என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 26 மே, 2013

காபி,பேஸ்ட் பதிவர்களை என்ன செய்வது?

*
படம்:கூகிள் தேடுதல்
கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்:
   எனது பதிவை என்னைக் கேட்காமல் அவர்கள் பெயரில் காப்பி பேஸ்ட் செய்துவிட்டார்கள் என்று அவ்வப்போது  பதிவர்கள் புலம்புவது வழக்கம். பழைய பதிவர்கள் இதை ஒன்றும் செய்ய இயலாது என்பதை உணர்ந்துள்ளனர். சமீபத்தில் இதயத்தின் குரல் என்ற வலைப்பூ எழுதிவரும்  எழுதி வரும் ஹமீத்(என்ன சிக்கலோ அவரது வலைப் பக்கம் வேலை செய்யவில்லை.)அவரது பல பதிவுகள் அடுத்த சில நிமிடங்களில் காப்பி அடிக்கப்பட்டு வேறு பதிவர் பெயரில் தமிழ் மணத்தில் இணைக்கப் பட்டுள்ளதை சுட்டிக் காட்டி ஒரு பதிவிட்டிருந்தார். அவர் சொன்னது முற்றிலும் உண்மை. ஒரே நாளில் ஒரிஜினல் பதிவும் காப்பி அடிக்கப் பட்ட பதிவுகளும்  தமிழ் மணத்தில் காணப்பட்டது. ஆனால் இவரது சில  பதிவுகளுமே நாளிதழ்களில் வந்த செய்திகளை அப்படியே  காப்பி செய்யப்பட்டிருந்தது.

   யாருமே ஒரிஜனல் கிடையாது எங்கேயோ, யாரோ சொன்னது, எழுதியதுதானே! பெரும்பாலான பதிவுகள் வேறொரு செய்தியின் மறு ஆக்கமாகவோ தழுவலாகவோ அமையவே வாய்ப்புகள் அதிகம் கவிதைகள்,கதைகள் போன்ற படைப்புகளும் நம்மை அறிந்தோ அறியாமலோ ஏதோ ஒரு படைப்பைப் போலவே இருப்பது தவிர்க்க இயலாது  என்று வாதத்தையும் மறுக்க முடியாது. அது உண்மைதான் என்றாலும் நாம் பார்த்தவற்றை கேட்டவற்றை,படித்தவற்றை அனுபவங்களை நமது சொந்த வார்த்தைகள் போட்டு பல மணிநேரம் சிந்தித்து எழுதியவற்றை எந்தவித கஷ்டமும் இல்லாமல் ஒரு சில நிமிடங்களில் பறிபோவதையும் வேறு பெயரில் வெளியாவதையும் பொறுத்துக் கொள்வது என்பது கடினமானதுதான். இதை முழுமையாக தடுக்க முடியாது என்பதே உண்மை. ஓரளவிற்கு தடுக்கலாம்.

  மென்பொருள் ஜாம்பவான் மைக்ரோசாப்ட் போன்றவற்றால் கூட மென்பொருள் நகலெடுப்பை கட்டுப் படுத்த முடியவில்லையே! கண்டறிந்தவற்றை இது காப்பி என்று உரைக்கலாம். தமிழ் மணம் உள்ளிட்ட அனைத்து திரட்டிகளுமே காப்பி பேஸ்ட் பதிவுகளை ஏற்றுக் கொள்வதில்லை . ஆனால் தானியங்கி முறையில் பதிவுகள் திரட்டப் படுவதால் பதிவுகள் காப்பியா என்பதை திரட்டிகள் அறிய முடியாது. தகவல் தெரிந்து  புகார் தெரிவித்தால் பதிவை திரட்டிகள்  நீக்கி விடும்.

 தமிழ்மணத்தைப் பொறுத்தவரையில் அதன் பட்டியலில் ஒரு பதிவு ஆபாசப் பதிவாகவோ,உங்கள் பதிவை காப்பி செய்யப் பட்டதாகவோ இருந்தால் அல்லது வேறு காரணங்களுக்காக தமிழ் மணத்தில் வெளியிடப்பட்ட இடுகை தொடர்பாக ஆட்சேபம் தெரிவிக்க விரும்பினால் தெரிவிக்கலாம். 
எப்படி தெரிவிக்கலாம் என்பதற்கு உதாரணத்திற்கு கீழுள்ள படத்தை பாருங்கள்.

