எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. கடந்த ஆறு மாதங்களாக 85 பதிவுகளை இட்டிருக்கிறேன்.இருந்தபோதிலும் எனது வேறு எந்தப் பதிவிற்கும் கிடைக்காத வரவேற்பு தெலுங்கை தாய்மொழியாக உடையவர்கள் தமிழர்களா? என்ற பதிவிற்கு கிடைத்தது உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருந்தது. பதிவிட்ட இரண்டே நாளில் 2000 பேருக்கு மேல் வாசித்திருக்கிறார்கள்.
வடிவேலு சொன்ன கருத்து,
வடிவேலு சொன்ன கருத்து,
ஏ.ஆர்.ரஹ்மான்,இளையராஜா,எம்.எஸ்.வி:பலங்கள்-பலவீனங்கள்- குறைகள்
ஆங்கிலம்- Funny Language
போன்ற ஒரு சில பதிவுகள் மட்டுமே 500 பேருக்கு மேற்பட்டவர்களால் பார்வையிடப் பட்டிருக்கிறது. தமிழையும் தமிழரையும் நேசிக்கும் அனைவரையும் தமிழ்மக்கள் விரும்புகிறார்கள் என்பதை இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். இப்பதிவிற்கு பின்னூட்டம் இட்டவர்கள் அனைவரும் இப்பதிவின் கருத்தை ஆதரித்து பாராட்டியிருக்கிறார்கள். பின்னூட்டமிட்டு பாராட்டி ஊக்கப் படுத்திய பல்வேறு பதிவுலக நண்பர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆங்கிலம்- Funny Language
போன்ற ஒரு சில பதிவுகள் மட்டுமே 500 பேருக்கு மேற்பட்டவர்களால் பார்வையிடப் பட்டிருக்கிறது. தமிழையும் தமிழரையும் நேசிக்கும் அனைவரையும் தமிழ்மக்கள் விரும்புகிறார்கள் என்பதை இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். இப்பதிவிற்கு பின்னூட்டம் இட்டவர்கள் அனைவரும் இப்பதிவின் கருத்தை ஆதரித்து பாராட்டியிருக்கிறார்கள். பின்னூட்டமிட்டு பாராட்டி ஊக்கப் படுத்திய பல்வேறு பதிவுலக நண்பர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் சொன்ன கருத்துக்கு எதிர் கருத்து உடையவர்களும் இப்பதிவைப் படித்திருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும் ஒவ்வொரு பதிவையும் முகநூலில் இணைப்பது வழக்கம். எனக்கு முக நூல் நண்பர் ஒருவர் சொன்ன கருத்து எனக்கு லேசான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தலைப்பு இணைப்புடன் இருந்தது.
அதற்கு நண்பர் தெரிவித்த கருத்து
"எப்படிக் கேட்கத் தோன்றுகிறது! இப்படியொரு கேள்வி! ஒருவர் எந்த மொழியைத் தாய்மொழியாகக் கொள்கிறாரோ அவர் அந்த மொழியர் தானே?"(கோபத்துடன் கேட்பது போல் தோன்றியது.)
ஒருவேளை முழுப் பதிவையும் படிக்காமல் தலைப்பைமட்டும் படித்து கருத்து கூறுகிறாரோ என்று நினைத்து முழுப்பதிவையும் அதில் பகிர முயன்றேன். ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் சுவற்றில் இணைக்க முடியவில்லை.
பின்னர் நான் செய்த தவறு "தமிழ் நாட்டில் வாழும் பெரும்பாலான தெலுங்கர்கள் ஆந்திராவோடு எந்தத் தொடர்பும் இல்லாதவர்கள் தெலுங்குத் தமிழர் என்று இவர்களைக் கூறலாம் என்பதை இக் கட்டுரையில் தெரிவித்துள்ளேன் அய்யா!" என்றும் கருத்திட்டேன். இதற்கு அவர் கூறிய பதில்
"ஆங்கிலேயர்களுடன் கூடிப் பிறந்தவர்கள் தங்களை ஆங்கிலோ-இந்தியர் என்று கூறிக் கொண்டார்களே அதைப் போலவா?"
