( சும்மா ஒரு கற்பனைதான்)
கொஞ்ச காலமாக கண்ணில் படாத வடிவேலுவை அவரது நண்பர்கள் சந்தித்து பேசுகிறார்கள்
“அண்ணே! என்னன்னே உங்களை ரொம்ப நாளா காணோம்”
“அடேய்! நான் இங்க இருந்தா ஏடாகூடம் ஆயிடும்னு என்ன பணம் கட்டி அனுப்பிட்டாங்க. இப்பகூட நான் வந்தது தெரிஞ்சதும் தயவு செஞ்சு வெளிய வராதீங்கன்னு கெஞ்சி கேட்டுக்கிட்டாங்க. அதனால உள்ளயே இருக்கேன். அது சரி நீங்க இப்ப எதுக்கு வந்தீங்க அதச் சொல்லுங்க”
“அண்ணே நாங்க ஒரு வாத்தியார்கிட்ட கடன் வாங்கிட்டோம். அவர் என்னடான்னா கடன திருப்பிகுடு இல்லன்னா நான் கேக்குற கணக்குக்கு பதில் சொல்லுன்னு நச்சரிக்குராறு. சரியான பதில் சொல்லிட்டா கடன தள்ளுபடி பண்றேன்னு வேற சொல்லிட்டாரு. கடனுக்குக் கூட பதில் சொல்லிடுவோம். ஆனா கணக்குக்கு எப்படிண்ணே பதில் சொல்லுவோம். நீங்க வேற ஊர்ல இல்லையா இதுக்கு பதில் சொல்ல வேற அறிவாளிய நாங்க எங்க போய் தேடறது.”
“ஏய்! என்ன வெச்சு காமெடி கீமெடி பண்ணலயே! சரி கணக்கு என்னனு சொல்லு.அஞ்சு நிமிஷத்துல பதில் சொல்றேன்”.
“உங்க கிட்ட நூறு ரூபா இருக்கு.”
“அட போடா நூறு பைசாகூட இல்ல.”
‘அது தெரியாதா எங்களுக்கு. நூறு ரூபா இருக்குன்னு வச்சுக்கோங்க. அந்த நூறு ரூபாய்க்கு ஆப்பிள் கொஞ்சம்,சாத்துக்கொடி கொஞ்சம்,திராட்சை கொஞ்சம்ன்னு ,மூணு விதமான பழம் வாங்கணும். ஒரு சாத்துக்கொடி 1 ரூபா, ஒரு ஆப்பிள் 5 ரூபா, 20 திராட்சை 1 ரூபா. பழங்களோட எண்ணிக்கையும் 100 ஆக இருக்கணும். பழங்களோட மொத்த மதிப்பும் 100 ரூபாயா இருக்கணும். அப்படின்னா எத்தனை சாத்துக்கொடி, எத்தனை ஆப்பிள், எத்தனை திராட்சை வாங்கணும்?”
“ஏண்டா? வாத்தியார் ரொம்ப வயசானவரோ?
“எப்படிண்ணே கண்டிபிடிச்சீங்க! நீங்க உண்மையிலேயே பெரிய அறிவாளிதான்!”
“இல்ல பழங்களோட விலைய வச்சித்தான். சரி, இதுக்கு சரியான விடை சொன்னா எனக்கு என்ன தருவீங்க”
“நீங்க என்ன வேணுமோ கேளுங்கன்னே. தரோம்.”
அப்பா சரி,முதல்ல என்ன கேக்கலாம்னு யோசிக்கறன். அப்புறம் கணக்குக்கு விடைய கண்டுபிடிக்கிறேன். இப்போ நீங்க போய்ட்டு வாங்க.”
‘நம்மள அறிவாளின்னு வேற சொல்லிட்டு போய்ட்டாங்களே. எப்படி விடை கண்டு பிடிக்கறது. பாப்போம். யார் கைல கால்ல விழுந்தாவது கண்டு பிடிச்சிடுவோமில்ல.
விடையைக் காண: புதிர் கணக்கு! விடை-வடிவேலுக்கு உதவியது யார்?
விடையைக் காண: புதிர் கணக்கு! விடை-வடிவேலுக்கு உதவியது யார்?
*************************************************************
இதையும் படியுங்க உங்க கருத்த சொல்லுங்க
சாத்துக்கொடி 10, ஆப்பிள் 10, திராட்சை 80
பதிலளிநீக்குஹலோ! தயாளன் நீங்க சொல்லி இருக்கிற பழங்களோட மொத்த மதிப்பு 64 ரூபா தான் வருது. அதுவும் 100 ரூபாதான் வரணும்
பதிலளிநீக்குஒன்னும் புரியல
பதிலளிநீக்குமுதலில் உங்களுக்கு விடை தெரியுமா?
பதிலளிநீக்கு16 saaththu kodi 16 rupee
பதிலளிநீக்கு4 apple 80 rupee
80 thiraatchai 4 rupee
I got it,
பதிலளிநீக்கு80 திராட்சை = 4
1 சாத்துக்குடி = 1
19 ஆப்பிள் = 95
--------------------------------
100 = 100
--------------------------------
hi , muthukarthi,
பதிலளிநீக்கு4 apple is only 20 rupees k,so u got 100 items for only 40 rupees
நான்சி நீங்க சொன்னது சரியான விடை. விடைகான பதிவும் போட்டிருக்கேன். சைடு ல பாருங்க லிங்க் இருக்கு. வடிவேலுக்கு உதவியது யார்?
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குhttps://tamilmoozi.blogspot.com/2020/05/blog-post_5.html?m=1
061196FE1F
பதிலளிநீக்குTakipçi Satın Al
M3u Listesi
Yorum Satın Al
Eti Mutlu Kutu Kodları
101 Okey Yalla Hediye Kodu
768CAB09D5
பதிலளிநீக்குTakipçi Satın Al
3D Car Parking Para Kodu
Google Yorum Satın Al
Lords Mobile Promosyon Kodu
Hay Day Elmas Kodu