எனது பதிவு தமிழ்மண பட்டியலில் உள்ளது. இந்த பதிவுக்கு ஆட்சேபம் தெரிவிக்க விரும்பினால் மஞ்சள் நிற முக்கோணத்தை கிளிக் செய்து கீழுள்ள விவரங்களை தர வேண்டும். நான்குகாரணங்கள் தெரிவிக்கப் பட்டிருக்கும். பொருத்தமான காரணத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அது  நிர்வாகிக்கு சென்று விடும் நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கும் பட்சத்தில் பதிவை நீக்கி விடுவார்கள்.

 தொடர்ந்து அதே வலைதளத்திற்கு புகார்கள் வந்தால் தமிழ்மணத்திலிருந்தே நீக்குவதற்கும். வாய்ப்பு உள்ளது.பிற திரட்டிகளில் ஆட்சேபம் தெரிவிப்பது சற்று கடினம்.
 
  சமீபத்தில் எனது இப்படியும் கிராமம் இப்படியும் ஒரு தலைவர் என்ற பதிவை முகநூலில் என் பெயரோடு வெளியிடவே என் சம்மதத்தை  கேட்டார் பிரபல தொழில் நுட்பப் பதிவர் நண்பர் பிரபு கிருஷ்ணா. நான் சரி என்று சொன்ன பின்னரே முகநூல் பக்கத்தில் என் பெயரோடு வெளியிட்டார். 

  சம்மதம் கேட்கவில்லை என்றாலும் ஒரிஜினல் பக்கத்தின் முகவரியையும், எழுதியவர் பெயரையும் வெளியிட்டால் பெரும்பாலும் ஆட்சேபம் ஏதும் இருக்காது. அது பதிவை பகிர்ந்ததாக கொள்ள முடியும்.

   எனக்கும்  எனது பதிவுகள் ஏதேனும் காப்பி அடிக்கப் பட்டிருக்கின்றனவா என்று தெரிந்து கொள்ள திடீரென்று ஒரு ஆசை ஏற்பட்டது. (நம்ம பதிவை நாலு பேரு காப்பி அடிச்சா நாம  நல்லா எழுதி இருக்கோம்னு அர்த்தம்)சும்மா ஒரு பதிவை வைத்து தேடித் பார்த்தேன்.என்ன ஆச்சர்யம் அதையும் சிலபேர் தன் பெயர் போட்டு  காப்பி அடித்திருந்தார்கள்.
நான் எழுதியது
நுகர்வோரின் குறைகளை எங்கு முறையிடுவது.?
இந்தப்  பதிவை ஈகரை தமிழ்க் களஞ்சியத்தில் அப்படியே சுட்டு போட்டிருக்கார் பவுன்ராஜ் என்பவர்.
http://www.eegarai.net/t97719-topicஇதே பதிவை முத்து முஹம்மது என்பவர் சேனை தமிழ்உலாவில் சூப்பரா காபி அடிச்சிருக்கார்.
http://www.chenaitamilulaa.net/t37736-topic

"இந்தப்  பதிவை இவர் வலைப் பக்கத்துக்கு வந்து  யார் படித்திருக்கப் போகிறார்கள் காப்பி அடித்தால் என்ன  தெரியவா போகிறது. அப்படித்தான் தெரிந்தாலும்  என்ன செய்ய முடியும்னு என்று நினைத்திருக்கலாம்  இந்த நண்பர்கள்.எப்படியோ நம் பதிவையும் காப்பி அடித்திருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது கொஞ்சம் மகிழ்ச்சியும் ஏற்படத்தான் செய்கிறது 
சரி  போகட்டும்.
நம் பதிவை யாராவது காப்பி பேஸ்ட் செய்திருக்கிறார்களா என்பதை எப்படி கண்டு பிடிப்பது?
காப்பி செய்வதை   கொஞ்சமாவது தடுக்க என்ன வழி இருக்கிறது?
இது பற்றி எனக்கு தெரிந்த விஷயங்களை இன்னொரு பதிவில் பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்.
ஒருவேளை புதியவர்களுக்கு பயனுள்ளதாய் இருக்கலாம்.

