என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Sunday, July 14, 2013

யாரை தப்பு சொல்லி என்ன பண்ண இளவரசா?


       இளவரசன் இறந்து ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில் பல்வேறு ஊகங்களுக்கும் பரபரப்புக்கும் மத்தியில் இன்று இளவரசனின் இறுதி சடங்குகள்  நடந்து முடிந்திருக்கின்றன.. காதலுக்காக உயிரை மாய்த்துக் கொள்வது மடத்தனமானது என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பெற்றோர்களும் பாடம் கற்க வேண்டும்..தவறான் முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவேண்டும்.
   
    இந்த சம்பவம் இன்னும் சில நாட்களுக்குப் பின் மறந்து போகலாம்.ஆனால் அதன் பாதிப்பு  ஒரு வார காலமாக இருக்கவே செய்தது . அந்த பாதிப்பின் விளைவே  எழுந்ததே  ஒரு கிராமத்துக் கிழவியின்  புலம்பல் .                                              

                                                  ஒருவாரம் ஆகிடிச்சு
                                                         ஆனாலும் உன் பேச்சு
                                                  தெருவோரம் நின்னுகிட்டு  
                                                         இன்னமும்தான் பேசறாங்க
                                                  யாரை தப்பு சொல்லி 
                                                         என்னபண்ண  இளவரசா
                                                   கூறு போட்டு உன் உடம்பை
                                                         கொண்டுவரும் நிலை ஆச்சே

                                                   ஒரு திரிசா இல்லன்ன
                                                          திவ்யா கெடப்பாளே
                                                   ஒருதிவ்யா இல்லனா
                                                              தீபா  இருப்பாளே
                                                   பெருசா அவகிட்ட
                                                             என்னத்த நீ கண்ட
                                                   பரிசா உன் உசுரை
                                                            பாக்காம நீ குடுத்த


                                                  கண்ணுகுளம் வத்திடிச்சி
                                                         காவிரியா காஞ்சிடிச்சு
                                                  பொன்னுமணம் என்னன்னு
                                                         புரியாம  போயிடிச்சு
                                                  என்னாதான் இக்கட்டோ
                                                           எனக்கொண்ணும்   புரியலையே
                                                  கண்ணான உன் உசுரை
                                                          காப்பாத்த முடியலயே

                                                  பத்திரிக்கை உன்னாலே
                                                           பரபரப்பா வித்துடுச்சு
                                                  மத்தவங்க சோகமெல்லாம்
                                                           விளம்பரமா மாறிடிச்சு
                                                  நித்தம்ஒரு சேதி வந்து
                                                           நிம்மதியை தொலைச்சிடிச்சி
                                                  செத்தவன்நீ எழுந்து வந்து
                                                          சொன்னாத்தான் தெரியுமையா

                                                   கொடும்பாவி எவனோதான்
                                                            கொன்னே போட்டானோ
                                                   தடம்மாறி தற்கொலைதான்
                                                            செஞ்சிகிட்டு செத்தாயோ
                                                   ஒடம்பு பின்னமாகி
                                                           ஓரமா நீ கெடந்த
                                                   குடும்பம் உருக்குலஞ்சி
                                                           கண்ணீரில் மிதக்குதையா
   

                                                    உப்பு தண்ணிதானே
                                                            உலகமெல்லாம் நிறைஞ்சிருக்கு
                                                    எப்பவுமே அதர்மம்தான்
                                                            அதிகாரம் செஞ்சிருக்கு
                                                    தப்பு செஞ்சவன் தான்
                                                            தலநிமிந்து நடக்குறானே
                                                    துப்பு கெட்ட உலகமிது
                                                             தூத்தாம என்னசெய்ய?


                                                    ஆதியில வாழ்ந்தசனம்
                                                            சாதியைத்தான் நினச்சதில்ல
                                                    பாதியில வந்த சாதி
                                                            பாடா படுத்துதையா
                                                    சேதம் செஞ்சுதான்
                                                             செல்வாக்கை காட்டணுமா?
                                                     மோதி  சாகணுமா?
                                                             முட்டாளா வாழணுமா?--------------------------------------------------------------------------------------------------

39 comments:

 1. உணர வேண்டியவர்கள் உணர்ந்து கொண்டால் சரி...

  கிராமத்துக் கிழவி நன்றாகவே சாடியுள்ளார்கள் - உண்மையை...!

