என்னை கவனிப்பவர்கள்

வியாழன், 28 பிப்ரவரி, 2013

(இளைய+பாரதி) ராஜாக்களின் சண்டைகள்

சிரிக்கறத பாத்து நம்பிட்டீங்களா? இதெல்லாம் சும்ம்ம்ம்மா.......!
அன்பை  மறந்த ராஜாக்களே!
    ராஜ்ஜியங்களுக்காக ராஜாக்கள் சண்டையிட்டதை கேள்விப் பட்டிருக்கிறோம். இழந்த ராஜ்ஜியங்களை மீட்கவும் சண்டை இடலாம்.  நீங்கள் போடும் சண்டை எந்த வகை? கோலோச்சிய காலங்களில் கூடிக் குலவியதை மறந்துவிட்டு ஒருவர்மீது ஒருவர் குற்றம் சாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். புழுதிவாரி தூற்றிக் கொண்டிருக்கிறீர்கள். பத்திரிகைகள் அவரவர் பங்குக்கு தூண்டிவிட சிரிப்பாய் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் மக்கள். உங்கள் மீது வைத்திருக்கும் மரியாதை நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே போவதை நீங்கள் அறிவீர்களா? முந்தைய  தலைமுறையின் மேதைகள் என்று  அடையாளம் காட்டப்படும் நீங்கள்  உங்களை  அதிகம் அறியாத இன்றைய தலைமுறையினர் ஏளனத்தோடு பார்ப்பது தெரியுமா?  இவ்வளவுதானா உங்கள் மேதாவிகள் என்று கேட்கும்போது பாரதிராஜா ரசிகனும் இளையராஜா ரசிகனும் பதில் சொல்லமுடியாமல் தவிப்பது உங்களுக்கு  புரியுமா? வயதாகி விட்டாலே வாய்க்கு வந்தபடி பேசவேண்டும் என்று சட்டம் உள்ளதா? ஆணவமும் அகங்காரமும் கலைஞர்களுக்கு முதல் எதிரி என்பது உங்களுக்கு  தெரியாதா? உங்கள் ரசிகர்கள் என்று சொல்வதற்கு வெட்கப் படவேண்டிய சூழ் நிலையை உருவாக்கி விடாதீர்கள்! இவ்வளவு வேற்றுமையை வைத்துக்  கொண்டு எப்படி பணியாற்றினீர்கள் என்பது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. அப்போது சாதிக்க வேண்டும் என்ற வெறி; சண்டை போட நேரமில்லை. இப்போது சாதித்தாகி விட்டது. சரக்கு தீர்ந்துவிட்டது. சண்டை தொடங்கி விட்டது;  கருத்து வேற்றுமைகள் விசுவரூபமாகிவிட்டன என்று எடுத்துக் கொள்ள்ளலாமா?

   இளையராஜா சார்!  நீங்கள் பாரதிராஜா பேசியதை குற்றமாக எடுத்துக் கொண்டீர்கள். ஆனால் நீங்கள் என்றைக்காவது மேடை நாகரீகத்துடன் பேசி இருக்கிறீர்களா? தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தேன். கெளதம் மேனன் நிகழ்ச்சியில் உங்களைப் பார்த்த மகிழ்ச்சியிலும் உங்கள் பாடல்களை கேட்கப் போகிறோம் என்ற உற்சாகத்திலும் விசில் அடித்தபோது, ரசிகர்களை பார்த்து விசில் அடிக்காதீர்கள் நான்வெளியே போய் விடுவேன் என்று மிரட்டியது எந்த வகையில் நியாயம் என்று நினைக்கிறீர்கள்? நீங்கள் பாரதிராஜாவின் பேச்சை புண் படுத்தியதாக கூறி இருக்கிறீர்களே! நீங்கள் ரசிகர்களை அவமதிப்பது சரியா? 
   ஒரு மேடையில் பாரதிராஜா, நீங்கள் அவர்கள் ஊருக்கு வந்து, திருவிழாவில் வாசித்தபோது கை குலுக்கியதை குறிப்பிட்டார். நீங்களோ அது நினைவில்லை என்று முகத்தில் அடித்தார் போல் கூறினீர்கள். உங்கள் பேச்சுக்கள் பல நேரங்களில் தலைக்கனத்தின்  வெளிப்பாடாக அமைந்து விடுகிறது என்பதை நீங்கள் உணர்வீர்களா? உதாரணத்திற்கு ஹிந்துஸ்தானி இசையின் சிறப்பு அம்சம் என்ன  என்ற கேள்விக்கு ஸ்ருதியை விட்டு விலகாமல் பிசகாமல் இசைக்க அதிலே லயித்துப் போய் பாடும் தன்மைதான் ஹிந்துஸ்தானி இசையின் சிறப்பு என்று கூறியதோடு நிறுத்தி இருந்தால் பரவாயில்லை. அதோடு கர்நாடக இசையில் உள்ள அளவு கடந்த ராகங்களும் தாளங்களில் உள்ள விரிவான அம்சமும் அதிலும் கொண்டு வரலாம் என்பது அவர்களுக்கு தெரியாது என்று கூறியது உங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற தொனியில் பேசுவது போல் அல்லவா உள்ளது.

