என்னை கவனிப்பவர்கள்

சனி, 3 டிசம்பர், 2011

4 x 4 (Magic Square)மாய சதுரம் உருவாக்கலாம்


4 X 4 மாய சதுரம் அமைக்கலாம்
    
        மாய சதுரம் அமைக்கலாம் என்ற பதிவை பார்த்தவர்களுக்கு நன்றி. மாய சதுரங்கள் உருவாக்குவது ஒரு பயனுள்ள அறிவு சார்ந்த பொழுது போக்கு. 1 முதல் 9 எண்களைப் பயன் படுத்தி மாய சதுரம் அமைக்கும் முறை எளிமையானதாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.

1 முதல் 16 எண்களைப் பயன் படுத்தி  மாய சதுரங்களை உருவாக்க முடியும். இதன் கூடுதல் 34 ஆக இருக்கும். இத்தகைய சதுரங்களை அமைப்பது 3 x 3 மாய சதுரங்களை அமைப்பதைவிட எளிமையானது.

படி-1

1 முதல் 16 எண்களை கீழ்க்கண்டவாறு எழுதிக்கொள்ளவேண்டும்

1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16


படி-2

படி 1  படத்தில் ஒரு மூலை விட்ட எண்களாக 1,6,11,16 இருக்கிறது. இதனை 16, 11, 6, 1 என்று  மாற்றி எழுதிக் கொள்ளவும்.    இன்னொரு மூலை விட்ட எண்களாக 13, 10 , 7 , 4 அமைந்துள்ளது .அதனை 4,  7 , 10,   13 என்று எழுதிக்கொள்ளவும்.

16


13

11
10


7
6

4


1
படி-3
            படி-2ன் காலி கட்டங்களில் படி 1 இல்  உள்ள எண்களை அப்படியே எழுதவும்


16
2
3
13
5
11
10
8
9
7
6
12
4
14
15
1

     
நான்குக்கு நான்கு மாய சதுரம் தயார்  . இதன் கூடுதல் 34. இதே முறையில் 2 முதல் 17 எண்களைப் பயன்படுத்தினால் கூட்டுத் தொகை 38 கிடைக்கும். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.
இன்னும் பெரிய மாய சதுரங்களையும் உருவாக்க முடியும்.
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.
**************************************************************

 இதையும் படியுங்க:
3 x 3 மாய சதுரம் அமைப்பது எப்படி? 






1 கருத்து:

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895