.
இந்த கலை நிகழ்ச்சி எப்ப நடந்தது? |
படத்துக்கு பொருத்தமான பஞ்ச் டயலாக் சொல்லலாம்
கற்றுக் குட்டின் கணினிக் குறிப்புகள் ( புதியவர்களுக்காக)
கற்றுக் குட்டின் கணினிக் குறிப்புகள் ( புதியவர்களுக்காக)
பிரபல பதிவர் கவியாழி கண்ணதாசனின் Google + பக்கத்திலிருந்து பிரபல பதிவர்கள் டான்ஸ் ஆடுவது போன்ற படத்தை ஸ்கூல் பையன் தனது பதிவில் பகிர்ந்திருந்தார். பார்க்க சுவாரசியமாக இருந்தது.அதை யார் உருவாக்கினார்கள் என்று கண்ணதாசனிடம் கேட்டேன். என் மொபைல் கேமராவில் எடுக்கப் பாத்தது என்றார்..நிச்சயமாக அது கேமராவினால் ஒரே படமாக நேரடியாக எடுக்கப் பட்டிருக்க முடியாது. அது ஒரு animated புகைப்படம். gif வகையை சார்ந்தது. ஒன்றுக்குமேற்பட்ட இணைத்துத் தான் இப்படத்தை உருவாக்கி இருக்க முடியும். படங்களை jpeg, bmp, png, gif என்ற பல்வேறு Format களில் சேமிக்க முடியும். அசைவுப் படங்களை உருவாக்க gif Format பயன்படுகிறது
சற்று ஆர்வம் ஏற்பட்டு அதில் உள்ள படங்களை பிரித்து எடுத்தேன்.
மொத்தம் 7 படங்கள் அதில் இருந்தன. இவை இணைக்கப்பட்டே பதிவர்கள் டான்ஸ் ஆடிய புகைப்படம் உருவாக்கப் பட்டுள்ளது அந்த ஏழு படங்களும் உங்கள் பார்வைக்கு
படம் 1 |
படம் 2 |
படம் 3 |
படம் 4 |
படம் 5 |
படம் 6 |
படம் 7 |
மேற்கண்ட ஏழு JPEG படங்களை இணைத்துத்தான் கண்ணதாசனின் படம் உருவாக்கப் பட்டிருக்கவேண்டும். சரியா என்று அவர்தான் சொல்லவேண்டும். பதிவின் தொடக்கத்தில் உள்ள அசைவுப் படம் மேலுள்ள படங்களை சேர்த்து நான் உருவாக்கியது
gif பைல்களை உருவாக்குவதற்கும் ஏற்கனவே இருக்கிற gif படங்களை பிரித்தடுப்பதற்கும் நிறைய ஆன்லைன் tool கள் உள்ளன அவற்றில் ஒன்று http://gifmaker.me
இந்த முகவரிக்கு சென்று படங்களை பதிவேற்றி,அசைவுப் படங்களை உருவாக்கலாம் ஏற்கனவே உள்ள gif படத்திலிருந்து தனித்தனியாக படங்களை பிரித்துவைத்து சேமித்தும் கொள்ளலாம்.
பறக்கும் கொடி, மலரும் பூ, சுற்றும் கடிகாரமுள் இவற்றை gif பார்மேட்டில் உருவாக்கலாம்.
பறக்கும் கொடி, மலரும் பூ, சுற்றும் கடிகாரமுள் இவற்றை gif பார்மேட்டில் உருவாக்கலாம்.
நான் பயன் படுத்தியது http://picasion.com/ இல் உள்ள ஆன் லைன் மென்பொருள்.
ஆர்வம் இருந்தா நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம்
இது புதியவர்களுக்குத்தான். இதெல்லாம் ஏற்கனவே தெரிஞ்சவங்க எஸ்கேப் ஆகலாம்.
***************************
எச்சரிக்கை: யாரேனும் ஒருவர் விருப்பம் தெரிவித்தால் கூட இது போன்று வேறு சில அசைவுப் படங்களை எப்படி உருவாக்குவதென்று
பதிவிடப்படும்
***********************************************************************************
படித்து விட்டீர்களா?
ஓ... பதிவர்களை ஆட விட்டது இந்த மென்பொருளின் வேலை தானா...?
பதிலளிநீக்குபடங்கள் சிறப்பாக உள்ளது... நான் தான் காணல....
