இவரைப் பற்றி தெரியுமா? இவரது பெயர் செ.சண்முகம்
இன்றைய தினம் இவரைப்பற்றி சொல்வதற்கு ஒரு காரணம் உண்டு. இன்று தேசிய அறிவியல் தினம். சரியாக 84 ஆண்டுகளுக்குமுன் இதே நாளில்தான் (28.02.1928) சர்.சி.வி. ராமன் நோபெல் பரிசைப் பெற்றுத் தந்த ராமன் விளைவைக் கண்டறிந்தார். இதனைப் போற்றும் விதமாகவே இந்நாள் தேசிய அறிவியல் தினமாக நாடெங்கிலும் கொண்டாடப் படுகிறது. .
ஒவ்வொருவருக்கும்ஒவ்வொரு துறையில் ஆர்வம இருக்கும். இளமையில் சண்முகம் அவர்கள் அறிவியல் பாடத்தின்மீது அடங்காத ஆர்வம் உடையவர். ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவரான இவர் வேதியலில் பட்டம் பெற்றார்.
பின்னர் வேதியலில் முதுகலைப் படிப்பில் சேர்ந்தார். பட்டம் பெறுவதற்கு முன்பாகவே வங்கியில் வேலை கிடைத்ததால் படிப்பதை விட்டுவிட்டு பணியில் சேர்ந்தார். ஆனாலும் அவருக்கு அறிவியல் மீது கொண்ட தாகம் தணியவில்லை. அவரது நெஞ்சம் முழுவதும் அறிவியல் நீக்கமற நிறைந்திருந்தது. அந்த ஆர்வத்திற்கு காரணம் பள்ளியில் தனக்கு அறிவியல் கற்பித்த ஆசிரியர்தான் என்பதை இன்றைக்கும் நினைவு கூர்ந்துகொண்டிருப்பது இவரது குரு பக்தியைக் காட்டுகிறது.
வங்கிப்பணி நேரம் போக மீதி நேரத்தை அறிவியல் பால் கொண்ட ஈடுபாடு காரணமாக அறிவியல் தொடர்புடைய பணிகளைச் செய்து வந்தார்.
பள்ளி,கல்லூரி மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்த அறிவியல் தொடர்பான உரை நிகழ்த்துவது,அறிவியல் சோதனைகள் செய்து காண்பிப்பது, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது, அறிவியல் நிகழ்ச்சிகள் நடத்துவது, அறிவியல் பாடப் புத்தகங்கள் தயாரிக்க ஆலோசனை வழங்குவது என்று தன்னை அறிவியலோடு மகிழ்ச்சியுடன் பிணைத்துக் கொண்டது உண்மையிலேயே ஆச்சர்யமான விஷயம்தான். அறிவுக்கண் என்ற அறிவியல் பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார்.
அறிவியல் முதுகலைப் பட்டத்தை பாதியிலயே விட்டுவிட்டு மனக்குறை இவருக்கு இருந்துவந்தது. அதையும் முடிக்கவேண்டும் என்று உறுதி கொண்டு 20 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் தொலை தூரக் கல்வியில் சேர்ந்து அதனையும் வெற்றிகரமாக முடித்து சாதித்தார். இந்த சேர்க்கைக்கான நேர்காணலின்போது வங்கிப்பணி செய்பவர் வேதியியல் முதுகலை படிக்க விண்ணப்பித்தற்கு காரணம் முழுக்க முழுக்க அறிவியல் தான் என்று சொன்னபோது அவர்கள் நம்பவில்லையாம்.
இதோடு இவரது முயற்சி முடிந்து விடவில்லை. தற்போது அண்ணா பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெறுவதற்காக ஆய்வு மாணவராக சேர்ந்திருக்கிறார்
அறிவியல் இவரை காந்தமாய் இழுக்க, யாரும் நம்ப முடியாத ஒரு காரியத்தை செய்தார். ஆம்! தனது வங்கிப் பணியிலிருந்து விருப்ப ஒய்வு பெற்றார். அறிவியல்-வங்கி என்ற இரட்டை படகு சவாரி செல்ல விரும்பவில்லை என்றும் அதனால் அறிவியலே தனக்கு ஏற்றது என்று முடிவு செய்வதாக தெரிவித்தது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. தற்போது முழு நேர அறிவியல் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
பள்ளிகளில் மாணவர்களுக்கு அறிவியல் கருத்துக்கள் புரியம் வண்ணம் கையில் கிடைக்கும் எளிய பொருட்களைக் கொண்டு சோதனை செய்து காட்டி விளக்குவது இவரது சிறப்பு. இவரது செயல் விளக்கத்தை பார்க்கும் மாணவன் சொல்லப்படும் அறிவியல் தத்துவத்தை ஒருபோதும் மறக்க மாட்டான்.
கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கும் அலுவலர்களுக்கும் இவர் மிகவும் பரிச்சயமானவர். இவர் கலந்து கொள்ளும் நிகழ்வுகளுக்கு ஆசிரியர் மற்றும் மாணவர்களிடையே பேரு வரவேற்பு உண்டு. எல்லா அறிவியல் ஆசிரியர்களும் இவரது செயல் முறைகளை பின்பற்றினால் பல விஞ்ஞானிகளை உருவாக்க முடியும்.
