என்னை கவனிப்பவர்கள்

வியாழன், 27 மார்ச், 2014

புதிர் உங்களுக்கு பிடிக்குமா? இவர் உயிர்பிழைக்க வழி இருக்கா?


   போன வாரத்தில ஒரு கவிதைய புதிர் மாதிரி எழுதி இருந்தேன்.நம் பதிவுலகப் பெருமக்கள் முதல் பத்தியிலேயே கண்டுபிடிச்சி எனக்கு பல்பு கொடுத்தாலும் கேள்விக்குறியில விடையை மறைத்து வச்சிருந்ததை வரவேற்றதில் மகிழ்ச்சி
அதனால் இந்த தடவை கொஞ்சம் கடினமான புதிர் ஒண்ணை சொல்லி குழப்பலாம் என்ற நோக்கத்தோட வந்திருக்கேன்.(இது போய் கஷ்டமா என்று கேட்கப்படாது). புதிர்னா சில பேருக்கு லட்டு மாதிரி அதனால் உங்களுக்காக ஒரு லட்டு புதிர்.

புதிர்:
 அரசனும் மந்திரியும் நகர்வலம் சென்று கொண்டிருந்தனர் . வழியில் அரசரைக் கண்டதும் அனைவரும் வணங்கி வணக்கம் தெரிவித்தனர். அந்த இடமே பரபரப்பாக இருந்தது. அரசர் வந்ததை  கவனிக்காமல் ஒரு பெரியவர் மட்டும்  தன் வீட்டு வாசலில் ஏதோதோ கருவிகளை வைத்து படம் வரைந்தும் தனக்கு தானே பேசிக் கொண்டும்  இருந்தார். இதனைக் கண்ட அரசர் தன்னை மதிக்காமல் ஒருவன் அவன் பாட்டுக்கு ஏதோ செய்து  கொண்டிருக்கிறானே என்று கோபம் கொண்டார். அவனை அழைத்து வர பணித்தார். அரசரின் ஆணையை அவரிடம் தெரிவித்தனர் . அவரோ "என் வேலையை முடித்து விட்டு வருவதாக சொல்'  என்று சொல்லிவிட்டு மீண்டும் மும்மரமாக முன்பு செய்து கொண்டிருந்ததை தொடர்ந்தார் . இதனால் கோபம் கொண்ட அரசர் அவரை கைது செய்து சிறையில் அடைக்க சொல்லி விட்டார். மந்திரி முதலானோர் அரசரிடம் மன்னிப்பு கேட்குமாறு அவரை வற்புறுத்தினர் . அவர் மறுத்து விட்டார். அதனால் மேலும் கோபம் கொண்ட மன்னன் அவரைக் கொன்று விடுங்கள் ஆணையிட்டான்.

விசாரித்ததில் அவர் அதிகம் அறியப் படாத ஒரு மேதை என்றும் கணிதம் அறிவியல் வானவியல் இவற்றில் வல்லவர்  என்றும் மந்திரிக்கு தெரிய வந்தது  அதனால் அவர் இறப்பதை மந்திரி விரும்பவில்லை. அரசரிடம் அவரது திறமை பற்றி சொன்னார். அரசரோ தன் முடிவை மாற்றிக் கொள்ளமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தார்

பலரும் வற்புறுத்தவே "சரி அவர் உயிர் தப்பிக்க ஒரு வாய்ப்பு தருகிறேன். அவர் பெரிய அறிவாளி என்று கூறுகிறீர்களே நாளை சபையில்  ஒரு புதிர் போட்டி வைக்கிறேன் .அதில் வென்றால் அந்தக் கிழவன் உயிர் பிழைத்துக் கொள்வார் ."

மந்திரி மகிழ்ந்தார் அந்தப் பெரியவர்  புதிருக்கு விடை கண்டு பிடித்துவிடுவார் என்று நினைத்தார். போட்டி என்ன என்று அரசரிடம் கேட்டார் மந்திரி, நாளை பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு மந்திரிக்கும் தெரியாமல் சில ரகசிய உத்தரவுகளை பிறப்பித்தார் .

மறுநாள் சபை கூடியது . பெரியவர் அழைத்து வரப்பட்டார்
ஒரு தட்டில் 12 லட்டுகள் கொண்டு வந்து வைக்கப் பட்டன. கூடவே தராசு ஒன்றும் கொண்டு வரப்பட்டது

மன்னன் கூற ஆரம்பித்தான், "கிழவரே! உன்னை பெரிய அறிவாளி  என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உன் அறிவு உன்னைக் காப்பதற்கு பயன்படாது  என்பதை நிரூபிக்கிறேன் .முடிந்தால் அறிவைப் பயன்படுத்தி போட்டியில் வென்று உயர் பிழைப்பாய்.