************************************************************************************** 
இதைப்  படிச்சிருக்கீங்களா?
பதிவர்குறள்  பத்து

63 கருத்துகள்:

 1. பெயரில்லா26 மே, 2013 அன்று 9:29 PM

  நல்ல பதிவு,கதைகள்,கவிதைகள் அனைத்தும் என்று கூறமுடியாவிட்டாலும் பெரும்பாலானவற்றில் ஒரு சில இடங்களிலாவது அவர்களை மிகவும் கவர்ந்த எழுத்தாளர்களின் தாக்கத்தை உணர முடியும்.

  பதிலளிநீக்கு
 2. முரளி,

  காப்பியடிக்கிறது என்பது எழுத்துனு ஒன்னு உருவான காலத்தில இருந்தே இருக்கு :-))

  இதை எல்லாம் தடை செய்யனும்னு நாம கிளம்பினால் நேரம் தான் வீண்,நமக்கு வணிக ரீதியாக பொருள் இழப்பு என்றால் மெனக்கெட்டு தடை செய்ய முயலலாம்.

  காபிஸ்கேப்னு கட்டண தளத்தில் பதிவு செய்துக்கொண்டால்,நமக்காக அவங்க வேலை செய்வார்கள்.

  ஹி...ஹி நம்ம பதிவையும் காப்பியடிக்கிறாங்க ,ஆனால் கொய்யாலே நாளைக்கு ஒரு பிரச்சினைனா நீங்க மாட்டிப்பீங்க நான் எஸ்கேப்பாகிடுவேன்னு நினைச்சுக்கிட்டு மி சைலண்ட் :-))

  பதிலளிநீக்கு
 3. தானாக திருந்தினால் தான் உண்டு...

  எனது பதிவுகளும் இதே நிலை... விரைவில் பகிர்கிறேன்...

  பதிலளிநீக்கு
 4. பெயரில்லா26 மே, 2013 அன்று 10:27 PM

  அவங்க FAIL ஆயிடுவாங்கனு பயந்துதானே நம்மள பாத்து காப்பி அடிக்கிறாங்க..நம்ம புண்ணியத்துல பாஸ் ஆகிட்டுப் போறாங்க விடுங்க...

  பதிலளிநீக்கு
 5. இந்த அநியாயம் இன்னும் நடந்துகிட்டுதான் இருக்கா அவ்வ்வ்வ்....!

  பதிலளிநீக்கு
 6. இது பற்றி ஆராய்வதை விட்டு விட்டு அடுத்த பதிவி நீங்கள் எழுதுங்கள் காப்பி பேஸ்ட் நிலைக்காத்து திறமை இல்லாத இடத்து! அதுதான் நிஜம் பதிவுலகில்!

  பதிலளிநீக்கு
 7. // ஆனால் இவரது பல பதிவுகளுமே நாளிதழ்களில் வந்த செய்திகளை அப்படியே காப்பி செய்யப் பட்டிருந்தது.//

  நீங்க‌ள் கூறுவ‌தைத் தான் நான் அவ‌ரிட‌மும் கேட்டிருந்தேன் ஆனால் அவ‌ர் என்னுடைய‌ பின்னூட்ட‌த்தை வெளியிட‌வில்லை. பெரும்பாலான‌ அவ‌ருடைய‌ ப‌திவுக‌ள் அப்ப‌டியே இணைய‌த்த‌ள‌ங்க‌ளிலும், செய்திக‌ளிலும் வ‌ந்த‌வ‌ற்றின் பிர‌திக‌ளேய‌ல்லாம‌ல் அவ‌ர‌து சொந்த‌ எழுத்தில் கூட‌ இல்லை. அத‌னால் ம‌ற்ற‌வ‌ர்க‌ளும் அவ‌ர் சுட்ட‌ இணைய‌த்த‌ள‌ங்க‌ளிலிருந்து சுடுவ‌த‌ற்கும் வாய்ப்பு உண்டு. அவ‌ர‌து சிந்த‌னையில் உருவான‌ ஆக்க‌ங்க‌ளை அல்ல‌து அந்த‌ செய்திக‌ளின் அடிப்ப‌டையில் அவ‌ரது க‌ருத்துக்க‌ளை த‌ன‌து சொந்த‌ எழுத்துக்க‌ளில் உருவாக்கிய‌ ஆக்க‌ங்க‌ளை ம‌ற்ற‌வ‌ர்க‌ள் யாராவது திருடி, அவ‌ர‌து பெயரைக் குறிப்பிடாதிருந்தால் அது க‌ண்டிக்க‌த் த‌க்க‌து.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செய்திகள் எலோருக்கும் பொதுவானதுதான். எல்லா பத்திரிகைகளுள் ஒரே செய்தியை வெவ்வேறு வித வார்த்தைகளை போட்டு வெளியிடுகின்றன. செய்திகளை வெளியிடும்போது கூட கொஞ்சம் சொந்தமான வார்த்தைகளை போட்டு வெளியிட்டால் நல்லது. செய்திகளைப் பொருத்தவரை ஒரு பகிர்வாக நினைத்துக் கொள்ளலாம்.

