என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Saturday, January 19, 2013

வாங்காத புத்தகங்கள் -புத்தகக் காட்சி

படத்திற்கு நன்றி வெங்கடரங்கன்
  ஒரு பதிவர் என்றால் புத்தகக் கண்காட்சி பற்றி கட்டாயம்  எழுதியாகவேண்டும். கண்காட்சி தொடங்கிய அன்றே போய்விட்டேன். அப்போதுதான் ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தார்கள்.எல்லாக் கடைகளும் தயாராகாமல் இருந்தது. மூட்டை மூட்டையாய் புத்தகங்கள் வந்து கொண்டிருந்தது.

  உள்ளே நுழைவதற்கு டிக்கெட் வழங்குவது தொடங்கப் படவில்லை. டிக்கெட் இன்றியே (ஒசின்னா எவ்வளோ சந்தோஷம்) எல்லோரும் உள்ளே போவதும் வருவதுமாக இருந்தனர். சில கடைகள் அப்போதே புத்தக விற்பனைக்கு தயாராக இருந்தது. அமைப்பாளர்கள் கடை வைத்திருப்பவர்களுக்கு  பேட்ஜ் கொடுப்பதற்காக மைக்கில் கூப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்படியே சும்மா ஒரு சுற்றிப் பார்த்துவிட்டு திரும்பி விட்டேன்.   முதல் நாள் நீண்ட தூரம் நடந்த அனுபவம் காரணமாக அடுத்த நாள் இரு சக்கர வாகனத்தில்   சென்றேன். 

   உள்ளே நுழைவதற்கு முன் புலவர் ஐயாவை சந்தித்தேன்.இம்முறை டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே சென்றேன். நுழைவுச் சீட்டின் இணைப்பில் பெயர் முகவரி எழுதி பெட்டிக்குள் போட்டுக் கொண்டிருந்தனர். அதிர்ஷ்டசாலிகளுக்கு பரிசு உண்டாம். சென்றமுறை இதே மாதிரி எழுதிப் போட்டிருந்தேன். பல மாதங்களுக்குப் பிறகு ஒரு ஃபோன் புத்தகக் கண் காட்சியில் உங்களுக்கு பரிசு விழுந்திருக்கிறது. மனைவியுடன் வந்து பரிசைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாம். மனைவியுடன் வந்தால் மட்டுமே அனுமதியாம்.அது ஒரு விதமான ஏமாற்று வேலை என்று தெரிந்து விட்டது. அதனால் போகவில்லை. ஆனாலும் மீண்டும் மீண்டும் அழைத்து டார்ச்சர் பண்ணிக் கொண்டிருந்தார்கள் அதனால் இந்த தடவை முன்னெச்சரிக்கையாக அந்தத் தவறை செய்யவில்லை. காட்சி அமைப்பாளர்கள் தொலைபேசி உள்ளிட்ட இந்த விவரங்களை  அளிப்பது சரியா என்று யோசிக்க வேண்டும்.

  முதல் வரிசையில் எஸ்.ராமகிருஷ்ணன் பெரிய பேனரில் கொஞ்சம் இளமையாக காட்சி தந்து கொண்டிருந்தார்.கடந்த முறை சுகி சிவத்தின் போஸ்டர்கள் இதேபோல் இருந்ததாக ஞாபகம். 

  +2 வில் எனக்கு தமிழாசிரியராக இருந்த  கோ.பெரியண்ணன் அவர்களும் ப்ளக்சில் காட்சி அளித்துக் கொண்டிருந்தார் அவருடைய நூல்களும் இடம் பெற்றிருந்தன. தமிழ் இலக்கணம் எளிமையாக நடத்துவதில் வல்லவரான இவர் திருக்குறளுக்கும் உரை எழுதி இருக்கிறார். 

  ஆங்காங்கே ஷாருக்கானின் தலையை வெட்டி ஒட்டி இணைக்கும் போட்டோ ஷாப் பாடங்கள் நடந்து கொண்டிருந்தது. இந்த சி.டி வாங்க விரும்பினாலும் இதை கொண்டு போய் போட்டுப்  பார்த்தால் பெரும்பாலும் நமக்கு தெரிந்ததையே கற்றுத் தருவார்கள் என்பதால் அதை தவிர்த்து விட்டேன். 

