இன்று தமிழ் புத்தாண்டு. அனைத்து உலகத் தமிழருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். நந்தன ஆண்டை வந்தனம் கூறி வரவேற்போம்.
இனிமைத் தமிழ் மொழி எமது-எமக்
கின்பம் தரும்படி வாய்த்த நல் அமுது
கனியைப் பிழிந்திட்ட சாறு -எங்கள்
கதியில் உயர்ந்திட யாம் பெற்ற பேறு
தனிமைச் சுவையுள்ள சொல்லை-எங்கள்
தமிழினும் வேறெங்கும் யாம் கண்டதில்லை
நனியுண்டு நனியுண்டு காதல்-நற்
றமிழர்கள் யாவருக்கு மேதமிழ் மீதில்
இது புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் "எங்கள் தமிழ்" என்ற தலைப்பில் எழுதிய பாடலின் முதற் பகுதி. இதை நான் எப்போது எங்கே படித்தேன் என்று நினைவில் இல்லை. ஆனால் இந்த செய்யுள் என் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்துள்ளது. இது தமிழின் மீது கவிஞர் எவ்வளவு பற்று வைத்திருக்கிறார் என்பதை எடுத்துக்காட்டுகிறது. எனக்கும் தமிழின் மீது சிறிதளவாவது பற்று இருக்கிறது என்று சொன்னால் அதற்கு இந்தப் பாடலும் ஒரு காரணம்.
ஆனால் இன்று
நனியுண்டு நனியுண்டு காதல்-நற்
றமிழர்கள் பலருக்கும் ஆங்கிலம் மீதில்
என்ற நிலையே நிலவுகிறது. தமிழ் எனக்குத் தெரியாது என்று சொல்வதை பெருமையாகக் கருதுகின்றனர். என் பையனுக்கு தமிழே வரமட்டேங்குது. என்று பெற்றோர்கள் பெருமையுடன் சலித்துக் கொள்வதை பார்த்திருக்கலாம்.
அவர்களுக்கெல்லாம் முகநூல் நண்பர் ஒருவர் பகிர்ந்த கவிதையை சில திருத்தங்களுடன் சொல்ல ஆசைப் படுகிறேன்.
அலறும்போது மட்டும் அ , ஆ
சிரிக்கும்போது மட்டும் இ , ஈ
சூடு பட்டால் மட்டும் உ , ஊ
அதட்டும்போது மட்டும் எ , ஏ
ஐயத்தின்போது மட்டும் ஐ
ஆச்சர்யத்தின் போது மட்டும் ஒ , ஓ
வக்கனையின்போது மட்டும் ஒள
விக்கலின் போது மட்டும் ஃ , ஃ
என்று தமிழ் பேசி
மற்ற நேரம் வேற்று மொழி பேசும்
தமிழர்களிடம் மறக்காமல் சொல்
உன் தாய்மொழி
தமிழ் என்று
இன்று இந்த தமிழ் புத்தாண்டு தினத்திலாவது தமிழை நினைத்திருப்போம்! தமிழால் இணைந்திருப்போம்!
ellaam saridhaan thamizh kojugiradhu, kulavugiradhu, enkku oru iyyappaadu edhu thamizhar puththaandu?
பதிலளிநீக்குஎனக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து சித்திரை மாதத்தில் இருந்துதான் தமிழ் புத்தாண்டு கொண்டாடி வருகிறோம். அரசு ஆணை போட்டு புத்தாண்டை மாற்ற முடியாது. மக்கள் விரும்பினால்தான் மாறும்.
பதிலளிநீக்குஇனிய தமிழ்புத்தாண்டு வாழ்த்துகள்
பதிலளிநீக்குஇன்றைய பதிவு50 தேடுஇயந்திரங்களில் உங்கள் பதிவுகளை இனைக்கலாம்
நல்ல வேண்டுகோள். தமிழைப் பேசுவோம், சாப்பிடுவோம், சுவாசிப்போம். தமிழோடு துயில்வோம். தமிழோடிருப்போம். பதிவு மிக நன்று. வாழ்த்துகள். இனிய புத்தாண்டு வாழ்த்துகளும்.
பதிலளிநீக்குவேதா. இலங்காதிலகம்.
நல்ல பதிவு ! வாழ்த்துக்கள் ! நன்றி நண்பரே !
பதிலளிநீக்குUNGALATHU INTHA IDUGAYAY VALAISARTTHIL INAITHU ULLEN .
பதிலளிநீக்குhttp://blogintamil.blogspot.in/2012/04/blog-post_15.html
NANDRI,
GUNA
77EB65C328
பதிலளிநீக்குsms onay
Evde Paketleme İşi
Online Oyunlar
Sanal Numara
Sahte Takipçi