.
பொருளாதார நெருக்கடி காரணமாக தனக்கு பிடித்த துறையில் வேலை செய்ய இயலாத நிலை அந்தக் காலத்தில் இருந்தது. மாறி வரும் சூழ்நிலையில் அவரவர் விருப்பத்திற்கேற்ப துறையில் சாதனைகள் படைக்க நல்ல வாய்ப்புகளை இந்த சமூகமும் அரசாங்கமும் ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே எனது விருப்பம்.
இவர் விரும்பியதை செய்ய இளமையில் தக்க வாய்ப்பு கிடைத்திருந்தால் இவரும் ஒரு தலை சிறந்த விஞ்ஞானியாக பரிமளித்திருப்பார் என்பதில் ஐயமில்லை. ஆனாலும் அதையும் ஒரு குறையாகக் கருதாமல் துடிப்புடன் அறிவியல் பணி ஆற்றி வரும் செ சண்முகம் அவர்களை நாமும் மனமார பாராட்டுவோம்.
அன்னாரின் மின்னஞ்சல்: c.shanmugham@gmail.com
கைபேசி எண்: 9444626750
கைபேசி எண்: 9444626750
இதைப் படிப்பவர்கள் தவறாமல் கருத்திடவும்.
**************************************************************************************
இதையும் படியுங்க!
காணாமல் போகும் கிணறுகள்
இதையும் படியுங்க!
காணாமல் போகும் கிணறுகள்

இவரின் அறிவியல் ஆர்வத்தை பள்ளிகள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். எளிய பொருட்களின் மூலம் ஒரு சிறிய பரிசோதனையினால் பல பெரிய அறிவியல் உண்மைகளை விளங்க வைக்க இவர் போன்றோரின் உழைப்பு மிக்க உறுதுணையாக இருக்கும்.
பதிலளிநீக்குசண்முகம் அவர்களின் இந்த முயற்சி வெறும் ஏட்டுக்கல்வியாக மட்டும் படித்து வருபவர்களுக்கு மாற்றாக ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தும்.அவரது இந்த முயற்சிக்கு பாராட்டுகள்.வாழ்த்துகள்.
பதிலளிநீக்குசெ சண்முகம் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள், அவரை பற்றிய செய்திகளை பகிர்ந்த உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும்
பதிலளிநீக்குகருத்திட்ட பந்து ,கோகுல்,அவர்கள் உண்மைகள்,சூர்யா நால்வருக்கும் எனது நன்றி.
பதிலளிநீக்குஅனைவருக்கும் இவர் ஒரு சிறந்த முன்னுதாரணம்... வயது எந்த ஒரு விஷயத்துக்கும் தடை இல்லை என்பதை நாம் உணர வேண்டும்...
பதிலளிநீக்குஉண்மைதான்! இவர் தனது படிப்பை தனது வாழ்க்கைக்கு பயன் படுத்த இயலவில்லை. ஆனாலும் கற்றது வீண் போகாமல் அதை செம்மையாக்கி பிறருக்கு பயன்படும்படி செய்துகொண்டிருப்பது போற்றுதற்குரிய ஒன்றாகும்
பதிலளிநீக்குÞõK¡ à‡¬ñò£ù ªêò™ð£´èœ ÜFè‹. ðôºèƒè¬÷ ªè£‡´œ÷ Üõ¬ó êKò£ù º¬øJ™ ðò¡ð´ˆF ªè£œ÷ ò£¼‹ Þ™¬ô â¡ð«î â¡ õ¼ˆî‹- ñ£. Ý. ióó£èõ¡
பதிலளிநீக்குதிரு சண்முகம் ஒரு விஞ்ஞான மேதை. உங்கள் படைப்புகளால் எங்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டீர்கள். நீங்கள் வயது ஒரு தடை இல்லை என்பதை நிரூபிப்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். உங்கள் பல்வேறு சோதனைகள் மக்களை அடைய வேண்டும் என விரும்புகிறேன்.
பதிலளிநீக்குதிருமதி கல்யாணி சேகர் மற்றும் குடும்பத்தினர்
இவர் போன்ற சாதனையாளர்களை பள்ளிகளில் கல்லூரிகளில் மாணவர்களுக்கு சிறப்பு உரை நிகழ்த்த ஏற்பாடு செய்யலாம்.மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கை,அறிவியல் ஆர்வம் போன்றவைகள் திறம்பட வளர சிறந்தவர்களின் பேச்சு கண்டிப்பாக உறுதுணையாக இருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது
பதிலளிநீக்குஇவர் அரசு பள்ளிகளில் மாணவர்களிடையே சோதனைகள் செய்து காண்பிக்கிறார். யாராவது அழைத்தால் நிச்சயமாக வருவார். கருத்திற்கு நன்றி
பதிலளிநீக்கு97045801AE
பதிலளிநீக்குhacker kiralama
hacker bul
tütün dünyası
hacker bul
hacker kirala
8D91C4E1F5
பதிலளிநீக்குCam Şov
Whatsapp Görüntülü Show Numaraları
Telegram Görüntülü Show Grupları