   அன்னக்கொடியும் கொடிவீரனும் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு வைரமுத்துவையும் அழைக்க விரும்பியதாகவும். உங்கள் பிடிவாதத்தின் காரணமாக அவரை அழைக்கவில்லை என்றும் தெரிகிறது. வைரமுத்துவின் மீது ஏன் அவ்வளவு காழ்ப்புணர்ச்சி?. முகத்தில விழிக்கக் கூடாத அளவுக்கு அப்படி அவர் என்னதான் தவறு செய்தார் என்று இது நாள் வரை தெரியவில்லை. உங்களுக்குப் பின்னால் உங்களிடத்தை ஏ.ஆர்.ரகுமான் பிடித்துவிட்டார்.ஏன்? ஒரு படி அதிக உயரத்திலும் இருக்கிறார்.  ஆனால் வைரமுத்துவின் இடத்தை நிரப்ப இன்றுவரை அவருக்கு இணையானவர் வரவில்லை. என்பது உங்களுக்குத் தெரியாமல் போய் இருக்க வாய்ப்பில்லை. அவரை அவமதிப்பதில் அவ்வளவு மகிழ்ச்சியா? இசைஞானியாகத்தான் உங்களை நினைத்திருக்கிறோம். நீங்கள் வசைஞானியாய் மாறிவிடாதீர்கள். உங்களை ஒருமையில் பேசியதும் நீங்கள் தலைக்கனம் பிடித்தவர் என்ற ரீதியில் பேசியதும் தவறு என்றாலும், அதற்கு காரணமும் நீங்கள் தானே! 
   நட்புக்கு  இலக்கணமாய் இல்லாவிட்டாலும் பகைமைக்கு முன்னுதாரணமாக மாறிவிடாதீர்கள். திருவாசகம் இசையால் மனங்களை உருக வைத்த நீங்கள் வசை வாசகங்களால்  கருக வைக்காதீர்கள் (வசையிலும் இசை உண்டு என்று தத்துவம் பேசிவிடாதீர்கள்)



  பாரதிராஜாசார்! உங்களுக்கும் எங்கள் எண்ணங்களை தெரிவிக்கவேண்டும். எப்போதுமே உணர்ச்சி வசப்பட்டு பேசுதல் நல்லது என்றா நினைக்கிறீர்கள். ஒருவர் விரும்பாதபோது அவரைப் பற்றிய எண்ணங்களை வெளிப்படையாக சொல்வது ஏற்புடையதல்ல. என்னதான் நெருங்கியவர்களாக இருந்தாலும் ஒருமையில் பேசுவது உங்களுக்கு அழகல்ல. வைரமுத்துவோடு இளையராஜாவை சேர்த்துவைக்க முயன்றீர்கள். இன்று நீங்களே பிரிந்து நிற்கிறீர்கள். ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது பழமொழி. இப்போதெல்லாம் கலைஞர்கள் ரெண்டு பட்டால் பத்திரிகைகளுக்கும் ஊருக்கும் கொண்டாட்டம் என்பது நாங்கள் சொல்லியா தெரிய வேண்டும்?. பொது நிகழ்ச்சிகளில் பேசுவதற்கு  முன் என்ன பேசவேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுங்கள். நான் நிர்வாணமாவன் என்றெல்லாம் பேசுவதை தவிர்க்கவும். பண்பைக் கற்றுகொடுக்க முடியாவிட்டாலும் பகைமையை கற்றுக் கொடுக்காதீர்கள். 


   நல்ல படைப்புகளைத் தரும் கலைஞர்கள் நற்பண்புகள் உடையவர்களாக இருப்பார்கள் என்று நம்பும் அப்பாவித் தமிழர்களின் நம்பிக்கையில் சிறிதளவாவது உண்மை இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

உண்மையாக  புன்னகைத்துப் பாருங்கள்; உலகமே அழகாகத் தெரியும்.

                                                                   அன்புடன் 
                                           கலையோடு கலைஞனையும் நேசிக்கும்  தமிழர்கள் 

 ***************************************************************************************
 நேரம் இருந்தா இதையும் படிச்சிப் பாருங்க!
ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா, எம்.எஸ்.வி :பலங்கள்-பலவீனங்கள்- குறைகள் 
இளையராஜா செய்தது சரியா? 

69 கருத்துகள்:

  1. கர்வம் திறமையை புகழை மழுங்கச் செய்துவிடும் என்பதை இளையராஜா எம் எஸ் விஸ்வனாதனிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்

    பதிலளிநீக்கு
  2. கொஞ்சம் பொறுங்கள்... நிறைய உண்மைகள் தெரிய வரும்... - இது என் அனுபவத்தில பல இணையர்களிடம் கண்டதுண்டு...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பல இணையர்களிடம் //

      இனையத்தில் அதாவது வலையில் எழுபவர்களைச் சொல்கிறீர்களா அய்யா ?

      நீக்கு
    2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்

      நீக்கு
  3. தங்கத்தினால் ஆன ஊசி என்பதற்காக கண்ணில் குத்தி கொள்ள முடியாது என்பதை மிக சிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள்.இவர்கள் இப்படி நடக்க காரணம் தாங்கள் (மட்டும் ) தான் மிக பெரிய மேதைகள் என்ற உயர் மனப்பான்மை தான்.

    பதிலளிநீக்கு
  4. எல்லாமே கண் துடைப்போ கவனம் திருப்ப இது ஒரு வகையோ இப்படியும் வேண்டி இருக்கிறது புகழ்க்கு

    பதிலளிநீக்கு
  5. ராஜாக்கள் சண்டை இட்டால்
    ராகங்கள் என்ன செய்யும்
    மேகங்கள் மோதிக் கொண்டால்
    மின்னல்கள் வெளியில் சொல்லும்
    பாவங்கள் நாம் எல்லாம்
    அவங்கள் சண்டையை பார்த்திருப்போம்
    ஆர்வங்கள் இருந்த போது
    கர்வங்கள் இல்லை அம்மா
    வருடங்கள் உருண்ட பின்னே
    நெருடல்கள் வந்த தென்ன
    நிலவுங்கள் தண்ணீர் இல்லை-அவங்க
    மனதுக்குள் மறுப்பு இல்லை
    கணவுக்குள் சண்டை இட்டு
    பிளவுகள் காட்டிப் பின்னே-தொலைக்காட்சி
    விழாக்களில் தோள் தொட்டு
    தோழமைகளில் நிற்பர் கானே.

