குதிரை வளர்ப்பீர் கவிதையின் தொடர்ச்சி
முன் பகுதியை படிக்.இதோ
குதிரை வளர்ப்பீர்!-பாலகுமரன் கவிதைகள்-பகுதி 7
(முன் பகுதியைப் படித்தால் இப்பகுதி இன்னும் சுவைக்கும்)
முன் பகுதியின் சுருக்கத்தை பார்த்துவிட்டு தொடர்வோம். மன்னன் ஒருவன் நாட்டு மக்கள் அனைவரும் கட்டாயம் குதிரை வளர்க்க வேண்டும் என்று ஆணையிட்டான். இதை மறுப்பவர்கள் தேசத்தின் எதிரிகள்.மீறுபவர்கள் வெளியேற்றப் படுவர் என்று பறை அறிவித்தான்.
மக்கள் புலம்ப ஆரம்பித்தனர். இவன் என்ன குதிரை வெறியனாக இருக்கிறானே.குதிரை வளர்ப்பது எளிதா என்ன? என்று பேச ஆரம்பித்தனர்.
பார்ப்பனர்கள் மன்னனிடம் சென்று தங்கள் இனத்திற்கு குதிரை வளர்ப்பது ஒவ்வாது என்றுரைத்தனர். மன்னும் ஏற்றுக்கொண்டு விலக்களித்தான்
பின்னர் வணிகர்களும் கொல்லர்களும் சென்று தங்கள் வாழ்க்கைக்கு குதிரைகள் உதவாது என்று விவரித்து விளக்களிக்குமாறு கேட்டனர் மன்னனும் சம்மதித்தான்.
விவசாயம் பிற தொழில் செய்வோரும் குதிரை வளர்ப்பை கைவிடுமாறு மன்னனிடம் கோரினர். மன்னனும் நீங்கள் செல்லுங்கள் படை வீரர்கள் குதிரை வளர்ப்பார்கள் என்றான். படை வீரர்களோ குதிரைகள் வேண்டாம் அதற்குப் பதிலாக யானை வளர்க்க ஆணை இடுங்கள் . என்று அவர்கள் பங்குக்கு கருத்தை உரைத்தனர்.
யோசித்த மன்னன் அடுத்த நாள் அனைவரும் சபையில் கூட ஆணை பிறப்பித்தான். திரண்டு வந்திருந்த அனைவரின் முன்னிலையில் மன்னன் உரத்த குரலில் பேச ஆரம்பித்தான்.
பாலகுமாரனின் இரும்புக் குதிரைகளில் விஸ்வநாதன் சொல்வதாக அமைக்கப் பட்டுள்ள இந்தக் கவிதை பல்வேறு சிந்தனைகளை தூண்டியது.
குதிரையை மனித வாழ்க்கையோடு தொடர்பு படுத்தும் இக்கவிதை உங்களையும் கவரும் என்று நம்புகிறேன்.
இதோ அவனது பேச்சை பாலகுமாரனின் கவிதையாகக் காண்போம்
கல்தோன்றி மண் தோன்றி கடவுள் தோன்றி
கைவழியே மொழிவளரும் காலம் தோன்றி
கால்நடையே செல்வமெனக் கொண்ட நாளில்
ஆண்டிருந்த ஓர் அரசன் பறையறிவித்தான்
வீட்டிற்கொரு குதிரை வளர்க்க வேண்டும்
......................................................................................................
........................................................................................................
.......................................................................................................
.......................................................................................................
பேரரசன் யோசித்தான் கவலை சூழ
கையசைத்தான் மற்றவர்கள் கலைந்துபோக
மறுநாளேசபை கூட்டி எழுந்து நின்று
பெருமன்னன் குரல் செருமிப் பேசலானான்
குதிரை என்று சொன்னது விளங்கா மக்காள்
புரவியதன் மகிமையதைத் தெரியா சனமே
வீட்டுக்கொரு வலிமையுள்ள மனிதர் என்று
நான் சொன்ன செய்தியது தவறோ சொல்வீர்
குதிரையதை சபை நடுவே நிறுத்திப் பாரும்
உடல் முழுதும் கை தடவி உணர்ந்துபாரும்
எவ்வளவு தின்றாலும் குழிந்த வயிறு
எப்போதும் எப்போதும் துடித்த உணர்வு
கண்மூடி நின்றாலும் காதுகள் கேட்கும்
காதுகளே நாலுபக்கம் சுற்றிப் பார்க்கும்
உடல் வலிமை இருந்தாலும் மூர்க்கம் காட்டா
குதிரை குணம் கொண்டோர் உயர்ந்தோர் ஆவார்.
போர் என்றால் குத்தீட்டி யுத்தம் அல்ல
மனிதரோடு மனிதர் வெட்டி சாய்தல் அல்ல
பெருவாழ்க்கை தன்னை நோக்கி காலம் போகும்
தன்மையினை போர்ன்றேன் வேறொன்றில்லை
புரியாத மக்காள் என் மந்தை ஆடே
உமக்கிங்கே அரசனாக வெட்கம் கொண்டேன்.
வெறும் பதரை கோல்பிடித்து காப்போர் உண்டோ?
உணர்வில்லா மக்களுக்கு அரசன் கேடா?
