வடிவேலுவைத் தேடி அவரது நண்பர்கள் வருகிறார்கள்.அவர்களைக் கண்டதும் வடிவேலு முகத்தை திருப்பிக் கொள்கிறார்.
“டேய்! அண்ணன் இன்னும் கோவத்தில இருக்கார். அன்னிக்கு நாம அடிச்சத மறக்கல போல இருக்கு.(Flash Back:வடிவேலுக்கு உதவியது யார்?) அண்ணன்கிட்ட மன்னிப்பு கேட்டுடலாம் வாங்க!”
“அண்ணே எங்கள மன்னிச்சுடுங்கண்ணே. ஏதோ கோவத்தில உங்கள அடிச்சிப்பிட்டோம். அத இன்னும் மனசுல வச்சுக்கிட்டு எங்கிட்ட பேசாம இருக்காதீங்கன்னே! எங்களுக்கு உங்களை விட்டா யாருன்னே இருக்காங்க!”
“சென்டிமெண்டா டச் பண்ணறாங்களே சரி! சரி! மன்னிச்சிட்டேன். போய்ட்டு வாங்க!”
“என்னண்ணே எங்கள நம்ப மாட்டேங்கிறீங்க! நாங்க திருந்திட்டோம். இப்ப கூட நல்லது செய்யனும்னு கிளம்பி போய்ட்டிருக்கோம்.”
“அப்படி என்னடா பண்ணப்போறீங்க! நல்துன்னா உங்களுக்கு என்னன்னே தெரியாதே?
“போங்கண்ணே கிண்டல் பண்ணாதீங்க! நம்ம ஊர்ல இருக்கற குடிகாரப் பசங்களுக்கு புத்தி சொல்லி திருத்தலாம்னு பாக்கறோம்.”
“நீங்களே குடிகாரப் பசங்களாச்சே! நீங்க சொல்லி எவனாவது திருந்துவாங்களாடா”
“அதுக்குத்தான் உங்களையும் கூட்டிக்கிட்டு போகலாம்னு வந்திருக்கோம்.”
“நான் எதுக்குடா?”
“எங்கள விட நீங்கதான் நல்லா எடுத்து சொல்லி புரிய வைப்பீங்க! எவ்வளோ பேர்கிட்ட அடிவாங்கின அனுபவம் இருக்கு!
“நீங்க சொல்றது சரிதாண்டா! சினிமாவில்தான் அடிவாங்கியே காலத்தை கழிச்சிட்டேன். நேர்லயாவது நல்ல கருத்த சொல்லி பாப்போம்.
“வாங்கண்ணே ஏரியா பக்கம் போவோம்.”
“அண்ணே! அதோ பாருங்கண்ணே! ஒரு குடிகாரன் கையில சாராய பாட்டிலோட வர்றான். அவன அப்படியே மடக்குங்க!
“அடேய்! என்னடா பண்ணற”
“ தெரியல? குடிச்சிக்கிட்டுருக்கேன்?”
“ஏன்டா? நீ குடிச்சி குடிச்சி அழிஞ்சி போறயே! நியாயமா? உன் பொண்டாட்டி புள்ளைய நினச்சி பாத்தியா?”
“அவங்களை நினச்சித்தான் நான் குடிக்கிறேன்?”
“இப்படி சொன்ன எல்லாம் நீ கேக்க மாட்ட. அந்த சாராய பாட்டில எங்கிட்டு குடு”
“நான் குடுக்க மாட்டேன். நீ குடிச்சிடுவ.?
“அண்ணன் குடிக்க மாட்டார் குடுடா!,
இந்தாங்கன்னே!’
நண்பர்கள் பாட்டிலை வாங்கி வடிவேலுவிடம் கொடுத்தனர்.
வடிவேலு அந்த பாட்டிலை வாங்கி, “அண்ணன் இப்ப என்ன செய்யறன் பாரு. இதுக்குள்ள சாராயம் இருக்கா? அடேய் குடிகாரா அதோ ஓடுது பாரு பூச்சி அந்த பூச்சிய எடுத்து இந்த பாட்டிலுக்குள்ள போடு. போட்டுட்டயா? இப்ப என்ன நடக்குதுன்னு பாரு.”
“அடடே! பூச்சி கொஞ்ச நேரத்தில துடி துடிச்சி செத்துப் போச்சே? அண்ணே! நீங்க கடவுள்னே! உங்க கால்ல உழுந்து சொல்றேன். இப்படி எனக்கு இதுவரை யாரும் எடுத்து சொன்னதில்லே! எவ்வளோ பெரிய விஷயத்தை இவ்வளோ எளிமையா சொல்லீட்டேங்க! உங்கள மறக்கவே மாட்டேன். நான் வரேன் .....”
“ நில்லுடா... இவ்வளோ சீக்கிரம் நல்லவனா மாறிட்டான். பாருங்கடா பய என் பேச்சை கேட்டு திருந்திட்டான்?”
“ ஆமாண்ணே! நீங்க செஞ்சு காமிச்சதுக்கு என்ன அர்த்தம்? எங்களுக்கு ஒன்னுமே புரியலயே?”