    கவிஞர். அழகர்சாமி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நிலவுங்கள்//நிலவுக்குள் என்று வாசிக்கவும்

      கவிஞர் அழகர்சாமி

      நீக்கு
    2. அருமை அழகர்சாமி ஒரு வலைப்பூ ஆரம்பித்து விடுங்கள்!

      நீக்கு
    3. பார்த்தீங்களா கவிதை எத்தனை சந்தோஷத்தை தரக்கூடியது என்று. முகம் தெரியாதா நீங்களே என் திறமை வீனாகமல் தமிழுக்கும் தமிழர்களுக்கும் பயன்படனும்னு நினைக்க வைக்குது.என்னுடைய எத்தனயோ விலை மதிக்க முடியாத கவிதைகள் ஆவனப்படுத்தபடாமல் கிடக்கிறது. எனக்கு கவிதை எழுத திறமை கொடுத்த இறைவன் இந்த இண்டர்னெட் கணினி போன்ற விஷயங்களில் துப்புக் கெட்டவனா படைத்துவிட்டதால் .பதிவு தொடங்கலாம் என்றால் எப்படி என்று தெரியவில்லை.
      தமிழ்மனத்தில் கருவிப்பட்டை அது இது என்கிறார்களே தவிர எப்படி பதிவு கணக்கு தொடங்கவேண்டும் என்ற விபரமில்லை. இது வெப்சைட் போன்றது அதற்கு வருடத்திற்கு பணம் கட்டி சர்வரில் 2mp space எடுக்கனும் என்கிறார் என் நண்பர்.

      கவிஞர்.அழகர்சாமி

      நீக்கு
    4. அதெல்லாம் ஒன்னும் இல்ல வலைபூ ஆரம்பிக்கறது ரொம்ப ஈசி.கூகிள் ஈமெயில் அக்கௌன்ட் இருந்தா அது போதும்,இல்லன்னாலும் ஈசியா ஓபன் பண்ணிடலாம்.எந்த செலவும் இல்ல. உங்களுக்கு ஆட்சேபனை இல்லன்னா எனக்கு மெயில் அனுப்புங்க.இல்லன்னா எனக்கு போன் பண்ணுங்க
      ஈமெயில் அட்ரெஸ் tnmdharanaeeo@gmail.com
      cell no 9445114895
      அப்புறம் அசத்துங்க

      நீக்கு
    5. Nantri.

      mail annupukiraen. tamil font ethanalo work akavillai.

      Kavingar Alagarsamy.

      நீக்கு
  6. போங்கய்யா!சினிமாக்காரங்க சண்டையெல்லாமே டிராமாதான்!

    பதிலளிநீக்கு
  7. ரசிகர்களுக்கு இருக்கும் உணர்வு கூட படைப்பாளிக்கு இல்லாமல் போனது தான் வருத்தம் .. என்று உணர்வார்களோ ? பதிவு நச் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கலைஞரகுடைய படைப்புகளை வைத்து குணங்களை எடை போடுகிறோம். அதனால் வந்த ஆதங்கம்தான் இது.நன்றி அரசன்.

      நீக்கு
  8. மேதைகள் எப்போதும் மோதிக் கொள்வது வேதனைதான்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேதைகளுக்கு அது இழுக்கு என்பதை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார்களோ?

      நீக்கு
  9. வணக்கம்
    டி என் முரளிதரன்(அண்ணா)

    என்னதான் செய்வது சொல்லுவார்கள் ஒரு பட்டியில் கிடக்கும் மாடுகளுக்கு கொம்பு முறுக்கேறுவது வழக்கந்தான் பொறுமை காத்திடுவோம் அப்புறம் எல்லாம் சரியாகிவிடும்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  10. கலையோடு கலைஞனையும் நேசிக்கும் தமிழர்கள் என்று இரு பக்கமும் அழகாக எடுத்துரைத்து(இடித்துரைத்து)விட்டீர்கள். பிரபல பத்திரிக்கையில் விமர்சனங்களை படிப்பது போல் பிரமிப்பை தருகிறது உங்கள் கட்டுரை ஒவ்வொன்றும்!

    பதிலளிநீக்கு
  11. இப்பொழுதெல்லாம்
    கலைஞர்களின் பொறாமை போட்டியில் முடியாமல்
    பிரிவில் முடிந்து விடுகிறது....

    பகிர்வு அருமை மூங்கல் காற்று.

    பதிலளிநீக்கு
  12. ஆணவம் மேதைகளை பேதைகளாக்கி விட்டது.பதிவு நச்

    பதிலளிநீக்கு
  13. அருமை நண்பரே சரியாக சொன்னீர்கள் ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற பழமொழி இருவருக்கும் தெரிந்திருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்க கலைஞர்கள் இருவர் மோதலைப் பத்தி பேசுறோம் அய்யா எதைப்பத்தி சொல்றீங்க !
      தமிழரசு

      நீக்கு
  14. இவங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கொண்டாலும், ஊரறிய அடிச்சுக்கிட்டு கட்டி உருண்டாலும் அவர்களுக்கு இடையில் உள்ள "நட்பு" ஆழமானதுனு நம்புறேன். :)

    பதிலளிநீக்கு
  15. போட்டி பொறாமை...the new normal...-:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவர்கள் கலையில் அசாதரனமானவர்கள்: குணத்தில் சராசரிக்கும் கீழ் இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

      நீக்கு
  16. அருமையாக எடுத்து சொல்லிருக்கிறீர்கள். வயதாகிவிட்டாலே இப்படித்தான் பேச வைக்குமோ என்ற எண்ணம் எனக்கும் தோன்றியது. இந்த கட்டுரையை அவர்களுக்கு படிக்கக் கிடைத்தால் கண்டிப்பாக சிறிதளவாவது யோசிப்பார்கள் என்பது நிச்சயம்.