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் சார்

   Delete
 2. கிராமத்து கிழவியின் கேள்விகளுக்கு பதில் சொல்லப்போவது யாரோ....

  ReplyDelete
  Replies
  1. காலம்தான் பதில் சொல்ல வேண்டும்

   Delete
 3. இவ்வளவு உருக்கமாக, உள்ளக்கிடக்கையை எடுத்துரைக்க கிராமத்துக் கிழவியால் தான் முடியும். ஆனால் வாழவேண்டிய வயதில் மாண்டு போனவனை, புதைக்கும் வரையாவது அடக்கி வாசிக்காமல், அவனை வசைபாடும் சிலர் தமிழர்களை நினைக்கும் போது தான் வேதனையாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு நட்ன்ரி வியாசன்

   Delete
 4. கிராமத்து கிழவியின் கேள்விகளுக்கு பதில்தான் இவ்வுலகில் இல்லை, இன்னும் எத்தனை இளவரசர்களோ தெரியவில்லை...!

  ReplyDelete
  Replies
  1. அதைத்தான் எல்லோரும் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறோம்

   Delete
 5. kizhavi vari...

  kizhithupottathayyaa..

  ReplyDelete
 6. கிராமத்துக் கிளவியின் கேள்விகளுக்கு என்றேனும் பதில் கிடைக்குமா?

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் ஒரு நாள் கிடைக்கும்

   Delete
 7. மிக அருமை. சொல்ல வந்த, மக்கள் நினைக்கும் கருத்து யாவும் கவிதையின் வரிகளில்.. யாரந்த கிராமத்துக் கிழவி?

  ReplyDelete
  Replies
  1. என்னோட கற்பனைதான் அந்த கிராமத்துக் கிழவி. சாதரணமா சொல்றதை விட ஒரு பெண்ணோட பார்வையில் இருந்து சொன்னா அழுத்தமா இருக்கும்னு நினச்சேன்.

   Delete
 8. மிகவும் உருக்கமான கவிதை... ஒவ்வொரு வரியும் கண்களில் நீரை வரவைக்கிறது...

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஸ்கூல் பையன்

   Delete
 9. அருமையான கவிதை
  இருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல பாடமே
  மனம் தொட்ட கவிதை
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரமணி சார்

   Delete
 10. \\பெருசா அவகிட்ட
  என்னத்த நீ கண்ட
  பரிசா உன் உசுரை
  பாக்காம நீ குடுத்த\\ இது காதலைப் பற்றிய சரியான புரிதல் இல்லாததால் வந்து விழுந்த வார்த்தைகள். இந்த பஸ் போனா என்ன அடுத்த பஸ்ஸில் போகலாம் பஸ்ஸா முக்கியம் பயணம் தானே முக்கியம் என்று நாம் சாதாரணமாக நினைத்து விடலாம். ஆனால் ஒருவருக்கு மனதைக் கொடுத்த பின்னர் அவர்களுடன் உண்மையான அன்பு உண்டான பின்னர் மறப்பது என்பது எளிதான காரியமல்ல. சொல்லப் போனால் சாகும்வரை அது போகாது. ஆனால் அந்தப் பெண் மாறிவிட்டாளே என்று நீங்கள் கேட்கலாம், உண்மையான அன்பு என்றும் மாறாது என்று மட்டுமே இப்போதைக்குச் சொல்ல முடியும். இந்தப் பையன் தற்கொலை வரை சென்றிருக்கத்தான் வேண்டுமா என்றால், அவன் எந்தமாதிரி இக்கட்டில் இருந்தானோ, நெருக்கடி என்ன என்றும் பார்க்க வேண்டும். சரியான தருணத்தில் ஆறுதல் சொல்லி மனதைத் தேற்றி தடுத்திருக்க முடியும்.

  ReplyDelete
  Replies
  1. ஜெயதேவிடமிருந்து இந்தக் கருத்து ஆச்சர்யமாக இருக்கிறது

   Delete
 11. முரளியென்னை இக்கவிதை
  முணுமுணுக்க வைக்குதய்யா
  புரளிபல செய்துவிட்டார்
  போனதந்தோ உயிர்வீணே

  காதலுக்கு சாதிமதம்
  காண்பதென்ன இவ்வுலகம்
  சாதலுக்கே வழிகாட்டும்
  சாதியினால் இக்கலகம்

  ReplyDelete
 12. தப்பு செஞ்சவன் தான்
  தலநிமிந்து நடக்குறான
  துப்பு கெட்ட உலகமிது
  தூத்தாம என்னசெய்ய?

