என்னை கவனிப்பவர்கள்

வெள்ளி, 11 நவம்பர், 2011

தமிழ் கம்ப்யூட்டர்


      தமிழில் வெளியாகும் ஒன்றிரண்டு கம்ப்யூட்டர் இதழ்களில் தரத்திலும் உள்ளடக்கத்திலும்  முன்னணியில் உள்ளது தமிழ் கம்ப்யூட்டர். இவ்விதழ்   18 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. 18  ஆண்டுகளாக ஒரு தமிழில் கம்ப்யூட்டர் தொடர்பாக இதழ் நடத்துவது சாதாரணமான விஷயமன்று. தற்போது கணினிப் பயன்பாடு அதிகரித்துவிட்டாலும் இவ்விதழ் தொடங்கிய காலங்களில் கணினி பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் பல மடங்கு குறைவாகவே இருந்திருக்கும். 
     இதையெல்லாம் பார்க்கும்போது லாபத்தை முக்கியமாகக் கொண்டு இவர்கள் இதழ் நடத்தவில்லை என்பது தெரிகிறது. தொடர்ந்து கணினி அறிவை ஆங்கிலம் அறியாதவர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் பரப்பி வரும் தமிழ் கம்ப்யூட்டர் இதழுக்கு பலத்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்ளலாம்.
    ஆங்கிலத்தில் ஏராளாமான கணினி இதழ்கள் உள்ளன. ஆனால் தமிழில் எனக்குத் தெரிந்து மூன்றே மூன்றுதான். ஒன்று தமிழ் கம்ப்யூட்டர் மாதம் இருமுறை வருவது: மற்றொன்று கம்ப்யூட்டர் உலகம் மாதம் ஒருமுறை வெளிவருகிறது. இன்னொன்று தினமலர் வாரந்தோறும் இலவச இணைப்பாக வெளியிடும் கம்ப்யூட்டர் மலர்.
     நான் கணினி கற்றுக்கொண்ட தொடக்கத்தில் M.S Office Application களான Word,Excel, Powerpoint  தெரிந்து கொள்வதற்காகவே கணினி இதழ்களை படித்தேன். இவ்விதழ்களில் வெளியடப்படும் கேள்வி-பதில் பகுதிகள் எனக்கு அடிப்படை விஷயங்களை கற்றுத் தந்தன. 
   பின்னர்  இயக்க முறைகள், மென்பொருள்கள் பற்றிய தகவல்கள் பலேறு கணினி மொழிபற்றிய சந்தேகங்கள் கணினியின் பல்வேறு வகையான பயன்பாடுகள், இணையம் சார்ந்த விளக்கங்கள் இவற்றைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் ஏற்ப்பட்டது.இவை தொடர்பான கட்டுரைகள் எளிமையான தமிழில் தமிழ் கம்ப்யூட்டரில்  வெளி வந்தன.
      ஆங்கிலத்தில் வெளிவரும் இதழ்களில் கேள்வி பதில் பகுதியைத் தவிர இதர பகுதிகள் பெரும்பாலும், கணினிப் பொருட்களின் விளம்பரங்களாகவும் , review களாகவும் அமைந்திருந்தன. இவ்விதழ்கள்  CD அல்லது DVD க்களை இலவசமாக வழங்கின. ஆனால் இவ்விதழ்களின் விலை மிகவும் அதிகம்.
     ஆங்கில இதழ்களைப்போலவே தமிழ் கம்ப்யூட்டரும் இலவச CDக்களை வழங்க ஆரம்பித்தன. அந்த சமயத்தில் இணைய இணைப்பு அதிகமாக இல்லாததால் அவை மிகவும் உதவியாக இருந்தன. இதை உணர்ந்த தமிழ் கம்ப்யூட்டர் இதழ் CD  வழங்குவதை நிறுத்திவிட்டது.
     நான் தமிழ் கம்ப்யூட்டர் இதழின் வாசகன்.இவ்விதழில் வெளிவந்த  செயற்கை நுண்ணறிவு, அதிகமாக அறியப்படாத Micro Soft Access தொடர், மாயா மென்பொருள்  போன்ற கட்டுரைகள் என்னை மிகவும் கவர்ந்தது.
      ச.குப்பன் அ.வெ.செந்தில்குமார், மு.சிவலிங்கம் போன்றவர்களின் கட்டுரைகள் மற்றும் கேள்வி பதில் பகுதிகள் இவ்விதழை சிறப்புடையதாக்குகிறது. வாசகர்களையும் பங்கேற்பதில் ஆர்வம் காட்டுகிறது.
       இதன் விலையோ இருபது ரூபாய் மட்டுமே!  கிராமப்புற ஏழை மாணவர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பலரும் தமிழ் கம்ப்யூட்டரால் பயனடைந்து வருகின்றனர்.
             வாழ்க! வளர்க! அதன் பணி.
          

3 கருத்துகள்:

 1. இவ்விதழின் பணி பாராட்டுதலுக்குரியது..

  இவ்விதழில் இருந்து நான் பல நுட்பங்களை அறிந்துகொண்டேன்..

  என் மாணவர்களுக்கு நான் பரிந்துரைக்கும் இதழ் இது.

  பதிலளிநீக்கு
 2. அனைத்து இதழ்களும் தற்பெழுதைய நடைமுறையில் ஈபேப்பர் வடிவில் வந்துவிட்ட நிலையில் தாங்கள் கூறியுள்ள அந்த இதழுடைய வெப் சைட் அட்ரஸ் ஐ தந்தால் மிக பயனுள்ளதாக இருக்கும்

  பதிலளிநீக்கு
 3. அனைத்து இதழ்களும் தற்பெழுதைய நடைமுறையில் ஈபேப்பர் வடிவில் வந்துவிட்ட நிலையில் தாங்கள் கூறியுள்ள அந்த இதழுடைய வெப் சைட் அட்ரஸ் ஐ தந்தால் மிக பயனுள்ளதாக இருக்கும்

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895