    நிறையப் பேர் பாராட்டிய பூமணி எழுதிய "அஞ்ஞாடி" (இப்படிதான் தெரியாத பேரை எல்லாம் சொன்னா இலக்கியவாதின்னு அர்த்தம்) புத்தகத்தை பார்தத்தேன், தலையணை சைசில் இருந்தது .விலையும் மிரட்டியது.அங்கிருந்து விரட்டியது. சாகித்ய அகடமி விருது பெற்ற தோல் நாவலும்   தென்பட்டது. ஜெயமோகன்  இந்தப் புத்தகத்தைப் பற்றி காராசாரமாக கருத்து கூறி இருந்ததால் அதையும் வாங்க மனம் வரவில்லை. அப்புறம் "பாபர்நாமா"  தமிழில் இருந்தது அதை வாங்க ஆசை இருந்தாலும் ஒரு சுற்று சுற்றி விட்டு பின்னர் வாங்கலாம் என்று அடுத்ததற்கு தாவி  விட்டேன்.

  யாருமே இல்லாத இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு துறையின் ஸ்டாலில் 2011 தமிழக மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிய ஒரு புத்தகத்தை வாங்கினேன். அவர்களே கொஞ்சம் ஆச்சர்யத்துடன் என்னைப் பார்த்தனர். இதற்கே  மூன்று மணிநேரம் செலவாகி விட சுஜாதாட்ஸ், லெனின் பற்றிய புத்தகம் ஒன்று,30 நாட்களில் தெலுங்கு,இசைக்கலைஞர் யானி ,HTML அடிப்படையைக் கற்றுக்கொள்ள புத்தகம்,தமிழ் கம்பூயூட்டரின் பழைய இதழ்கள், பாரதியார் பாடல்கள், இவற்றை அவசரமாக வாங்கிக் கொண்டு வெளியே வந்தேன். எங்க வீட்டம்மா கேட்ட புத்தகம் கிடைக்கவில்லை (தேடினாத்தானே!)

   நம்ம முன்னணிப் பதிவர்கள் அங்குதான் அன்று இருந்ததாகச் சொல்கிறார்கள். புலவர் ஐயாவை மட்டுமே சந்தித்தேன்.

    புத்த வெளியீட்டு விழாவையும் எட்டிப்  பார்த்தேன், திருமாவளவன். புத்தரைப் பற்றி  பேசிக் கொண்டிருக்க சிறிது நேரம் கேட்டுவிட்டு வீடு திரும்பினேன். 

   நூல்  வெளியிட்ட மின்னல் வரிகள் கணேஷ் கவியாழி கண்ணதாசன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்

*****************************************************************************************************************

34 comments:

 1. ஆஹா... நீங்களும் புத்தகக் காட்சி போயிட்டு பதிவு போட்டாச்சு! நல்லது.... :)

  த.ம. 1

  ReplyDelete
  Replies
  1. நன்றி நாகராஜ் சார்!

   Delete

 2. நூல் வெளியிட்ட மின்னல் வரிகள் கணேஷ் கவியாழி கண்ணதாசன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி ராஜேஸ்வரி

   Delete
 3. பதிவர்களின் புத்தகங்களுக்கு வாழ்த்துக்கள், ஒருபோதும் புத்தகக் கண்காட்சியைத் தவறவிட்டதில்லை, புலம்பெயர்ந்த பின் சாத்தியமற்று விட்டது, நல்ல புத்தகங்கள் சிலவற்றை பற்றி பதிவுகள் ஊடாக வாசித்தேன், பதிவர்களின் புத்தகங்கள், யதார்த்த பவுத்தம், தோல் நாவல் வாங்க ஆசை முயறிசிப்போம் நண்பர்கள் ஊடாக ..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி இக்பால் செல்வன்

   Delete
 4. special wishes to kaviyali kannadasan

  ReplyDelete
  Replies
  1. நன்றி செந்தில் குமார்

   Delete
 5. புத்தகங்கள் பார்க்கவும் பிடித்தவற்றை வாங்கவும் ஆசைதான்.

  எங்க ஊரிலிருந்து சென்னை வெகுதூரமாயிற்றே.

  வீட்டம்மாவை இனியும் இப்படி ஏமாற்றாதிர்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி பரமசிவம் சார்!

   Delete
 6. எங்களால் சாத்தியம் இல்லாதது.. தூரத்தில் இருந்து ரசித்து கொள்கிறோம்

  ReplyDelete
  Replies
  1. புத்தகங்கள் வாங்குவதை விட அத்தனை புத்தகங்களையும் ஓர் இடத்தில் பார்ப்பது ஒரு சுகம்

   Delete
 7. // ஒரு பதிவர் என்றால் புத்தகக் கண்காட்சி பற்றி கட்டாயம் எழுதியாகவேண்டும். //

  பதிவர் என்றால் இப்போது கையில் கேமராவும் இருக்க வேண்டும். எப்படியும் அடுத்த ரவுண்டு போவீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான்.நான் என்னோட கைபேசியில எடுத்தேன். அது சரியாக இல்லை.