    இந்த பதிவை படித்ததும் அருமையான படல்வரிதான் ஞாபகத்துக்கு வந்தது.

    தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும், இப்படிதான் புகழைத்தேடி அலைந்தபோது ருசியாக இருந்தது, அந்த புகழின் உச்சிக்கு சென்றதும் அசிங்கமாக தெரிகிறதா??????

    நல்ல பதிவு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  17. மீண்டும் ராஜாவை குறை காண்பதற்கான வடிவமிக்கபட்ட பதிவு போல் தான் தெரிகிறது.நீங்கள் தொடர்ந்து ராஜாவை விமர்சிக்கும் நிலை ஏன் ?
    வைரமுத்து இல்லாமல் ராஜா மட்டும் அல்ல ரகுமானும் வெற்றி கண்டுள்ளனர்.வாலி என்ற அற்புத கவிஞர் இருப்பதை மறந்து விட்டிர்களா (காதல் தேஹ்சம்) .வைரமுத்து இல்லாமல் ரகுமான் நிறைய படங்களுக்கு இசை அமைத்தார் .
    ராஜாவை பிடிக்காவிட்டால் அவரை பற்றி அவதுறுகளை எழுதாமல் உங்கள்ளுக்கு பிடித்த வைரமுத்து /ரஹ்மான் பற்றி பதிவுகள் எழுதலாமே.( ராஜா பற்றி பேசாத பதிவுகள் யாரும் பார்க்க மாட்டார்கள் போல்)
    ராஜாவை இடத்தை இன்னும் ரகுமான் பிடிக்கவில்லை.ராஜாவை குறை காண்பதை விட்டு அவரது இசை ரசிக்கலாமே.(ராஜா இல்லாமல் ரஹ்மான் பற்றி எழுதவும் முடியாது அதுதான் ராஜாவின் மேஜிக்........)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் மீது குறை கூறுவது எனது நோக்கமல்ல.ராஜாவின் இசை எனக்கும் பிடித்தமானது.வாலி இன்றுவரை எழுதி வந்தாலும் அவர் வைரமுத்துக்கு முன்னரே புகழ் பெற்றவர்.ராஜாவின் திறமை பற்றியோ மேதமை பற்றியோ எவ்வித ஐயமும் இல்லை. அவர் பண்பாளரகவும் திகழவேண்டும் என்று மனம் எதிர்பார்க்கிறதே! என்ன செய்வது?அது என் அறியாமையாகக் கூட இருக்கலாம். நாம் மதிப்பும் மரியாதையும் கொண்டிருக்கும் ஒருவர் சாதரணராக சண்டையிட்டுக் கொள்வதை சகிக்க முடியாத ஆதங்கத்தின் விளைவே இந்தப் பதிவு.
      வைரமுத்துவின் தற்பெருமைப் பேச்சுக்களும் துதி பாடும் பேச்சுக்களும்கூட நான் விரும்பாதவை.அதைப் பற்றியும் எழுத இருக்கிறேன்.
      உங்களுக்கு இந்தப் பதிவு மனவருத்தத்தை ஏற்படுத்தி இருந்தால் அதற்காக வருந்துகிறேன்.
      வருகைக்கும் கருத்தளித்தமைக்கும் மிக்க நன்றி நன்றி.

      நீக்கு
    2. இந்த பதிவு எனக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தவில்லை.சமீப காலமாக எல்லாம் பதிவாளர்கள் சேர்ந்து ராஜாவை குறை சொல்லும் பதிவுகள் தான் போடுகிறார்கள்.
      ராஜாவிடம் குறை இருந்தால் அவரால் நல்ல இசையை நமக்கு தர முடியாது அதற்கு அவரின் இசை தான் சாட்சி.
      அவருக்கு தன்னுடயை ரசிகர்களிடம் கோபித்து கொள்ளவும் உரிமை இருக்க காரணம் அவரின் இசை தான்.
      ராஜாவுக்கும் ரஹ்மானுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் ஆஸ்கார் விருது தான்.
      ராஜா நல்ல இசை மட்டுமே தராமல் சிறந்த படைப்புகளும் ,சிறந்த கலைஞர்களும் உருவாக உருதுனையாக இருக்கிறவர்.இன்றும் அப்படியே.
      ஹாலிவுட்டில் இசை என்பது திரை தொழில்நுட்ப அம்சம்.ஆனால் இந்திய சினிமாவில் இசை என்பது திரைப்படத்தின் உயிர் என்பதை உணர்த்தியவர்.
      இவர் வெறும் இசை அமைப்பாளர் மட்டுமே என்ற ரீதியில் பதிவுலக நண்பர்கள் நினைத்து கொண்டு ராஜாவை விமர்சிக்கும் பொது கொஞ்சம் வருத்தமாக உள்ளது.
      ராஜா நம் இந்திய சினிமாவின் ஜாம்பவான்.இதை யாராலும் மறுக்கமுடியாது.ராஜா திரை இசை துறைக்கு வராவிட்டால் இசை என்பது நம் சினிமாவில் வெறும் பாடல்களும் ,காட்சி தொகுப்புகளின் இடைவெளி நிரப்பும் தொழில்நுட்ப அம்சமாக இருந்திருக்கும்.
      பாரதிராஜா,மணிரத்னம் போன்ற இயக்குனர்கள் இல்லாமல் ராஜா இல்லை என்ற நிலைமை இன்றும் அவருக்கு இல்லை.
      (ராஜா இல்லாமல் தான் மணியும்/பாரதிராஜா போன்றவர்கள் தொடர்ந்து சொதப்பி கொன்றிப்பது வேறு விடயம் ).
      ராஜா போட்டு தந்த பாதையில் தான் இன்றும் இந்தியாவில் நல்ல படைப்புகள் உருவாகி வருவதை நம்மால் மறுக்க முடியாத உண்மை.
      எனக்கு கருத்தளிக்க வாய்ப்பு தந்த உங்களுக்கும் நன்றி முரளி.