   நீக்கு
 8. நானும் இதை அடிக்கடிப் பார்க்க நேரிடுகிறது. ஈகரை is notorious. டிஎம்எஸ் இரங்கல் பதிவைக் கூட ஒருவர் வெட்டுஒட்டு செஞ்சிருப்பது ஆச்சரியமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது.

  காபிபேஸ்ட் செய்கிறார்களா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். சொல்லுங்கள்.

  பதிலளிநீக்கு
 9. சற்றே வருத்தமான விசயம்.
  //காப்பி செய்வதை கொஞ்சமாவது தடுக்க என்ன வழி இருக்கிறது?// சொல்லுங்கள் காத்துக்கொண்டு இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முழுமையாக தடுப்பது என்பது சாத்தியமில்லை. இருந்தாலும் கொஞ்சம் முயற்சிக்கலாம். விரைவில் எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.

   நீக்கு
 10. //எப்படியோ நம் பதிவையும் காப்பி அடித்திருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது கொஞ்சம் மகிழ்ச்சியும் ஏற்படத்தான் செய்கிறது//

  இதுவும் ஒரு நன்மைதானே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை. முதன் முதலில தேடும்போது யாராவது காப்பி அடித்திருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்துக் கொண்டுதான் தேடினேன்.

   நீக்கு
 11. vidunga boss!

  pozhachittu poraanga..

  naalu perukku serattum...!

  பதிலளிநீக்கு
 12. திருடராய்ப் பார்த்து திருந்தா விட்டால்
  திருட்டை ஒழிக்க முடியாதுதான்
  ஆயினும் வீட்டைப் பூட்டாமல்
  அவர்கள் திருந்தக் காத்திருத்தலும்
  புத்திசாலித்தனமில்லைதானே
  அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து
  வாழ்த்துக்களுடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரியான வார்த்தைதான்.பூட்டு போட்டதையே சத்தமின்றி உடைக்கும்போது பூட்டாதததன் கதி அதோ கதிதான்.

   நீக்கு
 13. முரளி... இப்படி காப்பி அடிப்பதென்றால் அந்தப் பதிவு நன்றாக அமைந்திருக்கிறது, எழுதியவர் நன்கு எழுதியிருக்கிறார் என்பதே அர்த்தம். அந்த வகையி்ல் (மட்டும்) ஆறுதல் பெறலாம் நாம். காப்பி பேஸ்ட் அடித்திருப்பதை எப்படிக் கண்டுபிடிப்பது என்கிற விஷயம் எனக்குத் தெரியாத ஒன்று. அவசியம் அதைப் பற்றி எழுதுங்கள் முரளி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது ஒன்னும் பெரிய விஒஷ்யம் இல்ல. . அந்த நேரத்தில ஒரு பதிவு எழுதிடலாம்னு தோன ஆர்பிச்சிடும்.

   நீக்கு
 14. விடுங்க முரளி.....

  இதெல்லாம் நடந்து கொண்டே தான் இருக்கும்!