இதோ இந்த தட்டில் 12  லட்டுகள் உள்ளன . அவற்றில் 11 லட்டுகள் சம எடை உள்ளவை. அது மட்டுமல்ல 11 லட்டுகளிலும் கடுமையான விஷம் கலக்கப் பட்டுள்ளது. பார்ப்பதற்கு ஒரே அளவில் இருந்தாலும் ஒரே ஒரு லட்டு மட்டும்  எடையில்  கொஞ்சம் வித்தியாசம் கொண்டது. விஷம் இல்லாதது. மேலும் அது மற்ற லட்டுகளை விட எடை குறைவானதா அல்லது அதிகமானதா என்பதும் தெரியாது. இவற்றில் 1 லட்டை கட்டாயம் நீ சாப்பிட்டே ஆக வேண்டும். விஷமற்றது எது என்பதை கண்டறிந்து உண்டால் உயிர் வாழலாம். 
லட்டுகளை எடை போட  இந்த தராசை பயன்படுத்திக் கொள். ஆனால் ஒரு நிபந்தனை.  3 முறை மட்டுமே எடை போடவேண்டும்.  நீ பிழைக்க அதிர்ஷ்டம் உதவுகிறதா? அறிவு உதவுகிறதா அல்லது இரண்டும் உனைக் கைவிடுகிறதா என்று பார்ப்போம். இதோ இந்த சேவகன் 1000 எண்ணும் வரை அவகாசம் தருகிறேன். ம்  தொடங்கட்டும் போட்டி " 

சேவகன்  1, 2  எண்ண  ஆரம்பித்தான்  "
பெரியவர் புன்னைத்துக் கொண்டே யோசிக்க தொடங்கினார் .
புதிரைக் கேட்ட அனைவரும்  திகைத்து நின்றனர். அமைச்சர் நம்பிக்கை இழந்தார். பெரியவர் நல்ல லட்டை கண்டறிந்தாரா? அதற்கு உறுதியான வாய்ப்பு இருக்கிறதா? அல்லது விஷ லட்டை உண்டு இறந்து போயிருப்பாரா?
நீங்களும் சொல்லலாம்.

விடை அறிய  கிளிக்கவும் 

விஷ லட்டு எது? கடினப் புதிர்-விடை

*********************************************************************************
 இதெல்லாம் படிச்சிருக்கீங்களா?
  1. புதிர்! உங்களுக்கு தெரிஞ்சா விடை சொல்லுங்க !
  2. உண்மையூர் பொய்யூர் புதிருக்கு விடை
  3. பத்தினியின் காலை வெட்டு!
  4. புதிர் கணக்கு! வடிவேலுக்கு உதவுங்கள்!
  5. புதிர்! உங்களுக்கு தெரிஞ்சா விடை சொல்லுங்க !
  6. மைனஸ் x மைனஸ் = ப்ளஸ். எப்படி?
  7. வேலை தேடும் வடிவேலு - பகுதி 1
  8. வேலை தேடும் வடிவேலு - பகுதி 2 -விடை
  9. வடிவேலுக்கு வேலை கிடைத்ததா? பகுதி 3 
  10. பெட்டிக்கடை- 3  யாருக்கு வெற்றி- புதிர் 
  11. ஊஞ்சல்  புதிருக்கான விடை 


56 கருத்துகள்:

  1. /மறுநாள் சபை கூடியது . பெரியவர் அழைத்து வரப்பட்டார்
    ஒரு தட்டில் பத்து லட்டுகள் கொண்டு வந்து வைக்கப் பட்டன.//

    //இதோ இந்த தட்டில் 12 லட்டுகள் உள்ளன . அவற்றில் 11 லட்டுகள் சம எடை உள்ளவை.//

    பத்தா பன்னிரெண்டா.... அவ்வ்வ்வவ்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 12தான் .ஸ் பை . 10 இருக்கிற புதிரும் உண்டு அதை எளிதா கண்டு பிடிச்சிடலாம் அதனாலதான் 12

      நீக்கு
    2. இதே போல் 39 வைத்தும் உண்டு + தராசு உபயோகம் நான்கு முறை...!

      /// மேலும் அது மற்ற லட்டுகளை விட எடை குறைவானதா அல்லது அதிகமானதா என்பதும் தெரியாது. ///

      இங்கே வைச்சீங்க குழப்பத்தை..!

      நீக்கு
    3. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி திருத்தம் செய்துவிட்டேன்

      நீக்கு
    4. முரளி!! அவர் எதை சுட்டிக் காட்டினாரோ, நீர் எதை திருத்தம் செய்தீர்களோ தெரியவில்லை, ரெண்டு வரியும் ஒரு எழுத்து விடாம அப்படியேதான் இருக்கு.

      மேலும் அது மற்ற லட்டுகளை விட எடை குறைவானதா அல்லது அதிகமானதா என்பதும் தெரியாது.
      மேலும் அது மற்ற லட்டுகளை விட எடை குறைவானதா அல்லது அதிகமானதா என்பதும் தெரியாது.

      நீக்கு
  2. விஷம் இல்லாத லட்டு எடை அதிகமாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்...

    எடை போடுவது முதல் முறை : முதலில் தராசு தட்டுகளில் இருபுறமும் 6, 6 வைத்து எடை பார்த்தால், மேல் தட்டில் உள்ள லட்டுகளை குப்பையில் போடுவோம்...

    எடை போடுவது இரண்டாம் முறை : முதல் முறை போல் 3, 3 - மேல் தட்டு லட்டுக்கள் - குப்பையில்...

    எடை போடுவது மூன்றாம் முறை : மிச்சம் இருக்கும் 3 லட்டுகளில், 2 மட்டும் இப்போது இரு தட்டுகளில் உள்ளது... (i) தராசுதட்டுகள் இரண்டும் சமம் எனில், கையில் இருக்கும் லட்டை பெரியவர் சாப்பிடுவதற்கு முன், மற்ற இரு லட்டுக்களை மந்திரி, அரசருக்கு கொடுக்க வேண்டும் எனும் எண்ணத்தை தடுக்க வேண்டும்... ஹா... ஹா... (ii) தராசுதட்டுகள் இரண்டும் சமம் இல்லையெனில், கீழிருக்கும் தட்டில் உள்ள லட்டை பெரியவர் சாப்பிடுவதற்கு முன்... டிட்டோ...!

    விஷம் இல்லாத லட்டு எடை குறைவாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்...

    எடை போடுவது முதல் முறை : முதலில் தராசு தட்டுகளில் இருபுறமும் 6, 6 வைத்து எடை பார்த்தால், கீழ் தட்டில் உள்ள லட்டுகளை குப்பையில் போடுவோம்...

    எடை போடுவது இரண்டாம் முறை : முதல் முறை போல் 3, 3 - கீழ் தட்டு லட்டுக்கள் - குப்பையில்...

    எடை போடுவது மூன்றாம் முறை : மிச்சம் இருக்கும் 3 லட்டுகளில், 2 மட்டும் இப்போது இரு தட்டுகளில் உள்ளது... (i) தராசுதட்டுகள் இரண்டும் சமம் எனில், கையில் இருக்கும் லட்டை பெரியவர் சாப்பிடுவதற்கு முன், மற்ற இரு லட்டுக்களை மந்திரி, அரசருக்கு கொடுக்க வேண்டும் எனும் எண்ணத்தை தடுக்க வேண்டும்... ஹா... ஹா... (ii) தராசுதட்டுகள் இரண்டும் சமம் இல்லையெனில், மேலிருக்கும் தட்டில் உள்ள லட்டை பெரியவர் சாப்பிடுவதற்கு முன்... டிட்டோ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த முறையில் சரியானதை உறுதியாக கணிக்க முடியாது. கொஞ்சம் முயன்றால் முடியும்

      நீக்கு
    2. இந்த முறையில் சரியானதை உறுதியாக கணிக்க முடியாது. கொஞ்சம் முயன்றால் முடியும்

      மேலும் கிழவருக்கு அளிக்கப்பட்டிருப்பது ஒரு வாய்ப்புதான் எடை கூடுதலாக இருந்தால் குறைச்சலாக இருந்தால் என்ற இரண்டு வாய்ப்புக்கள் இல்லைதானே.

      நீக்கு
    3. பதிலை வெளியிட்ட உடனே புரிந்து விட்டது தவறு என்று... திரு. Ponchandar அவர்களின் கணக்கிற்கும் விளக்கமாக கருத்து சொன்னேன்... அதுவும் தவறு என்றே தோன்றுகிறது... (!) ஆனால் அதை வெளியிடவில்லை என்பதால் அதில் தான் விஷம் சே... விசயம் உள்ளதை மட்டும் தெரிந்து கொண்டேன்... அதன் வழியே சிந்திக்கிறேன்... முயற்சி செய்கிறேன்...

      நீக்கு
    4. DD சார், எடை அதிகமா/குறைவா என்ற விவரமா தரலையே, எதை வச்சு நீங்களாவே ரெண்டு கணக்கு போட்டிருக்கீங்க? எடை அதிகமாவும் இருக்கலாம், குறைவாகவும் இருக்கலாம் என்று வைத்துக் கொண்டு கணக்கிட முடியுமா?

      நீக்கு
  3. 12 லட்டையும் 4 + 4 + 4 என பிரித்துக் கொள்ள வேண்டும். 4 லட்டுகள் உள்ள ஏதாவது இரண்டு கூறை தராசில் வைக்க வேண்டும். எடை அதிகமாக இருக்கும் லட்டு உள்ள தட்டு கீழிற்ங்கும். இரண்டும் சமமாக இருந்தால் தராசில் இல்லாத மூன்றாவது கூறில் எடை அதிகமாக உள்ள லட்டு உள்ளது. அதனால் எட்டு லட்டை ஒதுக்கி விடலாம்.
    பின் இரண்டு இரண்டாக தராசில் வைக்கவும், எடை அதிகமாக உள்ள தராசு தட்டில் உள்ள இரண்டு லட்டுகளையும் ஒவ்வொன்றாக வைக்க எடை அதிகமான விஷம் இல்லாத லட்டை எடுத்து உண்ண வேண்டியதுதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொன்னதும் சரி... இதோ விளக்கமாக + /// மேலும் அது மற்ற லட்டுகளை விட எடை குறைவானதா அல்லது அதிகமானதா என்பதும் தெரியாது. ///

      அதனால் :

      விஷம் இல்லாத லட்டு எடை அதிகமாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்...

      எடை போடுவது முதல் முறை : முதலில் தராசு தட்டுகளில் இருபுறமும் 4, 4 வைத்து எடை பார்த்தால், i) தராசுதட்டுகள் இரண்டும் சமம் எனில், கையிலிருக்கும் 4 லட்டுக்களை வைத்துக் கொண்டு, மற்றவைகளை குப்பையில் போடுவோம்... ii) தராசுதட்டுகள் இரண்டும் சமம் இல்லையெனில், மேல் தட்டில் உள்ள 4 லட்டுகளையும் + கையிலிருக்கும் 4 லட்டுகளையும் குப்பையில் போடுவோம்...

      எடை போடுவது இரண்டாம் முறை : முதல் முறை போல் இருபுறமும் 2, 2 - மேல் தட்டு லட்டுக்கள் - குப்பையில்...

      எடை போடுவது மூன்றாம் முறை : மிச்சம் இருக்கும் 2 லட்டுக்கள் இருபுறமும் 1,1 கீழிருக்கும் தட்டில் உள்ள லட்டை பெரியவர் சாப்பிடலாம்...

      விஷம் இல்லாத லட்டு எடை குறைவாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்...

      எடை போடுவது முதல் முறை : முதலில் தராசு தட்டுகளில் இருபுறமும் 4, 4 வைத்து எடை பார்த்தால், i) தராசுதட்டுகள் இரண்டும் சமம் எனில், கையிலிருக்கும் 4 லட்டுக்களை வைத்துக் கொண்டு, மற்றவைகளை குப்பையில் போடுவோம்... ii) தராசுதட்டுகள் இரண்டும் சமம் இல்லையெனில், கீழ் தட்டில் உள்ள 4 லட்டுகளையும் + கையிலிருக்கும் 4 லட்டுகளையும் குப்பையில் போடுவோம்...

      எடை போடுவது இரண்டாம் முறை : முதல் முறை போல் இருபுறமும் 2, 2 - கீழ் தட்டு லட்டுக்கள் - குப்பையில்...

      எடை போடுவது மூன்றாம் முறை : மிச்சம் இருக்கும் 2 லட்டுக்கள் இருபுறமும் 1,1 மேலிருக்கும் தட்டில் உள்ள லட்டை பெரியவர் சாப்பிடலாம்...

      நீக்கு
    2. முரளி அவர்களே... முடியலே... அதனால் லட்டை "அபேஸ்" பண்ணிட்டேன்... கொஞ்சம் விளக்கவும்... ஹிஹி...

      Weigh 4 vs 4 (1st Weighing). If they are identical then you know that all of 8 of these are “normal” laddus. Take 3 ”normal” laddus and weigh them against 3 of the unweighed laddus (2nd Weighing). If they are identical, then the last laddu is “different.” Take 1 “normal” laddu and weigh against the “different” one (3rd Weighing). Now you know if the “different” laddu is heavier or lighter.

      If, on the 2nd weighing, the scales are unequal then you now know if the “different” laddu is heavier (if the 3 non-normal laddus were heavier) or lighter (if the 3 non-normal laddus were lighter). Take the 3 “non-normal” laddus and weigh 1 against the other (3rd Weighing). If they are equal then the third laddu not weighed is the “different” one. If they are not equal then either the heavier or lighter laddu is “different” depending on if the 3 “non-normal” laddus were heavier or lighter in the 2nd Weighing.

      If, on the 1st Weighing, the laddus were not equal then at least you know that the 4 laddus not weighed are “normal.” Next, take 3 of the “normal laddus” and 1 from the heavier group and weigh against the 1 laddu from the lighter group plus the 3 laddus you just replaced from the heavier group (2nd Weighing). If they are equal then you know that the “different” laddu is lighter and is 1 of the 3 not weighed. Of these 3, weigh 1 against 1 (3rd Weighing) If one is lighter, that is the “different” laddu, otherwise, the laddu not weighed is “different” and lighter.

      If, on the 2nd weighing from the preceding paragraph, the original heavier group (containing 3 “normal” laddus) is still heavier, then either one of the two laddus that were NOT replaced are ”different.” Take the one from the heavier side and weigh against a normal laddu (3rd Weighing). If it is heavier, it is “different,” and heavier otherwise the laddu not weighed is “different” and lighter. If, on the 2nd weighing, the original lighter side is now heavier, then we know that one of the 3 laddus we replaced is “different.” Weigh one of these against the other (3rd Weighing). If they are equal, the laddu not weighed is “different” and heavier. Otherwise, the heavier laddu is the “different” one (and is heavier).

      நீக்கு
  4. மன்னா லட்டு தின்ன ஆசையான்னு கேட்டிருக்கலாம் !
    த ம 1

    பதிலளிநீக்கு
  5. நான் வரும் பதில்களை ரசிக்கிறேன்.
    வந்த பதில்கள் அருமையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. பொண்ணுக்கு பரிட்சை. இப்ப யோசிக்கும் மனநிலையில் நான் இல்லன்னு சொல்லி எஸ்கேப்பிக்குறேன்

    பதிலளிநீக்கு
  7. நான் பேனாவெல்லாம் எடுத்து கணக்கு போட்டு வந்தால் அதே பதிலை டி.டி.அண்ணா சொல்லீட்டார்! நெஜமாங்க ! (நீங்க பதிலை பப்ளிஷ் பண்ணாமல் இருந்திருந்தா நான் இதே விடையை தான் போட்டிருப்பேன்! அடுத்த முறை புதிர் போடும்போதுமட்டும் கமென்ட் மாடரேஷன் வைச்சுடுங்க! என் உழைப்பு வீனா போச்சுல்ல :(((

    பதிலளிநீக்கு
  8. முதலில் இம்மாதிரிப் போட்டிகளில் டிடி கலந்து கொள்வது சரியா. என்று கேட்கத் தோன்றுகிறது. பொன்சந்தரும் சரியோ.?

    பதிலளிநீக்கு
  9. கிழவர் மன்னனிடம் தனக்கு எடைபோடும் வாய்ப்பு மூன்று முறை தேவையில்லை இரண்டுமுறைகளே போதும் என புன்னகைத்தார்.
    விஷமில்லாத அந்த ஒரு லட்டு எடை கூடவோ குறையவோ இருக்கலாம் அது தெரியாத பட்சத்தில், முதலில் சமமான எடையுள்ள 11 லட்டுக்களின் எடையை கண்டுபிடிக்கவேண்டும்
    எடை போடுவது முதல் முறை : ஆறு ஆறாய் இருபக்கமும் லட்டுக்களை அடுகவேண்டும் ஏதோ ஒரு லட்டு எடை கூடவோ குறையவோ இருப்பதால் தராசு சமநிலையில் இருக்காது. இப்போது இருபக்கத்திலிருந்தும் ஒவ்வொரு லட்டுவாக எடுத்துக்கொண்டே வரவேண்டும்.
    6 -6 --சமநிலை இல்லை
    5 - 5 சமநிலை இல்லை
    4 - 4 சமநிலை இல்லை
    3 - 3ல் சமநிலைக்கு வருமேயானால்
    கடைசியாய் எடுத்த இரண்டு லட்டுக்களில் ஒன்றுதான் எடை கூடவோ குறையவோ உள்ளது அவற்றை தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். அவற்றுக்கு ’அ’ ’ஆ’ என பெயர் வைத்துக்கொள்வோம்.
    மீதமுள்ள 10 லட்டுக்களில் ஒன்றைமட்டும் வைத்துக்கொண்டு மற்றதை எறிந்துவிடவேண்டும். அந்த லட்டுவிற்கு ’இ’ என பெயர்சூட்டி மகிழ்வோமாக. (இதுவே சமமான எடையுள்ள விஷ லட்டுக்களின் எடை)
    (இதுவரை நாம் ஒருமுறைதான் எடை போட்டிருக்கிறோம். காரணம் நாம் தராசு தட்டிலிருந்து ஒவ்வொன்றை எடுக்கத்தான் செய்தோம்)
    எடை போடுவது இரண்டாவது முறை : இப்போது தராசின் ஒருபக்கம் ’இ’ லட்டுவையும் மறுபக்கம் ’அ’ லட்டுவையும் வைக்கவேண்டும். இரண்டும் சமநிலையில் இருந்தால் மூன்றாவதா உள்ள ’ஆ’ லட்டுதான் எடை கூடவோ குறையவோ உள்ள விஷமில்லாதத லட்டு. தராசு சமநிலையில் இல்லையென்றால் ’அ’ லட்டுதான் எடை கூடவோ குறையவோ உள்ள விஷமில்லாத லட்டு.

    பதிலளிநீக்கு
  10. நான் கொஞ்சம்
    கணக்கில முட்டாள் தான்
    எனக்கும் லட்டில விருப்பம் தான்
    கண்டு பிடிக்கலாமென இறங்கி
    லட்டைத் தின்னலாம் என்றால்
    லட்டில நஞ்சை வைச்சிட்டியளே!

    பதிலளிநீக்கு
  11. முரளி,

    நல்ல பதிவு,அறியாத தகவல்,அறிந்தேன் நன்றி!

    ஹி...ஹி!!! விடை சொல்லாம இப்படி கருத்து சொன்னாலும் மகிழ்ச்சி தானே?
    -----------------

    1)5 +5 - சமம் எனில் அனைத்தும் விஷம்

    2) சமம் இல்லை எனில் எடைக்கூடுதலாக உள்ள 5 இல் நல்ல லட்டு இருக்கு,

    எனவே , 2 +2 என எடை இட்டால் , இருப்பக்கமும் சமம் எனில் ,அனைத்தும் விஷம்

    எஞ்சிய 5வது லட்டு நல்ல லட்டு.

    3) இப்போ ரெண்டு 2+2 இல் சமம் இல்லை எனில் எடை கூடிய பக்கத்தில் உள்ள இரு லட்டுக்களை மட்டும் தனியாக எடைப்போட்டு , நல்ல லட்டை பிரித்துவிடலாம், மொத்தம் 3 முறை எடைப்போட்டாச்சு ,அஃதே!

    இப்போ பதிலை யோசிச்சு சொன்னா சந்தோஷமா?

    பதிலை சொல்லிட்டானேனு கோவம் வருமோ அவ்வ்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு கோவம் அவ்வளவு சீக்கிரம் வராது வவ்வால் . எனக்கு சொரணை கம்மிதான் ஹிஹிஹி

      //சமம் இல்லை எனில் எடைக்கூடுதலாக உள்ள 5 இல் நல்ல லட்டு இருக்கு,//
      புதிர மேலோட்டமா படிச்சிட்டீங்களே. எடை கூடுதலா உள்ளதில்தான் நல்ல லட்டு இருக்கும்னு எப்படி முடிவுக்கு வந்தீங்க.
      நல்ல லட்டு எடை குறைவாக இருக்கவும் வாய்ப்பு உண்டு என்பதை மறந்து விட்டீர்களே. நிறையப்பேர் எடை கூடுதலாகத்தான் நல்ல லட்டு இருக்கவேண்டும் என்றே கணித்திருகிரீர்கள் அது தவறு.
      வவ்வால் இப்படி சொதப்புவீங்கன்னு நினைக்கவே இல்ல .
      எனினும் முயற்சிக்கு பாராட்டுக்கள்

      நீக்கு
  12. விட்டுப்போச்சி,

    முதல் எடையின் போது,

    1)5+5 என முதன் முறை எடைப்போட்டு ,இருப்பக்கமும் சமம் எனில் அனைத்தும் விஷம்.

    எனவே எஞ்சிய இரு லட்டை எடைப்போட்டு நல்ல லட்டை பிரிச்சிக்கலாம்.

    என வாசிக்கவும்.

    பதிலளிநீக்கு
  13. தனபாலன் சார் கரெக்டா சொல்லிட்டார் நாம யோசிக்க வேண்டான்னு நினைச்சா அது சரின்னு முரளிதரன் சொல்லலியே... யாராவது நல்ல லட்டை கண்டுபிடிச்சி கொடுங்கப்பா...

    பதிலளிநீக்கு
  14. முன்னதைவிட சற்று மேம்படுத்தப்பட்டது.
    கிழவர் மன்னனனைவிட புத்திசாலியல்லவா? ஆகவே அவர் மன்னனிடம் தனக்கு எடைபோடும் வாய்ப்பு மூன்று முறை தேவையில்லை இரண்டுமுறைகளே போதும் என புன்னகைத்தார்.
    விஷமில்லாத அந்த ஒரு லட்டு எடை கூடவோ குறையவோ இருக்கலாம் அது தெரியாத பட்சத்தில், முதலில் சமமான எடையுள்ள 11 லட்டுக்களை கண்டுபிடிக்கவேண்டும்
    எடை போடுவது முதல் முறை : ஆறு ஆறாய் இருபக்கமும் லட்டுக்களை அடுகவேண்டும் ஏதோ ஒரு லட்டு எடை கூடவோ குறையவோ இருப்பதால் தராசு சமநிலையில் இருக்காது. இப்போது இருபக்கத்திலிருந்தும் ஒவ்வொரு லட்டுவாக எடுத்துக்கொண்டே வரவேண்டும்.
    6 -6 --சமநிலை இல்லை
    5 - 5 சமநிலை இல்லை
    4 - 4 சமநிலை இல்லை
    3 - 3ல் சமநிலைக்கு வருமேயானால்
    கடைசியாய் எடுத்த இரண்டு லட்டுக்களில் ஒன்றுதான் எடை கூடவோ குறையவோ உள்ளது அவற்றை தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். அவற்றுக்கு ’அ’ ’ஆ’ என பெயர் வைத்துக்கொள்வோம்.
    (தராசு தட்டில் கடைசியாய் 1 – 1 இருக்கும்போதும் சமநிலை வரவில்லையென்றால் அவற்றுக்கு ’அ’ ’ஆ’ என பெயர் வைத்துக்கொள்வோம்.)
    மீதமுள்ள 10 லட்டுக்களில் ஒன்றைமட்டும் வைத்துக்கொண்டு மற்றதை எறிந்துவிடவேண்டும். அந்த லட்டுவிற்கு ’இ’ என பெயர்சூட்டி மகிழ்வோமாக. (இப்போது நம்மிடம் விஷ லட்டு 2 விஷமில்லாத லட்டு 1 உள்ளது)
    (இதுவரை நாம் ஒருமுறைதான் எடை போட்டிருக்கிறோம். காரணம் நாம் தராசு தட்டிலிருந்து ஒவ்வொன்றை எடுக்கத்தான் செய்தோம்)
    எடை போடுவது இரண்டாவது முறை : இப்போது தராசின் ஒருபக்கம் ’இ’ லட்டுவையும் மறுபக்கம் ’அ’ லட்டுவையும் வைக்கவேண்டும். இரண்டும் சமநிலையில் இருந்தால் மூன்றாவதா உள்ள ’ஆ’ லட்டுதான் எடை கூடவோ குறையவோ உள்ள விஷமில்லாதத லட்டு. தராசு சமநிலையில் இல்லையென்றால் ’அ’ லட்டுதான் எடை கூடவோ குறையவோ உள்ள விஷமில்லாத லட்டு.

    பதிலளிநீக்கு
  15. முரளி,

    நான் தான் சரியான விடைய சொல்லிட்டேனே? அதுவும் சரி இல்லைனா சொல்றிங்க,அப்போ கணக்கே தப்புனு சொல்லிடுவேன் அவ்வ்!

    பதிலளிநீக்கு
  16. நிறத்தை வைத்துக் கண்டுபிடிக்க முடியுமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்படி சார்? படத்துல பாருங்க எல்லா லட்டும் ஒரே கலராத்தானே இருக்கு

      நீக்கு
  17. எக்ஸ்க்யூஸ் மி.... நான் இந்த பதிவு இன்னிக்கு படிக்கவேயில்லை! நாளைக்கு வந்துடறேன்! :)

    லட்டு குடுத்தா சாப்பிட மட்டும் தான் நமக்கு தெரியும்! :)))))

    பதிலளிநீக்கு
  18. அகலிகன் சரியோ எனத் தோன்றுகிறது!

    பதிலளிநீக்கு
  19. லட்டுல எல்லாம் விஷத்தை வைப்பாங்களா... அடடா... நான் இன்று வரவே இல்லை! நாளையே வருகிறேன்! எனக்கு சாத்தியம் என்று தோன்றிய பதில்கள் எல்லாம் வந்துள்ளன. எதுவுமே சரி என்று ஒத்துக் கொள்ளப்படவில்லையே...

    பதிலளிநீக்கு
  20. முரளி,

    அதாவது விடைய சொன்னால்,அது சரியா,தப்பானாச்சும் சொல்லணும், அப்படி சொல்லாமல் இருந்தால் என்ன செய்வதாம்?

    # 11 லட்டு சரியான எடைனு சொன்னதும் ,நல்ல லட்டு எடை கூடுதல் என நினைத்து சொல்லிவிட்டேன். ரொம்பலாம் யோசிக்கலை,பார்த்ததும் சொல்லிட்டேன்.

    உங்களுக்கு விடைய வடையா சுட்டு இங்கே வச்சிருக்கு "கவ்விடுங்க"

    http://www.cut-the-knot.org/blue/OddballProblem1.shtml

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தப்புதான்னு அவ்வளவு நேரிடையா சொல்லனுமா?

