இதையும் படியுங்க
புதிர் கணக்கு! விடை-வடிவேலுக்கு உதவியது யார்?
செல்ல நாயின் இறப்பு! ஒரு மாதம் பரபரப்பு!நிறைவு பகுதி
******************************************************************************************************************************
எனது Blogg ன் இன்றைய தமிழ்மணம் தரவரிசை 982
அலெக்சா தர வரிசை 1652971
(மொக்கையா கொஞ்சம் பதிவுகளை போட்டுட்டு அரச மரத்தடிய சுத்தி வந்து அடி வயித்த தொட்டுப் பார்க்கிற மாதிரி தினமும் ரேங்க் முன்னேறிடும் நினைக்கறது நியாயமான்னு நீங்க கேக்கறது என் காதுல விழாம இல்ல.. இருந்தாலும் ..... )
நான் எனது வலைப் பதிவை 10.09.2010 அன்று துவக்கினேன். தொடர்ந்து பதிவிட வேண்டும் என்றும் நான் முயற்சிக்கவில்லை. மற்ற வலைப்பதிவுகள் பற்றியும் எனக்கு அவ்வளவாகத் தெரியாது. புதிய தலை முறை இதழில் வலைப் பதிவுகளைப் பற்றிய கட்டுரை ஒன்றின்மூலம் கேபிள் சங்கர் என்பவர் ஒரு முன்னணிப் பதிவர்களில் ஒருவர் என்பதையும் தெரிந்துகொண்டேன். நான் முதன் முதலில் நேரடியாக URL டைப் அடித்து பார்த்த வலைப் பதிவு அவருடையதுதான். பிறகு ஒரு சில பதிவர்கள் பற்றியும் வலைப் பதிவுகளைப் பற்றியும், கொஞ்சம் அறிந்து கொண்டேன். பின்னர் வலைப்பதிவுகள் மீதான ஆர்வம் அதிகரித்தது. அக்டோபர் 2011 வரை நான் இட்ட பதிவுகள் எட்டு மட்டுமே. அதன் பிறகு பதிவுகளின் எண்ணிக்கையை அதிகரித்தேன். அப்பொழுது திரட்டிகள் பற்றி நான் அறிந்திருக்கவில்லை. பெரும்பாலான் வலைப்பதிவுகளில் தமிழ் மணத்தின் கருவிப்பட்டை இணைத்திருப்பதைக் கண்டேன். நானும் தமிழ்மணக் கருவிப்பட்டையை இணைத்தேன். இதன் பிறகுதான் எனது வலைப்பூவிற்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. இன்டலி,தமிழ் 10 ஆகிய திரட்டிகளிலும் எனது பதிவுகளை பகிரத் தொடங்கினேன்.
எனது வலைப்பூவின் தர வரிசையை அறிந்துகொள்ளவும் ஆர்வம் ஏற்பட்டது. தமிழ்மணத்தின் தரவரிசையில் 2000 த்திற்கு மேல் இருந்தேன். படிப்படியாக 943 ஆக எனது தரவரிசை ஆனது. ஆனால் முன்பைவிட பார்வையாளர்கள் அதிகம்( அதிகம்னா இருவது முப்பது பேறு. ஹிஹி......) இருந்தும். தர வரிசையில் பின்னேற்றம் அடைந்தது. சில நேரங்களில் பதிவிடும் நாட்களில் தரவரிசையில் பின்னோக்கியும் பதிவிடாத நாட்களில் முன் நோக்கியும் செல்வது கண்டு ஆச்சர்யம் அடைந்தேன்.
முதலில் தமிழ்மணத்திற்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் எனது பதிவுகள் முதலில் பகிரப்படுவது தமிழ்மணத்தின் மூலமே.
எனது நோக்கம் தமிழ்மணத்தின் தர வரிசையில் இரு நூறு இடங்களுக்குள் இடம் பிடித்துவிட வேண்டும் என்பதே.
ஆனால் கிரிக்கெட்டின் டக் வொர்த் லூயிஸ் முறை கூட எப்படின்னு கண்டுபிடித்து விடலாம்.. ஆனால் தமிழ் மணத்தின் தர வரிசை கணிப்பு ஒன்றும் புரியவில்லை .
சில பதிவர்கள் அலெக்சா ரேங்கிங் பற்றி பெருமையாக சொன்னதால் எனது அலெக்சா தரவரிசையில் எந்த இடத்தில் உள்ளது என்று பார்த்தேன். (உனக்கு இதெல்லாம் தேவையா?) .
நான் சில வலைபதிவுகளின் தரவரிசையை அலக்சா மற்றும் தமிழ்மணம் தர வரிசையோடு ஒப்பிட்டுப் பார்த்தேன். பல ஆச்சர்யங்கள் காத்திருந்தது. (இந்த வெட்டி வேலைக்கு பதிலா நல்ல பதிவு போட்டா நாலுபேர் பாப்பாங்க).
உலக அளவில் கணக்கிடப்படும் அலெக்சா ரேங்கிங் கிற்கும் தமிழ்மணம் ரேங்கிங் கிற்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன. அவற்றில் ஒருசிலவற்றை உங்களுடன் அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.
*************************************************************************************************************************
உங்க கமெண்ட்டால
கொஞ்சம் தட்டுங்க !
நிறைய திட்டுங்க !
தாராளமா குட்டுங்க! இதை படிச்சீங்களா
ஹா ஹா ஹா தர வரிசை எல்லாம் பார்த்தா தரம் போயிடும், அப்புறம் என்னை மாதிரி மொக்கை பதிவர் ஆகிடுவீங்க, தரத்தை மட்டுமே பாருங்க..
பதிலளிநீக்குஅட்ரா சக்க!
பதிலளிநீக்குதரத்தை மட்டுமே பாருங்க
பதிலளிநீக்குஇனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குபுலவர் சா இராமாநுசம்
த ம ஓ 3
நம்முடைய தரத்தை நாம்தான் முடிவு பண்ணனும் ...
பதிலளிநீக்கு