  பதிலளிநீக்கு
 15. தகவலை எடுத்துச் சொல்வதில் தப்பில்லை அங்கு நன்றி என்ற குரிப்பிருந்தால் நல்லது

  பதிலளிநீக்கு
 16. உங்கள் பதிவில் உள்ள ஒரு பகுதியை காப்பி செய்து google search இல் serach பண்ணுங்க .. யாராது காப்பி பண்ணியிருத்தா தெரியும் . ஆனால் தடுப்பது கடினம் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு பகுதியை காபி செய்து கண்டுபிடிப்பது என்பது மிகக் கடினம்.அனெனில் நாமே முகநூல்,ட்விட்டர்,திரட்டிகள் போன்றவரில் இணைத்திருப்போம். அவற்றை எல்லாம் காப்பி என்று காட்டும் உண்மையில் அவை நாமே பகிர்ந்தவையே!

   நீக்கு
 17. ஆமாங்க காப்பி செய்யப்பட்டிருக்கிறதா என்பதையாவது தெரிந்துகொள்வோம். அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 18. நான் இது பற்றி ஆய்வதோ கவலைப்படுவதை இல்லை!

  பதிலளிநீக்கு
 19. அன்பு நண்பரே தேவையான பதிவு.

  பிறர்பதி வைகவர்தல் நன்றன்று சிந்திப்பாய்
  உன்பதி வும்களவு போம்

  தங்களின் இந்தக் குறள்தான் எனக்கு நினைவுக்கு வந்தது.

  பதிலளிநீக்கு
 20. அருமையான பதிவு. பழுக்கிற மரம் தான் கல்லடி படும் என்பார்கள். அந்த வகையில் உங்களது பதிவுகள் நகல் எடுக்கப்பட்டிருப்பதை அறிந்து சந்தோஷப்படலாம். 'நம் பதிவை யாராவது காப்பி பேஸ்ட் செய்திருக்கிறார்களா என்பதை எப்படி கண்டு பிடிப்பது?' என்ற பதிவைப் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சோம்பேறிகள்தான் காப்பி பேஸ்ட் செய்கிறார்கள் சில சாமார்த்திய சாலிகள் அழகாக ரீமேக் செய்து விடுவார்கள் அது பரவாயில்லை.

   நீக்கு
 21. கண்டிக்கத்தக்க விஷயம்தான்... கஷ்டப்பட்டு எழுதும் சில பதிவுகள் இப்படிகளவாடப்படுவது மிகவும் வருத்தப்பட வேண்டியவிஷயம்தான்...


  பொதுவாக நானும் காபிபேஸ்ட் பதிவு பேர்டுகிறேன். அந்த பதிவு பொதுவாக சில பத்திரிக்கை செய்தியாக வந்து இந்த செய்தியை பகிரலாம் என்று என்மனதுக்கு தோன்றினால் மட்டுமே பதிவிடுவேன்... அதிலும் அதிகமாக சினிமா சார்ந்த பதிவாகத்தான் இருக்கும்...


  ஆனால் கட்டுரை, கவிதை, சில சிறப்பு செய்திகள் இவைகளை காபி செய்வதை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன்...


  ஆனால் இங்கு அதை தடுக்க வழியில்லை வேடிக்கை பார்ப்பதைதவிர....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெயரில்லா28 மே, 2013 அன்று 9:14 AM

   உங்க கவிதையை யாராச்சும் காப்பி அடிக்காது பார்த்துகிடுங்க சார்...

   பொது நன்மை கருதி வெளியிடுவோர்: கவிதை ரசிகர் இயக்கம். கரந்தை.

   நீக்கு
  2. செய்திகளை பொருத்தவரை பகிர்வாகக் கொள்ளலாம்.எதுக்கப்பட்ட பத்திற்கை அல்லது இணைய தளத்திற்கு நன்றி தெரிவிப்பது நல்லது.

