வருத்தமானது!!

  ReplyDelete
 16. தலைப்பை வைச்சு இழுத்துப்புட்டு கடைசியில லாவகமா கழன்றுவிட்டீர்களே!!!!!
  ஆனால் விடயங்கள் பல நான் அறிந்திராதவை :)

  தாமதத்திற்கு மன்னித்துவிடுங்கள் பாஸ் plz

  ReplyDelete
 17. பெரியவங்க, படிச்சவங்க சொன்னாங்கன்னு ஒரு கருத்தை அப்படியே நம்புவதைவிட அதை ஆராய்ந்து உண்மைகளை அறிந்து கொள்வது நல்லது, என்பதை உங்கள் பதிவு உணர்த்துகிறது

  ReplyDelete
 18. முதல் கருத்திற்கு மிக்க நன்றி வேதா மேடம்

  ReplyDelete
 19. //திண்டுக்கல் தனபாலன் said...
  அருமை...
  பல தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது...
  வாழ்த்துக்கள்... நன்றி...//
  நன்றி தனபாலன் சார்!

  ReplyDelete
 20. //வெங்கட ஸ்ரீநிவாசன் said...
  இது போல சுற்று சூழல் விவகாரத்தில் பல பொய்கள் தெரிந்தே பரப்பப்படுகின்றன. காரணம், இதன் பின்னிலையில் நீண்ட (சர்வதேச) அரசியல் இருப்பதும் காரணம்.//
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

  ReplyDelete
 21. //கோமதி அரசு said...
  அருமையான பதிவு.
  இது போல சுற்று சூழல் விவகாரத்தில் பல பொய்கள் தெரிந்தே பரப்பப்படுகின்றன. காரணம், இதன் பின்னிலையில் நீண்ட (சர்வதேச) அரசியல் இருப்பதும் காரணம்.//
  திரு. வெங்கட ஸ்ரீநிவாசன் சொல்வதை ஆமோதிக்கிறேன்.
  இப்படிதான் பரப்பபடுகிறது. உதாரணம் - புவி வெப்பம் அடைதல்//
  பல விஷயங்களை நாம் ஆராய்வதில்லை..

  Read more: http://tnmurali.blogspot.com/2012/08/sujatha.html#ixzz24O8P7sdB

  ReplyDelete
 22. //இடி முழக்கம் said...
  நீயெல்லாம் நல்லா வருவாய்.........
  நல்ல தகவல்கள் தலைப்புதான் ஏமாற்றிவிட்டது../.

  இந்த தலைப்பு இவ்வளவு பேரை வரவழைக்கும்னு நினைக்கல. நன்றி இடி முழக்கம்

  ReplyDelete
 23. //♔ம.தி.சுதா♔ said...
  கடுப்பை ஏத்தி தணிச்சு விட்டுட்டிங்க பாஸ்//
  முதல் வருகை என்று நினைக்கிறேன். நன்றி நண்பரே.
  உள்ள இழுக்கறதுக்கு என்னெல்லாம் செய்ய வேண்டி இருக்கு.

  ReplyDelete
 24. நண்டு @நொரண்டு -ஈரோடு said...
  ரைட்டு.

  மிக்க நன்றி சார்!

  ReplyDelete
 25. //யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
  ஒரு பதிவைப் படிக்கவைக்க எப்படியெல்லாம்? குத்துக்கரணம் போடவேண்டியுள்ளது. நான் தலைப்பு பற்றி சொன்னேன்.
  நல்ல தகவல்கள்//
  உண்மைதான் பாஸ்.பதிவை விட தலைப்புக்குத் தான்
  அதிகமா யோசிக்க வேண்டி இருக்கு.

  ReplyDelete
 26. s suresh said...
  நல்ல நல்ல தகவல்கள்! நன்றி!//
  நன்றி சுரேஷ் சார்.

  ReplyDelete
 27. Karthik Vasudhevan said..
  அருமையான பதிவு. இதை படித்தவுடன் எனக்கு ஜார்ஜ் கார்லின் இந்த வீடியோதான் நினைவுக்கு வந்தது..//
  நன்றி வாசுதேவன்!

  ReplyDelete
 28. //AROUNA SELVAME said...
  அருமையான உண்மையான பதிவுங்க முரளிதரன் ஐயா.
  (இப்படி ஏமாத்திட்டீங்களே... அவ்வ்வ்வ்வ்...)//
  நன்றி சார்!

  ReplyDelete
 29. //Rasan said...
  அருமையான பகிர்வு. அறிந்து கொண்டேன். பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள்.//
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பாஸ்

  ReplyDelete
 30. வெங்கட் நாகராஜ் said...
  நல்ல பதிவு. சுவாரசியம் கருதி இட்ட தலைப்பு... //
  ஆமாம் சார் ! நன்றி

  ReplyDelete
 31. //பழூர் கார்த்தி said...
  தலைப்பு எப்படி வைக்க வேண்டுமென்பதை உங்களிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும் :)//
  நன்றி ஹிஹிஹிஹி

  ReplyDelete
 32. Gobinath said...
  தலைப்பை வைச்சு இழுத்துப்புட்டு கடைசியில லாவகமா கழன்றுவிட்டீர்களே!!!!!
  ஆனால் விடயங்கள் பல நான் அறிந்திராதவை :)

  தாமதத்திற்கு மன்னித்துவிடுங்கள் பாஸ் //
  வா கோபி நீ வருவாய் என நான் இருந்தேன். நீ மறந்தாய் என் நான் நினைத்தேன்.

  ReplyDelete
 33. //கோவி.கண்ணன் said..
  பெரியவங்க, படிச்சவங்க சொன்னாங்கன்னு ஒரு கருத்தை அப்படியே நம்புவதைவிட அதை ஆராய்ந்து உண்மைகளை அறிந்து கொள்வது நல்லது, என்பதை உங்கள் பதிவு உணர்த்துகிறது//
  நன்றி கோவி சார்!

  ReplyDelete
 34. Ramani said...
  தலைப்பும் பதிவும் முடிவும் படு சுவரஸ்யம்
  தொடர வாழ்த்துக்கள்//
  வருகைக்கும் கருத்துக்கும் வாக்கிற்கும் நன்றி சார்!

  ReplyDelete
 35. நிறைய பேர் படிச்சும் வோட்டு விழலயே! சுஜாதா ரசிகர்களோட கோவத்துக்கு ஆளாகிட்டமோ?

  ReplyDelete
 36. தலைப்பைபார்த்து அதிர்ந்தேன், உள்ளடக்கம் படித்தவுடன் புரிந்தது. நல்ல பகிர்வு.

  ReplyDelete
 37. நீங்க பொழச்சுக்குவீங்க பாஸ்......

  ஒரு லாட்ஜ சொந்தமா வாங்கி யோசிப்பீங்க போல....

  but very informative..... nice

  ReplyDelete
 38. இன்று தான் இதை படித்தேன்

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895