இந்த பதிலைப் படித்ததும். நான் உண்மையிலேயே அதிர்ச்சி அடைந்தேன். இப்படி கருத்திடுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. கிண்டலாகக் கூறினாரா அல்லது உண்மையாகவே சொன்னாரா என்பதை அறிய இயலவில்லை. இது தமிழ் பேசுபவர்கள், தெலுங்கு பேசுபவர்கள் ஆங்கிலோ இந்தியர்கள் மூவரையும் இழிவுபடுத்துவதாகாவே என் மனதிற்குப் பட்டது அது தவறாகக் கூட இருக்கலாம்.
ஒரு கவிஞரான அவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், வைகோ, போன்றவர்களை தமிழர்களாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதானே இதன் பொருள்?
தெலுங்கு பேசுபவர்கள் தமிழர்கள் அல்ல என்று அவர் கருத்தை அதோடு விடாமல் என் கருத்தை வலுப்படுத்துவதாக நினைத்து நான் கருத்திட, அக்கருத்தை வேறொன்றாக புரிந்துகொள்ளப் படுவதை நினைத்து என்னை நானே நொந்து கொண்டேன். பதிலளிக்கும்போது கவனமாக இருக்கவேண்டும் என்ற பாடமும் கற்றேன்.
முகநூலில் பகிரப்படும் பதிவுகள் குறிப்பாக (இணைக்கப்படும் வலைப்பதிவுகள்) சில சமயங்களில் முழுவதும் படிக்கப்படாமலேயே லைக் இடப்படுகின்றன என்றும் நினைக்கிறேன்.
எனது வலைப்பக்கத்திற்கு வருகை தந்து பதிவை படித்த அத்துணை பேருக்கும் மீண்டும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன் .
உங்கள் ஆதரவே என் வளர்ச்சி!
உங்கள் ஆதரவே என் வளர்ச்சி!
*******************************************************************************

வைக்கோ இந்தியனே அல்ல..அவன் ஒரு தேச துரோகி..விடுதலைப்புலிகளிடம் பிச்சை எடுத்து இந்தியாவுக்கு துரோகம் செய்யும் தேச துரோகி அவன்..தமிழ் நாட்டில் எவனும் தீக்குளித்தால் விடுதலைப்புலிகளிடம் பிச்சை எடுத்த பணத்தை கொடுத்து - தீக்குளிப்பை ஊக்குவித்துவிட்டு வரும் அவன் மனிதபிறவியே அல்ல யாழ்பாணத்தில் போய் அவன் ஒட்டு பிச்சை எடுக்கட்டும்..
பதிலளிநீக்குWell said...
நீக்குபதிவுலகில் நாம் மெருகேற வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது. அனைத்தும் நல்லதொரு அனுபவத்தை நோக்கிய பயணம்தான்! பயணம் இனிமையடைய வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குமர்மயோகிக்கு ஏன் இத்தனை ஆத்திரம்?
பதிலளிநீக்குஇந்த ஆத்திரத்தை , நம் இனத்தை அழித்தவர்களிடம் காட்டினாரா ?
அவர் மர்மயோகி அல்ல...மாமாயோகி...?
பதிலளிநீக்குநீங்கள் சொன்னது மிகவும் சரி. விஜயகாந்தும் தமிழன் தான், வைகோவும் தமிழன் தான். வைகோ தமிழன் என்பதிற்காக அவர் செய்தது எல்லாம் சரியாகிவிடாது. திரு மர்மயோகி சொன்னதும் உண்மை.
பதிலளிநீக்குF21DA01BF9
பதிலளிநீக்குTakipçi Satın Al
Footer Link Satın Al
Google Yorum Satın Al
MLBB Hediye Kodu
MFF Kupon Kodu
7923DB79CC
பதிலளிநீக்குTakipçi Satın Al
TT İzlenme Hilesi
Mp3 Dönüştürücü