   நீக்கு
 22. பெயரில்லா27 மே, 2013 அன்று 10:20 PM

  அப்பப்பா முரளி! என்னவெல்லாம் நடக்கிறது. எங்கே போய் தேடுவது?
  மிக்க நன்றி பதிவிற்கு.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 23. பெயரில்லா28 மே, 2013 அன்று 12:06 AM

  அப்படி காப்பியடிக்கிற கோவாலுகளைக் கூட மன்னிக்கலாம். ஆனால் ஒரிஜனல் காப்பி என இரண்டு சைட்டிலும் சென்று ஆஹா அருமை தொடருங்கள் பகிர்விற்கு நன்றி கலக்குங்க என்று டெம்ப்ளேட் அடிக்கும் பின்னூட்ட பூபதிகள்-திண்டுக்கல் குனபாலன்,வே.நடனசபாரத்தினம், திருவள்ளூர் திருந்தாத சுரேஷ்,கவிதைதெரு காளமேகம், சின்னாளபட்டி சித்தையன், மூங்கில் முத்துதரன்,கனையாழி கார்மேகம் ,அமெரிக்க பின்னூட்டபீர்பால் வருண் போன்ற சிறப்பு விருந்தினர்களை எப்படி மன்னிப்பது ?

  அநிருத் சியமாளராஜன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெயரில் வரும் பெயரிலிப் பெருந்தகையே!
   திருடுன காசா இருந்தாலும் செல்லாமையா போகும். நல்ல இருந்தா நல்லா இருக்குன்னுதான் சொல்ல முடியும். ஒரிஜினல் யாருதுன்னு எப்படி ஐயா தெரியும்.
   பாராட்டு அவங்களுக்குதான் போய் சேரும். நீங்க பதிவு போட்டாலும் மேல சொன்னவங்கதான் கருத்து போட வரணும்.

   நீக்கு
  2. பெயரில்லா28 மே, 2013 அன்று 8:49 AM

   அச்சசோ அவ்ளோக்கு நம்பள்கி டைம் நை ஹை முன்கில் சாஹ’ப். ஆஹா அருமைன்னு ஒரு சைட்டில் நிங்கள் கமெண்ட் பார்த்துட்டான் இங்கே வந்துட்டான் பாய். அடிச்சி விடுங்க எல்லாமே கூகிள் ஆண்டவர்கிட்டே பாடினது தானே.
   // நீங்க பதிவு போட்டாலும் மேல சொன்னவங்கதான் கருத்து போட வரணும்.// ஓ.....இந்த வெளிநாட்டு தூதுவர்கள் வந்து குத்து விளக்கு பார்த்தவைக்கனும் என்கிறீங்கோ அப்ப சரிங்கோ..இந்த பசங்கோ ஆஹா அருமைன்னு சொல்றதிக்கிம் நம்பள் கண்ணாடி முன்னாலே நின் கிட்டு அழகா இருக்கேடா மூன்கில் என்கிறதுக்கும் இன்னா டிபரன்சு ? மதிப்பில்லா பாராட்டு எனக்கு வேனாம்னு சொல்றான் நான்.

   அநிருத்

   நீக்கு
  3. சீ! சீ! இந்தப் பழம் புளிக்கும்.அப்படிதானே! உங்களுக்கெல்லாம் புகழ்ச்சியைக் கேட்டு புளிச்சி போச்சு நாங்க எல்லாம் இப்பதானே கேக்கறோம். பேரையும் புகழையும் விரும்பாத பெரிய மனசு யாருக்கும் வராது .ஒ.கே. பாஸ்

   நீக்கு
  4. பெயரில்லா28 மே, 2013 அன்று 11:12 PM

   இந்த ஆளுக கமெண்ட் போட்டா வெளங்கிடும்.... அந்தப் பதிவுக்க

   கண்ணாடி முன்னாடி நின்னு தனனைத் தானே புகழ்வது பிடித்திருந்தால் யார் தடுக்கப்ப்போறா....

   நீக்கு
 24. என் பதிவுகளை யாருமே காபி பண்ணுவதில்லை மூங்கில் காற்று.
  நான் கொடுத்து வைத்தது அவ்வளவு தான்... ம் ம் ம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொதுவாக படைப்புகளை காப்பிசெய்பவர்கள் குறைவு. (அதுவும் நடப்பதுண்டு)அரிய தகவல்கள்,பயனுள்ள கட்டுரைகள், போன்றவை அதிகமாக காப்பி செய்யப் படுகின்றன,

   நீக்கு
 25. //நம்ம பதிவை நாலு பேரு காப்பி அடிச்சா நாம நல்லா எழுதி இருக்கோம்னு அர்த்தம்//

  இந்த ஒரு விசயத்திற்காகத்தான் நானு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.ஒருத்தர் கூட என் பதிவை காபி பண்ணினதில்லை....

  தவிர இங்கே பிரபல பதிவர்களே காபி பேஸ்ட் பண்ணி நிறைய பேருக்கு முன்னுதாரணமாக இருப்பதால் இது தப்பில்லை என்கிற சூழல் இங்கே நிலவுகிறது.

  பதிலளிநீக்கு

 26. ஒருவேளை பேஸ்புக் -ல் ஷேர் என்கிற ஆப்சன் இருக்கிற மாதிரி பிளாக்கரிலும் இருந்தால் காபி பேஸ்டை முழுவதுமாக தடுக்கலாம் என நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கூகிள் + மூலம் பகிர முடிகிறதே! முகநூலில் சிறு கவிதைகள் தவிர மற்றவை நகைச்சுவை, படங்கள்.மற்றும்சிறு செய்திகள் முதலியவை சொந்தமாக படைக்கப் படுவதில்லை. அதனால் யாரும் அவ்வளவாக உரிமை கொண்டாடுவதில்லை.முகநூளில் எது செய்தாலும் பகிர்தலாகவே கொள்ளப் படுகிறது.

   நீக்கு
 27. ஆஹா காப்பி அடிக்கிறவங்களை வளைச்சி பிடிச்சிட்டிங்களா? நீங்க சொன்ன மாதிரி ஒன்றிலிருந்து ஒன்றுதான் தோன்றும். ஒரே விஷயமா இருந்தா கூட அவங்கவங்களுக்கு தோணுகிற கோணத்தில்தான் எழுதனும்.. அத விட்டுட்டு அப்படியே நோகாம காபி ஆத்தி குடிச்சிட்டிகிட்டிருந்தா...நியாயமில்லை..! எக்ஸாம்ல நம்மை பார்த்து பக்கத்தில இருக்கவங்க எழுதினாலே நாம நல்லா படிக்கிறவங்கன்னுதானே அர்த்தம்..!

  பதிலளிநீக்கு
 28. நன்றி! இதையே காப்பி, பேஸ்ட் போட்டு ஒரு பதிவு போட்டுடுறேன்.

  பதிலளிநீக்கு
 29. உலக மகா எழுத்தாளர்னு நெனைப்போ உங்களுக்கு? உங்களோட பெரும்பாலான பதிவுகளும் பேஸ்ட்னு சொல்ல முடியாட்டியும் காப்பின்னு சொல்லலாம். ஹமீதோட பல பதிவுகளை படித்தவன் நானு. உங்களை மாதிரித்தான் சில செய்திகள்ளேர்ந்து தன்னோட விமர்சனத்தையும் பார்வையும் சேர்த்து அவர் செய்திகளைத் தந்திருப்பார்.அதுக்கு நன்றியும் போட்டிருப்பார். அவரோட கவிதைகள்-கதைகள்லாம் பார்த்தா காப்பி மாதிரி தெரியல. ஒன்னு மட்டும் நிச்சயம். ரொம்பப் புதியவரான அவரது பதிவுகள் எல்லாமே ஹிட்டானதை ரொம்பக் காலமா குப்பை கொட்டுற உங்களைப் போன்ற பொறாமைக்காரர்களினால் தாங்கிக்க முடியல. அதான் உண்மை. இதுக்கு உங்க பதில் என்னான்னு தெரிஞ்சுக்கலாமா...?

  பதிலளிநீக்கு
 30. இது என்னய்யா தில்லாலங்கடி வேலையா இருக்கு. சுஜாதா மனைவி உங்ககிட்ட வந்து பேட்டி குடுத்தாங்களா? எங்கேயோ பத்திரிகைல குடுத்த பேட்டிய வச்சு நாலு வரி சேர்த்துபுட்டா, அதெல்லாம் பதிவாய்டுமாய்யா...? நீங்க செஞ்சா அது சரி...இதையே அடுத்தவன் செஞ்சா அதுக்குப் பேரு காப்பி, பேஸ்ட்டாய்யா...?

  கதைகள்,கட்டுரைகள்,கவிதைகள், புதிர்கள் போன்ற புனைவுகளைத் தவிர மற்ற எல்லாமே ஒரு விதத்துல காப்பிதான்யா. செய்தியை,தகவல்களை புனைய முடியாதுய்யா..ஒன்றிலிருந்து இன்னொன்றாய் அது பரிணமிக்கும். விமர்சனங்களும் அப்படித்தான்யா.