  தப்பு செய்த அவர்கள் இன்று நன்றாக இருக்கலாம். ஆனால் அவர்கள் குடும்பத்தை பிடித்த சாபம் தலைமுறை தலைமுறையாக இடிக்கும்.
  (உருக்கமான கவிதையைப் படிக்கும் போதே மனம் என்னவோ போல் இருந்தது)

  ReplyDelete
  Replies
  1. இளவரசனின் தற்கொலை செய்தி கேட்டபோதே எழுந்த கவிதைதான் இது. மன வருத்தம் மிகக் கொண்டே எழுதினேன்.

   Delete
 13. எதார்த்த வரிகள்! தற்கொலை செய்துகொள்ள நினைப்பவர்கள் சிந்திக்க வேண்டும்!

  ReplyDelete
 14. காதலர்கள் இந்த கவிதை வரிகளை வாசிக்க வேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. உயிரை விடும் அளவுக்கு காதல் மகத்தானது என்று கருதுவதை காதலர்கள் மாற்றிக் கொள்ளவேண்டும். நன்றி பிரகாஷ்

   Delete
 15. பத்திரிக்கை உன்னாலே
  பரபரப்பா வித்துடுச்சு
  மத்தவங்க சோகமெல்லாம்
  விளம்பரமா மாறிடிச்சு////
  கவிதைய படிக்கும்போதே
  கண்ணிரெண்டும் குளமாச்சே
  கண்ணா வளர்த்தவங்களை
  கண்கலங்க வெச்சுட்டியே
  முரளி சொல்லுவது
  முழுசான உண்மைதான்யா

  ReplyDelete
  Replies
  1. நன்றி கண்ணதாசன்

   Delete
 16. இந்த பிரச்சினைக்கு ப்ராக்டிகல் சொலுஷன் என்னனு என்னிடம் கேட்டால், தலித்கள் இளவரசன்போல் சிலர் காதல்னு பிறசாதிப் பெண்களை கலயாணம் செய்யும்போது.. இது ப்ல பிரச்சினைகளை உண்டாக்கும். நம் தமிழர்கள் இன்னும் காட்டுமிராண்டியாகத் தான் வாழ்றாங்க. நம் சமூகத்தைமதித்து மற்றவரை (வன்னியரா இருந்தலும் சரி யாரையிருந்தாலும் சரி) மணப்பது தேவையில்லாதது என அறிவுரை சொல்லி அப்படி வரும் பெண்களை உடனே அனுப்பி வைக்கலாம். உடனே அதுவும் சட்டப்படி தப்புனு சொல்லுவாங்க.

  My point is..if someone thinks that he is superior because he was born in such and such community, that is mere NONSENSE. But the world has Arul kind of people! THey are IDIOTS! They can not understand the feeling of ilavarsan or dhivya. These idiots will keep pouring some nonsense. Tomorrow, if divya says that she made a mistake, Arul kind of idiots will justify that too. Because he is an IDIOT and hardly has a working brain! Not only him our fucking Tamil communities are filled with IDIOTS? Are you going to fight them and win them? NOO!! Just ignore them, keep away from those IDIOTS! Keep away future ilavarsans from divyas!

  The problem is dalits cant think rationally either!

  ReplyDelete
  Replies
  1. பொருளாதார முன்னேற்றம் எதிர் காலத்தில் இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வகலாம்.

   Delete
 17. அமெரிக்காவில் வெள்ளைக்காரர்கள் நம்மள, நம்ம கலாச்சாரம், நம்ம கலரு, நம்ம நடை உடை பாவனை எல்லாத்தையும் பார்த்து மட்டமாக நினைத்தால், நம்ம என்ன செய்றோம்?

  இவன் கெடக்கான் லூசுப்பயலுகனு நெனச்சுண்டு நாமாக ஃபெட்னா, தமிழ் பள்ளினு ஒன்றுகூடி, பார்ட்டி, பிக்னிக், கல்யாணம்னு சந்தோஷமாக வாழவில்லையா? வாழத்தானே செய்றோம்?

  அதேபோல் தலித்கள், இவனுக (வன்னியரோ, தேவரோ, பிள்ளையோ, முதலியார், பார்ப்பனர்கள்) கெடக்கானுக முட்டாப்பயளுகனு அவர்களுக்குள் ஒன்றுகூடி, உறவாடி, விளையாடி வாழ்ந்தால் என்ன? அப்படி செய்தால் இவர்கள் எப்படி குறைந்து போய்விடுவார்கள்?? தன் சமூகத்திலேயே கோடிப் பெண்கள் கெடைக்காதா இந்த இளவரசனுக்கு? இதுக்கு இந்த வன்னியன் பெத்த பொண்ணு? தான் பெரிய புடுங்கினு நெனைகிறவனியெல்லாம் தூர வைக்கணும். அவனிடம் போய் என்ன மயிருக்கு உறவு, கல்யாணம், கருமாதினு?

  யோசிக்கணும்! யோசிப்பார்களா??

  ReplyDelete
 18. என்ன செய்ய... காலம் அப்படித்தான்...! எதிர்காலத்திலாவது, மாற்றங்கள் ஏதேனும் நடக்கிறதா என்று பார்ப்போம்...!

  ReplyDelete
 19. இன்னார் இன்னார் மகன்/ள் என்று பார்த்து வருவதல்ல காதல். சாதி,குலம், கோத்திரம் பார்த்து வருவதும் பார்த்த முதல் நாளே வருவதும் காதல் அல்ல. பழகி பிறகு பிடித்து, நண்பனாய், தோழியாய், நட்பில் துவங்கி பிறகு தானாய் மலர்வதுதான் காதல்.

  இளவரசனின் திருமணமும், திவ்யா பிரிந்து சென்றதும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மரணமும்தான் நமக்குத் தெரியும்.

  அது எப்படி துவங்கியது, எப்படி வளர்ந்தது எதனால் திருமணத்தில் முடிந்தது என்பதெல்லாம் தெரியாது.

  சந்திப்பில் துவங்கி, நட்பில் வளர்ந்து, காதலாக மாறி திருமணத்தில் முடிந்திருந்தால் 'அவருடன் எனக்கு compatibility' இல்லை என்ற திவ்யாவின் வாதத்திற்கு இடமேயில்லை. தற்செயலாய் நடந்த சந்திப்பின்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்... ஆனால் நட்பாய் பழகியபோது இது தெரிந்திருக்க வேணுமே? பேசி, பழகி, இனி சேர்ந்து வாழலாம் என்கிற முடிவுக்கு இடையில் தேவையான இடைவெளி இல்லாமல் சடுதியில் முடியும் திருமணம் சடுதி மரணத்தில்தான் முடியும் என்பதற்கு இளவரசன் - வித்யா காதலும், கலைதலும் ஒரு உதாரணம்.

  இதில் சாதியும் அரசியலும் இடையில் வந்தது ஒரு விபத்து மட்டுமே...

  அரசே ஆணுக்கு இருபத்தியோரு வயதில்தான் திருமணம் செய்துக்கொள்ளும் அளவுக்கு பக்குவம் வரும் என்கிறபோது அவசரமாய் நடந்த இத்தகைய திருமணங்கள் இப்படித்தான் அவசரமாய் முடியும்.

  ReplyDelete
 20. எவ்வளவோ பேர்கள் சொல்ல நினைத்ததை கிராமத்துக் கிழவி மூலம் சொல்லிவிட்டீர்கள், முரளி!
  நினைக்க நினைக்க ஆறவில்லை நமக்கே - இளவரசனின் பெற்றோர்களுக்கு எப்படி இருக்கும்?

  ReplyDelete
 21. அன்பின் முரளி - கிராமத்துக் கிழவி அனுபவசாலி - இதயத்தில் இருந்து சொற்கள் எடுத்து எழுதப் பட்ட கவிதை - நன்று நன்று - நல்வாழ்த்துகள் முரளி - நட்புடன் சீனா

  ReplyDelete
 22. போனது போயிற்று.., சேலையை மாத்தும்போதே ஆளையும் மாத்துவாங்கன்னு சொல்லம்பால் குத்தி கிழிச்சு அந்த பொண்ணையும் சாகடிக்காம இருந்தா சரி!!

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895