கணினி!
நீஒரு
டிஜிட்டல் ரஜினி!
சிறுவரையும் சிறை பிடிக்கிறாய்
நடுவயதினருடனும் நட்பு கொள்கிறாய்
வயதானவர்களையும்
வசீகரம் செய்கிறாய்.
பெண்களையும் பிடித்திழுக்கிறாய்
மடிமேலும் அமர்ந்து கொள்கிறாய்
கைக்குள்ளும் அடங்கி விடுகிறாய்
நல்லதையும் காட்டுகிறாய்
பொல்லாததையும் புகட்டுகிறாய்
அந்தரங்கம் அலசுகிறாய்
சொந்தமா பந்தமா நீ
உறங்கும் நேரம் தவிர
உன்னுடனே இருக்கப்
பிரியப் படுகிறாய்
"வல்லவன் நான்" எனக்குள்
எல்லாம் இருக்கிறதென்கிறாய்.
உன்னைத்தாண்டியும் உலகம் இருக்கிறது
அதை புரிந்து கொள்ளாதவரை
நாங்கள் உனக்கு அடிமை-
புரிந்து கொள்ளும் காலம் வரும்
அப்போது நீ எங்களுக்கு அடிமை
****************************************************************************************
படித்து விட்டீர்களா?
என்னை கவுத்திட்டயே சரோசா!-காதல் கடிதம் போட்டி
எனது முதல் கணினி அனுபவம்
மீண்டும் திருவிளையாடல்

உன்னைத்தாண்டியும் உலகம் இருக்கிறது
பதிலளிநீக்குஅதை புரிந்து கொள்ளாதவரை
நாங்கள் உனக்கு அடிமை-//
இந்த அடிமைகள் பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது. என்றுதான் நீங்கள் தீர்க்கதரிசனமாய் கூறிய அடுத்த வரிகள் நிஜமாகுமோ!
எப்படீங்க இப்படி...? பாராட்டுக்கள்...
பதிலளிநீக்குசரியான கணினி பற்றிய புரிதல் கவிதை.
பதிலளிநீக்குகணிணியை பற்றி சிறப்பாக கவிதை வடித்து விட்டீர்கள்! அருமை! நன்றி!
பதிலளிநீக்குஅருமையான கவிதை
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்....
நண்பரே!
பதிலளிநீக்குநான் ஒரு பதிவு எழுதிபுட்டு.அப்புறம் பார்த்தால் உங்களின் இந்தப் பதிவும் என் பதிவும் தலைப்பில் ஒரேமாதிரி....கணினி! நீ என் நண்பன்டா! என்று வைத்திருக்கிறேன் இப்படித்தான் அதிலும் ஒரு கவிதையும் உண்டு...ஆக நமக்குள் நிறைய ஒற்றுமை இருக்கு...நாம் கணினி தந்த நண்பர்கள்
அருமை அருமை
பதிலளிநீக்குஎப்படி இப்படி வித்தியாசமாக சிந்திக்கவும்
அருமையாகக் கொடுக்கவும் முடிகிறது
வாழ்த்துக்கள்
tha.ma 3
பதிலளிநீக்குகணினியைத் தலைவா என்றழைக்க வேண்டியதுதான்!
பதிலளிநீக்குஅருமை முரளி
தத்துவார்த்த கவிதை அய்யா.
பதிலளிநீக்குகடவுளே கணினிதான்
நன்றி
புரிந்து கொள்ளும் காலம் வரும்
பதிலளிநீக்குஅப்போது நீ எங்களுக்கு அடிமை //கணினியின் வேகத்துக்கு நம்மால் போகமுடியுமா?
நல்ல ஒப்பீடு! இன்னும் சொல்லப்போனால் கணினி ரஜினிக்கும் மேலே!!!!
பதிலளிநீக்குகணினி நீ ஒரு டிஜிட்டல் ரஜினி.....
பதிலளிநீக்குரசித்தேன் முரளி. வித்தியாசமான சிந்தனை.
கணினி நல்லதோர் கவிதை. .
பதிலளிநீக்குகணினி கவிதை அருமை.
பதிலளிநீக்குஅனைவருக்குமான சூப்பர் ஸ்டாரான கணினியைப் பற்றிய பகிர்வு அருமை.
பதிலளிநீக்குDB5639ED95
பதிலளிநீக்குkiralık hacker
hacker arıyorum
belek
kadriye
serik
4A9AC53F
பதிலளிநீக்குमीटफ्लाईरैंडम चैट
Chat aleatoriu
Rastgele Sohbet
Tilfeldig chat
ランダムチャット
Zufälliger Chat
Bate-papo aleatório
ميت فلايدردشة عشوائية
Slumpmässig chatt
BEC954D8
பதிலளிநீக்குForum
Forum
Forum
Forum
Forum
Forum
Forum
Forum
Forum