சும்மா ஜாலியா ஊரை சுத்திட்டுருந்த வடிவேலுக்கு அவங்க அப்பா ஒரு வேலையைக் கொடுக்கிறார்.அவன்கிட்ட ஒரு பெட்டிய கொடுத்து இதைக் கொண்டு போய் உண்மையூர் என்கிற ஊர்ல இருக்க அவர் நண்பர்கிட்ட சரியாய் சேக்கணும்னு சொல்றார்.
சரின்னு சொல்லிட்டு கிளம்பற வடிவேலுக்கு ஒரு சிக்கல். இதோ படத்தில பாக்கறீங்களே அந்த மாதிரி ரெண்டு ரோடு பிரியுது. அதுல ஒரு ரோடு உண்மையூருக்கு போகுது. இன்னொரு ரோடு பொய்யூருக்கு போகுது.
எந்த ரோடு எந்த ஊருக்கு போகுதுன்னு தெரியாது. வழிகாட்டிப் பலகையிலும் எழுதி இருந்தது அழிஞ்சி போச்சு.
அந்த சமயத்தில அங்க ரெண்டு பேர் வராங்க. அவங்கள்ள ஒருத்தர் உண்மைதான் பேசுவார்.இன்னொருத்தர் பொய் மட்டும்தான் பேசுவார்.
ஆனா அந்த ரெண்டு பேர்ல யாரு உண்மை பேசுவாங்க, யார் பொய் பேசுவாங்கன்னு வடிவேலுக்குத் தெரியாது.
வடிவேலு யாரவது ஒருத்தர்கிட்ட மட்டும்தான் உண்மையூருக்கு வழி கேக்கலாம். அதவும் ஒரே ஒரு கேள்விதான் கேக்கணும்.
உதாரணத்துக்கு உண்மையூருக்கு எப்படி போகணும்னு உண்மை பேசுறவர் கிட்ட கேட்ட அவர் சரியான வழியை காட்டுவார்.ஒருவேளை பொய் பேசுறவர் கிட்ட கேட்டா அவர் பொய்யூருக்கான வழியத்தான் காட்டுவார்.
உண்மை பேசரவரா இருந்தாலும் பொய் பேசுறவரா இருந்தாலும் இரண்டுபேருமே சரியான ஒரே பதிலை சொல்லற மாதிரி ஒரு கேள்வி இருக்கு.
உதாரணத்துக்கு உண்மையூருக்கு எப்படி போகணும்னு உண்மை பேசுறவர் கிட்ட கேட்ட அவர் சரியான வழியை காட்டுவார்.ஒருவேளை பொய் பேசுறவர் கிட்ட கேட்டா அவர் பொய்யூருக்கான வழியத்தான் காட்டுவார்.
உண்மை பேசரவரா இருந்தாலும் பொய் பேசுறவரா இருந்தாலும் இரண்டுபேருமே சரியான ஒரே பதிலை சொல்லற மாதிரி ஒரு கேள்வி இருக்கு.
அந்த ஒரு ஒரு கேள்வி என்னன்னு தெரியாம வடிவேலு முழுச் சிக்கிட்டுருக்கார் . உங்களுக்கு தெரிஞ்சா ஒரே ஒரு போன் பண்ணி வேணும்னா சொல்லுங்க
(இப்படி சிக்கல்ல மாட்டி விட்டுட்டாங்களே!)
===================================================================================
இதையும் படியுங்க!
Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது!
பதிலளிநீக்குhttp://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html
Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது!
http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html
சுஜ்ஜூபி ! வர்ற ஆளுகிட்ட “உண்மையூருக்கு போற வழி எது-ன்னு (இன்னொருத்தர காட்டி) அவர்கிட்ட கேட்டா ? என்ன பதில் சொல்வார்” - இது கேள்வி.
பதிலளிநீக்குஅவர் சொல்ற வழிய விட்டுட்டு அடுத்த வழியில போகவேண்டியதுதான்
ஒத்துக்கிறேன்! நீங்க புத்திசாலின்றதை ஒத்துக்கிறேன். நெக்ஸ்ட் மீட் பண்றேன் .
பதிலளிநீக்குஒரு நிமிஷம்!
இன்னும் கொஞ்சம் ஷாட்டா சிம்ப்ளா ஒரு கேள்வி கேக்கலாம்
வணக்கம்
பதிலளிநீக்குஇன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
http://blogintamil.blogspot.com/2014/05/blog-post_11.html
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-