பத்து நாளா பதிவுலகம் பக்கம் தல காட்ட முடியாம இருந்ததற்கு காரணம் நான் எழுதிய விலகி விடு சச்சின் என்று பதிவுதான். சச்சின விலகச் சொல்றதுக்கு நீ யாருன்னு கோபப் பட்ட BSNL இணைய இணைப்பு கிடைக்காம பண்ணிடுச்சு. அந்தப் பதிவில் இருந்த எழுத்துப் பிழைகளைக் கூட திருத்த முடியல.
அது போகட்டும். வாடிக்கையாளர்களுக்கு BSNL இப்படி ஒரு கடிதம் அனுப்பினா எப்படி இருக்கும்?
அன்புள்ள வாடிக்கையாளருக்கு,
அது போகட்டும். வாடிக்கையாளர்களுக்கு BSNL இப்படி ஒரு கடிதம் அனுப்பினா எப்படி இருக்கும்?
அன்புள்ள வாடிக்கையாளருக்கு,
பத்து நாட்களாக இணைய இணைப்பு இல்லை என்று புகார் செய்து புலம்பிக்
கொண்டிருகிறீர்கள். பெரும்பாலான நேரம் மின்சாரம் இல்லாமல் அவதிப் படுபவர்களே சும்மா
இருக்கிறார்கள். அவர்களை கொஞ்சம் நினைத்துப் பார்த்தால் இது பெரிய விஷயமாகத் தெரியாது.
இணைப்பு இருந்தால் மட்டும் என்ன செய்திருக்கப் போகிறீர்கள். முக நூலில் பயந்து பயந்து லைக் போடலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருப்பீர்கள். அல்லது மொக்கைப்
பதிவுகள் ஒன்றிரண்டு போட்டிருப்பீர்கள். நீங்கள் பதிவிட வில்லை என்று யாராவது
அழுதார்களா என்ன? நீங்கள் கருத்திடவில்லை என்று
யாராவது கவலைப் பட்டார்களா என்ன?
உங்களைப் போன்றவர்களின் தொல்லை தாங்க முடியாமல்தான் 'வேலை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது' என்ற கம்ப்யூட்டர் வாய்ஸ் மூலம் சொல்ல வைக்கிறோம்.ஆனாலும் அதைப் பொருட் படுத்தாமல் கஸ்டமர் கேர் எக்சிகியூட்டிவுக்கு கால் இணைப்பு கிடைக்கும் என்று நம்பி ரிசீவரைக் காதில் வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறீர்கள். கிடைக்காது என்று தெரிந்தும் பொன்னான நேரத்தை வீணாக்குகிறீர்கள். லைன் கிடைத்து சரிசெய்துவிடுவோம் என்று சொல்வதை நம்ப மாட்டேன் என்கிறீர்கள். ஒரு வாரம் ஆகிவிட்டது; எப்போதுதான் சரி செய்வீர்கள் என்று கோபப் படுகிறீர்கள். அதற்காகத்தான் புகார் கொடுத்து ஒரு வாரம் ஆகிவிட்டால் நாங்கள் பழைய புகாரை மறந்து விட்டு புதிய புகாராக எடுத்துக் கொண்டு முதலில் இருந்து தொடங்குவோம். அதைப் புரிந்து கொள்ளாமல் சேவை குறைபாடு என்று சேற்றை வாரி இறைக்கிறீர்கள்.போன மாதம்தானே பழுதானது என்று மீண்டும் ஏன் என்று கேட்கிறீர்கள்.அது போன மாதம் இது இந்த மாதம் என்பதைப் புரிந்து கொள்ளாமல்.

உண்மையில் சொல்லப் போனால் உங்களுக்கும் நாட்டுக்கும் நன்மைதான்
செய்திருக்கிறோம்.பத்து நாட்கள் கணினியைப் பயன் படுத்தாமல் இருந்தால் எவ்வளவு மின்சாரம்
மிச்சமாகி இருக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.நீங்கள் மட்டுமல்ல இன்னும்
எத்தனையோ பேர் உள்ளனர். அவர்களையும் சேர்த்துக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
அது மட்டுமல்லாமல் இண்டெர் நெட்டிற்கு நீங்கள் அடிமை ஆகி விட்டீர்களா என்பதை தெரிந்து கொள்ள இதுவே தக்க சமயம் என்பதை யோசிக்கத் தவறுகிறீர்கள். இணையம் பயன்படுத்த முடியாத இந்த பத்து நாட்களில் எரிச்சலும் டென்ஷனும் கோபமும் ஏற்பட்டிருந்தால் நீங்கள் இண்டெர் நெட்டிற்கு அடிமை ஆகிக் கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள். அப்படி நீங்கள் ஆகிவிடக் கூடாது என்பதற்காகத்தான் அவ்வப்போதுஇணைய இணைப்பை பழுதாக்கி உங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வாய்ப்பளிக்கிறோம். ஆனால் எங்கள் நல்லெண்ணத்தை உங்களைப் போன்றவர்கள் புரிந்துகொள்வதில்லை.