நன்றி
நீக்குநான் மிகவும் ரசித்த படத்தை
பதிலளிநீக்குஉருவாக்கிய சூட்சுமத்தை
அனைவரும் அறியக் கொடுத்தமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
(இப்படித்தான் செய்திருப்பார்கள் எனத் தெரிந்தாலும்
எதன் மூலம் எனத் தங்கள் பதிவின் மூலம்தான்
அறிந்தேன் )
பிரிச்சு மேஞ்சுட்டீங்க என்று சொல்வது இதைத்தானா.... சூப்பர்.... நானும் ரொம்ப நாளா இதே மாதிரி ஒரு மென்பொருள் தேடிக்கொண்டே இருந்தேன்... கிடைத்தது... மகிழ்ச்சி....
பதிலளிநீக்குஅடேடே....!
பதிலளிநீக்குகவியாழி ஐயாவுடைய காமிராவிலேயே இத்தகைய மென்பொருள் உள்ளதென்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குபுதிய செய்தி ஒன்றைத் தந்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்குபடங்களை இவ்வாறெல்லாம் எடுக்கலாமா? தெரியாத செய்திதான் ஐயா. நன்றி
பதிலளிநீக்குஅடாடா... மானாட மயிலாட தோத்தது போங்க.. அழகு ஆட்டம்.
பதிலளிநீக்குஆனா,
என்னை,பாமரனை,வா.மு.கோமுவையெல்லாம் விட்டுட்ட நீங்க மட்டும் ஆடுறது நல்லா இல்ல கவியாழி அய்யா..
ஏன்? எங்களுக்கு ஆட வராதா? இல்ல ஆடுனா நல்லா இருக்காதா? பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்...
இப்படி ஒரு மென்பொருள் இருப்பதே இப்பத்தான் நமக்குத் தெரியுதுங்க.. கணினி அறிவே சும்மா கேள்வி ஞானமும் “லேர்னிங் பை டுயிங்” முறையும்தானே?
ஜாலின்னாலும் செம ஜாலி ஆளால்ல இருக்கீங்க..
நல்லா இருந்தது நண்பர் முரளி. அப்பப்ப இப்டி உங்க கைச்சரக்க எடுத்து உடுங்க. நன்றி- படமாய் எடுத்த கவியாழிக் கவிஞர் கண்ணதாசருக்கும், அவற்றை நடனமாய்த் தொடுத்த உங்களுக்கும்
செம ஆட்டம்.... :)
பதிலளிநீக்குஇந்த மென்பொருள் எனக்கும் பயன்படும். சேமித்துக் கொண்டேன்....
ஓஹோ...!
பதிலளிநீக்குமனமார்ந்த வாழ்த்துக்கள்...
Quite interesting . Please give more information like this,
பதிலளிநீக்குஆட்டம் ரொம்ப ஜாஸதியா இருக்கே..இதுக்கு காரணம் நடுவில் நிற்பவர் என்று நினைத்தேன் !!
பதிலளிநீக்குகண்டு பிடித்து கற்றும் கொடுத்து விட்டீர்கள்..சிறப்புங்க.
பதிலளிநீக்குஅருமை.இதை பல இணையதளங்களில் ஏற்கனவே கண்டிருந்தாலும் நம்முடைய பதிவுலக நண்பர்களை வைத்து பார்ப்பதற்கு சுவையாக இருந்தது. படத்தை வீடியோவாக்கி கூடவே ஒரு இசையையும் சேர்த்துவிட்டால்..... இன்னும் சுவையாக இருக்கும். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமென்பொருள் அருமை அனைவரும் அறியதந்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்குகண்டு பிடிப்பு அபாரம் பாராட்டு!
பதிலளிநீக்குgif பற்றிய புதிய நுட்பங்களை அறியாதவர்களும் அறிந்துகொள்வதற்குத் தங்கள் இடுகை பெரிதும் பயனுள்ளதாக உள்ளது.
பதிலளிநீக்குநன்று.
அட! ஆட்டம்....:)). கொண்டாட்டம்.
பதிலளிநீக்குநன்றி....