   Delete
 8. நாலைந்து வருடங்களாகிவிட்டது புத்தக கண்காட்சிக்கு சென்று! இந்த வருடமும் சொந்த பிரச்சனைகளால் போக முடியவில்லை! பகிர்வுக்கு நன்றி! இன்று என் தளத்தில் அண்டப்புளுகன் ஆகாசப்புளுகன்!http://thalirssb.blogspot.in/2013/01/blog-post_19.html நான் தான் மாஸ் ஹீரோ! பவர்ஸ்டார் அட்ராசிட்டி!http://thalirssb.blogspot.in/2013/01/blog-post_9185.html

  ReplyDelete
 9. இப்பத்தான் கவனிச்சேன்! புது பெயரை! நல்ல பொருத்தமான பெயர்தான்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 10. நான் இந்த புத்தகம் அந்த புத்தகம் என்றில்லை.
  எதெல்லாம் எனக்குக் கிடைக்கிறதோ
  அதெல்லாவற்றையும் வாசித்துவிடுவேன்.
  என் அம்மா ஊரிலிருந்து அனுப்பும்
  பார்சல் பேப்பரில் உள்ளதையும் படிப்பேன்.
  வேறு என்ன செய்வதாம்.... எனக்கு
  கிடைத்தது அவ்வளவு தானே...

  உங்களுக்கெல்லாம் சான்ஸ்.
  பகிர்வுக்கு நன்றி முரளிதரன் ஐயா.

  ReplyDelete
  Replies
  1. நன்றி அருணா. ஐயாவைத் தவிர்க்கவும்

   Delete
 11. புதுப்பெயரும் படங்களும் அழகு.

  ReplyDelete
 12. நூல் வெளியிட்ட மின்னல் வரிகள் கணேஷ் கவியாழி கண்ணதாசன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.//

  நானும் உங்களுடன் சேர்ந்து வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி மேடம்

   Delete
 13. புத்தகங்கோடு உறவாடும் நீங்கள் எல்லோரும் அதிஷ்டசாலிகள்தான் !

  ReplyDelete
 14. புத்தகக் கண்காட்சிக்கு வர இயலாதது
  கொஞ்சம் வருத்தமாகத்தான் உள்ளது
  அடுத்தமுறை அவசியம் வர முயற்சிக்க வேண்டும்
  சிறப்புப் பதிவு அருமை.வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரமணி சார்! நீண்ட நாட்களாக வலைப்பக்கம் வரவில்லையே! என்ன காரணம் தெரியவில்லையே என்று வருத்தப் பட்டேன். வருகைக்கு மிக்க மகிழ்ச்சி

   Delete

 15. வந்த இரண்டுமுறையும் தங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி முரளி!

  ReplyDelete
  Replies
  1. நானும் அதே மகிழ்ச்சியில் இருக்கிறேன் அய்யா!

   Delete
 16. முரளிதரன் அண்ணே, நேத்து புத்தகக் கண்காட்சிக்கு வந்தது பத்தி எழுதக்காணோம் :-)))

  ReplyDelete
  Replies
  1. நேத்துதான் அதைப் பத்தி எழுதினேன். அடுத்த பதிவும் அதைப் பத்தி எழுதனுமான்னு யோசிச்சேன்.நாளைக்கு எழுதிடறேன்.

   Delete
 17. ***ஒரு பதிவர் என்றால் புத்தகக் கண்காட்சி பற்றி கட்டாயம் எழுதியாகவேண்டும்.***

  முரளி: ஒரு சில பதிவர்களுக்கு பதிவெழுத மட்டுமே பிடிக்கும், அச்சில் வரும் புத்தகங்கள் வாசிப்பது பிடிக்காதுணு நெனைக்கிறேன். உலகம் வேகமாக மாறிக்கொண்டு போகிறது. பதிவர்கள் பலவகை! ஒவ்வொருவரும் ஒரு வகை!

  ReplyDelete
 18. மூட்டை மூட்டையாய் புத்தகங்கள்....முதல் நாளின் காட்சிகளை வரிசைபடுத்திவிட்டீர்கள்...

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895