      நீக்கு
    2. முரளி,

      நீங்க நேராகவோ ,சைடாகவோ சொல்லி தொலைக்க வேண்டிய அவசியமே இல்லை, கமெண்ட் மாடரேஷன் வச்சிருக்கும் போது , ஒன்னுமே வரலைனு தான் நான் அடுத்த கமெண்டில் கேட்டேன்,சரியா?

      சரியா,தப்பானு சொல்லலைனா, உங்க கணக்கே தப்புனு சொல்லிடுவேன் என சொன்னது அப்படித்தான்.

      கமெண்ட் மாடரேஷன் வச்சிட்டு ,புதிர் எல்லாம் போடனும்னு ஆசைப்பட்டால் , அவ்வப்போது "ஸ்டேட்டஸ்" ஆக சரி அல்லது தப்புனு பதிலை பின்னூட்டம் போட்டவர்களுக்கு சொல்லிடனும்.

      சரி விடுங்க உங்களுக்கு டெம்ப்ளேட் கமெண்ட் தானே பிடிக்கும் ,அதை போட்டுவிட்டு போயிடுவோம்.

      அதான் விடை இருக்கும் "இணையதள சுட்டியே போட்டாச்சுல" எஞ்சாய்!

      நீக்கு
  21. நீங்களே சொல்லி விடுங்க கணக்கில் வீக்கு.ஹீ

    பதிலளிநீக்கு
  22. புதிர் அருமையாக இருக்கிறது. விடை சொல்வதை ஒரு இரண்டு நாள் தள்ளிப் போடுங்களேன்..

    பதிலளிநீக்கு
  23. பன்னிரண்டு லட்டுகளை நான்கு சமபங்காக அதாவது மூன்று , மூன்று, மூன்று மற்றும் மூன்றாக பிரித்து கொள்ளவும். நமது வசதிக்கு A123, B123, C123, D123 என வைத்துகொள்வோம். முதலில் A123, B123 எடை போடணும் (முதல் எடை). ரெண்டும் சமமென்றால் அந்த ஆறு லட்டையும் மொதல்ல சாப்பிட்டு விட்டு தெம்பா C12, D12 எடை போடணும் (ரெண்டாவது எடை) அதுவும் சமம் என்றால் C12வில் 2ஐ மட்டும் எடுத்திட்டு C3ஐ மாற்றி வைக்க விடை கிடைத்துவிடும் . சமமாக இல்லாவிட்டால் என்ன செய்வது என்று கேட்கிறீங்க. புரியுது. C12வில் C1ஐ எடுத்து விட்டு எதிர் தட்டிலிருக்கும் D1ஐ எடுத்து வைத்துவிட்டு வெளியில் உள்ள D3ஐ எடுத்து D2வுடன் சேர்த்து வைக்கவேண்டும். (மூன்றாம் எடை). இப்போ தராசுமுள் இடம் மாறினால் D1தான் விஷாலாட்சி .....சீ ....விஷலட்டு. தராசுமுள் இடம் மாறவில்லை என்றால் D2தான் விஷலட்டு . தராசு சமமாக நின்றால் C1தான் விஷலட்டு.

    பதிலளிநீக்கு
  24. நான் நேத்திக்கே வந்திட்டு நழுவிட்டேன் ஏன்னா இருக்கிற கொஞ்ச முடியையும் கொட்டிக்காம இருக்கத் தான் ஹா ஹா....

    பதிலளிநீக்கு
  25. ஆளை விடுங்க! இலட்டே எனக்குப் பிடிக்காது!

    பதிலளிநீக்கு
  26. மூன்று முறை எடை போடுவதன் மூலம், எடை அதிகமாகவோ குறைவாகவோ உள்ள நல்ல லட்டைக் கண்டுபிடிக்க முடியாது என்பதையும், எந்தவொரு லட்டிலும் விஷம் கலக்கவில்லை [மன்னன் பிறப்பித்த ரகசிய உத்தரவு இதுதான்] என்பதையும் பெரியவர் புரிந்துகொள்கிறார்.

    பன்னிரண்டில் ஒன்றை எடுத்துச் சாப்பிட்டு உயிர் பிழைக்கிறார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காமக்கிழத்தான்,

      3 முறை எடைப்போட்டு கண்டுப்பிடிக்கலாம், விடை இருக்கும் இணையத்தள சுட்டிய முன்னரே போட்டேன் ,ஒருத்தர் கூட அதைப்போய் பார்க்கலையா அவ்வ்!

      நீக்கு
    2. கதை அருமையா இருக்கே. அப்படியே தொடர்ந்து கொண்டுபோய்முடிச்சிடலாம் போல இருக்கே. நல்ல IDEA

      நீக்கு
    3. கடந்த சில வினாடிகளில், நீங்கள் குறிப்பிட்ட தளத்திற்குச் [முன்பு கவனிக்கத் தவறிவிட்டேன்] சென்று நிதானமாய்ப் படித்துப் புரிந்துகொண்டேன். நன்றி வவ்வால்.

      நீக்கு
  27. ஒரு வேலை எறும்புக்கு கொடுத்து டெஸ்ட் பண்ணி பாத்து இருப்பாரோ????

    பதிலளிநீக்கு
  28. இங்குள்ளதையும் பாருங்கள்... http://en.wikipedia.org/wiki/Balance_puzzle#Solution

    பதிலளிநீக்கு
  29. ஐயே.... இதுக்கூடவா தெரியாது....

    அறிவாளி இப்படி சொல்ல வேண்டும்....