பதிலளிநீக்கு:-))))))))))))
:) :) நல்லா துப்பறியுறீங்க சார்!! :) எனக்கு என்னமோ இது சரியா தோன்ற வில்லை :( தற்போது வருகிற மொபைல் போன்களில் (ex: Nokia Lumia) அனிமேட்டட் படம் எடுக்கும் வசதியும் சேர்தே தரப்படுகிறது,அதாவது நாம் குறிப்பிட்ட சில நொடிக்காட்சியை அனிமேசன் போல செய்து அசத்த முடியும், தனியாக மென்பொருள் தேடி மெனக்கெட தேவையில்லாமல் செய்கிறது இவை...அப்படிப்பட்ட வேலையாகத்தான் இது இருக்க வேண்டும் என்பது என் யூகம் :)
பதிலளிநீக்குஅறிமுகம் செய்துள்ள இணையத்தளம் பயனுள்ளதாக இருந்தது,நான் சில எந்திர இயக்கங்களின் அனிமேசன் gif வைத்துள்ளேன் அதை தனித்தனி படங்களாக பிரிக்க இது உதவும் , நன்றி !
பதிலளிநீக்குபதிவர்களின் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் அருமை. அத்தனை பேரையும் ஆட்டுவிக்கும் வித்தையைக் (மென்பொருளில்) கற்று கொடுத்தமைக்கு நன்றி அய்யா. எப்பவும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கலக்குபவர் அய்யா திண்டுக்கல் தனபாலன் அவர்கள், தாங்களும் கலக்கி இருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி. வித்தியாசமான சிந்தனைக்கு நன்றி அய்யா.
பதிலளிநீக்குமுரளிதரன் சார்
பதிலளிநீக்குஉங்கள் பகிர்வும் படத்தைப் போல் நன்றாக இருக்கிறது
நானும் சுட்டு என் ஆர்யா சூர்யா பதிவில் போட்டு விட்டேன்
நன்றி
Fantastic!!
பதிலளிநீக்குயப்பா!இவ்வளவு விஷயம் இருக்கா?இதெல்லாம் எனக்கு க்ரீக்கும் லத்தீனும்!
பதிலளிநீக்குநன்றாக ஆ(ரா)ய்ந்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவேற யாரும் ஆடலை. நாய்.நக்ஸ் அண்ணன் மட்டும் தான் டான்ஸ் ஆடுறார். மத்தவங்கலாம் சும்மாதான் இருக்காங்க!!
பதிலளிநீக்குஅடடா.. ரகசியத்தைப் போட்டு உடைச்சிட்டீங்ளே...! ஆன்லைன் டூல் மூலம் இன்னும் நிறைய செய்யலாம்... நல்ல வேளை இத்தோட நிறுத்திட்டீங்களே..! ஹா..ஹா..!!!
பதிலளிநீக்குஅசைவு படம் ரசிக்க வைத்தது...!!
பகிர்வுக்கு மிக்க நன்றி. !!
இன்னொரு வித்தையும். அதாவது இவங்களை குரூப்பா நிறுத்தி வீடியோ எடுத்த பிறகு.. அந்த வீடியோவிலிருந்து குறிப்பிட்ட பகுதியை மட்டும் கட் பண்ணி GiF பைலா மாத்தலாம்..
பதிலளிநீக்குஅதவும் நல்லாதான் இருக்கும்..
அந்த சிரிப்பு GIF படத்தை அப்படிதான் எடுத்திருப்பாங்கன்னு நினைச்சேன்...
எப்படியோ ரகசியம் அம்பலமாகிடுச்சு...அவ்...அவ்...
கவியாழியின் படம் பார்க்கவில்லை! உங்களுடைய பதிவில் தொடக்கத்தில் பதிவர்கள் ஆடுவது போல இருக்கும் படம் வியக்க வைத்தது! உங்களுடைய ஆர்வத்தை பதிவர் சந்திப்பின் போதே புரிந்துகொண்டேன் டி.டியிடம் சிலது விசாரித்துக் கொண்டு இருந்தீர்கள்! தாரளமாக இதே போன்ற தொழில்நுட்ப தகவல்களை எங்களை போன்ற அறியாதவர்களுக்கு பகிரலாம்! நன்றி!
பதிலளிநீக்குஅன்பின் முரளிதரன் - நல்லதொரு புதிய செயல் - வியக்க வைக்கும் செயல் - அனைவரும் நாட்டியம் ஆடுவது நன்று - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா
பதிலளிநீக்கு