      நீக்கு
    3. ராஜாவின் மிகப் பெரிய பலம் இப்படிப்பட்ட ரசிகர்களின் அன்பைப் பெற்றிருப்பதுதான். அது அவரது நிகரில்லாத இசைஞானத்தின் விளைவாகக் கிடைத்த பரிசுதான்.
      இன்னொரு பதிவில் எம்.எஸ்.வி, ராஜா, ரகுமான் பற்றி எழுதி இருக்கிறேன் அதைப் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.அதில் மற்ற இருவரைவிட அதிகமான நிறைகளை ராஜாவிற்குத்தான் குறிப்பிட்டிருக்கிறேன்.
      நன்றி பாலகிருஷ்ணன். அடிக்கடி வருகை தாருங்கள்

      நீக்கு
  18. மிகவும் திறமையான கலைஞர்கள்...

    நீயா நானா..

    என்று பொறாமை மனப்பான்மையால்

    சீர்கெட்டு இருக்கிறார்கள்...

    நிதர்சனம் புரிந்து

    நிலைகொள்ள வேண்டும்...

    பதிலளிநீக்கு
  19. திரையுலக மேதைகளின் , கன்னியக் குறைவானப் பேச்சு, உண்மையிலேயே
    அவர்கள் மீதுள்ள அன்பை, மரியாதையினைக் குறைக்கத்தான் செய்கின்றது.
    பதவி வரும்போது பணிவும் வரவேண்டும் என்ற பாடல் வரிகள்தான் நினைவிற்கு
    வருகின்றன.

    பதிலளிநீக்கு
  20. "கெளதம் மேனன் நிகழ்ச்சியில் உங்களைப் பார்த்த மகிழ்ச்சியிலும் உங்கள் பாடல்களை கேட்கப் போகிறோம் என்ற உற்சாகத்திலும் விசில் அடித்தபோது, ரசிகர்களை பார்த்து விசில் அடிக்காதீர்கள் நான்வெளியே போய் விடுவேன் என்று மிரட்டியது எந்த வகையில் நியாயம் என்று நினைக்கிறீர்கள்?"

    ஓஓஹோ அந்த விசிலடிச்சான் குஞ்சுகளில் நீங்களும் ஒருவரா ???

    உண்மையில் விசிலடித்தவர்களை வெளியில் அனுப்பியிருக்க வேண்டும். இந்த விசிலடிச்சான் குஞ்சுகள் தான் இளையராஜா அண்மையில் நடத்திய (அன்றும் என்றும் ராஜ ) என்ற நிகழ்ச்சியில் ராஜா சிம்போனி இசையை வழங்கும் பொது விசிலடித்து ராஜாவை கடுப்பெற்றினார்கள்.
    நான் ஒன்றும் ராஜ வெறியன் கிடையாது. ஆனால் உங்களுடைய தொடர் ராஜா விமர்சன பதிவுகளை கடுப்பேறியவன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதை டிவியில் தான் பார்த்தேன் நண்பரே! உண்மையில் எனக்கு விசில் அடிக்கத் தெரியாது.பலமுறை முயற்சி செய்தும் வரவில்லை.

      நீக்கு
    2. விசில் அடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டால் போதுமானது வெளியே போய் விடுவேன் என்றுசொல்வது எனக்கு சரியாகப் படவில்லை நண்பரே!

      நீக்கு
    3. மன்னிக்கவும். நான் டிவி யில் பார்க்கவில்லை. நேரில் சென்றிருந்தேன். முதலில் வாயில் விரலை வைத்து அமைதியாக இருக்குமாறு இரண்டு தடவை கூறினார்.

      நீக்கு
  21. அவர் குடித்தார் என்றெல்லாம் கோபமாய் பேட்டி தருவது ராஜா போன்ற இசை மேதைகளுக்கு அழகல்ல. இருவரின் தனிப்பட்ட கோபங்களும் சண்டைகளும் மீடியாமுன் இப்படி வருகையில் இருவரின் பெயரும் இப்படி பதிவுலகம் உட்பட கன்னாபின்னாவென்று பல இடங்களில் அடிபடுவதில் அவர்களுக்கு்த்தான் இழுக்கு. தெளிவா, தைரியமா, அழகா எழுதியிருக்கீங்க முரளி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கணேஷ் சார்! நாம் பேசுவதால் அவர்கள் எண்ணத்தைமாற்றிக் கொள்ளப் போவதில்லை. என்றாலும் கலையில் மேதைகளாகத் திகழும் அவர்கள் குணத்திலும் உயரந்தவர்களாக இருக்கவேண்டும் எதிர் பார்த்ததின் விளைவே இந்தப் பதிவு.

