கமலஹாசன் பலமுகங்கள் கொண்ட கலைஞர் என்பது இந்த உலகமே அறிந்ததுதான். நடிப்பின் பல பரிமாணங்களை நமக்குக் காட்டியவர். மிகச் சிறந்த கதாநாயகனாகவும் அவரைச் சொல்லலாம். மிகச் சிறந்த வில்லனாகவும் சொல்லலாம். சிறந்த நகைச்சுவை நடிகரும் அவரே!சிறந்த நடன நடிகரும் அவரே. சிறந்த குண சித்திர நடிகரும் அவர்தான்.பல்குரல் வித்தகரும் அவரே. மேடைகளில் தூய தமிழில் இலக்கிய நடையில் அவரைப்போல் பேசும் வேறு நடிகர் இல்லை என்றே சொல்லலாம். தசாவதாரத்திகும் மேலே பல அவதாரங்களை எடுத்தவர்
தமிழ்த் திரை உலகின் ஜீனியசான அவர் நல்ல கவிஞர் என்பதும் பெரும்பாலானவர்களுக்குத் தெரியும். விஜய் டிவியில் Kofee with Anu வில் அவரது கவிதை மழையை அவரது குரல் மூலமே கேளுங்கள். அவரது கவிதையில் சந்தங்கள் துள்ளி விளையாடுவதை கவனியுங்கள்.

92CA81DE15
பதிலளிநீக்குTakipçi Satın Al
Footer Link Satın Al
Coin Kazanma
3D Car Parking Para Kodu
101 Okey Yalla Hediye Kodu