ஒரு காலம் இவ்வுலகம் கொள்ளும் கண்டீர்
குதிரைகளே உலகத்தின் பெருமூச்சாகும்
குதிரைகளே இப்புவியில் செங்கோல் ஓச்சும்
விரல் நுனியால் விசையறிந்து வேகம் காட்டும்
உழவுக்கும் தொழிலுக்கும் உதவியாகி
ஊர் விட்டு ஊர் போக கருவியாகி
விண்முட்டிக் கீழிறங்கி அனைத்துச் செயலும்
குதிரையே முன்னின்று நடத்தும் கண்டீர்!
பல்வேறு ரூபத்தில் மனிதர் முன்னே
குதிரைஎனும் பெருவுணர்வே கைகொடுக்கும்
கால்நடையில் ஆடுகளே செல்வம் என்ற
மக்களிடம் மன்னனென இருத்தல் வேண்டாம்
பசுக்களெனும் பார்ப்பனர்கள் காலம் முடிந்து
குதிரையிது வீணையிலே வேதம் பேசும்
காலத்தை என்னுள்ளே இன்றே கண்டேன்.
போய்வருவேன் என்மக்காள் விடை கொடுப்பீர்
உம்மோடு இருத்தல் இனி இயலாதென்றான்
பெருமன்னன் வாள் வீசி தலை துணித்தான்
கவியென்னும் குதிரையதன் ஆட்சியின்று
கண் திறக்கத்துவங்கி விட்ட நேரம் கண்டோம்
தலை துணித்த பெருமன்னன் வருவான் மீண்டும்
முகம் மட்டும் குதிரையாகக் கொண்டவாறு
குரங்குகளை மூத்தோராய் கொண்ட மனிதர்
குணம் மாறி குதிரைக்கு வணக்கம் சொல்வார்
கவியென்ற குதிரை தன் ஆட்சி துவங்கும்
மனிதருக்குள் மறுபடியும் நேசம் துளிர்க்கும்
யாகங்கள் பூஜைகள் பூர்த்தி செய்யா
சிநேகத்தை குதிரைகள் வளர்த்துக் கொடுக்கும்
குழப்பங்கள் முற்பரப்பில் தோன்றினாலும்
குதிரைகள் விஞ்ஞானம் உலகம் வளைக்கும்
குதிரைகள் ஞானத்தை என்னுள் கண்டேன்
கலி என்னும் யுகத்துக்கு வரவு சொன்னேன்.
************************
குதிரைக் கவிதைகளின் கடைசிக் கவிதை விரைவில்
குதிரைக் கவிதைகளின் கடைசிக் கவிதை விரைவில்
**************
உங்கள் கருத்தறிய ஆவல்!
இதையும் படியுங்க!
*************************
சிந்திக்க வைக்கும் கதையும் கவிதையும்... அருமை...
பதிலளிநீக்குமிக்க நன்றி சார்... வாழ்த்துக்கள்...
(t.m.1)
கவியென்ற குதிரை தன் ஆட்சி துவங்கும்
பதிலளிநீக்குமனிதருக்குள் மறுபடியும் நேசம் துளிர்க்கும்
விளக்கத்துடன் பகிர்ந்தமைக்கு நன்றி.அழகான வரிகள்.
சில சில பகுதிகளை தவற விட்டுள்ளேன் மொத்தமாக படித்துவிட்டு வருகிறேன்
பதிலளிநீக்குசிந்திக்க வைக்கும் வரிகள்!
பதிலளிநீக்குநல்ல வரிகள். புத்தகத்தில் பல முறை படித்த பகுதி...
பதிலளிநீக்குNice Kavithai.but too long
பதிலளிநீக்குஅருமையான கவிதை
பதிலளிநீக்குகுதிரை என்பது ஒரு குறியீடு என்பதனைத்தான்
எத்தனை தெளியாக அழகாகச் சொல்லிப்போகிறார்
மீண்டும் மீண்டும் ரசித்துப்படித்தேன்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நன்றி சசிகலா!
பதிலளிநீக்குசிட்டுக்குருவி said...
பதிலளிநீக்குசில சில பகுதிகளை தவற விட்டுள்ளேன் மொத்தமாக படித்துவிட்டு வருகிறேன்//
நன்றி சிட்டுக்குருவி
வரலாற்று சுவடுகள் said...
பதிலளிநீக்குசிந்திக்க வைக்கும் வரிகள்!
நன்றி வரலாறே! அடுத்த பதிவை சீக்கிரம் எதிர் பார்க்கிறோம்.
வெங்கட் நாகராஜ் said...
பதிலளிநீக்குநல்ல வரிகள். புத்தகத்தில் பல முறை படித்த பகுதி...//
நீங்கள் பாலகுமாரனின் ரசிகர் என்பதை நான் அறிவேன்.
//Anonymous said...
பதிலளிநீக்குNice Kavithai.but too long//
உண்மைதான் ஆனால் சுருக்கி விட்டால் சுவை குறைந்து விடும்.இருப்பினும் இரண்டு பதிவுகளாக அளித்திருக்கிறேன்.
Ramani said...
பதிலளிநீக்குஅருமையான கவிதை
குதிரை என்பது ஒரு குறியீடு என்பதனைத்தான்
எத்தனை தெளியாக அழகாகச் சொல்லிப்போகிறார்
மீண்டும் மீண்டும் ரசித்துப்படித்தேன்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்//
நன்றி சார்
E59C3B91F7
பதிலளிநீக்குTakipçi Satın Al
Whiteout Survival Hediye Kodu
Telegram Coin Botları
Free Fire Elmas Kodu
Call of Dragons Hediye Kodu
3205506D20
பதிலளிநீக்குgarantili türk takipçi
black swivel accent chair