என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 4 மார்ச், 2012

மின் வெட்டு(வெட்டிக்) கவிதைகள்

    புதிய தலைமுறை இதழில் 'இடுக்கண் வருங்கால் நகுக' என்ற தலைப்பில் மின்வெட்டைப் பற்றி நகைச்சுவையாக கவிதைகள் எழுதி அனுப்பச் சொல்லி இருந்தார்கள். நானும் ஈமெயிலில் கவிதைகள் அனுப்பினேன். ஆனால் எனது கவிதைகள் தேர்ந்டுக்கப்படவில்லை. அதனாலென்ன இருக்கவே இருக்கிறது நமது ப்ளாக். எவ்வளவுதான் மொக்கையாக இருந்தாலும் தெரியாமல்  சில பேரும் போனால் போகிறதென்றும் சில பேரும் பார்ப்பார்கள். அது போதும். ஹி..ஹி.

 
சாப்பிட உட்கார்ந்தேன்!
கைக்கு எட்டியது
வாய்க்கு எட்டவில்லை.
கரண்ட் கட்.
****************

மின்சாரம் இல்லாமல்
ஒரு
ஷாக் ட்ரீட்மென்ட்.
மின்வெட்டு.
******************

கல்யாணத்தில்
பந்தியின்போது
கரெக்டாக ஆனது 
கரண்ட் கட்டு.
என் கைக்கு வந்தது
பக்கத்து இலை லட்டு
******************

கைத்தான் ஃபேன்
வாங்குங்க!
டி.வி. யில் 
விளம்பரம்!
அட போங்கப்பா!
இனிமே 
கைதானே  ஃபேன்!
 *******************

அதுக்குள்ள போதுமா? சார் இன்னும் ஒண்ணே
ஒண்ணு.அய்யய்யோ! கரண்ட் கட் ஆயிடுச்சி. 
===================================================
இதையும் படியுங்க!
இது மாணவர்களுக்கு இல்ல. உங்களுக்குத்தான். 

 


3 கருத்துகள்:

  1. புதிய தலைமுறை தருவது மட்டும் தானா அங்கீகாரம் . நாம் தருகின்றோம் அன்போடு அங்கீகாரம். அதிஷ்டவசமாகச் சிலருக்குக் கிடைக்கும் வாய்ப்புக்கள் . அதுபோல் நீங்களும் பெறுவீர்கள் ஒரு காலம். சிறப்பான மின்வெட்டுக் கவிதைகள் மின்சாரம் போல் வந்திருக்கின்றன . வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. நன்றி. தாங்கள் எனது பதிவுகளை படித்து கருத்திட்டு பாராட்டி உற்சாகப் படுத்தி வருவதை பெருமையாகக் கருதுகிறேன்.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895