இத்தனைக்கும் மேலாக கணினி முன் உட்கார்ந்து காலத்தைக் கழிக்காமல் உங்கள் வீட்டு வேலைகளை கவனித்து மனைவியிடம் நல்ல பெயர் வாங்க இந்த வாய்ப்பை பயன்படுத்தி இருக்கலாம். அதை எல்லாம் விட்டு விட்டு BSNL ரொம்ப மோசம் என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறீர்கள். லேன்ட் லைன் வேலை செய்தது என்று நீங்களே சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் அதோடு மகிழ்ச்சி அடையாமல் இல்லாததையே பெரிதாக்குகிறீர்கள். உங்களுக்கு பொறுமையையும் சகிப்புத் தன்மையையும் கற்றுத் தரும் BSNL க்கு உங்களுக்கு நன்றி கூற மனமில்லாது போனாலும் தூற்றாமலாவது இருங்கள்.
இப்படிக்கு
வாடிக்கையாளர்களின் நலனை மட்டும் நாடும்
BSNL
***************************************************************************************************************
விலகி விடு சச்சின்

நிறுவனம் நினைக்கிறதோ இல்லையோ, BSNL நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் கண்டிப்பாக நினைத்துப் பார்த்திருப்பார்கள்.... நன்றி...
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நீக்குI was about to call you to know you there is no update from you.
பதிலளிநீக்குBSNL இன் கைங்கர்யம்தான்.
நீக்குதிரு மோகன்குமார் கேட்டதைப்போல் நானும் கேட்கலாமேன்றிந்தேன் ,பரவாயில்லை தொடருங்கள்.bsnlல் வேலை செய்துகொண்டே தனியாரை ஊக்குவிக்கும் இந்த செயல் வருந்ததக்கது
பதிலளிநீக்குநன்றி கண்ணதாசன்.இந்த அனுபவம் பலருக்கும் உண்டு
நீக்குநகைச்சுவையாக அருமையான கருத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஊழியர்கள் இதை படித்தால் கண்டிப்பாக ஒரு மற்றம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
பதிலளிநீக்குநன்றி ஆகாஷ்
நீக்குஹா ஹா .. சிந்தனை இல்லை இல்லை கடிதம் புதுசு
பதிலளிநீக்குநன்றி அரசன்
நீக்குபார்த்து நண்பரே பார்த்து BSNL க்கு நீங்கள் நக்கல் பண்ணியது தெரிந்தால் மேலும் 2 மாதங்கள் கட் பண்ணிவிடுவார்கள்
பதிலளிநீக்குஅடுத்த முறை கட் செய்தால் வேறு நெட் ஒர்க்கிற்கு மாற வேண்டியதுதான்.
நீக்குதூங்குவது போல நடிப்பவர்களை
பதிலளிநீக்குஎப்படி எழுப்புவது ?
சொல்லிச் சென்றவிதம் அருமை
வாழ்த்துக்கள்
நன்றி ரமணி சார்!
நீக்குtha.ma 3
பதிலளிநீக்குbsnl கொடுமைய ஏன் கேட்கறிங்க.. நிறைய நேரம் தொல்லைதான். புலம்பலை அழகா நக்கலா சொல்லிட்டிங்க. ஹா..ஹா..!
பதிலளிநீக்குநன்றி உஷா
நீக்குஎப்படியலெல்லம் தொல்லைகள் வளருதுஃ
பதிலளிநீக்குநன்றி
நீக்குதூங்குவது போல நடிப்பவர்களை
பதிலளிநீக்குஎப்படி எழுப்புவது ?//அருமை
உண்மைதான் மாலதி
நீக்குபிஎஸ் என்.எல் லிருந்து விலகி விடுங்கள் நண்பரே! நானும் அதன் கொடுமை தாளாமல் விலகி விட்டேன்! ஒருவருடமாய் வேலை செய்யாத போனுக்கு பில் அனுப்பிக் கொண்டு இருக்கிறார்கள்! என்னவென்று சொல்வது?
பதிலளிநீக்குநீங்கள் சொல்வதை பரிசீளிக்கவேண்டிய காலகட்டம் வந்துவிட்டது.
நீக்குGood one... :)
பதிலளிநீக்குநன்றி நாகராஜ் சார்!
நீக்குSρot on with this ωrite-up, Ι honeѕtly feel this webѕitе
பதிலளிநீக்குneeds a great deаl morе attеntiοn.
I'll probably be back again to see more, thanks for the advice!
My homepage :: Manhattan Escorts
உலகம்! அது நடக்கிற வழியில் நடக்கட்டும்.
பதிலளிநீக்குநாம் சொல்வதைச் சொல்லிக்கொண்டே இருப்போம்.
நன்றி அருணா
நீக்குநண்பரே நீங்களும் நையாண்டித்தனத்தில் கைதேர்ந்தவராகிவிட்டீர்கள்
பதிலளிநீக்குநன்றி அய்யா!
நீக்குவாடிக்கையாளர்களின் நலனை!!?? மட்டும் நாடும் BSNL !!!! ????
பதிலளிநீக்குஹிஹிஹி
நீக்குஇதன் சுட்டியை BSNL அதிகாரிகளுக்கும் அனுப்புங்களேன்!:))
பதிலளிநீக்குஅனுப்பினாலும் திருந்த மாட்டார்கள்
நீக்குகற்பனை போல் தோன்றினாலும் நடப்பையே எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு