(எங்கேயோ எப்போதோ படித்தது)
ஞானி ஒருவரைப் பார்த்த இளைஞன் ஒருவன் கேட்டான்
“காதல் என்றால் என்ன? கல்யாணம் என்றால் என்ன?
அந்த ஞானி அருகே உள்ள பூந்தோட்டத்தை காண்பித்து, “அந்த பூந்தோட்டத்திற்கு சென்று அதில் உள்ள பூக்களிலேயே மிக அழகான பூ ஒன்றைப் பறித்து வா என்றார். ஆனால் சில நிபந்தனைகள். ஒன்று ஒரு பூவை ஒருமுறை மட்டுமே பறிக்கவேண்டும். அதாவது ஒரு பூவை பறித்துவிட்டால் அதன் பிறகு வேறு பூவைப் பறிக்கக் கூடாது சென்ற வழியே மீண்டும் திரும்ப வரக்கூடாது. அதாவது ஒரு பூவை கடந்து சென்று விட்டால் பின்னால் வந்து அந்தப் பூவை பறிக்கக் கூடாது” என்றார்
இளைஞன் சென்று ஒரு பூவை பறித்துக்கொண்டு வந்தான்.
ஞானி கேட்டார், “இதுதான் நீ கண்டதில் மிக அழகான பூவா?”
“இல்லை. இதைவிட அழகான பூக்கள் இருந்தன. பின்னால் அழகான பூக்கள் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற சந்தேகத்தில் முதலில் உள்ள பூவை பறித்துவிட்டேன். அதன் பின்னர் இதைவிட அழகான பூக்களைப் பார்த்தேன். நீங்கள் விதித்த நிபந்தனைப்படி அதனை பறிக்க இயலவில்லை” என்றான் இளைஞன்
ஞானி சிரித்துக்கொண்டே சொன்னார் “இதுதான் காதல்”
மேலும் இப்பொழுது இன்னொருபுறம் புறம் உள்ள பூந்தோட்டத்தை காண்பித்து "அதிலிருந்து அழகான பூவை பறித்துவா, ஆனால் நிபந்தனைகளை மறந்துவிடாதே” என்றார்.
இம்முறையும் இளைஞன் அந்த பூந்தோட்டத்திற்கு சென்று ஒரு பூவைப் பறித்து வந்து காண்பித்தான்.
“இதுதான் இந்த தோட்டத்தில் நீ பார்த்த அழகான பூவா?”மீண்டும்,அதே கேள்வியைக் கேட்டார் ஞானி.
“இல்லை. இதைவிட அழகான பூக்கள் இருந்தன. ஆனால் கடந்த முறை ஏமாந்ததுபோல இந்த முறை ஏமாந்துவிடக்கூடாது என்பதற்காக முதலில் கண்ட அழான பூக்களைப் பறிக்காமல் கடந்து சென்றுவிட்டேன்.கடைசியில் இந்தப் பூதான் கிடைத்தது.” ஏமாற்றத்துடன் சொன்னான் இளைஞன்.
“இதுதான் கல்யாணம்” என்றார் ஞானி புன்னகையுடன்.
*************************************************************
இதையும் படியுங்க!
தமிழா! எழுவாய்!
மகா கவி பாரதி! நிலையாய் நிற்பவன்
*************************************************************
இதையும் படியுங்க!
தமிழா! எழுவாய்!
மகா கவி பாரதி! நிலையாய் நிற்பவன்
கதை சூப்பர்!
பதிலளிநீக்குarumai,,..uthaarananghal..Thank you.
பதிலளிநீக்குVetha.Elangathilakam.
காதலுக்கும் கல்யாணத்திற்கும் கொடுத்த விளக்கம் அருமை. வாழ்த்துகள்
பதிலளிநீக்குஇரண்டே கதையில் மிரள (தினற) வைக்கும்
பதிலளிநீக்குபதில்கள் அருமை
arumai
பதிலளிநீக்குஓ.. இரண்டுமே ஏமாற்றமா? கிடைக்கிறதுதான் கிடைக்கும்.. என்பார்களே அதுதானா..?! இருக்கிற பூவை வைத்து அழகாக்கிடறதுதான் மகிழ்ச்சியான வாழ்க்கை!
பதிலளிநீக்குஇது பதில் இல்லை வேடிக்கை
பதிலளிநீக்கு