தொலைக் காட்சியில் தமிழ்ப் புத்தாண்டு முன்னிட்டு பல சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன.அவற்றை நான் முழுமையாக பார்க்காவிட்டாலும் பார்த்ததில் என்னைக் கவர்ந்த மூன்றை மட்டும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
ஜெயா டிவியில் ஒளி பரப்பான பட்டிமன்றம் இந்தியாவின் எதிர் காலம் உழவனின் கழனியிலா? உள்ளங்கை கணினியிலா? பட்டிமன்ற நடுவர் அனைவருக்கும் பரிச்சியமான பேராசிரியர் கு,ஞானசம்பந்தன் அவர்கள் நடுவராக அமர்ந்து சொன்ன தீர்ப்பு அருமை. தீர்ப்பு எதிபார்த்ததுதான் என்றாலும் அவர் சொன்ன விளக்கம் பொருத்தமானது. மனிதன் கண்டுபிடித்த கருவிதானே கணினி அது மனிதனுக்கு மட்டும்தான் உதவும். உணவு உற்பத்திக்கு கழனிதானே தேவை, கணினி இல்லாமல் உயிர்கள் வாழமுடியும். கழனி இல்லாமல் உயிர்கள் வாழ முடியாது. கழனியில் உற்பத்தி செய்யும் பொருளை காக்காய்,குருவி,புறா,அணில் போன்ற பறவைகள் விலங்குகள் உண்டு மகிழும். அதனால் இந்தியாவின் எதிர் காலம் கழனியில்தான் என்று தீர்ப்பளித்ததோடு, உங்கள் கைகளில் கணினி தவழட்டும் ஆனால் கால் கழனியில் இருக்கட்டும் என்று முத்தாய்ப்புடன் முடித்தது சிறப்பு.
**********************************************************************************************************
வேலாயுதம் படத்தில் ஒரு காமெடி சீன் ஒரு புடவைக் கடையில் ஒருபுடவை எடுத்து இழுத்து புரட்டி பார்த்து இந்தப் புடவைதான் வேணும் என்று கடைக்காரனிடம் சொல்ல அத அந்த அம்மாதான் சொல்லணும் என்று சொல்ல அப்போதுதான் தெரிந்தது அவர்கள் கையில் வைத்திருந்த புடவை ஒரு பெண் கட்டியிருந்த புடவை என்று தெரிய அந்தப் பெண் கோபத்துடன் முறைக்க நல்ல நகைச்சுவை கலாட்டா.
**********************************************************************************************************
விஜய் டிவியில் ஒளி பரப்பான எங்கேயும் எப்போதும் திரைப்படம்.ஏற்கனவே பலராலும் பாரட்டப்பட்ட படம் என்பதால் முதன் முறையாக முழுவதும் பார்த்தேன். கடைசி வரை நன்றாக இருந்தாது விபத்தை அடிப்படையாகக் கொண்ட இறுதிக்காட்சிகள் கண்கள் கலங்க வைத்தன.
அந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது ஒரு பாடல் காட்சி. அனன்யா தனக்கு உதவி செய்த சரவ்வின் பெயரைக்கூட தெரிந்து கொள்ளவில்லை.
மிக எச்சரிக்கையுடன் இருந்தும் காதல் வசப்படுவதை தடுக்க இயலாது போக சரவ்வை நினைத்து பாடும் "உன் பேரே தெரியாது" என்ற பாடல் மிகவும் அருமை. சமீப காலங்களில் வெளிவந்த பாடல்களில் எனக்கு மிகவும் பிடத்த பாடல் இதுதான். இசை யார்?பாடலாசிரியர் யார்? பாடியவர் யார் என்பதை வலையில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன். நா.முத்துக்குமார் ஒரு பெண்ணாகவே மாறி பாடல் எழுதியிருப்பாரோ என்று எண்ணுமளவுக்கு மிகச் சிறப்பாக இலக்கிய நயத்துடன் எளிய வார்த்தைகளுடன் எழுதியிருப்பது பாரட்டத்தக்கது. பாடிய மதுஸ்ரீ யின் குரல் தேனினும் இனிமை. "சொல்லி விட்டால் உதடு ஒட்டும் , எழுதிவிட்டால் தேனும் சொட்டும்" என்ற வரிகளைப் பாடும்போது உண்மையாகவே தேன் சொட்டுவது போல் உணர்வை ஏற்படுத்தியது. அற்புதமான மெட்டுப் போட்ட இசை அமைப்பாளர் சத்யாவிற்கு பாராட்டுக்கள்.