“மடப் பசங்களா சாராயத்தில விழுந்த பூச்சி துடி துடிச்சி செத்து போச்சு இல்ல? அந்த மாதிரி குடிச்சா நீயும் செத்துப்போய்டுவன்னு அர்த்தம்? இப்பயாவது தெரிஞ்சுக்கோங்க! அய்யாவோட அறிவை?
“பிரமாதம்ணே! உங்களை மாதிரி அறிவாளி உலகத்தில யாரும் இல்ல.”
“ரெண்டு நாள் கழிச்சி வாங்க! நாம அந்த பய எப்படி இருக்கான்னு பாத்துட்டு வரலாம்.”
இரண்டு நாட்கள் கழித்து வடிவேலுவும் அவர் நண்பர்களும் அந்தக் குடிகாரனின் வீட்டுக்குச் செல்கிறார்கள்.
“அண்ணே! முதன் முதலா ஒரு நல்ல காரியம் பண்ணியிருக்கீங்க! உங்களுக்கு பிரமாதமான வரவேற்பு கிடைக்கப் போகுது. எங்களை மறந்துடாதீங்கண்ணே.”
“சரி சரி வீட்ல யாரு இருக்கா பாரு?
“அவனோட பொண்டாட்டி தொடப்ப கட்டயோட வருது?
“என்னம்மா? உன் புருஷன் எப்படி இருக்கான்?
“ரெண்டு நாளைக்கு முன்னாடி கொஞ்சமா குடிச்சிட்டு வந்தாரு. இப்ப நிறைய குடிக்கிறாறு? ஆமாம், நீங்க யாரு?
“உன் புருஷன் சொல்லலையா? ரெண்டு நாளைக்கு முன்னாடி சாராயத்துல ஒரு பூச்சிய போட்டு என்ன ஆச்சுங்கறத காமிச்சி புத்தி சொன்னவன் நான்தான். சொல்லுங்கடா தங்கச்சிகிட்ட.?
“ஓ! அந்த ஆள் நீதானா? வாய்யா! உனக்காகத்தான் காத்துக்கிட்டுருக்கேன். ஏன்யா இப்போ அதிகமா குடிக்கிறேன்னு என் புருஷன கேட்டா, என் வயித்தில நிறைய பூச்சி இருக்கு அது சாகறதுக்காகத்தான் நான் குடிக்கிறேன். சாராயம் குடிச்சா வயித்தில இருக்கும் பூச்சியெல்லாம் செத்து போகும்னு நீதான் சொன்னயாமே? அதுவும் இல்லாமே ஒரு பூச்சியப் பிடிச்சு போட்டு வேற காமிச்சயாமே? கொஞ்சமா குடிச்சிக்கிட்டு இருந்தவனை அதிகமா குடிக்க வச்சுட்டயே யா! உன்ன சும்மா விடறனா பாரு. இந்த தொடப்பகட்டைக்கு வேல குடுத்து ரொம்ப நாளாச்சு.... ”
“ வேணாம்மா...... நான் சொன்னது வேற அவன் புரிஞ்சிக்கிட்டது வேற? டேய் சொல்லுங்கடா? ............... ஓடிட்டீங்களா? என்ன அடி வாங்க வச்சுட்டு வழக்கம்போல ஓடிட்டானுங்க? நம்ம வெகுளித்தனத்தால இந்த முறையும் ஏமாந்துட்டமே!
*************************************************************
இதையும் படிச்சுப் பாருங்க!
பூக்களைத் தேடி!
புதிர் கணக்கு! வடிவேலுக்கு உதவுங்கள்!
புதிர்!உங்களுக்கு தெரிஞ்சா விடை சொல்லுங்க!
*************************************************************
இதையும் படிச்சுப் பாருங்க!
பூக்களைத் தேடி!
புதிர் கணக்கு! வடிவேலுக்கு உதவுங்கள்!
புதிர்!உங்களுக்கு தெரிஞ்சா விடை சொல்லுங்க!

super!
பதிலளிநீக்குஅருமை!அருமை!
பதிலளிநீக்குஅதிகாலைக் கண்ட முதல் பதிவு!
வடிவேலு வாழ்க! வழங்கிய நீங்களும்
வாழ்க!
முதல் ஓட்டு நானா ?
சா இராமாநுசம்
நன்றி அய்யா! பல பேர் படித்தாலும் யாரும் ஓடளிக்கவில்லை. தங்கள்கையால் முதல் ஒட்டு இப் பதிவிற்காக பெற்றதில் பெருமை அடைகிறேன்.
பதிலளிநீக்குNice one. Thanks!
பதிலளிநீக்குநல்ல காமெடிங்க.. வாய்விட்டுச் சிரிச்சேன்... வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குF0BC95A855
பதிலளிநீக்குTakipçi Satın Al
En Güzel Oyunlar
Güvenilir Takipçi Satın Alma
5831F6BE
பதிலளிநீக்குkartal yabancı esçort
esçort bayan antalya
akşehir esçort
kandıra esçort
van esçort
rus esçort İzmir
silopi esçort
esçort bayan sivas
fethiye esçort
6CA6B720
பதிலளிநீக்குBayraklı
Çayırova
Menderes
Konyaaltı
Salihli
Alpu
Atakum
Erbaa
Torbalı
1F6E6ED7
பதிலளிநீக்குÜrgüp
Tarsus
Konak
Gümbet
Buharkent
Keşan
Selçuk
Aktepe
Beyoğlu