( தேசிய கவிக்கு எனது கவிதாஞ்சலி)
எட்டய புரத்தில் ஒளியாய்ப் பிறந்தவன்
ஏட்டிலும் பாட்டிலும் சிறந்து வளர்ந்தவன்
தோன்றிற் புகழொடு தோன்றிய தமிழ்மகன்
சான்றோர் பலரும் போற்றிய கலைமகன்
முறுக்கு மீசை முகத்தில் வைத்தவன்
நறுக்கு மீசைக் கவிஞனின் குருஅவன்
தெருக்களில் கூட தேசியம் வளர்த்தவன்
நெருப்பு வார்த்தையில் தீயவை சுட்டவன்
பெண்மை பெரிதெனப் போற்றிச் சொன்னவன்
உண்மையை உலகுக் கஞ்சாது உரைத்தவன்
தீக்குள் விரலை வைத்துப் பார்த்தவன்
நாக்கில் கலைமகள் வாசம் பெற்றவன்
காக்கை குருவிகள் நம்மினம் என்றவன்
கழுதையைக் கூட கட்டி அணைத்தவன்
சாதியை எதிர்த்து சாட்டை எடுத்தவன்
வேதியர் நடைமுறை விரும்பா வித்தகன்
தேனினும் இனியதாய் தமிழை நினைத்தவன்
ஆணும் பெண்ணும் சமமெனச் சொன்னவன்
கற்பு ஆணுக்கும் உண்டெனப் பகன்றவன்
அற்ப மனிதரை துச்சமாய் மதித்தவன்
சிறுமை கண்டு சீறியும் எழுந்தவன்
வறுமை வாட்டினும் செம்மையாய் வாழ்ந்தவன்
கண்ணன் மீது கவிதைகள் சமைத்தவன்
கண்ணம் மாவை கவிதையில் நனைத்தவன்
பாஞ்சாலி சபதம் படைத்து அளித்தவன்
பதினெண் மொழிகள் படித்து அறிந்தவன்
நதிநீர் இணைக்க முதல் குரல் கொடுத்தவன்
அதிக முள்ளதை பங்கிடப் பகர்ந்தவன்
இருக்கும் வரையில் ஏழ்மையில் உழன்றவன்
இறந்த பின்னும் நிலையாய் நிற்பவன்
***************************************************************************************
Nanru.
பதிலளிநீக்குகருத்திட்ட இருவருக்கும் எனது நன்றி
பதிலளிநீக்குஅருமையை இருந்தது. பாரதி நம் எல்லோரின் கவி
பதிலளிநீக்குநன்றாக எழுதியிருக்கிறீர்கள் முரளிதரன்.
பதிலளிநீக்கு|| தோன்றிர்ப் புகழொடு ||
தோன்றிற் புகழோடு- ப் இல்லை.
:))
#இருக்கும் வரையில் ஏழ்மையில் உழன்றவன்
பதிலளிநீக்குஇறந்த பின்னும் நிலையாய் நிற்பவன்
#
அருமையான நினைவூட்டல் நண்பா. நன்றி
பதிலளிநீக்குஎனக்கு மிகவும் பிடித்த வரி...
நதிநீர் இணைக்க முதல் குரல் கொடுத்தவன்
அதிக முள்ளதை பங்கிடப் பகர்ந்தவன்
அழகாய்ப் பாடியிருக்கிறீர்கள் முரளிதரன் ஐயா.
மகாகவி பாரதி –நிலையாய் நிற்பவன்
பதிலளிநீக்குபாரதியின் பகிர்வுக்குப் பாராட்டுக்கள் !
// இருக்கும் வரையில் ஏழ்மையில் உழன்றவன்
பதிலளிநீக்குஇறந்த பின்னும் நிலையாய் நிற்பவன் //
மஹாகவி பாரதி பற்றிய அருமையான கவிதை பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
அன்புடன்
VGK