இந்தப்பாட்டை வரிகளைப் படித்துக்கொண்டே கேட்டுப் பாருங்கள்
படம் : எங்கேயும் எப்போதும்
இசை : சத்யா
பாடியவர் : மதுஸ்ரீ
பாடலாசிரியர் : நா. முத்துக்குமார்
எங்கேயும் எப்போதும் - உன் பேரே தெரியாது பாடல் வரிகள்
உன் பேரே தெரியாது
உன்னை கூப்பிட முடியாது
நான் உனக்கொரு பேர் வைத்தேன்
உனக்கே தெரியாது
அந்த பேரை அறியாது
அட யாரும் இங்கேது
அதை ஒரு முறை சொன்னாலே தூக்கம் வாராது
அட தினம் தோறும் அதை சொல்லி உனை கொஞ்சுவேன்
நான் அடங்காத அன்பாலே உனை மிஞ்சுவேன்
ஹோ சூடான பேரும் அது தான்
சொன்ன உடன் உதடுகள் கொதிக்கும்
சூரியனை நீயும் நினைத்தால் அது இல்லையே
ஜில்லென்று பேரும் அது தான்
கேட்ட உடன் நெஞ்சம் குளிரும்
நதி என்று நீயும் நினைத்தால் அது இல்லையே
சிலிர்க்க வைக்கும் தெய்வம் இல்லை
மிரள வைக்கும் மிருகம் இல்லை
ஒளி வட்டம் தெரிந்தாலும்
அது பட்ட பேரில்லை
என் பேரின் பின்னால் வரும் பேர் நான் சொல்ல வா...
பெரிதான பேரும் அது தான்
சொல்ல சொல்ல மூச்சே வாங்கும்
எத்தனை எழுத்துக்கள் என்றால் விடை இல்லையே
சிறிதான பேரும் அது தான்
சட்டென்று முடிந்தே போகும்
எப்படி சொல்வேன் நானும் மொழி இல்லையே
சொல்லி விட்டால் உதடு ஒட்டும்
எழுதிவிட்டால் தேனும் சொட்டும்
அது சுத்த தமிழ் பேர் தான்
அயல் வார்த்தை அதில் இல்லை
என் பேரின் பின்னால் வரும் பேர் நான் சொல்ல வா...
உன் பேரே தெரியாது
உன்னை கூப்பிட முடியாது
நான் உனக்கொரு பேர் வைத்தேன்
உனக்கே தெரியாது
அட தினம் தோறும் அதை சொல்லி உனை கொஞ்சுவேன்
நான் அடங்காத அன்பாலே உனை மிஞ்சுவேன்
********************************************************************************************
Congrats for the 50th Follower )That's me)
பதிலளிநீக்குI have also written about TV special programs today :)
நன்றி! மோகன் குமார்.எனது வலைப்பதிவை தங்கள் கவனத்தில் வைத்துக்கொண்டதற்காக
பதிலளிநீக்குஉங்கள் கைகளில் கணினி தவழட்டும் ஆனால் கால் கழனியில் இருக்கட்டும் என்று முத்தாய்ப்புடன் முடித்தது சிறப்பு.
பதிலளிநீக்குபாடல் பகிர்வும் அருமை.. பாராட்டுக்கள்..
நல்ல பாடல் !
பதிலளிநீக்கு0C6E9B29E5
பதிலளிநீக்குinstagram organik türk takipçi
oversized swivel accent chair
1BAD856BAF
பதிலளிநீக்குTakipçi Satın Al
Tango Jeton Hilesi
Video Arkasına Müzik Ekleme Programsız
Cpm Coin Hilesi
Tiktok Jeton Hilesi
Takipçi Satın Al
YT Ücretsiz Beğeni
Nested Sunucu Satın Al
Promosyon Kodu