      நீக்கு
  22. இளையராஜா வைரமுத்து சண்டை வயதான பின்னர் வந்ததல்ல, அவர்கள் இளைஞர் என்ற நிலையை சற்றே கடந்த சயத்தில் இருந்தே இருக்கிறது. பாரதிராஜாவும் இளையராஜாவும் முன்னரே ஒருமுறை பிரிந்து பின்னர் இசை சோபிக்காமல் போக பாரதிராஜா மீண்டும் வந்து "நாடோடித் தென்றல்" படத்தில் இருந்து ஒட்டிக் கொண்டார். [ஆனாலும் கூட்டணி அப்புறம் எடுபட வில்லை].

    இளையராஜா வரைமுத்து விரிசலுக்கான காரணம் கடவுளுக்கும் அவர்களுக்கும் மட்டுமே தெரிந்த விஷயம் அதில் நாம் தலையிடுவதோ விமர்சிப்பதோ சரியானதல்ல என்பது என் கருத்து.

    இசையைப் பற்றி எல்லா விமர்சனமும் செய்ய இளையராஜா தகுதியானவரே, அந்த விஷயத்தில் அவரை விமர்சிக்கும் தகுதி நமக்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "இளையராஜா வரைமுத்து விரிசலுக்கான காரணம் கடவுளுக்கும் அவர்களுக்கும் மட்டுமே தெரிந்த விஷயம் அதில் நாம் தலையிடுவதோ விமர்சிப்பதோ சரியானதல்ல என்பது என் கருத்து.:

      தாஸ் அண்ணா, இதில் பண விவகாரம் சம்பந்தப்படுள்ளதாக பல ஆண்டுகளுக்கு முன்பு (15வருடன்கலுக்கு முன் ) கேள்விப்பட்டேன். உண்மையாக இருக்குமா ???

      நீக்கு
    2. இருக்கலாம்! வைரமுத்து இணைவதற்கு தயாராகவே இருந்தார்.ஆனாலும் ஏனோ ராஜா அதை ஏற்கவில்லை.

      நீக்கு
  23. இதுவும் ஒரு ஊடல் போலத்தான்!

    பதிலளிநீக்கு
  24. நட்புக்கு இலக்கணமாய் இல்லாவிட்டாலும் பகைமைக்கு முன்னுதாரணமாக மாறிவிடாதீர்கள்


    விளம்பரத்திற்காகப் போடும் நிழல் சண்டையை
    ஊடகங்கள் பரபர்ப்பாக்குவதைப்பார்த்து
    இரண்டு ராஜாக்களும் சந்தோஷப்பட்டிருப்பார்கள்..

    பதிலளிநீக்கு
  25. புகழ் வெளிச்சத்தில் இருப்பவர்கள்
    இருட்டில் செய்கின்ற லீலைகள் எல்லாம்
    வெளிச்சத்திற்கு வரும்போது ...
    மரியாதை கேள்விக் குறியாகி விடுகிறது !

    நான் முன்பு எழுதியது ,ராஜாக்களின் சண்டைக்கும் பொருந்தும் போல் இருக்கிறது !