    “மன்னா... எனக்கு கடும் சக்கரை வியாதி. அதனால் விஷம்
    இல்லாத லட்டை நான் சாப்பிட்டாலும் இறந்து விடுவேன்.
    அதனால் வேற போட்டி வையுங்கள்.....“

    அப்பாடா.... அறிவாளியைத் தப்பிக்க வைத்தவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  30. ஒரே ஒரு லட்டு மட்டும் எடையில் கொஞ்சம் வித்தியாசம் கொண்டது. விஷம் இல்லாதது.------ தனபால் சொன்ன முறைதான். ஆனால் லட்டு எண்ணிக்கை 5,5 இதில் எடைக்குறைவானதிலிருந்து 2ஐ எடுத்து வைத்துக்கொண்டு, மீதமிருக்கும் 2உடன் மீண்டும் எடை... (அந்த 3ம் பழசு) இப்போதும் எடை குறைவாகவே இருந்தால்... இரண்டுக்குள் தான் வேற்றுமை... மூன்றாவது எடையில் கண்டு பிடிச்..... அடடா... நமக்கு தியரியை விட செய்முறைதான் சரியா வரும்னு தோணுது முரளி... லட்டு 12ஐயும் அனுப்பி வைங்க... நான் சரியா எடுத்துத் தின்னு காட்டுறேன்...எப்புடீ?

    பதிலளிநீக்கு
  31. இது எனது இரண்டாவது விடை. லட்டுகளை மூன்று சமபங்காக அதாவது நான்கு , நான்கு மற்றும் நான்றாக பிரித்து கொள்ளவும். நமது வசதிக்கு A1234, B1234, C1234 என வைத்துகொள்வோம். முதலில் A1234, B1234 எடை போடணும் (முதல் எடை).

    1. எடை சமமாக இருந்தால் எட்டு லட்டும் விஷமற்றது. அந்த எட்டில் மூன்றை மட்டும் ஒரு தட்டில் வைத்து C123 மட்டும் அடுத்த தட்டில் வைத்து எடை போடவேண்டும் (இரண்டாம் எடை). சமமாக இருந்தால் C4 தான் விஷமில்லாத லட்டு. எடை சமமில்லை என்றால் C123 இல் எதோ ஒரு லட்டு விஷமில்லாதது என்பதும் C123 எடை கூடுதலாக / குறைவாக இருந்தால் விஷமில்லா லட்டு எடை கூடியதா / குறைந்ததா என்பதும் தெரிந்துவிடும். C1 ஒரு தட்டிலும் C2 ஒரு தட்டிலும் வைத்து மீண்டும் எடை போடவும் (மூன்றாம் எடை). சமமாக இருந்தால் C3 தான் விடை. சமமில்லை என்றால் நாம் ஏற்கனவே அறிந்ததுபோல் எடை கூடியதோ / குறைந்ததோ உள்ள லட்டுதான் விஷமற்றது.

    2. எடை சமமில்லை என்றால் இரண்டு தட்டிலிருந்தும் மூன்று மூன்று லட்டுகளை எடுத்துவிட்டு (A123, B123) எதில் எடை அதிகமாக இருந்ததோ (உதா : A1234) அதிலிருந்த A123 மட்டும் எடுத்து எதிர் தட்டில் உள்ள B4 உடன் வைக்கவும் C123 மட்டும் எடுத்து A4 உடன் வைத்து எடை போடவும். தராசு முள் எதிர்பக்கமாக மாறவில்லை என்றால் A4 தான் விஷமற்ற லட்டு. தராசு முள் மாறிவிட்டால் A123 ஏதோ ஒரு லட்டு மட்டும் விஷமற்றது அதுவும் எடை கூடியது என்பது தெரிகிறது. தராசு சமமாக நின்றால் B123இல் ஏதோ ஒரு லட்டு விஷமற்றது என்பதும் அது எடை குறைந்தது என்றும் தெரிந்திடும். அந்த மூன்றில் இரண்டு லட்டு எடுத்து எடை போட (B1 & B2) எடை குறைந்த / விஷமற்ற லட்டை கண்டுபிடித்து விடலாம்.

    பதிலளிநீக்கு
  32. சாரி நண்பரே! எல்லாரும் இப்படி மண்டைய் குழப்பி.....லட்டு மாதிரி இருக்கற மூளைய் குழப்பி.....ம்ம்ம்ம்ம் லட்டு கொடுத்து .....சரி சரி...நாங்களும் எங்க லட்டு மாதிரி இருக்கற எங்க மூளையக் குழப்பிக்கறோம் என்ன உதிராம இருந்தா சரி!....பார்ப்போம்!!1 நாளை!

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  33. நல்ல புதிர்தான்! பதிவு வந்த அன்றைக்கே படிக்க தவறிவிட்டது! அதனால நேரடியா விடையை தெரிஞ்சிக்கிறேன் இன்றைய பதிவை பார்த்து! அம்மாடா! எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு? ..ஸ் அப்பா!

    பதிலளிநீக்கு
  34. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  35. கேள்வியில் டுவிஸ்ட் விசமில்லாத லட்டு எடை அதிகமா, குறைவா . அடுத்து 3 முறைதான் எடை போடனும்ங்கர விதி. இப்பதான் பதிவை படிச்சேன் பதில் கள் போட்டு இருந்தீங்க . பதில்களும் குழப்பமா இருக்கு. எளிதா எல்லோராலேயும் புரிஞ்சிக்க முடியாது. கண்டிப்பா யோசிக்க யோசிக்க மண்டை சூடாவதை தவிர்க்க முடியாது...அவ்

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895