  தமிழ்மணத்தில உள்ள பதிவுகளில் புனைவுகளைத் தவிர மற்றவை எல்லாமே காப்பி ரகம்தான்யா. பலபேரு கட்டுரை எழுதுறோம்னு சொல்லி, மொழிமாற்றம் செய்துக்கிட்டு இருக்கானுவ. இன்னொரு ரகம், மதத்தை இழுத்து சண்டை புடிச்சிக்கிட்டிருக்கானுக.

  ஒரு புதியவன் பிரபல்யமாவதையோ, ஓர் இஸ்லாமியன் முன்னுக்கு வருவதையோ இங்கேயுள்ள பெரும்பாலான பதிவர்கள் விரும்புவதில்லை என்பது நன்றாகவே தெரிகிறதய்யா.நல்லவனைக் கெட்டவனாகக் காட்டிக் கொடுப்பதோடு 'போட்டும் கொடுக்கும்' இந்த வக்கிரபுத்தி எப்போதுதான் ஒழியுமோ...?

  ஹமீது நாளிதழ்களைப் பார்த்து காப்பி பேஸ்ட் பண்ணாருன்னு உங்களால நிரூபிக்க முடியுமா...? சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு வரலாமென்று போய்த் திரும்பினால், இங்கே நமக்கெதிராக மோசமான அவதூறு பரப்பப்பட்டுள்ளது.

  ஒரு சவால்...ஏதாவது ஒரு தலைப்பில் நானும் நீங்களும் சிறுகதையோ, கவிதையோ, கட்டுரையோ எழுதிப் பார்க்கலாமா...அதனை ஒரு பொதுத் தளத்தில் தீர்ப்புக்கு விடுவோமா..?

  பார்க்கலாமா, யார் வெற்றியாளர் என்று...?

  அன்புடன்,

  எஸ்.ஹமீத்

  (முன்னாள் 'இதயத்தின் ஒலி' பதிவர் )

  ஒரு குறிப்பு: மேலே anonymous பெயரில் உள்ள பின்னூட்டமும் என்னுடையதுதான்.என்று நீங்கள் நினைத்தால், அதற்கு நான் பொறுப்பல்ல.

  பதிலளிநீக்கு
 31. வில்லிலிருந்து புறப்பட்டு சென்று விட்ட அம்பும் நம் வாயிலிருந்து வெளிவந்துவிட்ட சொல்லும் நம்முடையதல்ல

  வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு இலக்கையும் தாக்கலாம். இலக்கை தாண்டி எவர் மீதும் விழுந்து அவர்களை மாய்க்கலாம்.

  எனவேதான் எதையும் வெளியிடுவதற்கு முன் பலமுறை யோசித்தால் நலம்

  ஆனால் யாரும் அதை செய்வது கிடையாது.

  அப்படி செய்பவர்களும் பல நேரங்களில் பல காரணங்களினால் கவனக் குறைவாக நடந்துகொண்டு சிக்கலில் மாட்டிகொள்கிறார்கள்.

  எனவேதான் திருவள்ளுவர் நா காக்க என்றார்.

  நாவைக் காக்காமல் கக்கிவிட்டபிறகு அதை விழுங்குவது எப்படி இயலாத செயலோ அதைப்போல்தான் கக்கியதை எடுத்து தின்னும் நாய்களுடன் போராடுவது .

  ஆரங்குலமே உள்ள நாக்கு ஆறடி உள்ள மனிதனை கொன்றுவிடும் வன்மை படைத்தது
  அதனால் அந்த நாக்கை பிறருக்கு ஆக்கம் தரும் வகையில் ,ஊக்கம் தரும் வகையில், அனைவரும் மேன்மை அடையும் வகையில், இனிமை கலந்து இன்பம் தரும்வகையில் பயன்படுத்தவேண்டும் என்பது இவனின் தாழ்மையான தனிப்பட்ட கருத்து.

  ஏனென்றால் இந்த உலகம் எதை சொன்னாலும் அதில் குறை காண அல்லும் பகலும் காத்துக்கொண்டிருக்கிறது.

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895