    பதிலளிநீக்கு
  26. நாளைக்கு ஒன்றாகி விடுவார்கள்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  27. ஒரே வார்த்தை இந்த பதிவை பற்றி சொல்லவேண்டும் என்றால் : கலக்கல். நெத்தியடி என்று சொல்வார்களே அது போல சரியான சாட்டை அடி பதிவு. குறிப்பிட்ட அந்த இரண்டு ராசாக்களுக்கும் இது தேவைதான். இந்த இருவரும்தான் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான ஆளுமைகள் என்ற எண்ணம் இப்போது வெகுவாக குறைந்து வருவதற்கு இது போன்ற சம்பவங்களே உதாரணம். பாரதிராஜாவாவது தனக்கு பட்டதை சட்டென சொல்லிவிடக்கூடியவர். அவர் ரஜினியையும் கடுமையாக சாடியது உண்டு. எனவே அவர் கூறியதில் எந்த உள்நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை. பாரதிராஜா இளையராஜா வைரமுத்து என்கிற மூவர் கூட்டணிதான் தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று சிலர் (அதில் எனக்கு உடன்பாடு இல்லை)கருதுவதுண்டு. இத்தனை வெறுப்புக்களையும் பேதங்களையும் மனதில் தேக்கிக்கொண்டு முகமூடி அணிந்து நட்பு பாராட்டி இருக்கிறார்கள் ஒரு காலத்தில்.வேடதாரிகள். அதிலும் இளையராஜா வைரமுத்துவை வெறுப்பதில் எல்லை கோட்டை மீறியே செல்பவர்.
    இணையத்தில் இன்று இளையராஜா பற்றி வரும் பத்து பதிவுகளில் எட்டு அவரை துதி பாடியே வருகின்றன. இசை கடவுள் தமிழ் இசைக்கு கிடைத்த பொக்கிஷம் ராக தேவன் இசையே உயிராக கொண்டவர் என்று விதம் விதமாக ராஜாவை புகழ்ந்து தள்ளும் பதிவுகளே இங்கே. ஒரு இரண்டு பேர் அவர் புகழ் பாடாமல் இருப்பதை இருப்பது படி எழுதினால் அதுவும் தவறு என்று சட்டையை மடக்க ஒரு கூட்டமே காத்திருக்கிறது. திருவாளர் பாலகிருஷ்ணன் போன்று. இளையராஜா பற்றி எழுதும் எல்லோருமே அவரை தனி மனித ஆராதனை செய்துதான் எழுதவேண்டுமா என்ன? ஏன் இளையராஜாவிடம் குறைகளே இல்லையா?அல்லது அவர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா? அவரிடம் இருக்கும் குறைகளை சொன்னால் ஏன் இப்படி எழுதுகிறீர்கள் என்று கேள்வி கேட்பது எந்த ஊர் நியாயம்? இளையராஜா யாருடனும் இணைந்து பணியாற்ற முடியாத மனநிலை கொண்டவர். (பாலு மகேந்திராவுடன் என்றைக்கு வாட்டு வரப்போகிறதோ தெரியவில்லை) ஏனெனில் அவர் தன்னை தானே புகழ்ந்து கொள்ளும் ஒரு நார்சிஸ்ட் வகையை சேர்ந்தவர். மற்றவர்களை மதிக்கும் உயர்ந்த உள்ளம் அவருக்கு இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. மேலும் எதோ இளையராஜா வந்துதான் தமிழ் இசைக்கு உயிர் கொடுத்தார் என்ற ரீதியிலான கருத்துக்களை அவரின் அபிமானிகள் அதிகம் சொல்வது கண்டிக்கத்தக்கது. இவர் வருவதற்கு நாற்பது வருடங்களுக்கு முன்பே தமிழ் இசை இருந்தது அதுவும் நன்றாகவே இருந்தது. சொல்லப்போனால் நன்றாக இருந்த நம் தமிழ் திரை இசையை கெடுத்து சீரழித்தவர் இளையராஜா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ராஜா பற்றி எழுதுவதால் அது மனித ஆராதனை என்ற ரீதியில் நீங்கள் என்னலாம். ராஜா மற்றுமின்றி எல்லோருடைய இசையும் நான் ரசிப்பவன்.இன்று நல்ல இசையை ரசிக்க காரணம் ராஜாவின் இசையும் ஒன்று.
      ராஜாவின் பாடல்களின் வெற்றி பாடல் வரிகள் மட்டும் அல்ல இசையும் தான்.
      நான் அவரின் பாடல்கள் ரசிப்பதால் அது தனி மனித ஆராதனையும் இல்லை. அவரின் சமீப கால பேச்சுகளும்,செயற்பாடுகளும் பற்றி பெரிதாக அலட்டி
      கொள்ள தேவை இல்லை.அது அவரின் இசையும் அவரின் ரசிகர்களையும் சார்ந்தது.
      ராஜாவோ அல்லது அவரின் இசையை விருமபாதவர்கள் அது பற்றி பேசாமல் விட்டு விடலாமே.
      எனக்கும் ராஜாவின் இசைக்கும் உள்ள உறவு ஒரு நல்ல நண்பனின் நட்பு போன்றது .(ரஹ்மான் உட்பட வேறு எந்த இசைஅமைப்பாளர்கள் நம் மனதை தொடும் அளவில் நெருங்க வில்லை.)அதனால் மற்றவர்கள் இசையை நான் விமர்சிக்கவும் இல்லை.அவர்களின் நல்ல இசையும் ரசித்து கொண்டே தான் இருக்கின்றேன் என் நண்பனோடு ........

      நீக்கு
    2. ****இந்த இருவரும்தான் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான ஆளுமைகள் என்ற எண்ணம் இப்போது வெகுவாக குறைந்து வருவதற்கு இது போன்ற சம்பவங்களே உதாரணம். ****

      NONSENSE!!

      Every music director and every director in Tamil cinema went through the same "up and down"!

      Where was KB in the last 15 years?

      Where is MR NOW?

      Have not we seen MSV after IR became popular.

      So, you can write whatever story you want. But they are just speculations, that's all!

      ARR is going to disappear one day- long before he dies! THINK!

      நீக்கு
  28. நல்ல இசையை ரசிப்பவர்கள் இது போன்று ராஜா மாதிரி யாரும் இல்லை என்று பள்ளிக்கூட சிறுவன் போல பேசமாட்டார்கள். எல்லா இசையையும் ரசிப்பதாக சொல்பவர்கள் ராஜா வை மட்டும் ஒரு கோட்டுக்கு மேலேயே வைத்து கை கூப்பி வணங்குவது ஏன்? ராஜாவின் இடத்தை ரகுமான் பிடிக்கவில்லை ரகுமான் நம் மனதை நெருங்கவில்லை போன்ற உங்களின் வாக்கியங்கள் நீங்கள் ராஜாவை ஆராதனை செய்வதையே உறுதி செய்கின்றன.அதை நான் தவறென்று சொல்லமாட்டேன். அதே சமயம் ராஜாவை விமர்சிப்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன்.
    ஹாலிவுடில் இசை என்பது ஒரு தொழில் நுட்பம் மட்டுமே என்று நீங்கள் சொல்வது அபத்தமானது. அந்த காலத்து கருப்பு வெள்ளை படங்கள்,சைகோவின் புகழ் பெற்ற பாத்ரூம் கொலையின் பின்னணி இசை, ஜாஸ் படத்தின் திகிலூட்டும் மெகா வயலின்களின் ஒரே தீற்றலான தாளம் தப்பாத இசை, மியுசிகல்ஸ் (மை பேர் லேடி, சவுண்ட் ஆப் ம்யுசிக்) என்று ஹாலிவுட்டின் இசை பாரம்பரியம் அதீத வீரியம் உள்ளது. இந்திய சினிமாவில் கூட சத்யஜித்ரேவின் பதேர் பாஞ்சாலி படத்தில் வரும் புகழ் பெற்ற ரயில் வண்டி காட்சியில் மேஸ்ட்ரோ ரவி ஷங்கரின் இசையே அந்த காட்சிக்கு வலு சேர்த்தது. இப்படி பின்னணி இசையை ஒரு படத்தின் ஊடே உயிர் நாடியைபோல செலுத்தி சிறப்பு செய்த பலர் இங்கே இருக்க 1976 இல் வந்த இளையராஜாதான் இந்திய சினிமாவின் பின்னணி இசையை உருவாக்கினார்,செம்மை படுத்தினார் என்பதெல்லாம் வெறும் பிதற்றல்களே ஒழியே உண்மை இல்லை. இளையராஜாவை நீங்கள் சிறுவனாக இருந்த போது ரசிக்க ஆரம்பிதீர்கள். அந்த இசையே சிறந்தது என்பது உங்கள் எண்ணம். அதே போல இன்றய இளைய தலைமுறை இந்த காலத்து இசையை ரசிப்பதை மட்டும் குறை சொல்வது ஏன்? நமக்கு பிடிக்கவில்லை என்றால் கேட்காமல் இருக்கலாமே தவிர இந்த காலத்து இசை வெறும் குப்பை என்று சொல்வது வெட்டிப்பேச்சு. கடைசியாக இளையராஜா இப்போது என்ன பேசினார் என்பதெல்லாம் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை என்பதும் ஒரு விதமான தப்பியோடும் மனபோக்குதான். இப்படி பொதுமேடையில் அநாகரீகமாக பேசும் ஒரு மனிதரை அதை பற்றி உங்களுக்கென்ன என்று பூசி மெழுகுவது அவரை பாதுகாக்க உங்களிடம் போதுமான நியாயம் இல்லை என்பதையே காட்டுகிறது. இறுதியாக நல்ல இசையை ரசிக்க விரும்புவர்கள் ராஜாவோடு நின்று விடாமல் அவரைதாண்டியும் பயணம் செய்தால் இன்னும் பல அருமையான அனுபவங்களை பெறலாம்.

    பதிலளிநீக்கு
  29. NONSENSE!!

    Every music director and every director in Tamil cinema went through the same "up and down"!

    Where was KB in the last 15 years?

    Where is MR NOW?

    Have not we seen MSV after IR became popular.

    So, you can write whatever story you want. But they are just speculations, that's all!

    ARR is going to disappear one day- long before he dies! THINK!

    திருவாளர் வருணுக்கு, நீங்கள் சுட்டிக்காட்டிய பெயர்கள் எல்லாம் இப்போது மெகா சைசில் இல்லை. அதையேதான் நானும் சொல்கிறேன் இது எல்லோருக்கும் நிகழக்கூடியதே.கால ஓட்டத்தில் எல்லாருமே கரைந்து போகக்கூடியவர்கள்தான் .இதில் இளையராஜா மட்டும் விதிவிலக்கா? இருந்தாலும் நீங்கள் கடைசியாக ரகுமானை பற்றி சொன்ன வார்த்தைகள் ரொம்பவே நாகரீகமானவை. அதுதானே இளையராஜாவுக்கு தற்போது நடந்து கொண்டு வருகிறது? He is melting just like ice in the sun.

    பதிலளிநீக்கு
  30. காரிகன்:

    நீங்க என்ன சொல்லுங்க, பாரதிராஜா மற்றும் இளையராஜாவின் சாதனைகள் என்பது கொஞ்சம் வேறதான். ரொம்ப கஷ்டப்பட்டு வந்தவங்க. சாதிச்சவங்க..நினைத்துப் பார்க்கவே முடியாத ஒரு இடத்தை அடைந்தவர்கள்..

    சுஜாதா ஒரு முறை ஒரு மேடையில் பேசும்போது, பா ராஜா, இ ராஜா இவங்க எல்லாம் "பசி"னு சாப்பாட்டுக்காக கஷ்டப்பட்டவங்க, உழைச்சு மேல் வந்தவங்க என்றார். மேலும் எனக்கெல்லாம் பசினா என்னனே தெரியாது என்றும் சொன்னார். You need to see the BIG DIFFERENCE here!

    அதுபோல் வந்து வெற்றிபெரும் கலைஞன் மனநிலை பொதுவாக வேறமாதிரித்தான் இருக்கும்.

    இளையராஜாவின் பலவீனம்னு சொன்னால், அவர், தான் சொல்லும் ஒன்றை உலகம் எப்படி எடுத்துக்கொள்ளும் என்று யோசித்து ஃபில்டர் செய்து வெளியிடத்தெரியாது அவருக்கு. It is not an abnormal behavior for any talented guy. மற்றவர்கள், இதுபோல் தன்னிடம் உள்ள அகங்காராம், தான் என்கிற எண்ணம் போன்றவற்றை நாகரிகம் கருதி வெளியில் விடுவதில்லை (பாலிடிக்ஸ்தான்). அதேபோல் பாலிடிக்ஸ் செய்யத் தெரியாதவர் இளையராஜானுகூட சொல்லலாம்..:)

    -----------
    சுஹாஷினி நீ வெ ஒரு கோ நிகழ்ச்சில சொன்னார்.. மு மரியாதை படத்துக்கு ராதாவுக்கு நேஷனல் அவார்ட் கெடைக்கலைனதும், சிந்து பைரவிக்காக விருதுபெற்ற சுஹாஷினியிட்மே நேரடியாக வந்து "அது ராதாவுக்குத்தான் போயிருக்கணும்" என்றாராம், பா ரா. They just speak out what they think. I understand their problem. You look at the same thing in a different angle! :)

    Take it easy!

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895